Home Alai Arasi Alai Arasi Ch16 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch16 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

70
0
Alai Arasi Ch16 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch16 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch16 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 16 பூங்கரம் புதைந்த அடையாளம்!

Alai Arasi Ch16 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

மலைக்குகையின் பாறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த மூன்றாவது உருவம் குகையின் உச்சிப்படியில் நின்று கீழேயிருந்த சமதரையில் நடந்த நிகழ்ச்சிகளைக் காண்பதற்கும் அரபு நாட்டு மதகுருவின் குரல் இளவழுதியை மறைவிலிருந்து வெளியே வர உத்தரவிட்டதற்கும் நேரம் சரியாயிருக்கவே அது மேற்படியிலேயே ஸ்திரமாய் நின்றுவிட்டது. படியை அணைத்து நின்ற குகையின் வழவழத்த பக்கச்சுவரில் வலது கையை ஊன்றியும் இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டும் அதிகார தோரணையில் நின்ற உருவம் தனது உதடுகளில் ஏதோ சொற்களை முணுமுணுக்கலாயிற்று.

இப்படி மூன்றாவது உருவமொன்று வந்ததை அறியாமலே மதகுருவின் ஆணைப்படி மறைவிலிருந்து வெளிப்போந்த இளவழுதி சமதரை நடுவுக்கு வந்து, ‘என்னை அழைத்தது யார்? எதற்காக அழைத்தீர்கள்?” என்று வினவினான்.

மதகுருவின் சொற்கள் இளவழுதியின் காதுக்கருகில் ஒலித்தன. “அரபு நாட்டு மதகுரு அழைத்தேன். உனக்கு எனது கட்சித் தலைவனாகவும், படைகளின் தலைவனாகவும் பதவியும் அளித்தேன். அதை நீ கேட்கவில்லை !” என்ற மதகுருவின் குரல் திடமாக சப்தித்து குகைச்சுவர்களில் தாக்கி எதிரொலி செய்தது.

“நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால் உங்கள் நாட்டை நான் பார்த்ததில்லை. உங்களையும் கண்டதில்லை. உங்கள் கட்சி என்ன? எது? என்பதும் எனக்குத் தெரியாது. அதற்கு நான் தலைமை வகிக்க ஒப்புக் கொள்ள அவசியமென்ன?” என்று வினவினான், இளவழுதி சிறிது அச்சம் கலந்த குரலில்,

“என் நாட்டுக்கு வரும்போது என்னை நீ காணலாம். அதனால் எந்தப் பயனும் இல்லை. ஊனக்கண்ணின் பார்வை சக்தியற்றது, அகக்கண்ணால் நீ பார்க்க முடியாது. மனிதர் கண்ணால் பார்ப்பதெல்லாம், மனத்தால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் மனிதன் தெய்வமாகிவிடுவான். கண்டதெல்லாம், எண்னுவதெல்லாம் நடக்குமென்றோ காணாததெல்லாம், எண்ணாதெல்லாம் நடக்காதென்றோ சொல்ல முடியாது. உன் வாழ்வு அனைத்தும் முன்னமேயே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நீ நடப்பதைத் தவிர வழியில்லை . இளவழுதி| உனக்குப் பெரும் பிற்காலம் இருக்கிறது. இரண்டு அரசிகளின் சக்தி உன்னை உலகத்தில் உச்ச நிலைக்குக் கொண்டு போகும். ஆகவே அவர்களுடன் எங்கள் நாட்டுக்கு வந்து சேர்” என்று உத்தரவிட்டார் மதகுரு.

இளவழுதி முதலில் ஒளிவிழுந்த இடத்தை அணுகி, “என்னைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினான்.

உருவமற்று அருவமாக நின்ற மதகுரு மெல்ல நகைத்தார். ‘’தெரியாமலா அலை அரசியை உன்னிடம் அனுப்பினேன். தெரியாமலா கடலரசியை இங்கு அனுப்பி உங்கள் மூவரையும் சந்திக்க வைத்தேன்?” என்று வினவினார் மதகுரு நகைப்பின் ஊடே.

