Home Alai Arasi Alai Arasi Ch12 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch12 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

63
0
Alai Arasi Ch12 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch12 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch12 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 நெடுஞ்சேரலாதன்

Alai Arasi Ch12 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

எந்தவிதமான படாடோபமுமில்லாமல் சாக வேட்டைக்காரன் போல் உடையணிந்து தங்களை அரண்மனை வரும்படி அழைத்துவிட்டுச் சென்ற சேரமான் நெடுஞ்சேரலாதனையும், சாட்சாத் புராண ரிஷிகளைப் போல் பளபளத்த தேகசாந்தியுடனும் உடலெங்கும் பூசிய விபூதி, ருத்ராக்ஷம், நவரத்தின மாலை, துளசி மணிமாலை ஆகிய மணித் தாவடங்களை அணிந்தும் தங்களைச் சந்தித்து நடந்துவிட்ட கேரள பெரிய மந்திரவாதியையும் அடுத்தடுத்து சந்தித்ததால் பிரமிப்பின் வசப்பட்ட இளவழுதியும் பெருவழுதியும் சில விநாடிகள் பேச்சிழந்து நின்று விட்டார்கள். அத்துடன், அந்த மந்திரவாதி தங்கள் மதகுருவின் நண்பர் என்று தம்மை அறிவித்துக் கொண்டதால் அரசியும் அஹமதும் திகைப்படைந்து தங்கள் மதகுரு சொன்னபடி சகலமும் நடப்பதால் பெரிய மந்திரவாதியிடம் மதிப்பும், அச்சமும் கொண்டு அவரைச் சந்திக்க அரண்மனை செல்ல முடிவு செய்தார்கள். ஆகவே “அன்பரோ அரண்மனைக்கு வழிகாட்டுங்கள்” என்று அரசி இளவழுதியை நெருங்கிக் கூறினாள்.

“அதற்குமுன்பு வடகரை நகரத்தையும் துறைமுகத்தையும் பார்த்தாலென்ன?” என்று வினவினான் இளவழுதி.

“அதையெல்லாம் பிறகு வைத்துக் கொள்வோம் முதலில் – மன்னன் ஆசையையும் மதகுரு நண்பரின் கட்ட, ளயையும் நிறைவேற்றுவோம்” என்று அஹமத் சொன்னான்.

அஹமதை அறவே வெறுத்த முதியவனான பெருவழுதி கூட “அஹமத் சொல்வதுதான் சரி. முதலில் அவர்கள் கட்டளைகளுக்குப் பணிவோம். பிறகு நகரைப் பார்க்கலாம்” என்று அஹமதுடன் ஒத்துப் பாடினான்.

   இளவழுதி சற்று ஏதோ சிந்தித்தான். ''மன்னர் அரண்மனைக்குப் 
                                                போகவேண்டுமானால் வந்த வழியிலேயே திரும்பித்தான் ஆற்றைக் கடக்க வேண்டும்" என்று கூறித் திரும்பி மவர்களுக்கு வழி காட்டி நடந்தான். 

ஆற்றங்கரை வழி அடுத்திருந்த மலையின் காரணமாகக் கற்கள் ஆங்காங்கு எழுந்து கரடு முரடாயிருந்ததால் சிறிது சிரமப்பட்டே அதில் நடக்கவேண்டியதாயிருந்தபடியால் அலை அரசியின் கையைப் பிடித்துக்கொண்ட இளவழுதி, “அரசி! கீழே பார்த்து நட உன் கால்களில் கல் குத்தப்போகிறது” என்று கூறி மிகுந்த ஜாக்கிரதையுடன் அவளை அழைத்துச் சென்றான்.

“ஏன் எங்கள் கால்களில் கல் குத்தாதோ?” என்று வெறுப்புடன் கேட்டான் அஹமத்.

‘’காலுக்குக் கால் வித்தியாசமுண்டு” என்று பதில் சொல்லிக்கொண்டே நடக்கலானான் இளவழுதி,

என்ன வித்தியாசமோ?” என்று எரிச்சலுடன் கேட்டான் அஹமத்.

