Home Alai Arasi Alai Arasi Ch21 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch21 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

106
0
Alai Arasi Ch21 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch21 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch21 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 21 மன்னன் மந்திராலோசனை

Alai Arasi Ch21 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அற்புதங்களும் மர்மங்களும் நிறைந்த அஹமதின் விசித்திரக் கதையைக் கேட்ட அரையன் இளவழுதி ‘அராபிய இரவுகள்’ பற்றிய கதைகள் கற்பனையாக இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்து “அஹமத் புறாவைப்பற்றி நீ கவலைப்படாதே அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தைரியம் சொல்லிவிட்டு இந்த அலை அரசியை நீ எப்பொழுது சந்தித்தாய்? எங்கு சந்தித்த மதகுரு அறிமுகப்படுத்துமுன்பு உனக்கு அவளை அடியோடு தெரியாதா?” என்று வினவினான்.

அஹமத் ஒருமுறை நீண்ட பெருமூச்சுவிட்டான். பிறகு ஆயாசம் மிகுந்த குரலில் பேசினான். ”அரசியை முன்பின் எனக்குத் தெரியாது. திடீரென ஒருநாள் மதகுரு அவளை எனது இல்லத்திற்க்கு அழைத்து வந்தார். ‘அஹமத்! இவள்தான் இனி உனக்குத் தலைவி, இவள் சொல்கிறபடி நடந்து கொள்’ என்று சொன்னார்.

இவள் யார்? இவள் பெயரென்ன?’ என்று என் தாயார் கேட்டாள்.

‘இந்த நாட்டின் சிறந்த பெண்களில் இவள் ஒருத்தி, இவள் அரச குடும்பத்தில் பிறந்தவள். பெயர் அலைஅரசி’ என்று மதகுரு அறிவித்தார்.

மிகவும் சூட்சும புத்தியுள்ள எனது தாய், ‘அலைக்கு அரசியா அப்படியானால் அரபு நிலத்துக்கும் இவளுக்கு சொந்தம் கிடையாதா?’ என்று கேட்டாள்.

‘நிலம் எதற்கு?’ என்று கேட்டார்.

‘அது நிரந்தரமானது’ என்றாள் என் தாய்.

‘யார் சொன்னது? உன் பிள்ளைக்குச் சொந்தமான நிலம் யாரிடமிருக்கிறது? பிள்ளையிடம் இருக்கிறதா?’ என்று கேட்ட மதகுரு நிலத்தைவிட நீரில் அரசு செலுத்துவது கஷ்டமானாலும் பயனுண்டு இவள் சொற்படி சமுத்திரம் ஆடும் அலைகள் இவள் உத்தரவுக்குப் பனியும்’ என்றவர், ‘அம்மா உன் மகன் ராஜ்யம் திரும்பக் கிடைக்க வேண்டுமானால் இவள் உதவி அவசியம் ஆகையால் இவளுடன் உன் மகன் செல்லட்டும். இவன் படைகளை நடத்தவும் இவன் சிற்றப்பனை முறியடிக்கவும் பிறந்த்துள்ள ஒருவனை இவள் அழைத்து வருவாள் என்று கூறி,

‘சரி அஹமத் எசமானியுடன் உனது மரக்கலத்தில் இன்று பறப்பட்டு விடு’ என்று உத்தரவிட்டார்.

‘பயணத்துக்கு வேண்டிய சாமான்களை சித்தம் செய்ய வேண்டாமா?’ என்று எனது தாயார் கேட்டாள்.

‘எல்லாம் மரக்கலத்திலிருக்கின்றன. உன் மகன் ஒரு குரையுமில்லாமல் திரும்பி வருவான்’ என்று கூறினார்.

‘’என் மரக்கலத்தில் நான் எந்தப் பொருளையும் சேகரித்து வில்லையே?’ என்று நான் கூறினேன்.

‘நான் சேகரித்து வைத்து விட்டேன். தவிர உனது மரக்கலத்தில் சில சூட்சமங்களையும் வைத்திருக்கிறேன். அவையெல்லாம் அரசிக்கு தெரியும். அன்னையிடம் உத்தரவு பெற்றுக் கிளம்பு’ என்றார் மதகுரு

‘போகும் இடத்தை நான் அறியலாமா?’ என்று கேட்டாள் என் தாய்.

பாரதத்தின் தென் முனைக்குச் செல்கிறான். சேர நாட்டில் இவன் படைத்தலைவன் இருக்கிறான். அவனை இவன் அழைத்து வருவான்’ என்றார் மதகுரு.

என் தாய் மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. அன்னையை வணங்கி அவள் ஆசியைப் பெற்றுக் கிளம்பினேன். இத்தனைக்கும் அரசி வாயைத் திறக்கவில்லை. மௌனமாகவே நின்றிருந்தாள்.

