Home Alai Arasi Alai Arasi Ch23 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch23 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

59
0
Alai Arasi Ch23 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch23 | Alai Arasi Sandilyan | TamilNovel.i

Alai Arasi Ch23 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 23 யமப்புறா! செல்லப்புரவி

Alai Arasi Ch23 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

மந்திரங்களை போல் மரக்கலத்தை நோக்கி மன்னன் ஏவிய அந்த வெண்புறாவை மன்னன் பக்கத்தில் நின்ற வண்ணம் நோக்கிய இளவழுதி, “இதென்ன விசித்திரம் மன்னவா?’’ வினவினான். “எது இளவழுதி?” என்று மன்னன் வினவினான். பதிலுக்கு “இந்தப் புறா தனியாக எங்கிருந்தோ வந்திருக்கிறது ஆனால் அதோ பாருங்கள். அதைப் பற்றச் செல்லும் நாங்கு வல்லூறுகளையும் ஜாலம் காட்டி மேலும் கீழுமாகப் பறந்து தப்பிச் சென்றுவிட்டதே!” என்று கூறி வெளியே சுட்டிக்காட்டினான்.

பலர் அதை அழித்துவிட முயன்றாலும் பயனளிக்கவில்லை என்பதையும் இளவழுதி கண்டான். அந்தப் புறா அம்புபோல் பாய்ந்து சென்றாலும் வல்லூறுகள் அணுகிய போதெல்லாம் மேலே பறந்துவிட்டது. வல்லூறுகள் சிறிது பின்தங்கியதும் பழையபடி நேராக மரக்கலத்தை நோக்கிப் பறந்தது.

அது மரக்கலத்தின் மத்திய பாய்மரத்தை அடைந்ததும் அதைக் கொல்ல அஹமத் வாளை உருவியதையும் கண்ட இளவழுதி “மன்னவா! ஒரு சிறு புறாவைக் கொல்ல இவ்வளவு பெரிய வாள் தேவையா? அஹமத் போன்ற படைவீரன் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டியதுதானா?” என்று வினவினான்.

மன்னன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை சற்று நிதானித்துவிட்டு, “இளவழுதி! ஒளவையார் வாக்குண்டாம் படித்திருக்கிறாயா?” என்று வினவினான். இளவழுதி புறாவின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்து நின்றதால் மன்னனின் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

“படித்திருக்கிறாயா இல்லையா?”

‘’படித்திருக்கிறேன் மன்னவா ஔலை மூதாட்டி நூல்களை அறியாதவன் தமிழனாயிருக்க முடியுமா?’ என்று வினவி தனக்குள்ள தமிழ்ப்பற்றையும் அறிவையும் விளக்கினான் இளவழுதி மறைமுகமாக.

மன்னன் புன்முறுவல் கொண்டான் சில விநாடிகள்.

“நன்று சொன்னாய் இளவழுதி, ஆனால் உண்மை என்ன தெரியுமா? சிறியவர் என்றிருக்க வேண்டா ‘ என்று கூறுகிறார். அதாவது ஒரு மனிதன் அல்லது பிராணியின் உடல் சிறிதாயிருப்பதாகப் பாவித்து ஏமாறாதே. உதாரணம் நமது கண் முன்பே இருக்கிறது. புறா சிறியது அஹமத் பெரியவன். அவன் வாளும் பெரியது. ஆகவே என்ன செய்ய முடிந்தது?” என்று வினவிய மன்னன் “இப்பொழுது மரக்கலத்தைப் பார்” என்றான்.

மரக்கலத்தில் அஹமத் பாய்ந்து வாளைச் சுழற்றிக் கொண்டு அங்குமிங்கும் குதித்துக் கொண்டிருந்தான். மரக்கலப் பாய்ச்சீலையொன்றில் உட்கார்ந்திருந்த அந்த வெண்புறா அடிக்கடி அஹமத் மீது பாய்ந்து அவன் முகத்தைக் கொத்த முயன்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் அஹமத் ஆயாசத்தால் தளத்தில் மல்லாந்து விழுந்தான். புறா ஜிவ்வென்று பாய்ந்து அவன் தலையில் உட்கார்ந்து தனது அலகைத் தீட்டலாயிற்று.