“பூவுக்கும் முள்ளுக்கும் உள்ள வித்தியாசம்” – இதை அலட்சியமாகச் சொன்னான் இளவழுதி நடந்து கொண்டே.

“என் கால் முள்ளா ?”

“உன் கால் மட்டுமென்ன, உன் உடல், உள்ளம் எல்லாமே முள்தான்.”

“இளவழுதி! பேசுவதை யோசித்துப் பேசு.”

“சில விஷயங்களைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை” என்று கூறிக்கொண்டே சென்றவன் திடீரென்று திரும்பி அரசியை தனது கையால் தூக்கிக் கொண்டான். “இந்த இடத்தில் ஆற்றைக் கடக்க வேண்டும். இங்கு ஒரு காலத்தில் பாலமிருந்ததால் அதன்

இடிந்த கற்கள் இந்த இடத்தில் தங்கி இங்கு ஆழத்தைக் குறைத்திருக்கின்றன. இருப்பினும் அந்தக் கற்கள் உருளக் கூடியவை. பார்த்து வாருங்கள்” என்று மற்றவர்களுக்கு கூறிவிட்டு அரசியைக் கையில் தாங்கிய வண்ணம் ஆற்றில் இறங்கி நடந்தான். உண்மையில் அந்த இடத்தில் ஆழமேயில்லை உருண்ட மலைக் கற்கள் மட்டும் ஆங்காங்கு தங்கி பழைய அணையின் இருப்பிடத்தைக் காட்டிக் கொண்டிருந்தன ஆங்காங்கு முழங்கால் மட்டுமே இருந்த ஆழத்தில் இறங்கியும் கற்களில் லாகவமாகக் கால்களை வைத்தும் ஆற்றை மெதுவாகத் தாண்டிய இளவழுதி அக்கரைக்குச் சென்றதும் பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தான். பலமுறை அந்த ஆற்றை அதே இடத்தில் கடந்திருக்கும் பெருவழுதி அனாயசமாக வந்து கொண்டிருந்தான். அஹமதும் மற்ற மாலுமிகளும் மிகுந்த அவஸ்தைப்பட்டும் ஓரிரு இடங்களில் கல் உருண்டதால் தங்களைத் திடப்படுத்திக் கொண்டும் மிகவும் கஷ்டப்பட்டே வந்தார்கள்.

அவர்கள் வருகையைக் கவனித்துக் கொண்டிருந்த இளவழுதி அக்கரையை அடைந்த பின்பும் அரசியைக் கீழே விடாமல் கைகளில் தாங்கியே நின்றிருந்தான். “என்னைக் கீழே விடுவதுதானே?” என்றாள் அலைஅரசி சற்று நாணத்துடன்,

“மாட்டேன்” என்றான் இளவழுதி,

அதைக் கேட்டுக் கொண்டே கரையேறி வந்த பெருவழுதி “அவளைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்வது தானே?” என்றார் வெறுப்புடன்.

“உங்கள் உத்தரவு தாத்தா” என்ற இளவழுதி அவளைச் சற்று உயரத் தூக்கினான்.

“சும்மா இருங்கள். உங்கள் தலைமேல் உட்கார முடியாது” என்று சீறினாள் அரசி.

அப்படியானால் தாத்தா தலையில் உட்கார வைக்கட்டுமா?” என்று கேட்ட இளவழுதி நகைத்தான்.

அவன் நகைப்பைக் கேட்டதாலும், இளவழுதி இருந்த மோக சிலையாலும் அவன் எதையும் செய்வான் என்பதை உணர்ந்த பெருவழுதி சற்று நகர்ந்து கொண்டான்.

இதைக் கண்ட இளவழுதி மீண்டும் நகைத்து அரசியைக் கீழே கலக்கி ‘வா அரசி! இனி வழி மிக மிருதுவாயிருக்கும்” என்று கூறி வடக்கு நோக்கி நடந்தான்.