நான் மதகுருவுடன் புறப்பட்டதும் அவளும் புறப்பட்டு வந்த்தாள் அன்றிரவு நாங்கள் மரக்கலத்தில் கிளம்பினோம் மதகுரு கடற்கரையில் நின்றபடியே வலது கையைத் தூக்கி ஆசி கூரினார்.

அன்று அடியோடு காற்று இல்லை. கடல் மிகவும் மந்தமாயிருந்ததால் மாலுமிகளை துடுப்புகளைத் துழாவுமாறு உத்தரவிட்டேன், அலை அரசி அப்பொழுதுதான் முதன் முதலாகப் பேசினாள். ‘அஹமத் பாய்களை அவிழ்த்துவிடு என்று வேலைக்காரனுக்கு உத்தரவிடுவதுபோல் உத்தரவிட்டாள்.

நான் அவளை முறைத்துப்பார்த்தேன். ‘பாய்களுக்கு காற்று ஏது?’ என்று சீறினேன்.

‘கேள்வி கேட்காதே. சொன்னபடி செய்’ என்றாள் அரசி.

எனக்குக் கோபம் தலைக்கு மேல் ஏறினாலும் அதை நான் வெளிக்குக் காட்டாமல் பாய்களை அவிழ்த்து விட்டேன் இருந்தாற்போலிருந்து காற்று எங்கிருந்தோ வந்து பாய்கள் புடைத்து மரக்கலம் விரைந்தது. நான் வியப்புடன் அரசி பார்த்தேன். அவள் கலகலவென்று நகைத்தாள். இரவு வெகு சீக்கிரம் முற்றி ஆகாயத்தில் நடித்திரங்கள் பளிச்சிட்டன. அரசி ‘என்னை அழைத்து அஹமத்! இந்த அறையின் கூரையைத் தூக்கிவிடு, நான் நஷத்திரங்களைப் பார்த்துக் கொண்டே படுக்கிறேன்’ என்றாள்,

என் வியப்பு எல்லை மீறியது. அந்த அறையின் சூட்சும்ம எனக்கு மட்டுந்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். அந்த அறையின் குட்சுமம் மட்டுமல்ல, மரக்கலத்தின் மற்ற மர்மங்களும் அரசிக்குத் தெரிந்திருந்ததை நான் சில நாட்களில் புரிந்து கொண்டேன். அரசியை அதைப்பற்றி அன்று கேட்கவில்லை அறையின் கூரையை விசை கொண்டு திறந்துவிட்டேன். அரசி அதில் மல்லாந்து படுத்து விண்மீன்களை நோக்கி கொண்டிருந்தாள். நான்காம் ஜாமத்துக்கு சற்றுமுன்பே அறையின் கூரையை விசை கொண்டு அவளே மூடிவிட்டு உறங்கினாள்.

அவ்வப்பொழுது மரக்கலம் எந்தத் திசைகளில் செல்கிறது என்பதையும் அவள் சொன்னாள். அதைத் திருப்பும் திசையையும் அவளே சொன்னாள். என்னைவிட அவளுக்கு மரக்கலத்தின் மர்மங்கள் அனைத்தும் தெரியுமென்பதையும், மரக்கலத்துக்கு நான் சொந்தக்காரனாயிருந்தாலும் உண்மையில் அரசியை மீறிநான் எதையும் செய்ய முடியாதென்பதையும் புரிந்து கொண்டேன். இந்த நாட்டை அடைவதற்கு முன்பே நான் அரசியின் அடிமையாகி விட்டேன். அவள் எதைச் சொன்னாலும் சிரசால் ஏற்றுச் செய்ய முற்பட்டேன். என் சொந்த புத்தி அவள் உத்தரவுகளை மீறி வேலை செய்ய மறுத்தது. ஆகவே அவள் அழைத்துவரச் சொன்னபோது நான் உன் இல்லம் வந்தேன். பிறகு நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும்’ என்று கதையை முடித்தான் அஹமத்,

சிறிது நேரம் அஹமதின் கதையை நினைத்துப் பார்த்த இளவழுதி,”அது கிடக்கட்டும். அன்று நான் நீங்கள் கொடுத்த மதுவை அருந்த மறுத்தபோது என் வாயைக் கிழித்துவிட யோசனை சொன்னாயே, அது ஏன்?” என்று முதல் நாள் இரவு நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டான்.