இனி தாமதிப்பது தவறு என்ற சேரமன்னன், “இளவழுதி, நீ அலை அரசியை அழைத்துக்கொண்டு மரக்கலம் போய் அஹமதை அந்தப் புறாவிடமிருந்து காப்பாற்றி அழைத்துவா” என்றான்.

அரசனிருந்த இடத்தைவிட்டு இளவழுதி வெளியே வந்ததும் வாயிலில் சித்தமாகக் காத்திருந்த அலை அரசி அவன் கையுடன் தனது கையைக் கோர்த்துக் கொள்ள இருவரும் கடற்கரையை நோக்கிச் சென்றனர்.

அன்று வடகரை முகத்துவாரத்தில் மரக்லங்கள் அதிகமில்லாவிட்டாலும் படகுகள் நிரம்ப இருந்ததால் ஒரு படகை தளையிலிருந்து இளவழுதி அவிழ்த்துக்கொள்ள அலை அரசியும் அதில் ஏறித் துடுப்புக்களைத் துழாவினாள்.

படகும் சீக்கிரம் மரக்கலத்தை அடைந்தது. அஹமத் மரக்கலத்தின் ஓரத்தில் நின்று குனிந்து தனது கையொன்றை நீட்ட அதைப்பற்றிய அலை அரசி, மரக்கல தளத்துக்குள் குதித்தாள் அடுத்து அஹமத் கையை நீட்டக் காத்திராமல் இளவழுதி மரக்கலப்பக்கம் பலகையில் தொத்தி ஏறி மரக்கல தளத்தை அடைந்துவிட்டான்.

தளத்துக் காட்சி பிரமிக்கத்தக்கதாயிருந்தது. அஹமதின் உடைகள் இரண்டு இடங்களில் கிழிந்து சின்னாபின்னமாகக் கிடந்தன. அஹமதின் தலையில் பல இடங்களில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பல அலகுக் கொத்துக்களால் குழி குழியாய் அவன் வழுக்கைத் தலையில் தெரிந்தன.

“அஹமத் ஒரு புறாவைச் சமாளிக்க உன்னால் முடியவில்லை ?” என்று வினவினான் இளவழுதி,

“உன்னால் முடிந்தால் பாரேன்” என்றான் அஹமத்,

இளவழுதி வாளை உருவவில்லை. தனது தலைப்பாகைத் துணியை விரித்து பாய்ச்சீலையில் உட்கார்ந்திருந்த புறாவின் மீது வீசினான். அடுத்த கணம் அதில் சிக்கிய புறாவுடன் துணியை பந்தாகச் சுருட்டிக் கையில் வைத்துக் கொண்டான்.

“அதை இங்கு கொடு” என்று கையை நீட்டினான் அஹமத்,

இளவழுதி அசையவில்லை.

“இந்தப்புறா உனக்கு எதற்கு?” என்று வினவினான்.

“அது எனக்கு ஒரு செய்தியை வைத்திருக்கிறது.”

‘எங்கு? என்ன செய்தி? யார் அனுப்பியது?” என்று கேள்விகளை அடுக்கினான் இளவழுதி. அத்துடன் கேட்டான், “இது என்ன, தூதுப்புறாவா? அல்லது வேவுப்புறாவா?” என்று.

‘’இரண்டுமில்லை. என்னை அழிக்க வந்த யமப் புறா”
என்றான் அஹமத்,

அத்துடன் துணியை இளவழுதியிடமிருந்து பிடுங்கி புறாவின் அடிச்சிறகை விரித்துப் புறாவை மட்டும் கையில் பிடித்துக் கொண்டான். பிறகு அவன் ஏதோ சொல்ல புறா தனது அடிச்சிறகுகளை நன்றாக விரிக்க ,அடியிலிரிந்து ஒரு சிறிய மெல்லிய துணி விழுந்தது கீழே. அதை அஹமத் எடுத்துப் பிரித்து, படி. இளவழுதி” என்று நீட்டினான்.

