Home Alai Arasi Alai Arasi Ch13 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch13 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

124
0
Alai Arasi Ch13 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch13 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch13 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 மந்திரக் காட்சிகள் பூஜை

Alai Arasi Ch13 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

பூஜை அறையின் கதவுகள் திறந்ததுமே உள்ளே தெரிந்த த்தும் காட்சியைக் கண்ட இளவழுதி, பெருவழுதி, அஹமத் சிலவிநாடிகள் செயலற்று நின்றுவிட்டார்களென்றால் பக்காரணம் இருக்கவே செய்தது. நன்றாக விகசித்த சீரிய உக்ரம் ததும்பும் சக்தி தேவியின் விழிகளும், அவள் கையில் ஏந்தியிருந்த திரிசூலமுமே அச்சத்தை விளைவிப்பதாயிருந்த தன்ரி அரசி சக்தியின் பாதத்தில் தலைவைத்து விழுந்த கிடந்த நிலையும், நெடுஞ்சேரலாதன் தனது நெடிய கைகளில் வில்வின் நாணில் தொடுக்கப்பட்ட வாளியுடன் நின்ற தோற்றமும், அந்த வாளியும் அரசியின் முதுகை நோக்கிக் குறிவைக்கப்பட்டிருந்த திடமும் அதிர்ச்சியைத் தந்தது. அடுத்து நிகழக்கூடியது என்ன என்பது யாருக்கும் புரியாததால் உள்ளே நுழைந்த மூவரும் வாயிற்படிக்கு அருகிலேயே நின்று விட்டனர். அவர்களுடன் கூட த பணிமக்கள் மட்டும் வாயிற்படிக்கு வெளியே நின்றாலும், கேயே நிற்பதா, ஓடிவிடுவதா என்பது புரியாமல் திருதிருவென்று விழிக்கலாயினர்.

இப்படிப் பூஜை அறையின் சூழ்நிலையால் மற்றவர்கள் பிரமை பிடித்து நின்றிருந்த சமயத்தில் சக்தி சிலைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கேரளத்தின் பெரிய மந்திரவாதி பெரிய கற்பூரக் கட்டியைத் தனது உள்ளங்கையில் வைத்து அருகிலிருந்த தத்துவிளக்கு ஜ்வாலையில் அதை ஏற்றி கற்பூரச் சுடரை நிதானமாக தேவிக்குக் காட்டி ‘ஓம் ஹ்ரீம் சங் கரீம்’ என்ற மந்திரத்தைப் பெரிதாக ஓதினார். இப்படி மூன்று முறை கற்பூர தீபத்தை மற்றவர்கள் ஒத்திக்கொள்ள கையிலேயே ஏந்தி வந்தார். நன்றாக எரிந்த அந்த கற்பூரக் கட்டியின் ஜ்வாலை பெரிய மந்திரவாதி கையில் எந்தவித அடையாளத்தையும் செய்யாததை கண்ட இளவழுதி மாத்திரமன்றி பெருவழுதி, அஹமத், மூவருமே

ஆச்சரியத்தின் எல்லையை அடைந்தனர். பெரிய மந்திரவாதியும் கற்பூரக்கட்டியை பனிக்கட்டியை ஏந்துவதுபோல் எந்தவித உணர்ச்சியுமின்றி ஏந்தி சுற்றி வந்து கடைசியில் தேவியின் சிலைக்கு முன்பாகத் தரையில் சமர்ப்பித்தார்.

