Home Alai Arasi Alai Arasi Ch18 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch18 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

105
0
Alai Arasi Ch18 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch18 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch18 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 18 அஹமதின் கதை

Alai Arasi Ch18 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

மன்னன் பிடித்துக் கொடுத்த புறாவை இடது கையில் வைத்து வலது கையால் தடவிக் கொடுத்த வண்ணம் எதிரே மரத்தடியில் எனங்களுடன் மூர்ச்சையாக விழுந்து கிடந்த அஹமதைப் பார்த்த சாக்வீகப் பறவையான புறா எப்படி அத்தனை காயங்களை அஹமதுக்கு ஏற்படுத்தியிருக்க முடியும்? என்று உள்ளெழுந்த சந்தேகத்தைக் கேள்வியாகவும் தொடுத்து ‘’மன்னவா! இந்தப் புறாவா இத்தனைக் காயங்களை விளைவித்தது?” என்று வினவினான்.

சாதாரண சமயத்தில் புன்முறுவல் பூத்து நிற்கும் சேர மன்னன் வதனம் அன்று கருங்கல்லாகக் காட்சியளித்தது. சந்தேகமிருந்தால் புறாவிடம் அவனைக் காட்டி விடுதலை செய்து விடு நடப்பதைப் பார்’’ என்றான் மன்னன் குரலில் கடுமை ஒலிக்க,

இளவழுதி அந்தப் பரீட்சையை செய்து பார்க்குமுன்பாகவே அவன் கையிலிருந்த புறா இருமுறை தலையை ஆட்டி அஹமத் விழுந்திருந்த இடத்தைப் பார்த்ததும் தனது சிறகுகளை வேகமாக அசத்து இளவழுதியின் கையிலிருந்து தப்ப முயன்றதன்றி தொடர்ந்து குக்குக் என்று கத்தவும் தொடங்கியதால் மன்னன் சொல்வதில் பொருளிருக்கிறது என்று புரிந்து கொண்ட அரையன் இளவழுதி ”மன்னவா! இதற்கும் அவனுக்கும் என்ன அப்பேர்ப்பட்ட விரோதம்?” என்று வினவினான்.

அரசியல் விரோதம்?” என்றான் மன்னன் பழைய கடுமையான குரலில்,

இதற்கு அரசியல் பரிச்சயமுண்டா ?” இளவழுதியின் குரலில் வியப்பு அதிகமாயிருந்தது.

“ஆதிகாலம் முதல் உண்டு நாட்டுக்கு நாடு செய்தி கொண்டு செல்லும் தூதுப் புறாக்களைப் பற்றி நீ கேள்விப் பட்டதில்லையா?’’ என்று மன்னன் கேட்டான்.

இளவழுதி மன்னனை உற்று நோக்கினான் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. இப்படிப் புறாக்கள் இருப்பதாகக் கதைகளில் வாசித்திருக்கிறேன். என்ற இளவழுதியின் குரலில் அப்பொழுதும் சந்தேகம் இருந்தது.

“கதைகளெல்லாம் கட்டுக்கதைகள் அல்ல, உண்மை புதைந்து கதைகளும் உண்டு’ என்ற மன்னன், ”வேண்டுமானால் இந்த புறாவின் சிறகுகளை நீக்கிப் பார்” என்றான்.

இளவழுதி கையிலிருந்த புறாவின் சிறகுகளை நீக்க முயன்றான். புறா சிறகுகளைப் பிரிக்கவிடாமல் நன்றாக அழுத்தி கொண்டது. அப்படியும் பலவந்தமாக சிறகைப் பிரிக்க முயன்றபோது தனது அலகால் அவன் கையைச் சுரீரெனக் கொத்தவே வலது புறங்கையில் சிறிது ரத்தமும் துளிர்த்தது அதனால் வியப்படைந்த இளவழுதி ”மன்னவா! விசித்திரமாயிருக்கிறது. கோழிகளில் சண்டைக்கோழிகள் என்று ஒரு பிரிவு உண்டு. புறாவில் அப்படியிருப்பதா கேள்விப்பட்டதில்லை” என்று கூறினான்.

“இளவழுதி! எந்த சிருஷ்டியிலும் சண்டைப்பிரிவு ஒன்று உண்டு. இல்லாவிட்டால் சிருஷ்டியில் சுக துக்கங்கள் இருக்காது இந்தப் புறா அரபு நாட்டிலிருந்து வருகிறது. இது கொண்டு வந்த செய்தியைப் பார்” என்று கூறிய மன்னன் தனது கையிலிருந்து மிக மெல்லிய இறகு ஒன்றை எடுத்துக் கொடுத்தான். பட்டுப் போன்ற அந்த இறகில் ஏதோ சில வரிகள் நுண்ணிய கருவி கொண்டு எழுதப்பட்டிருந்தன. அடியில் சிறிய கையொப்பமொன்றும் இருந்தது. இளவழுதி அதைப் பற்றி ஏதோ கேள்வி கேட்கத் தொடங்கு முன்பாக மன்னனே பேச முற்பட்டு