அந்தச் சிறு துணி பாரதத்தில் உற்பத்தியாவதும் உலகெங்கும் பிரசித்தி உள்ளதுமான மஸ்லின் என்பதை உணர்ந்து அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். பொடிப் பொடி எழுத்துக்களால் அதில் ஒரு கடிதம் வரையப்பட்டிருந்தது. அதைப் படித்த இளவழுதி பிரமிப்படைந்தான். அதிர்ச்சிக்கும் உள்ளானான்.

மதகுரு எழுதிய கடிதம் அது. சேரமன்னனுக்கு எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்ததும், “அஹமத் உன் மாதகுருவுக்கு பைத்தியம் ஏதுமில்லையே?” என்று கேட்டான்.

“ஏன் கேட்கிறாய்?”

“அவர் எழுதியிருக்கும் கடிதம், ஒரு மன்னனுக்கு எழுதக்கூடியதல்ல.”

“அவர் யாரையும் மதிப்பவரல்ல.”

“நான் மதிக்க வைக்கிறேன்.”

“பார்ப்போம்!” என்று அவ நம்பிக்கையுடனும் அலட்சியமாகவும் சொன்னான் அஹமத்.

அன்றிரவு என்ன காரணத்தினாலோ மரக்கலத்திற்கு திடீரென்று வந்த மன்னன் முக்கியமாக இளவழுதியிடம் சொன்னன் “இளவழுதி! நீயும் அரசிகளும் நாளைக் காலை கிளம்புகிறீர்கள்’’என்று!

“எங்கே மன்னவா?”

“அரேபியாவுக்கு. பதினைந்து நாட்களில் போய்ச் சேர்ந்து விடலாம்” என்று கூறிவிட்டு வந்த வேகத்தில் மாளிகைக்குத் திரும்பிவிட்டான் பழையபடி

மாளிகையில் கட்டிலில் புரண்டு படுத்த மன்னன் சாளரத்திந் மூலம் கடலை நோக்கியதும் சட்டென்று எழுந்து கட்டிலில் விரைந்து உட்கார்ந்து, “இளவழுதி! இளவழுதி!” என்று அழைத்தான்.

“என்ன மன்னவா?” என்று இளவழுதி கேட்டான் பணிவுடன்

“கடலைப்பார். கடம்பர் மரக்கலங்கள் இரண்டு தீப்பிடித்து எரிகின்றன. அருகே இருக்கும் நமது மரக்கலங்கள் தீப்பிடித்துக் கொண்டால் என்ன செய்வது?” என்று வினவினான்.

“மன்னவா! காற்று எதிர்ப்பக்கம் இருக்கிறது. ஆகவே நமது மரக்கலம் தீப்பிடிக்காது” என்று விளக்கினான் இளவழுதி.

அந்த சமயத்தில் வெளியே யாரோ கொம்பு ஊதும் ஒலி பலமாகக் கேட்டது. யார் என்று பார்க்க இளவழுதி, மன்னன் இருவரும் விரைந்தார்கள் வெளித்தாழ்வறைக்கு எதிரே நிலத்தில் ஒருவன் தலைவணங்கி உட்கார்ந்திருந்தான். அவன் கையில் ஊது கொம்பு ஒன்று இருந்தது. மன்னனைப் பார்த்ததும்,

“மன்னவா, வணக்கம்!” என்றான்.

“யார் நீ? என்ன விஷயம்?” என்று கேட்டான் மன்னவன்,

மன்னவா! நான் கடம்பர் தூதன் எங்களை மன்னித்து விடுங்கள்” என்று அவன் பணிவுடன் வேண்டிக் கொண்டான்.

‘’மன்னிப்பா? எதற்கு?” என்று மன்னன் வினவினான்.

‘’தங்களுடன் மோத முயன்றதற்கு, தங்களுக்கு மேற்கொண்டு ஏதாவது வேண்டுமென்றால், எங்கள் மரக்கலங்களைக் கொளுத்தி, காட்டிலும் முறியடித்து விட்டு ஏதுமறியாத பூனைபோல் நிற்கும் தங்கள் படைத் தலைவரைக் கேளுங்கள்” என்றான்.

மன்னன் சற்று திரும்பி இளவழுதியை நோக்கினான்.