அடுத்து அவர் நெடுஞ்சேரலாதனை நோக்கி, ”மன்னவா அரசியை பலிகொடுப்பதை தேவி ஒப்புக் கொள்ளுகிறானா அல்லவா என்பது தெரிய வேண்டும்? எதற்கும் நீ அம்பை எய்து விடு” என்று உத்தரவிட, மன்னன் நாணை காது வரையில் இழுத்து வாளியை எய்தான். நாணை இழுத்தபோதே ”மன்னவா நில்லுங்கள்” என்று இளவழுதி கூவியதையும், மன்னனை நோக்கி குறுவாளை வீச அஹமத் இடைக்கச்சையிலிருந்து குறுவாளை எடுத்துக் கொண்டதையும் கண்ட பெரிய மந்திரவாதி சிறிதும். கலங்காமல் சக்தி தேவியை விட்டு அகலாமல் உட்கார்ந்திருந்தார்.

அடுத்து ஏற்பட்ட அற்புத நிகழ்ச்சி அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. சேரமன்னன் அம்பு அரசியின் முதுகில் பாய்ந்து இளவழுதியின் பயங்கரக் கூச்சல், அஹமதின் குறுவாள் அவன் கையில் தோன்றியது எல்லாமே ஒரே சமயத்தில் நிகழ்ந்தாலும் அவற்றின் முடிவும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தது.

அஹமத் வீச முயன்ற குறுவாள் அவன் கையை விட்டுக் கிளம்பவில்லை. இளவழுதியின் கூக்குரல் அந்த பூஜை அறை முழுதும் சுவர்களில் தாக்கி எதிரொலி செய்தாலும் அந்த எதிரொலியும் விநாடியில் அடங்கியது.

அனைவா கண்களும் அரசியின் முதுகைக் கவனித்து, அதில் அம்புதைத்து கிடுகிடுவென்று ஆடினாலும் அரசியில் முதுகிலிருந்து ஒரு துளி ரத்தம்கூட வராததையும் பார்த்து அதற்குக்காரணம் தெரியாமல் நின்றனர். இது ஏதோ தங்களுக்குப் புரியாத மந்திர ஜாலமென்று நினைத்த அஹமத், அராபிய குருநாதரின் மந்திரத்தையும் மீறிய மந்திரம் ஏதோ, சேர நாட்டில்

இருப்பதையும் புரிந்து கொண்டதால், பெரிய மந்திரவாதியிடம் அடங்கி நடந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லையென்பதை உனர்ந்து கொண்டதால் ஏதும் பேசாமல் மௌனமாயிருந்தான்.

அந்த சமயத்தில் மெல்ல நகைத்த பெரிய மந்திரவாதி மனவழுதி! உன் மனைவியின் முதுகிலிருக்கும் அம்பை நீயே பிடுங்கிவிடு!” என்று உத்தரவிட்டு அருகில் வருமாறு அழைத்தார். அவர் அழைப்பைக் கேட்ட இளவழுதி அரசியை அணுகவும் அச்சப்படவே, ”அஞ்சாதே இளவழுதி| அரசி சக்தி தேவியின் அருளுக்குப் பாத்திரமாகிவிட்டாள். இனி அவளுக்கு எந்தவித குரைவுமில்லை. வா அருகே” என்று தைரியம் ஊட்டவே இளவழுதி மெதுவாக தேவி சிலையை நோக்கிச் சென்று அரசியின் முதுகை மெதுவாகத் தொட்டுப் பார்த்து, மன்னன் வாளி ஆழமாகப் பாய்ந்திருப்பதைக் கண்டான். அதனால் நடுங்கும் மக்களுடன் மிக மெதுவாக அவள் முதுகிலிருந்த வாளியைப் நங்கினான். வாளி வாழைப்பழத்தில் தைத்த ஊசிபோல் மிக நசுக்காக வெளியே வந்துவிட்டதையும், அதன் நுனியிலும் மயிலும் இடைப்பகுதியிலும் குருதி சிறிதுமில்லாததையும் கவனித்த இளவழுதி பெரிதும் பிரமித்தான், வாளி பிடுங்கப்பட்டதும் வாளி தைத்த இடங்கூட அடியோடு தெரியாததைக்கண்டு இது கண்கட்டு வித்தையென்றே நினைத்தான். அந்த வாளியையும் அரசியின் முதுகையும் திரும்பத் திரும்பத் தடவிப்பார்த்த இளவழுதி அரசியின் பக்கத்திலிருந்து மெல்ல எழுந்து அஹமத் நின்றிருந்த இடத்துக்கு வந்து வாளியைக் காட்டினான். அஹமத் அப்பொழுதுதான் புரிந்து கொண்டான் அராபிய மந்திரத்துக்கு மலையாள மந்திர வித்தை சிறிதும் குறைந்ததல்ல என்று.

