Home Alai Arasi Alai Arasi Ch14 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch14 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

77
0
Alai Arasi Ch14 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch14 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch14 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 14 கனவு இருந்தது – நினைவு இல்லை

Alai Arasi Ch14 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

கேரள பெரிய மந்திரவாதி நள்ளிரவில் கள்ளத்தனம் சாளரத்தருகில் தோன்றி அலை அரசியை நீண்டதொரு பிரம் தட்டியதையும், அதை அடுத்து அரசி எழுந்து சாளரத்தை நோம் நடந்து சாளரத்தின் மீதேறி வெளியே குதித்ததையுங் க அரையன் இளவழுதி அதிர்ச்சியின் வசப்பட்டானென்ற மந்திரவாதி அரசியைத் தூக்கித் தோள்மீது போட்டுக்கொள் நடந்து சென்றதைப் பார்த்ததும் சினத்தின் வசப்பட்டு, திரும்பகா துயின்ற இடத்துக்குச் செல்லாமலும் வாளைக்கூட எடுக்க கொள்ளாமலும் தானும் சாளரத்தில் ஏறி, வெளியே குதித்து பெரி… மந்திரவாதியைத் தொடர்ந்து சென்றான். சிறிது தூரம் நடம் பின்பே தான் வாளை எடுத்துக்கொள்ளவில்லையென்பனை புரிந்து கொண்டாலும் மந்திரத்துக்கு முன்பு வாள் பயனற்றது என்பதை உணர்ந்ததால் அதை ஒரு பெரிய நஷ்டமாகக் கருதாமல் மந்திரவாதியைத் தொடர்ந்து சென்றான்.

அரசியைத் தோளில் போட்டுக்கொண்டு நடந்த மந்திரவாதி சற்றும் அக்கம் பக்கம் பார்க்காமலும் பின்னால் யாராவது வருகிறார்களா என்பதைக் கவனியாமலும் செங்குத்தாக நிமிர்ந்த வண்ணம் காட்டின் ஊடே நடந்தார். அவ்வப்பொழுது எதிரே தடைபட்ட மரக்கிளைகளைத் தமது இடது கையில் ஒதுக்கி அவை அரசியின்மீது படாதிருக்க வழி செய்துகொண்டு ஒரே சீராக அவரது நீண்ட கால்கள் பரவ நடந்து சென்றார். காட்டினுள் பல இடங்களில் வளைந்தும் திரும்பியும் சென்ற மந்திரவாதி இரண்டு நாழிகைகளுக்கெல்லாம் காட்டின் மிகவும் அடர்த்தியான பகுதிக்குள் நுழைந்தார். காட்டின் அந்தப் பகுதியில் பயணம் செய்வது சிறிது கஷ்டமாக இருந்ததாலும், குறுக்கே பெரிய பெரிய சிலந்தி வலைகள் பின்னப்பட்டிருந்தாலும், ஆங்காங்கு சில பறவைகள் தலைக்கு அருகில் பறந்தாலும் அந்தத் தடைகள் எதையும் லட்சியம் செய்யாமல் சிலந்திப் பெருவலைகளைத் தமது பால் விலக்கி நடந்தார். தலைக்குமேல் பறந்த பறவைகள் வரை அண்டவே அச்சப்பட்டு அவர் தலையருகில் வந்ததும் விலகிச் சென்றுவிட்டதை இளவழுதி கண்டும் வியப்படைந்தானில்லை. பறவைகளை அரசியே ஈர்த்ததைக் கண்டிருந்த அந்த வாலிபன் மந்திரவாதிக்கு அது ஒரு பெரிய விஷயமல்லவென்பதை உணர்ந்து கொண்டான். இத்தனைக்கும் பெரிய மந்திரவாதி இரகசியமாக அரசியை எடுத்துச் செல்லும் காரணம் என்ன என்பது பரியாது உள்ளூரத் தவித்தான்? பெரிய மந்திரவாதிக்கு மன்னனிடம் இருக்கும் பிடிப்பில் அவர் நேராகவே அரசியை அழைத்துப் பேசியிருக்கலாமே, அல்லது தம்முடன் அழைத்துச் சென்றிருக்கலாமே என்று எண்ணமிட்டான் இளவழுதி, அரசியை அழைக்கவும் பேசவும் அன்று முழுக்க அவகாசம் இருந்திருக்க, நள்ளிரவில் இத்தகைய ஐயத்தைக் கிளப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவானேன் என்றெல்லாம் சிந்தித்த இளவழுதி தனது வினாக்களுக்கு விடையேதும் கிடைக்காததால் வீணாக சிந்தித்து மனத்தைக் குழப்பிக்கொள்ள இஷ்டப்படாமல் சிந்தனையை உதறி வழியைக் கவனித்து மந்திரவாதியைத் தொடர்ந்தான்.

