Home Alai Arasi Alai Arasi Ch11 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch11 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

93
0
Alai Arasi Ch11 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch11 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch11 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 பறவைகளை ஈர்த்த பாவை

Alai Arasi Ch11 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

வடகரைத் துறைமுகத்தில் இறங்குவதை முன்னதாகவே முடிவு செய்துவிட்ட அரையன் இளவழுதி, ஒரு நாள் முழுவதும் நிலத்தில் தங்க சகல ஏற்பாடுகளையும் செய்த பிறகே மரக்கலத்திலிருந்து கரைக்கு வந்தான். ஆதலால், அவனுக்கும் மற்றவர்களுக்கும் தேவையான உடை முதலியவற்றை இரண்டு மாலுமிகள் சுமந்து வந்தார்கள். அரசிக்கு வேண்டிய ஆடைகளையும் அவனே தேர்ந்தெடுத்து மாலுமியொருவனிடம் கொடுத்து, ‘இது அரசியின் உடை, எச்சரிக்கையுடன் எடுத்துவா’’ என்றும் உத்தரவிட்டான். இப்படி அவன் அரசிய, அதிகப்படியான உற்சாகத்தையும் பொறுப்பையும் காட்டி அஹமதுக்குப் பிடிக்காவிட்டாலும் அவன் தனது வெறுப் வெளிக்குக்காட்டாமலே நடந்து கொண்டான். முதிய பெருவழுதி மரக்கலத்தைவிட்டு இறங்கினால் போதுமென் நினைத்திருந்ததால் பேரன் போக்கைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவுமில்லை. அவன் அரசிக்குக் காட்டி தனிபரிவைப்பற்றி எந்தவித உணர்ச்சியை வெளிப்படுத்தல் மில்லை.

இளவழுதி மட்டும் மிகுந்த உற்சாகத்தைக் காட்டியும், வடகரைச் சிறப்புகளை அரசிக்கும் அஹமதுக்கும் விவரித்துச் சொல்லிக்கொண்டும் கரையில் இறங்கியவன் “அரசி! நீ இதுவரை கண்டிராத அற்புதங்களை இந்த வடகரையில் காண்பாய். இதன் கோட்டை மேலைக்கடலோரத்தில் மிகுந்த வலுவுடையது. சுமார் ஆயிரம் சேர வீரர்கள் இந்தக் கோட்டையைச் சுற்றிலும் எப்பொழுதும் நடமாடிக் கொண்டிருப்பார்கள். சேரமன்னரும் ஆற்றங்கரையிலுள்ள காடுகளில் அடிக்கடி வேட்டையாட வந்து கோட்டையில் தங்குவார். ஆற்றங்கரையின் இருபுறத்திலுமுள்ள காடு மிக அடர்த்தியானது. அங்கு எது நடந்தாலும் வெளியில் தெரியாது” என்று கூறிவிட்டு அரசியை அழைத்துக்கொண்டு

வடவாற்றுக் கரையோரமாகக் கிழக்கு நோக்கி நடந்து சாட்டின் அடர்த்தியான ஒரு பகுதிக்கு வந்ததும், “அரசி! ஆற்றின் இந்தப்பகுதி சேர அரச குடும்பத்தார் நீராடுவதற்காக ஏற்பட்டது. இங்கு நீராட்டத்தை முடித்துக்கொள்” என்று கூறி மூட்டைகளை இறக்க மாலுமிகளுக்கு உத்தரவிட்டான்.

மாலுமிகள் இறக்கிய மூட்டைகளிலிருந்து அரசியின் டைகளை எடுத்த இளவழுதி, “அஹமத் நீயும் என் தாத்தாவும் தக்கரையிலுள்ள மறைவில் நீராடுங்கள், ஆற்றைக் கடந்து செல்ல அணை இருக்கிறது” என்றான்.

நான் குளிக்கப் போவதில்லை” என்றான் அஹமத் சீற்றத்துடன் .

உன் இஷ்டம் அவரவர் பழக்கம் அவரவர்களுக்கு” என்ற ளெவழுதி பாட்டனாரும் மற்றவர்களும் நீராட உத்தரவிட்டான்,

தான் மட்டும் அரசி நீராடிய பகுதியிலிருந்து சிறிது தள்ளி மரங்களால் மறைக்கப்பட்ட துறையில் இறங்கி நீராடி மாற்றுடை அணிந்து அரசியை நாடிச் சென்றான். அவன் அவள் இருந்த துறையை அடையும் முன்பாகவே நீராட்டத்தை மடித்துக்கொண்டு மாற்றுடையணிந்து கரையேறிவிட்ட அரசி எனது தலையை சீப்பொன்றால் சீவி முடித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்ணாடியின் உதவியின்றி தலையைச் சீவிக் கொண்டையிட்ட அழகைப் பார்த்து பிரமித்த இளவழுதி பக்கத்துச் செடியிலிருந்து ஒரு மலர்க்கொத்தை எடுத்து அவள் குழலில் சொருகி, ”அரசி உன்னைப் பார்த்தால் எப்படியிருக்கிறது தெரியுமா?” என்று குரலில் ஆவல் துள்ளக் கேட்டான். “எப்படியிருக்கிறது?” என்று வினவி அவனுக்கு முதுகைக் காட்டித் திரும்பிய அரசி, “பூங்கொத்தை சரியாகச் சொருகுங்கள்” என்று கூறி அதை எடுத்து அவனிடம் கொடுத்து அதைச் சொருக வேண்டிய இடத்தையும் காட்டினாள்.