எல்லாம் உங்கள் ஏற்பாட்டின்படிதான் நடக்குமா? நீங்கள் என்ன கடவுளா?” என்று துணிவுடன் வினவினான் இளவழுதி.

“கடவுளில்லை . மனிதன் கடவுளாக முடியாது. ஆனால் தெய்வ சக்தியை உபாசனைகள் மூலம் அடையலாம். உங்கள் நாட்டு மந்திரவாதிகளே எத்தனையோ அற்புதங்களைச் செய்கிறார்களே, உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார் அரபுநாட்டு மதகுரு.

“எந்த அற்புதத்தையும் நான் கண்டதில்லை. அற்புதங்களில் எனக்கு நம்பிக்கையுமில்லை. கண் கட்டு வித்தை கூட ஏதோ தந்திரம் என்று நினைக்கிறேன்” என்றான் இளவழுதி.

சந்தேகமுள்ள மனத்தில் தெளிவிருக்காது. தெளிவில்லாத மனது எதையும் சரியாக சிந்திக்க முடியாது. சிந்திக்காக வரையில் உண்மை புலனாகாது” என்ற மதகுரு, “இளவழுதி| இந்த இரவின் ஆரம்பத்தில் உங்கள் மன்னன் சக்தியின் சந்நிதானத்தில் அலை அரசியின் முதுகில் அம்பு எய்ததைக் கண்டாய். பிறகு அந்த முதுகுலிருந்து அம்பைப் பிடுங்கியும் குருதி ஏதும் வரவில்லை ஏன்? அலை அரசியின் உடலில் ரத்தமில்லையா? என்று வினவினான்,

அந்த நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்தான் இளவழுதி உண்மையில் அம்பு தைத்த இடம்கூடத் தெரியவில்லை அரசியின் முதுகில். இதில் ஏதோ சூது இருக்கிறதென்று மட்டும் நினைத்தான் “ஆம், அம்பு தைத்த இடம்கூடத் தெரியவில்லை ” என்றான்.

“இது விசித்திரமாயில்லையா உனக்கு?”

‘’ஆம்.’’

“உன் கண்ணெதிரிலேயே நடந்த சம்பவத்தை உன்னால் நம்ப முடிகிறதா?”

“முடியவில்லை . இருப்பினும் நேரில் பார்த்தேன். “

“நீ எதையும் பார்க்கவில்லை இளவழுதி. அங்கு நீ பார்த்தது ஒரு பிரமை. அரசன் ஒரு பூஜையின் துணையுடன் உன் கண்களையும் உன்னுடன் வந்த மற்றவர் கண்களையும் கட்டிவிட்டான்.”

‘’அப்படியானால் மன்னர்?”

“பல கலைகளையும் அறிந்தவர். மலையாளத்தில் மந்திரவாதிகள் பலர் உண்டு, அவர்களில் தலையாய பெரும் சக்தியை உடையவன் சேர மன்னன். பெரிய மந்திரவாதிகூட அவனிடந்தான் மந்திரம் கற்றார்…” என்று சொல்லிக் கொண்டு

போன மதகுரு. “சற்று இரு மன்னருடன் பேசிவிட்டு வருகிறேன்”
என்றார்.

கேரளத்தின் பெரிய மந்திரவாதி சட்டென்று நிமிர்ந்து நின்றார். மன்னரா இங்கு வந்திருக்கிறாரா?” என்று வினவினார்.

‘’ஆம்’ என்ற ஒரு சொல்லுக்குப்பின் வேறு சொற்கள் வரவில்லை மதகுருவிடமிருந்து. அடுத்து யாரோ இருவர் பேசும் குரல் மட்டும் கேட்டது. “மன்னவா! இது நீ வழக்கமாக வரும் இடந்தானே? ஏன் படிகளின் உச்சியிலேயே நின்று விட்டாய்?” என்று மதகுருவின் குரல் ஒலித்தது.

அடுத்து ஒலித்தது மன்னன் குரல், “நீங்கள் வந்திருப்பதைப்
பார்த்தேன்…” என்று.