மந்திரவாதி மேலும் மேலும் கஷ்டமான பாதைகளில் நடந்தும், மலையின் ஒரு குகைக்கு அருகாமையில் வந்ததும் சற்று நின்று குகையை மூடியிருந்த பாறையைக் கையால் தட்டி ”அம்மா! கதவைத் திற” என்று மெதுவாகக் குரல் கொடுத்தார்.

பாறை நன்றாக இறுகியிருந்ததால் அதில் உட்புக வழி ஏதுமில்லாதிருந்ததாக நினைத்த இளவழுதி அவர் கதவைத் திறக்கும்படி கூறியதைக் கண்டு ஏற்பட்ட வியப்பை அடுத்த விநாடி உதறிக் கொண்டான். அந்தப் பாறை ஏதோ பெரும் கதவுபோல் உட்புறமாக அசைய, உள்ளிருந்த நீண்ட இரு கைகள் மந்திரவாதியின் தோளிலிருந்த அரசியை மெதுவாக வாங்கிக் கொண்டதையும். அந்தக் கைகள் பெண்ணின் கைகளென்பலை அதன் கைகளிலிருந்த வளையல்களால் ஊகித்துக்கொண்ட இளவழுதி தனது பிரமிப்பிலிருந்து விடுபடுமுன்பாக மந்திரவாதி குகைக்குள் சென்று மறைந்துவிட்டார். அவர் மறைந்த குகைக்கதவு திறந்தே இருக்கவே, இளவழுதி அடிமேலா பூனைபோல் நடந்து அந்தக் குகைக்குள் நுழைந்தான்.

குகையின் அமைப்பைக் கண்டு அடியோடு உள்ளக் பறிகொடுத்த இளவழுதி சேரநாட்டு மலைப் பகுதிகளை அலசியிருக்க இந்தக் குகை எப்படி தனது ஆராய்ச்சியிலின் விட்டுப்போயிற்று என்று நினைத்தான்? சேரமன்னர்களில் விரோதிகளான கடம்பர்கள் அடிக்கடி கொடுத்துவர் தொந்தரவின் காரணமாகவும், கடம்பர் சில சமயங்களில் கடல் மூலமாகவும் சில சமயங்களில் மலைப்பகுதியிலிருந்த கொள்ளையை நடத்தியதால் சேரநாட்டை அடுத்த கல் பகுதிகளையும் மலைப்பகுதிகளையும் ஆராய தன்னை மன்னர் நியமித்திருந்ததை எண்ணிப் பார்த்தான். அந்தச் சில மாதங்களில் தான் நடத்திய ஆராய்ச்சியிலிருந்து, சல்லடை போட்டு சலித்த முயற்சியிலிருந்து, இந்தக் குகை மட்டும் எப்படி விட்டுப் போயிற்று? என்று சிந்தித்தும் விடை காணாததால், தான் போர் வீரனே தவிர மந்திரவாதியல்லவென்பதையும் சிந்தித்து போர்வாளைவிட மந்திரப் பிரம்பு சிறந்ததென்று முடிவு செய்து கொண்டான்.

குகை மிக விசாலமாயிருந்ததையும் மேலிருந்து சந்திர கிரணங்கள் துவாரங்கள் மூலம் வெள்ளிக் கம்பிகளாக உள்ளே நுழைந்திருந்ததையும், அந்த வெள்ளிக் கம்பிகள் ஒரே சீராக அடுத்தடுத்து விழுந்ததால் ஏதோ வெள்ளிக் கம்பிகளால் தடுக்கப்பட்ட சிறை போலத் தெரிந்ததையும் இளவழுதி கண்டான்.

குகையில் பக்கச் சுவரொன்றில் கை வைத்த இளவழகி அது மிகவும் வழவழப்பாக பளிங்குக்கல் போலிருந்தைப் பார்த்து ‘ஸஹ்யாத்ரி மலைத்தொடரின் குகை எதிலும் பளிங்கு இல்லையே, இது இயற்கை வகுத்ததா, செயற்கை வகுத்ததா’ என்று அனைத்தானே கேட்டுக் கொண்டான். அவன் மேற்கொண்டு குகை ஆராய்ச்சியில் இறங்குமுன்பு தூரத்தே பாதாளத்தில் ஒரு சிறு விளக்கு சுடர்விட்டதைப் பார்த்தான். அதை நோக்கி இரண்டடி நடந்ததும் தசந்திர கிரணங்கள் விழுந்திருந்த இடத்தை அடுத்து கீல் நோக்கிப் படிகள் ஓடுவதைப் பார்த்து அந்தப் படிகளில் இறங்கிச் சென்றான். அவன் கடைசிப் படியில் காலை வைத்ததும் கீலே நீண்டு ஓடிய சமதரையின் கோடியில் ஒரு பெரிய பீடத்தின் மகாசக்தியின் உருவச்சிலை இருந்ததையும், அதன் கால்களின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிறு விளக்கின் ஜ்வாலையில் சிலையின் பொற்கவசம் எதிரொளி கிளப்பியதையும், அந்த ஒளி சிலை மீது மட்டும் பட்டு சிலையை ஜோதிமயமாக அடித்திருந்ததையும் கண்ட இளவழுதி இருந்த இடத்திலேயே கல்லாய் சமைந்து நின்றான். இத்தனைக்கும் குகை அடிவாரத்தில் மற்ற இடங்களில் பூர்ணமான இருட்டே குடிகொண்டிருந்தது. மந்திரவாதியோ, அரசியோ, அரசியைத் தாங்கிக் கொண்ட பெண்மணியோ யாரையுமே காணவில்லை. சுற்று முற்றும் எவ்வளவோ உற்றுப் பார்த்தும் யாரும் தெரியாததால், “குரு நாகரே குருநாதரே!” என்று இருமுறை குரல் கொடுத்தான் இளவழுதி. பதிலுக்கு குகைச் சுவர்கள் ‘குருநாதரே, குருநாதரே’ என்று எதிரொலி செய்ததைத் தவிர வேறெவ்வித அரவமும் கேட்கவில்லை மகாசக்தியின் சந்நிதானத்தில்,