அவன் கூறியது சரியாகவே இருந்ததை அரசி கண்டாள். அந்த மலைப்பாங்கான இடத்திலும் தரை ஓரளவு சமமாகவும் புற்கள் நிறைந்ததாகவும் இருந்தது. அடுத்தடுத்து நெருக்கமாக இருந்த மலர்ச் செடிகள் காற்றில் ஆடி தங்கள் மலர்க்கரங்களால் அவள் கன்னங்களைத் தடவின. அடுத்தடுத்து புஜாலங்கள் குறுக்கே மந்து இன்பமாகக் கூவின. இயற்கையின் இந்த சாம்ராஜ்யத்தை அனுபவித்துக் கொண்டே நடந்த இளவரசி திடீரென நடையை நிறுத்தினாள். அவள் இருந்த இடத்திலிருந்து நூறு அடி தூரத்தில் மென்னன் மாளிகை திடீரென கண்முன்பாக எழுந்தது. அதன் அமைப்பைப் பார்த்து பெரிதும் வியந்த அரசி அதன் அழகில் லயித்து நீண்ட நேரம் நின்று விட்டாள்.

தூரத்தே தெரிந்த அந்த மாளிகையின் முற்பகுதி முழுவதும் நன்றாக வெள்ளை அடிக்கப்பட்டு பளிங்குக் கல்லைத் தோற்கடிக்கும் வெண்மையுடனும் வழவழப்புடனும் காணப்பட்டது. முகப்பிலிருந்த பெரிய ஆசார வாசலின் தூண்கள் இரண்டு பக்கங்களிலுமிருந்த மரமல்லி மரங்களின் உயரத்தில் முக்கால் பங்கு இருந்ததால் மரமல்லி மலர்கள் வாயிலில் அடர்த்தியாக விழுந்து வெண்பட்டாடை விரித்திருந்தது. அந்த அரண்மனையின் வாயிலில் காவல்காரர் யாருமே இல்லையென்பதையும், ஒரே ஒரு வெண்புரவி மட்டும் கடிவாளம்

ஏதுமில்லாமல் சுதந்திரமாகப் புல்லை மேய்ந்து கொண்டிருந்ததையும் கவனித்த அரசி இளவழுதியை நோக்கி “இதுதான் மன்னன் மாளிகையா?” என்று வினவினாள்.

“ஆம்” என்ற இளவழுதியின் குரலில் பெருமை இருந்த

‘’இங்கு காவலர் யாருமில்லையே?” என்றாள் . வியப்புடன், “உள்ளே எங்காவது இருப்பார்கள். “

“எத்தனை பேர்?”

“நாலைந்து பேர்.”

“அவ்வளவுதானா?”

“அரசருக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால்?”

“சேர மன்னருக்கா!”

“ஆமாம்.”

“அவருக்குத் தீங்கு விளைவிக்க யாருக்கு சக்தியிருக்கிறது?

“திடீரென பகைவரால் வளைக்கப்பட்டால்?”

“பகைவர் நிர்மூலமாக்கப்படுவார்கள். “

இதைக் கேட்ட அரசி முகத்தில் பெருவியப்பைக் காட்டினாள். “உங்கள் அரசரென்ன மந்திரவாதியா?” என்று வினவினாள்.

“அரசி! இங்கு பெரிய மந்திரவாதி ஏன் வருகிறார் தெரியுமா?” என்று கேட்டான் இளவழுதி.

“ஏன்?” ஏதும் விளங்காத குரலில் கேட்டாள் அரசி.

“அரசரிடம் மந்திரம் கற்க வருகிறார்” என்றான் இளவழுதி.

அரசியின் பிரமிப்பு அதிகமாயிற்று. “என்ன இன்னொருமுறை சொல்லுங்கள். அரசரிடம் மந்திரம் கற்க, உங்கள் பெரிய மந்திரவாதி வருகிறாரா?” என்றாள் அரசி

‘’ ஆம்” – இதைத் திட்டமாகச் சொன்ன இளவழுதி, “வா அரசி நாம் போவோம் அரண்மனைக்கு’ என்றுகூறி இரண்டடி அரன்மனையை நோக்கி காலெடுத்து வைத்தவன் சட்டென்று நிலைத்து நின்று விட்டான்.

“ஏன் நின்று விட்டீர்கள்?” என்று வினவினாள் அரசி.