இந்த சோதனை தீர்ந்ததும் பெரிய மந்திரவாதி தமது கையிலிருந்த கமண்டலத்திலிருந்து மஞ்சள் நீரை எடுத்து அரசியின் மீது தெளித்ததும் அரசியின் உடல் மெதுவாக அசையலாயிற்று. பிறகு ஒருமுறை புரண்டு எழுந்து உட்கர்ந்து அரசி அந்த பூஜை அறையைச் சுற்று முற்றும் பார்த்தாள் மெதுவாக எழுந்து பெரிய மந்திரவாதியை நோக்கி நான் இத்தனை நேரம் எங்கிருந்தேன்?” என்று கேட்டாள்.

“இங்குதான் இருந்தாய் அரசி” என்றார் பெரிய மந்திரவாதி

“இல்லை ” என்றாள் அரசி.

“வேறெங்கு போயிருந்தாய்?”

“அரபு நாட்டுக்கு “

“யாரைப் பார்க்கப் போயிருந்தாய்?”

“எனது குருநாதரைப் பார்க்க.

“அவர் என்ன சொன்னார்?”

“உங்கள் அனுமதி பெற்று பிறகு வரச் சொன்னார் அ நாட்டுக்கு.”

இதைக்கேட்ட பெரிய மந்திரவாதி புன்முறுவல் செய்து “அரசி: உன் குருநாதர் மந்திரவித்தையில் தேர்ந்தவர். அவருக்கிணையாக இந்த உலகில் யாரையும் சொல்ல முடியாது. ஆனால் அவர் சத்தியம் மீறாதவர். தமது சக்தியை பிரயோகிக்க மறுப்பவர். அவர் கட்டளையை மீறுபவர் பிழைத்தது கிடையாது” என்ற சிலாகித்தார். மேலும் சொன்னார். “உன்னையும் அஹமதையும் சில நாட்கள் இங்கேயே வைத்திருக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்” என்று .

“என் மதகுருவா?” என்று அரசி கேட்டாள்.

“ஆம்” என்றார் பெரிய மந்திரவாதி,

“எப்பொழுது?” சந்தேகம் நிரம்பிய குரலில் கேட்டாள் அரசி

“நேற்று.”

நேற்று அவருடன் பேசிக் கொண்டிருந்தீர்களா?”

‘’ஆம்.. நானும் மன்னனும் பேசிக் கொண்டிருந்தோம்.”

“மன்னருமா?”

‘’ஆமாம். மன்னரில்லாவிட்டால் நான் எப்படிப் பேச முடியும்?”

‘’இதற்கு மன்னர் என்ன செய்வார்?”

உன் குருநாதரின் சிந்தனையை இங்கு இழுத்து அவர் அத்தையும் தோற்றுவித்தார்” என்று பெரிய மந்திரவாதி கூரியதும் நம்பத்தகாத விழிகளை அரசன் மீது நாட்டினாள் அரசி.

அஹமதும் மற்றவர்களும் இதை அடியோடு நம்பாததை அவர்கள் முகபாவத்திலிருந்தே அறிந்துகொண்ட சேரமன்னன் அரசி! இன்றிலிருந்து ஏழாவது நாள் இங்கிருந்து உங்கள் நாட்டுக்குக் கிளம்பலாம் நான் சொல்வது உங்களுக்கு சந்தேகமாயிருந்தால் நீங்களே உங்கள் குரு நாதருடன் பேசலாம்” என்று கூறினார்.