அப்புறம் இப்புறம் நடந்து பார்க்கலாமென்றாலோ வேறு வழி ஏதும் இல்லாததைக் கண்ட இளவழுதி செய்வதென்னவென்று அறியாமல் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் வெளியேயிருந்த குகைக்கதவு கரகரவென்ற சத்தத்துடன் மெதுவாக மூடிக்கொள்வதை உணர்ந்தான். அதனால் எந்தவித கவலைக்கும் உள்ளாகாமலிருந்த இளவழுதி திடீரென்று அந்த சமதரையின் கோடியில் மற்றொரு தீபம் பிரகாசமாகத் தெரிவதையும் அதை மெல்லிய திரையொன்று மறைத்திருந்ததையும் கண்டு அந்த திரையை நோக்கி மெதுவாக நடந்தான். திரை ஓர் அறையை மறைத்திருந்தது. அறைக்குள்ளிருந்த ஒரு மஞ்சத்தில் விரிக்கப்பட்டிருந்த புலித்தோல் படுக்கையில் அலை அரசி கிடத்தப்பட்டிருந்தாள். அந்த மஞ்சத்தின் ஒரு புறத்தில் நின்றவண்ணம் பெரிய மந்திரவாதி கையில் ருத்திராட்ச மாலையை உருட்டி ஏதோ ஜபித்துக் கொண்டிருந்தார். நின்ற நிலையில் அவர் கண்கள் மூடியிருந்தன. அரசியின் தலைப்பாகத்தில் அவர் நின்றிருந்தது தெரிந்ததேயொழிய கால் பகுதியில் இருட்டே அடித்துக் கிடந்ததால் அங்கு இருப்பது யாரென்று தெரியாவிட்டாலும் அது அரசியை வாங்கிய பெண்ணாகத்தான் இருக்கவேண்டுமென்று தீர்மானித்தான் இளவழுதி.

மந்திரவாதி ஜபத்தை முடித்துக்கொண்டு தனது கையை அலை அரசியின் உடலை நோக்கி நீட்டினார். அவர் கை நீண்ட அதே விநாடியில் அரசியின் கால் பகுதிகளிலும் பெரும் பிரகாசம் தோன்றியது. அந்த வெளிச்சத்தில் கால் புறத்தில் நின்று கொண்டிருந்தாள் அந்த இன்னொரு பெண் அவளைக் கண்ட இளவழுதி ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அவன் உணர்ச்சிகள் அடியோடு உறைந்து போயின. அரசியின் காலடியில் மஞ்சத்தை அடுத்து நின்றவளும் அலைஅரசிதான். அதே உருவம்! அதே சாயல் அதே நெற்றி வைரம்! அதே காந்தக் கண்கள்! அவளைத் கண்டதால் உறைந்து போன உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புவதைப் போல் மந்திரவாதி பேசத் தொடங்கினார். “பெண்ணே ! உங்கள் குருநாதருடன் பேசுமுன்பு உன் சகோதரியைக் கேட்க பயதைக் கேட்டுவிடு” என்றார். அந்த இரண்டாவது அரசி கேள்விகளை எழுப்பினாள். கேள்விகள் புரியவில்லை வழுதிக்கு. ஏதோ வேற்று நாட்டு மொழியாயிருந்தது. புதுமையாக ஒலித்தது. அந்த கேள்விகள் எழுந்ததுமே கட்டிலில் இருந்த அரசியின் கண்கள் மலர்ந்தன. அக்கம் பக்கம் சுழன்றன.- கடைசியில் எதிரேயிருந்த பெண்மீது நிலைத்தன. நிலைத்த என் அசையவில்லை. மெதுவாக மஞ்சத்தின்மீது எழுந்து நின்ற அரசி
‘’என் காலடியில் இத்தனைப் பெரிய கண்ணாடியை யார் வைத்தது?” என்று கனவில் இருப்பவளைப் போன்று வினவினாள். சுய நினைவு இல்லை !

Previous articleAlai Arasi Ch13 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch15 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here