“இளவழுதி! இந்த இறகைப் புறாவின் சிறகுக்குள் மறைத்து விடு” என்று கூறினான். அந்த மெல்லிய இறகை அவன் புறாவின் சிறகுக்குள் மறைக்க முயன்றபோது புறா அடம் செய்யாமல் சிறகு வனுகூலமாக பிரித்துக் கொடுத்தது. அந்தச் செய்தி இறகில் வைக்கப்பட்டதும் மீண்டும் தனது சிறகை கெட்டியாக மூடி பழையபடி அழுத்திக் கொண்டது. அதைக் கண்ட இளவழுதி, மன்னவா! இதைப் பறக்கவிட்டால் என்ன ஆகும்? வினவினான்.

முதலில் அஹமதின் கண்ணைக் கொத்திவிடும். பிறகு எனது மாளிகைக்குப்போய்ச் சேரும்” என்று விளக்கிய மன்னன், இளவழுதி! புறாவைத் தளரவிடாதே. முதலில் அஹமதின் நிலையைக் கவனிப்போம்” என்று கூற, இளவழுதி புறாவை மன்னனிடம் கொடுத்துவிட்டு அஹமத் காயங்களைப் பரிசோதித்தான். அஹமதின் கன்னங்களில் புறா கொத்தி ஆழமான காயங்கள் இருந்தன. அவை தவிர அவன் விழுந்த இடத்திலிருந்த குத்தியதால் மார்பிலும் முதுகிலும் காயங்கள் பட்டு குருதி உறைந்து கிடந்தது. அவன் வழுக்கை மண்டையில் ஆழமாய்த் ஒரு காயத்தைக் கண்ட இளவழுதி, ”இதனால்தான் அவனுக்கு மயக்கம் வந்திருக்க வேண்டும்” என்று நினைத்தான்.

மன்னன் கடுமையான குரலில் பேசலானான். “இளவழுதி! அஹமதின் காயங்களைக் கழுவி அவன் விழுந்து கிடக்கும் மரத்தின் இலைகளை அரைத்துப்போடு, அவன் விழித்தால் சிறிது நேரத்தில் இங்கு எனது வீரர்கள் வருவார்கள். அவர்களிடம் அஹமதை ஒப்படைத்துவிட்டு நீ புறப்பட்டு இந்த மலையின் உச்சிக்கு வந்து சேர். அங்கிருக்கும் நான்கு குடிசைகளில் நடுக்குடிசையில் நான் இருப்பேன்” என்று கூறி விட்டுப் புறாவை மீண்டும் இளவழுதியின் கையில் திணித்து விட்டு மலைமீது ஏறிச் சென்றான்.

மன்னன் சிறிது தூரம் நடந்த பின் ஏதோ நினைத்துக் கொண்டு திரும்பி வந்து, “இளவழுதி! புறாவை விட்டு விடு என்று உத்தரவிட்டான். அஹமதையும் புறாவையும் பார்த்த இளவழுதி “இது மீன்டும் இவனைக் குத்தினால்?” என்று வினவினார்.

மன்னன் மீண்டும் நடந்து வந்து அந்தப் புறாவைக் கையில் வாங்கி அதன் கண்களை உற்றுப் பார்த்து ஏதோ சொன்னான் பிறகு அதை எடுத்து மாளிகை இருந்த திக்கைக் காட்டி மேலே பறக்கவிட்டான். புறா மேலே பறந்து அவர்கள் இருந்த இடத்தின் மீது இருமுறை சுற்றியது. பிறகு அம்புபோல் மாளிகையை நோக்கிப் பறந்தது. அது சென்ற திசையைப் பார்த்த மன்னனும் முகத்தில் திருப்தியைக் காட்டி வேகமாக மலைமீது ஏறிச் சென்று விட்டான் .

மன்னன் கண்களுக்கு மறைந்ததும் இளவழுதி, அஹமதின் அருகில் உட்கார்ந்து அவனை இருமுறை அசைத்துப் பார்த்தும் அவன் கன்னைத் திறக்காததால் நதிக்கரையில் இறங்கி தான் உடுத்தி நீராடிய துன்டை நனைத்து எடுத்து வந்து அஹமதின் காயங்களை மெதுவாகத் துடைத்தான். இன்னொரு முறை நீர்க்கரைக்குச் சென்று இரு கைகளிலும் நீரை ஏந்தி வந்த அஹமதின் முகத்தில் தெளித்து சிறிது வாயிலும் புகட்டினான் இந்த சைத்தியோபசாரங்களால் மெள்ளக் கண்விழித்த அஹமத் மிரள மிரள நோக்கினான் “அஞ்சவேண்டாம். காயங்களுக்கு மருத்து போட்டு விடுகிறேன் என்று தைரியம் சொன்ன இளவழுதி மெதுவாக அவன் காயங்களைக் கழுவித் துடைத்து அவன் கிடந்த மரத்திலிருந்த இலைகளைப் பறித்து மலைக்கல்லில் அரைத்து மெள்ளக் காயங்களுக்குத் தடவினான்.