அதற்குமேல் ஏதும் பேசாத மன்னன் குருநாதரைப் பார்க்கவே குருநாதரே அவன் சார்பில் பேசினார்: ”அரசி! அஹமத்! இன்றிலிருந்து ஏழாவது நாள் சேர மன்னன், சேர நாடு முழுமைக்கும் தலைவனாகிறான். சேரநாட்டில் ஒரு வழக்கு மருந்து வருகிறது. சேர நாடு மொத்தம் எட்டுப் பிரிவாக உள்ளது. அந்த எட்டுப்பிரிவின் தலைவர்களும் தங்களுக்கு ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அந்தத் தலைவனை ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாக மற்ற ஏழு பேரும் முடிப் பொன்னால் ஆரம் செய்து கழுத்தில் போட்டுக்கொள்வார்கள்.

இதைக் கொண்டுதான் முன்பு ‘எண்பேர் ஆயம்’ என்ற முன் சொல்லும் ஏற்பட்டது. அந்த எழுவர் பொன் ஆரம் பூணும் விழா இன்றிலிருந்து எட்டாவது நாள் வருகிறது. அதற்கு நீர் இருக்க வேண்டும் என்பது மன்னன் விருப்பம். உங்கள் குருநாதரின் விருப்பமும் அதுதான்” என்று கூறிய மந்திரவாதி கடைசியாக சக்திதேவிக்கு மங்கல ஆரத்தி எடுத்தார். விபூதி குங்குமப் பிரசாதத்தை அனைவருக்கும் அளிக் இளவழுதிக்கும் அரசிக்கும் தனது கைகளாலேயே விபூதியையும் குங்குமத்தையும் இட்டார்.

பிறகு அனைவரும் செல்ல அனுமதி கொடுத்து விட்டு அரசனை மட்டும் இருக்கச் சொல்லி பூஜை அறைக் கதவுகளைச் சாத்தச் சொன்னார். அறைக்கு வெளியே வந்தவர்கள் மீண்டும் அரசனைக் காண இரண்டு நாழிகைகளுக்கு மேல் பிடித்தன முடிவில் அரசன் வந்து காவலாளிகளை விளித்து விருந்தினர்களுக்கு உணவு படைக்கவும், இருக்க இடம் காட்டவும் பணித்தான்.

அந்தக் காட்டின் வேட்டுவ மாளிகையில் விருந்து அமர்க்களமாக நடந்தது. அரசிக்கும் மற்றவர்களுக்கும் ஒழித்துவிடப்பட்ட அறை மிக விசாலமாயிருந்ததன்றி சக வசதிகளும் இருந்தன. அன்றிரவும் மெள்ள மெள்ள வரவே அனைவரும் துயில் கொண்டனர். அன்று நள்ளிரவில் அந்த அறையின் சாரளத் தோட்டப்புறத்தில் ஒரு உருவம் மெதுவாக வந்தது. தனது கையிலிருந்த நீண்ட பிரம்பொன்றால் அரசியை மும்முறை தொட்டது. அரசி எழுந்து கனவில் நடப்பவள்போல் நடந்து சென்றாள் சாரளத்தை நோக்கி, பிறகு சாளரக்கட்டையில் ஏறி வெளிப்புறம் குதித்தாள்.

சாளரக் கதவு திறந்தபோதே விழித்துக்கொண்ட இளவழுதி நடப்பதை அரைக்கண் பார்வையால் கவனித்தான். அரசி சாளரத்துக்கு வெளியே குதித்ததும் மெதுவாக எழுந்து சாளரத்தை நோக்கி நடந்து வெளியே மெதுவாகப் பார்த்தான். தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அரசியைத் தூக்கித் தோள்மீது போட்டுக்கொண்டு பெரிய மந்திரவாதி காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார்.

Previous articleAlai Arasi Ch12 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch14 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here