எங்கு பார்த்தாய்? எப்படிப் பார்த்தாய்?” வினவியது
மதகுருவின் குரல்,

வழக்கப்படி என் மாளிகையிலிருக்கும் சக்தி மாதாவின் விளக்குச் சுடரில் பார்த்தேன்” என்றான் மன்னன்.

மகா சக்தியின் ஜோதியில் தெரியாதது உலகத்தில் எது இருக்கிறது!” என்று வியப்புடன் பக்தியையும் காட்டிய மதகுரு, ‘’அன்னை என்ன சொன்னாள்?” என்று கேட்டார்.

அன்னையை எதுவும் நான் கேட்கவில்லை. அல்ப காரியங்களுக்கெல்லாம் அன்னையைக் கேட்பது சரியல்ல” என்றான் அரசன்.

“உண்மை உண்மை ” என்ற மதகுரு. “மன்னவா! இளவழுதியை எப்பொழுது அனுப்புகிறாய்?” என்று வினவினார்.

“இன்னும் ஏழு நாட்களில்” என்ற அரசன், “அவனைத் திருப்பி அனுப்புவது உமது பொறுப்பு” என்றான்.

‘’அத்தனை முக்கியமானவனா அவன்?” என்று கேட்டார் மதகுரு.

இம்முறை மன்னன் நகைத்தான். “முக்கியமானவனல்லாமலா நீங்கள் அழைத்துப் போக விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான் நகைப்பின் ஊடே.

மன்னிக்க வேண்டும் மன்னவா! அவன் சக்தி அவனுகே தெரியாது. தெரிய வைத்து திருப்பி அனுப்புகிறேன் உன் இமாலயப் படையெடுப்புக்கும் உதவியாயிருக்கும்” என்றார் மதகுரு.

நன்று மதகுருவே. இப்பொழுதே இளவழுதி மகாவீரன் தாங்கள் அளிக்கும் பயிற்சியும் சேர்ந்தால் சேர நாட்டுக்கே அணிகலனாயிருப்பான். உங்கள் ஆசியும் பயிற்சியும் பரிபூர்ணமாயிருக்கட்டும் அவனுக்கு” என்ற மன்னன் சரேலென்று திரும்பி குகையை விட்டு வெளியேறினான். குகையின் பாறைக் கதவும் சத்தம் ஏதுமின்றி மூடிக் கொண்டது. அரசன் வெளியேறிய அதே சமயத்தில் “இளவழுதி! அலை அரசி! கடலரசி! மூவரும் வந்து ஒன்றாக நில்லுங்கள்” என்று உத்தரவிட்டார் மதகுரு.

அவர் உத்தரவுப்படி ஒலி எழுந்த இடத்தருகில் வந்து இளவழுதியின் இருபுறத்திலும் இரு அரசிகளும் நின்று கொண்டார்கள். ”நீங்கள் மூவரும் வாழ்நாளில் இப்படியே இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்’ என்று ஆசீர்வதித்த மதகுரு, “இளவழுதி! அலை அரசியை நீ ஏற்கனவே சந்தித்திருக்கிறாய். அவள் யாரென்று பார்” என்று உத்தரவிட்டார்.

இளவழுதி இருவரையும் மாறி மாறி நோக்கினான். இருவரும் ஒரே அச்சில் வார்த்தது போலிருக்கவே அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் திணறினான் இளவழுதி. மரக்கலத்தில் தான் இறுகத் தழுவிப்பிடித்த உடல் எது என்று தெரியவில்லை அத்தனை அருகாமையிலிருந்தும் சிறிது நேரம் கண்களை

மூடினாள். பிறகு சட்டென்று திரும்பி தனக்கு இடது புறத்திலிருந்த அலை அரசியை இடது கையால் இழுத்துக் கொண்டான்.

இப்பொழுது புரிகிறதா?” என்று கேட்டார் மதகுரு.

”எது?” என்று வினவினான் இளவழுதி

‘’நீ கண்ணை விழித்திருந்தபோது அலை அரசியை நீ அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கண்ணை மூடியதும் முடிந்தது. எப்படி?” என்று கேட்டார் மதகுரு.