அந்த மரத்தின் இலைக்கு ஏதோ பெரும்சக்தி இருக்க வேண்டும். பச்சிலை போடப்பட்ட ஒரு நாழிகைக்குள் அஹமத் தனது கைகளை உதறிக் கொண்டு எழுத்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் நோக்கினான். “புறா எங்கே? புறா எங்கே?” என்று கூவினான்.

இரந்து. புறா கிடைத்தால் நசுக்கும் நோக்கத்துடன் கையில் பக்கத்திலிருந்த ஒரு கருங்கல்லையும் எடுத்துக் கொண்டான்.

புறா பரந்து விட்டது அஹமத் கல்லைக் கீழே போடு” என்று இளவழுதி கூறியதும், ”அதை நீதான் விட்டாயா?” என்று இளவழுதியை நோக்கிச் சீறினான்,

‘’கேவலம் புறாதானே அஹமத்! அதற்காக இத்தனை ஆத்திரமா?” என்று இளவழுதி வினவினான்.

‘’அது சாதாரண புறாவல்ல. ராட்சஸப் புறா. என்னை சாகடித்தலும் பாதகமில்லை என் கண்களைக் கொத்திவிட முயன்றது பறந்து அப்புறம் செல்வதும் மீண்டும் என் முகத்தின் மீது வேகமாகப் பாய்வதுமாக என்னை அழிக்க முயன்றது. அதனிடமிருந்து தப்பமுயன்று இரு கைகளாலும் கண்ணை மூடிக் கொண்டு நடந்ததால் தடுக்கி பலமுறை விழுந்து மலைக்கற்களால் காயமும் அடைந்தேன். மயக்கமும் அடைந்தேன். நீ வராவிட்டால் உயிரையும் அது குடித்திருக்கும்” என்ற அஹமத், “அது கொண்டு வந்த செய்தி கிடைத்ததா?” என்று கேட்டான். அத்தனை ரணவலியிலும் ஆவலைக் காட்டி,

   அது செய்தியா கொண்டு வந்தது?" என்று ஏதுமறியாதவன் போல் கேட்டான் இளவழுதி,

தூதுப் புறா வேறு என்ன கொண்டு வரும்? அதுவும் நீண்ட தூரம் காரணமில்லாமலா பறந்து வரும்?” என்றான் அஹமத்

“நீண்ட தூரம் பறந்து வந்ததா?”

“ஆம். அரபு நாட்டிலிருந்து.”

“அனுப்பியது யார்?”

“என் பரம வைரி, மதகுரு”

“மதகுருவா! அவர் எதற்காக செய்தியனுப்புகிறார்?”

‘’சதி செய்ய’’

“யாருக்கு எதிராக?”

“எனக்கு எதிராக “

“உங்களுக்கு எதிராகவா? உங்களுக்கு எதிராக சதி எப்படி செய்ய்ய முடியும்? எதற்காகச் சதி செய்ய வேண்டும்?’’

“என்னை அழிக்காவிட்டால் மதகுரு என் அரசைப் பறிக்க முடியாது. அரசைப் பறிக்காவிட்டால் மதகுரு அரபு நாட்டின் வாழ முடியாது” என்றான் அஹமத்.

     ‘’அஹமத் நீ யார்? உனக்கும் மதகுருவுக்கும் என்ன சம்பந்தம்? மதகுருவுக்கு நீ எதிரியானால் அவர் சீடப் பெண்ணான அலை அரசியுடன் எதற்காக இங்கு வந்தாய்? என்று கேள்விகளை வீசினான் இளவழுதி,

அஹமத் உடனடியாகப் பதில் சொல்லவில்லை அவன் அவன் உணர்ச்சி ஏதுமற்ற கல்லாயிருந்தது. கடைசியில் அவன் பேசியபோது பேச்சில் வெறுப்பு மிதமிஞ்சிக் காணப்பட்டது. அது பெரிய கதை இப்பொழுது உனக்குச் சொன்னால்கூட உன்மை விளங்காது. இருப்பினும் சுருக்கமாய்ச் சொல்கிறேன் கேள்” என்று துவங்கிய அஹமத் அங்கிருந்த பாறை ஒன்றில் உட்கார்ந்து கீழே கிடந்த கூழாங்கல் ஒன்றை எடுத்து சேரவாற்றின் நீர் எறிந்துவிட்டு கதையைத் துவங்கலானான். ”எனது விரோதிகள் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களை அழிக்க மனித பலம் மட்டும் போதாது” என்று கூறிய அஹமத் மெதுவாகப் பேச முற்பட்டான்.

Previous articleAlai Arasi Ch17 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch19 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here