அவன் பதில் சொல்ல அவசியமில்லாது போயிற்று மாளிகைக்கு எதிரே ஒருபுறமாகப் புல் மேய்ந்து கொண்டிருந்த வெண் புரவி திடீரென தலைநிமிர்ந்து எதையோ உற்றுக்கேட்டது. மெக திரும்பி அரசியைப் பார்த்தது. அடுத்து அவளை நோக்கி ஒரே பாய்ச்சலில் பாய்ந்துவந்து அவளருகில் நின்று தனது அன்னத்தை அவள் கன்னத்துடன் இழைத்தது. ”அரசி! உனக்கு அரசரின் அழைப்பு வந்துவிட்டது, புரவியில் ஏறிக்கொள்” என்றான் இளவழுதி,

கடிவாளம் ஏதுமில்லையே. எப்படி இதைச்செலுத்துவது?” என்றான்.

“ஏதும் தேவையில்லை. உன்னைப் பத்திரமாகத் தாங்கிச் செல்லும் ” என்ற இளவழுதி அவளைத் தூக்கிப் புரவிமீது உட்கார வைத்தான்.

புரவி முதுகை நன்றாக வளைத்துக்கொடுத்து அவள் உட்கார வசதி செய்து, அவளைத் தாங்கி ராஜநடை போடவும் செய்தது. மாளிகையை அடைந்ததும் வாயிலுக்கு நேராகத் திரும்பி பக்கவாட்டில் அரசி இறங்கவும் வழி செய்தது. அவள் இறங்க முற்படுமுன்பாக சேரமான் நெடுஞ்சேரலாதனே உள்ளிருந்து வந்து அவள் கையைப் பிடித்துக் கீழே இறக்கிவிட்டதும் சற்றே அண்ணாந்து பார்த்தாள். முகப்பிலிருந்த இரண்டு மரமல்லி

மரங்களும் கிளைகளை அசைத்து மலர்களை அவள் தலைமீது, உடல் மீதும் பொலபொலவென்று உதிர்த்தன. அடுத்து அவள் கையை பிடித்து மன்னன் அவளை உள்ளே அழைத்துச்சென்றான் வாயிற்படியைக் கடக்குமுன்பு ஒருமுறை திரும்பி தூரத்தே நின்று கொண்டிருந்த இளவழுதியை நோக்கி ஏதோ சைகை செய்துவிட்டு உள்ளே சென்றான். மீண்டும் அரண்மனைக் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன.

இந்த விந்தையைப் பார்த்து பிரமித்து நின்றுவிட்டான் பெருவழுதியையும் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு மாளிகையின் பின்புறத்துக்குச் சென்றான் இளவழுதி. பெரிய மந்திரவாதி அவர்களை எதிர்கொண்டு, உள்ளே அழைத்து சென்று, இரண்டு அறைகளைக் காட்டி, “இங்கு தங்கி இருங்கள் பூஜை சமயத்தில் உங்களுக்கு அழைப்பு வரும்” என்று கூறி சென்றார்.

அடுத்து இரண்டு நாழிகைகள் கழித்து இரண்டு பணி மக்கள் வந்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள். கிழக்கிலிருந்த ஒரு பெரிய அறைக்கு வந்ததும் கதவுகள் மூடியிருந்ததால் அவர்கள் சிறிது நேரம் நிற்க வேண்டியதாயிற்று பிறகு கதவுகள் மெதுவாகத் திறந்தன. உள்ளே அவர்கள் கண்ட காட்சி அச்சத்தை விளைவித்ததா அதிர்ச்சியைத் தந்ததா என்று விவரிக்க முடியாமல் இருந்தது.

நட்ட நடுவில் சக்தி தேவியின் சிலை இருந்தது. அதன் திருவடிகளில் அரசி தலைவைத்துக் கிடந்தாள். நெடுஞ்சேரலாத கையில் வில்லேந்தி அம்பு பூட்டி அவளை நோக்கி குறிவைத்துக்கொண்டு நின்றிருந்தான.

Previous articleAlai Arasi Ch11 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch13 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here