என்னை மீறிய சக்தியொன்று என்னை அவள்பால் இழுத்தது” என்றான் இளவழுதி.

பார்ப்பதை விட பார்க்காத சக்தியின் பலத்தை நீ உணர்ந்தாயல்லவா? இம்மாதிரி பல சக்திகள் மனித சிருஷ்டியில் இருக்கின்றன. மகான்கள் இதை உணருகிறார்கள். உனக்கு இந்த சக்தியை போகப் போக இரு அரசிகளும் அளிப்பார்கள். நீ அரபு நாட்டுக்கு வந்ததும் கடமைகள் பல இருக்கின்றன. அரசன் அனுமதி பெற்று வந்து சேர்” என்று மதகுரு சொன்னதும் மீண்டும் அந்தப் பழைய ஒளி குகையின் மேல்துவாரத்துக்கும், சமதரைக்குமாக நின்றது. அடுத்த விநாடி அது மறைந்தது.

அதுவரையில் வாளாவிருந்த கேரளத்தின் பெரிய மந்திரவாதி, இளவழுதி! நீ அரசிகளுடன் இங்கு தங்கியிருந்து காலையில் மாளிகைக்கு வந்து சேர்” என்று கூறியவர் சட்டென்று நின்று. “வேண்டாம், அரசிகளை மட்டும் அனுப்பிவிடு” என்றார்.

“நான்?”

“நீ காலையில் சேரவாற்றில் காலைக் கடன்களை முடித்து மன்னனுக்குக் காத்திரு.”

“மன்னர்?”

“உன்னை நாடி வருவார்”

“நானும் இப்பொழுதே வந்தாலென்ன?” என்று வினவின் இளவழுதி,

“மன்னர் உத்தரவு அப்படியில்லை ” என்று கூறிவிட்டு படிகளில் ஏறிச் சென்று விட்டார்.

இரு அரசிகளுடன் தனிமையில் விடப்பட்ட இளவழுதியின், நிலை பரம சங்கடமாயிருந்தது. ‘இரண்டாவது அரசி இருப்பதால் அலை அரசியுடன் சரசம் முடியாது. தவிர உணர்ச்சிகளைக் கொண்டுதான் அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். என்ன உபத்திரவம் இது?’ என்று எண்ணமிட்ட, இளவழுதி இரு அரசிகளையும் அழைத்துக் கொண்டு திரைமறைவிலிருந்த அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்தான் இரு அரசிகளும் கட்டிலுக்கு இருபுறத்திலும் நின்றார்கள், அவனை உற்றுப் பார்த்தபடி,

இளவழுதியின் தாபம், கோபத்தை உந்தியதால், ”அட சனியன்களா! ஏன் நிற்கிறீர்கள்? கீழே படுத்துத் தொலையுங்கள்!’’ என்று கூவிவிட்டு கண்களை மூடினான். குகையில் திடீரென இருள் மூண்டது. மகாசக்தி சந்நிதானத்திலிருந்த விளக்கும் ஒளியிழந்து கொண்டிருந்தது. மூன்றாம் ஜாமத்தில் ஒரு பூங்கரம் அவன்மீது விழுந்தது. காதில், “நான் தான் அலைஅரசி. என் கையில் பற்களால் கடித்து விடுங்கள்” என்றது அந்தக்குரல்.

“எதற்கு ?”

“எங்கள் இருவரில் என்னை அடையாளம் கண்டு கொள்ள “

அவள் சொற்படியே பற்களைப் புதைத்ததும் அந்த பூங்கரம் விலகியது, மகிழ்ச்சியுடன் உறங்கினான் இளவழுதி, அந்த மகிழ்ச்சி காலை வரையில்தான் இருந்தது. காலையில் எழுந்ததும் கட்டிலுக்கு இருபுறமுள்ள அரசிகளின் கைகளை மெதுவாகத் தூக்கிப் பார்த்தான். இருவர் இடக்கைகளிலும் பல் புதைத்த அடையாளம் இருந்தது.

Previous articleAlai Arasi Ch15 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch17 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here