இளவழுதி தலைவணங்கி, “மன்னவா! அவன் சொல்வது உண்மை கடம்பர் மரக்கலங்கள் நமது மரக்கலங்களை மறித்து நின்றபிறகு அவற்றைக் கொளுத்தாமல் என்ன செய்வது? அல்லது காட்டில் தாக்கச் செய்த ஏற்பாட்டைத் தகர்க்காமல் என்ன செய்வது?” என்றான்,

அப்பொழுது தூதன் சொன்னான்; “மன்னவா! நாங்கள் காட்டில் தாக்குமுன் எங்களை வரவேற்க தங்கள் படைகள் சித்தமாயிருந்தன. இளவழுதி தங்கள் படைகளை சற்சதுரமாக பொறியைப்போல் நிறுத்தியிருந்தார். அந்தப் பொறிக்குள் நாங்களே வலுவில் புகுந்தோம். இளவழுதி தங்கள் படையை எங்கள் மீது ஏவி ஆரம்பத்திலேயே பெரும் பகுதியை அழித்துவிட்டார். நாங்கள் சரணடைந்துவிட்டோம்” என்றான் தூதன்.

மன்னன் பெருமையுடன் படைத்தலைவனை நோக்கி, “நன்று!
நன்று!” என்றான்.

இளவழுதி வெட்கத்துடன் தலை குனிந்து நின்றான். அப்பொழுது மன்னன் சொன்னான்:

“இன்னும் பதினைந்து நாட்களில் நமது மரக்கலம் அரேபியாவை அடையும் அடுத்து மதகுருவின் எதிர்ப்பு வரும் அது பயங்கரமாக இருக்கும். அதைச் சமாளிக்க என்ன செய்யப் போகிறாய்?”

இளவழுதி பதில் சொல்லவில்லை. அரேபியா இருக்கும் பக்கம் நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினான். ஆனால் அவர்கள் அரேபியா போய்ச் சேர மூன்று வாரங்களுக்கு மேல் பிடித்து நல்ல பௌர்ணமி அன்று போய்ச் சேர்ந்தார்கள். அவர்களை மதகுருவே துறைமுகத்தில் வரவேற்றார். துறைமுகத்தை அடுத்து இருந்த ஒரு பெரிய பாறைமீது உடல் முழுவதும் ஒரு பெரிய கம்பளியைப் போர்த்திய வண்ணம் மதகுரு நின்றிருந்த்தார். இக்கலம் தூரத்தில் வருவதைப் பார்த்தவுடன் தனது இரு கைகளையும் தூக்கி தன்னை நோக்கி வரும்படி அழைத்தார். மரக்கலமும் அவரது ஆணையை ஏற்று அவரை நோக்கிச் சென்றது. அதைப் பார்த்த மதகுரு வெறி பிடித்தவர்போல் பயங்கரமாக நகைத்தார்.

மதகுருவின் அழைப்புப்படி மரக்கலம் சென்றால் அவர் இருந்து பாறையில் மோதி நொறுங்கிவிடும் என்பதை உணர்ந்த இளவழுதி அலை அரசியை நோக்கி, “அரசி! இந்த விபத்திலிருந்த்து மரக்கலத்தைக் காப்பாற்றிவிடு” என்றான். அரசியும் பின்புறம் திரும்பி பெரிதாக எழுந்து கொண்டிருந்த அலையை நோக்கி தனது கையை இருமுறை விசிற அலை திரும்பிச் சென்றது. மரக்கலமும் பின் வாங்கி, பாறையில் இருந்து தப்பியது. இதைப் பார்த்துக் கடுமையாக தகைத்த மதகுரு. வேறு ஓர் புறமாகக் கைகாட்ட மரக்கலம் அந்தப்புறம் திரும்பி மணல் கரையில் தட்டுப்பட்டு நின்றது. மதகுரு எல்லோரையும் இறங்கச் சொல்லி சைகை செய்தார்.

மரக்கலத்திலிருந்தவர்கள் அனைவரும் இறங்கியதும், மதகுரு கரையிலிருந்த நான்கு பாரி வண்டிகளைக் (பெரிய கூண்டு வண்டிகள்) காட்டினார். அதில் எல்லோரும் ஏறியதும் அரசியையும்,இளவழுதியையும் இரண்டு அழகிய புரவிகள் கட்டிய சிறு வண்டியில் ஏறச் சொல்லி தானும் அமர்ந்து வண்டிகள் விரைவாகச் செல்ல சைகை செய்தார்.