அவள் அழகிய குழலைப் பார்த்து மயக்கம் கொண்ட இளவழுதி அவள் காட்டிய இடத்தில் பூங்கொத்தைச் செ அவள் அழகிய தோள்களைத் தனது இரு கைகளாலும் , புஷ்பத்தை முகரவும் செய்தான். அவள் மெதுவாக அவன்மீது சாய்ந்தாள். தனது பூவுடலின் முதுகுப்புறம் அவன்மீது நன்றாகவேபட, அவள் சமீபமும் புஷ்பத்தின் நறுமணமும் இளவழுதியின் சித்தத்தை மயக்கவே அவள் தோள் மீது முகத்தை வைத்து, “அரசி! உன் இயற்கையழகே போதும் என்னை ம அப்படியிருக்க அந்த வைரம் எதற்கு?” என்று வினவினான்.

அவள் சற்றே திரும்பி தனது மோகனப் பார்வையை அவன்மீது நிலைக்கவிட்டாள். “நீங்கள் இப்படிப் புகழ்ந்தால் எனக்கு கர்வம் உண்டாகிவிடும். அதிகப்படியாக ஏதும் சொல்லாதீர்கள்” என்று குழைந்தாள். அத்துடன் அவனது கையுடன் தனது கையையும் கோர்த்துக் கொண்டாள். அந்த நெருக்கமான நிலையில் ஆற்றங்கரையோரமே நடந்து சென்ற இளவழுதி பகல் மிகவும் ஏறிவிட்டதைக் கவனித்தான். காடு எங்கும் மரங்களின் அசைப்பினால் ஏற்பட்ட சலசலப்பு அதிகமாயிற்று. கிள்ளைகளும் மைனாக்களும் சிறகடித்து மரங்களிலிருந்து கூவின. கொண்டை பெரிதாக இருந்த சிறு பறவை மரக்கிளையிலிருந்து அவர்களை உற்றுநோக்கி இருமுறை தலையை மாற்றி மாற்றி ஆட்டியது.

சுற்றிலுமிருந்து மலர்ச்செடிகளையும் மரங்களில் தாவித் தாவிக் கூவிய கிள்ளைகளையும் குருவி, மைனா இனங்களையும் பார்த்து அரசியையும் பார்த்த இளவழுதி “இந்த இயற்கைச் சூழ்நிலையில் நீ எத்தனை அழகாகப் பொருந்துகிறாய்! இந்தக் குருவிகளும் கிள்ளைகளும் எப்படிக் கூவுகின்றன!” என்று வியப்புடன் வினவினான். அரசி கையை நீட்டியதும் அதில் வந்து உட்கார்ந்த மைனாவைப் பார்த்து பிரமித்தான். “அரசி! பறவைகளையும் வசீகரம் செய்ய என்ன மந்திரம் வைத்திருக்கிறாய்?” என்று வினவவும் செய்தான்.

அரசி பதிலேதும் சொல்லாமல் கலகலவென்று நகைத்தாள். அன்புள்ள உள்ளத்தைவிட பெரிய வசீகர மந்திரம் எதுவுமில்லை.

இதோ பாருங்கள்” என்று கூறி மற்ற பறவைகளையும் அழைத்தாள். பற்பல சிறு பறவைகள் அவள் தலையிலும் தோள்களிலும் அட்கார்ந்ததைக் கண்ட இளவழுதியின் பிரமை உச்ச நிலைக்குச் சென்றது. அவன் பிரமிப்பைக் கண்ட அரசி அந்தப் பறவைகளைத் னது கையால் எடுத்து எடுத்து மரக்கிளைகளில் விட்டு மேலே நடந்தாள். பிரமை விலகாமலே இளவழுதி நடந்த சமயத்தில் தான் அந்த மனிதன் எதிரே ஆற்றங்கரை ஓரமாக நடந்து வந்தான். அவன் ஆஜானுபாகுவான சரீரத்தையும், கண்களில் சதா படர்விட்ட வீர ஒளியையும் கவனித்த அரசி சட்டென்று நடையைத் தளர்த்தினாள்.

அவள் அப்படி திடீரென நடையைத் தளர்த்தியதை அந்த மனிதனும் கவனித்திருக்க வேண்டும். அதன் விளைவாக அவன் இதழ்களில் புன்முறுவலொன்று படர்ந்தது. அவன் தோளில் இருந்த ஒரு வில்லும், தோளுக்குப் பின்பு ஆடிய அம்பறாத்தூளியும், அரையில் சொருகியிருந்த குறுவாளின் மாணிக்கப் பிடியும் அவன் பெரிய பதவியிலிருப்பவன் என்பதை நிரூபித்தன.