அது அரசியின் உத்தரவு, வாயைக் கிழித்து மதுவைப் புகட்டியிருந்தால் உன் சுயபுத்தி போயிருக்கும். நீயும் அவள் சொல்படி செயல்படுவாய். அதுவும் அரசியின் தூண்டுதல்தான். ஆனால் உன் மனஉறுதி அதைப் பயனற்றதாகச் செய்துவிட்டது” என்று காரணம் சொன்னான் அஹமத்,

இந்தப் புறாவை நீ ஏற்கெனவே பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டான் இளவழுதி, அன்றைய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு

“பார்த்திருக்கிறேன். அப்பொழுது அது மதகுருவிடமிருந்தது மிகவும் சாதுவாயிருந்தது. மதகுரு இதை ராட்சஸப் புறாவாக மாற்றியிருக்கிறார்” என்று கூறினான் அஹமத்.

“உன்னைக் கொல்வதால் மதகுருவுக்கு என்ன பயன்?” என்று கேட்டான் இளவழுதி.

“பயன் ஏதுமில்லை. அதனால்தான் என்னை உயிய விட்டிருக்கிறார். என்னைக் காட்டி என் சார்பில் போரைக் கிளப்பி என் சிற்றப்பனைத் தோற்கடித்து அரசைக் கைப்பற்றப் பார்க்கிறார். அரசு கைவசமானதும் அநேகமாக நான் இருக்கமாட்டோன் இருந்தாலும் அவரது கைப்பாவையாக இருப்பேன்” என்று சொன்ன அஹமத் துக்கப் பெருமூச்செறிந்தான்.

அதற்குப் பிறகு எதைப்பற்றியும் கேட்காத இளவழுதி “அஹமத்! நீ மரக்கலத்துக்குச் சென்றுவிடு, அங்கு நான் உன்னைச் சந்திக்கிறேன்” என்று கூறினான்.

“அரசியின் உத்தரவில்லாமல் நான் அங்கு எப்படிப் போக முடியும்?” என்று கேட்டான் அஹமத்,

”அஹமத் அஞ்சாதே எதற்கும், அரசியோ வேறு யாரோ கேட்டால் சேரமன்னனின் உத்தரவென்று கூறி விடு, நான் மன்னனைச் சந்தித்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு அஹமதை துறைமுகப் பக்கம் செல்லக் கட்டளையிட்டான் மலைச்சரிவில் அவன் இறங்க முற்பட்டதும் இளவழுதி மலை உச்சிக்குச் செல்லும் பாதையில் திரும்பி நடந்தான்,

உச்சிக்குச் செல்லும் ஒற்றையடிப்பாதை கடுமையாகவே இருந்தாலும் சூழ்நிலை ரம்மியமாயிருந்தது. அக்கம் பக்கங்களில் இருந்த பிரும்மாண்டமான மரங்கள் போதிய நிழலை அளித்தன. காற்றும் மிக சுகமாக வந்தது. அருவியும் பக்கத்திலேயே வந்து கொண்டிருந்தது. அது மிகவும் சிறுத்து உற்பத்தி ஸ்தானத்தை

அடைந்ததும் அங்கே மலை உச்சியில் நான்கு குடிசைகள் தெரிந்தன. அந்த குடிசைகளின் வாயிலில் பல புரவிகள் நின்றிருந்தன. என அந்தக் குடிசைகளில் மன்னன் கூரிய நடுக் குடிசை எதுவென்பது தெரியாததால் குடிசைகளை மெதுவாக நெருங்கினான் இளவழுதி உள்ளே சேர மன்னன் நெடுஞ்கசேரலாதன் குரல் கணீரெனக் கேட்டது. “எந்த நேரத்திலும் கடம்பர்கள் நம்மைத் தாக்கலாம். அவர்களைச் சமாளிக்கத்தான் உங்களை அழைத்தேன்” என்று கூறினான்.

‘’ஏன் மன்னா! உங்கள் மந்திரத்தால் அவர்களைத்தடை செய்ய முடியாதா?” என்று மற்றொருவர் கேட்டார்.

பதிலுக்கு மன்னன் பெரிதாக நகைத்தான். “மந்திரத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியுமானால் உலகத்தில் உழைப்புக்கே அவசியமிருக்காது. மந்திரம் ஒரு மாயை, சில வித்தைகளைக் காட்டலாம். ஆனால் போர்களை நடத்த முடியாது அப்படி நடத்த முடிந்த்தால் பெரிய மந்திரவாதியான அரபு நாட்டின் மதகுரு நம் நாட்டிலிருந்து ஒரு படைத்தலைவனை அழைப்பானேந்?’’ என்று கேட்டான் நகைப்பின் ஊடே,

அந்த படைத்தலைவனும் இப்பொழுது வருவான். அவன் வந்ததும் மந்திராலோசனையைத் துவக்குவோம்” என்று மன்னன் கூறிய சமயத்தில் இளவழுதி உள்ளே நுழைந்தான்.

Previous articleAlai Arasi Ch20 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch22 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here