சிறு வண்டியைத் தானே ஓட்டிச் சென்றார் அந்தச் சிறு வண்டி பஸ் T நகரின் எல்லையைத் தாண்டி, அப்பாலிருந்த ஒரு அடர்ந்த தோப்புக்க்குள் நுழைந்தது. அந்த தோப்பின் நடுவில் இருந்த மூன்றடுக்கு கட்டிடத்தின் முன்பாக வண்டியை நிறுத்திய மதகுரு. மற்ற வண்டியில் இருந்த்தவர்களையும் இறங்கச் சொன்னார். தோப்பின் பல இடங்களிலும் மற்றவர்களை இருக்கச் சொல்லிவிட்டு, தான் மட்டும் அரசியையும் இளவழுதியையும் அழைத்துக்கொண்டு மூன்றடுக்கு மாளிகையில் நுழைந்தார்.

அதன் மூன்றாவது உட்படுக்கை அறை ஒன்றில் இளவழுதியை இருக்கச் சொன்னார். அங்கிருந்த பஞ்சணையில் படுத்த இளவழுதி விடியற்காலையில் சாளரத்தின் மூலம் வெளியே எட்டிப் பார்த்தான். எட்டத் தெரிந்த பாலைவனம் பால் நிலவில் மிக ரம்யமாகக் காட்சியளித்தது. அதன் ஒரு புறத்தில் தனியாக ஒட்டகமும், புரவியும் நின்றிருந்தன. ஒட்டகத்தின் முதுகில் ஒரு அழகிய அம்பாரி போடப்பட்டிருந்தது. அப்போது பக்கத்து தோப்பிலிருந்து ஒரு உருவம் ஓடிவந்து ஒட்டகத்தின் முன்னே நின்று என் முகமூடியை நீக்கியது. அந்த உருவத்தைக் கண்டதும் ஒட்டகம் மண்டியிட்டு தரையில் படுத்தது. முகமூடி நீங்கியதும் அந்த முகத்தைப் பார்த்த இளவழுதி வானத்தில் இருக்க எதற்காக தரையில் இறங்கினான என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவ்வளவு அழகாக இருந்தது அந்த முகம். அவன் மேலும் யோசிப்பதற்குமுன் அந்த சந்திரமுகி ஒட்டகத்தின் மீதேறி அம்பாரியில் அமர்ந்துவிட்டாள். ஒட்டகமும் எழுந்து வெகு வேகமாக அந்தப் பாலைவனத்துக்கு பாய்ந்து சென்றது.

சுமார் மூன்று நாழிகைக்கெல்லாம் உப்பரிகையில் இருந்து கீழே இறங்கிய இளவழுதி, அந்த ஒட்டகம் மறுபடியும் பழைய இடத்தில் படுத்திருப்பதைக் கண்டு, அதன் அருகே ஓடினான் அதைக் கண்டதும் இளவழுதி தனது கையை நீட்ட, அம்பாரியில் இருந்த சந்திரமுகி அவன் கையைப் பிடித்துக் கீழே இறங்கி வந்தாள் . அடுத்த கணம் அவள் இரு கைகளும் இளவழுதியின் கழுத்தைச் சுற்றி இறுக்கின. இளவழுதியின் கைகளும் சும்மா இருக்கவில்லை அடுத்த சில வினாடிகளில் இருவரும் மார்புறத் தழுவி நின்றார்கள்.

அப்பொழுது இளவழுதியின் அங்கியைப் பின்புறம் யாரோ பிடித்திழுத்தார்கள். இளவழுதி திரும்பிப் பார்க்க, மதகுருவின் செல்லப் புரவி தனது பற்களால் அவன் அங்கியைப் பிடித்து இழுப்பதைக் கண்டான். அது சமயம் தோப்பிலிருந்து மதகுருவும் வெளியே வந்தார்.

Previous articleAlai Arasi Ch22 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch24 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here