அவனைக் கண்டதும் அரசியைக் கையைப் பிடித்து அவனிடம் அழைத்துச் சென்று மண்டியிட்ட இளவழுதியை அன்புடன் நோக்கிய அந்த மனிதன் மாளிகைக்கு உன் மனைவியுடன் வந்து சேர்” என்று சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளே சொல்லி நடந்து விட்டான்.

அந்த மனிதன் போவதை வியப்புடன் பார்த்த அரசி “அந்த மனிதன் என்னை உங்கள் மனைவி என்று எப்படிச் சொன்னான்?” என்று வினவினாள்.

“நாமிருக்கும் நிலையைப் பார்த்துச் சொல்லியிருக்கலாம்” என்ற இளவழுதி, “நமக்குள் வேறு எவ்வித உறவிருக்க முடியும்?” என்று வினவி, நகைத்தான்.

இளவழுதியை அரசி உக்கிரமாகப் பார்த்தாள். அவன் அழைப்புக்கு நாம் ஏன் இணங்க வேண்டும்?” என்று கேட்டாள்.

“வேறு வழியில்லை. அது அழைப்பல்ல, கட்டளை” என்ற இளவழுதி.

“எனக்குக் கட்டளையிட அவர் யார்?’ என்று கேட்டாள் அவன் சீற்றத்துடன்,

“மாளிகைக்குப் போனதும் புரிந்து கொள்வாய்!” என்றால் இளவழுதி.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அஹமதும் பெருவழுதி முதலியோரும் அவர்களிடம் சேர்ந்து கொள்ளவே’ மாளிகைக்குப் போவதா அல்லவா என்ற தர்க்கம் நடந்தது. ‘அரசி யார் உத்தரவுக்கும் கட்டுப்படத் தேவையில்லை” என்று அஹமக் சீறினான்.

”தேவை உண்டு, மரக்கலத்துக்குத் திரும்ப வேண்டுமென்றால்” என்று சொன்ன இளவழுதி, “அஹமத்! உன் அதிகாரம் இங்கு செல் லாது. மந்திரசக்திகூடப் பயன்படாது” என்று சுட்டிக்காட்டினான்.

அதற்குப் பதில் சொல்லும் வகையில் குரூரமாக நகைத்த அஹமத், “நானும் அரசியும் மரக்கலத்திற்குத் திரும்புகிறோம். நீங்கள் வந்தால் வாருங்கள்” என்று கூறி கடற்கரையை நோக்கி நடக்க முற்பட்டான்.

அவனை அரசியோ மற்றவர்களோ பின்தொடராததால் மிகுந்த சினத்தின் வயப்பட்ட அஹமத், “அரசி! வருகிறாயா, இல்லையா?” என்று சீறினான்.

அரசியின் முகத்தில் சிறிது குழப்பம் தெரிந்தது. தனது நெற்றி வைரத்தில் கைவைத்து ஏதோ சிந்தித்தாள். பிறகு சொன்னாள். “நீ போ அஹமத். நான் இவர்களுடன் மாளிகைக்குப் போய் வருகிறேன்” என்றாள்.

அஹமதின் முகத்தில் கோபம் மிதமிஞ்சித் தெரிந்தது. “அரசி! இங்கு உனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் நான் பொறுப்பாளியல்ல” என்று சொன்னான்.

இப்படிச் சொல்லிவிட்டு நடக்க முயன்றவன் ஏதோ யோசனை உதிக்கவே “இப்படித் தவிர்க்க முடியாத உத்தரவை இட்ட அந்த மனிதன் யார்?” என்று கேள்வியை வீசினான்.

அதற்குப் பதில் ஒரு பெரிய புதரின் மறைவிலிருந்து வந்தது. இந்த நாட்டு மன்னன். நெடுஞ்சேரலாதன்” என்று சொன்ன ஒரு மனிதர் புதரின் மறைவிலிருந்து வெளியில் வந்தார்.

அவரைக் கண்டதும் அஹமத், அரசி இருவரும் மட்டுமன்றி எல்லோருமே மண்டியிட்டு வணங்கினார்கள். சுமார் ஆறடி உயரத்துடனும் சிவந்த மேனியுடனும் உடல் முழுவதும் திருநீறு பூசி, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டுடனும், பக்கவாட்டில் தலையில் தொங்கிய முன்சிகை முடியுடனும், இடுப்பில் வெள்ளையான சிறிய முண்டுடனும், கழுத்தில் மணித்தாவடங்களுடனும், கையில் கமண்டலத்துடனும் காணப்பட்ட அந்த மனிதனைப் பார்த்து அரசி பிரமித்தாள். “தாங்கள்…?” என்று ஏதோ கேட்டாள்.

”உங்கள் மதகுருவின் நண்பன்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு அவர் மாளிகையை நோக்கி நடக்கலானார்.

இளவழுதி அதிர்ச்சியுற்று நின்றான். பெருவழுதி முகத்தில் அச்சம் விரவி நின்றது. ”கேரள பெரிய மந்திரவாதி!” என்று முணுமுணுத்தார்.

Previous articleAlai Arasi Ch10 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch12 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here