Home Alai Arasi Alai Arasi Ch24 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch24 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

128
0
Alai Arasi Ch24 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch24 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch24 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 24 பாலைவன மலர்

Alai Arasi Ch24 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அந்தப் புரவி இளவழுதியின் அங்கியைப் பிடித்து இழுத்த சமயத்தில் தோப்பிலிருந்து வெளியே வந்த மதகுரு. “இளவழுதி, ஒரு புரவிக்கு இருக்கிற அறிவுகூட உனக்கு இல்லையே என்றார்.

இளவழுதி சற்றே திரும்பி, வினவினான். ‘’எதைச் சொல்க்றீர்கள்?’’ என்று வினவினான்.

மதகுரு ஒரு வினாடி சிந்தித்தார். “முன்பின் அறியாத ஒரு பெண்ணைத் தொடக்கூடாது என்ற உணர்வு உனக்கில்லை. அந்தப் புரவிக்கு இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினார்.

இளவழுதி மேற்கொண்டு உரையாடலைத் தொடரவில்லை. புரவியிடம் சென்று அதன் முதுகில் இருந்த தோலாசனத்தை பார்த்தான். பிறகு அதைத் தூர எறிந்துவிட்டு அதன் கீழிருந்த சப்பாத்திக்கள்ளிகளையும் தூர எறிந்தான். அடுத்து தனது தலைப்பாகைத் துணியை எடுத்து அந்தக் கள்ளி பதிந்த இடத்திலிருந்த சின்னஞ்சிறு இரத்தத்துணிகளை மெதுவாகத் துடைத்தான்.

பிறகு மதகுருவை நோக்கி, “குரு. இந்தக் குழந்தை மிகவும் சிரமப்பட்டிருக்கிறது!” என்று கூறினான்,

மதகுரு மந்தகாசம் செய்தார், “தமிழா! உனக்கிருக்கும் அறிவு அஹமதுக்கு இருந்திருந்தால் இந்தக் கள்ளியை வைத்திருக்க மாட்டான்’ என்றார்.

அஹமது அது கேட்டு தன் கைகளை முஷ்டியாகப் பிடித்துக்கொண்டு இளவழுதியை நெருங்கி வந்தான். ஆனால், அதிகம் நெருங்க வழியில்லை .

அவன் தன்னிடம் அதிகமாக நெருங்குவதற்குள் தன் கைகளை முஷ்டியாகப் பிடித்துக்கொண்டு இளவழுதி அஹமதை நெருங்கி

அவன் முகத்தில் தனது வலது முஷ்டியால் குத்த, அஹமது மல்லாந்து மணலில் விழுந்தான்.

பிறகு மெல்ல எழுந்து, ‘தமிழா! அஹமதைத்தொட்டு உயிர் பிழைத்துச் சென்றவன் இதுவரை இல்லை” என்று தனது கைளை வேகமாக ஆட்டிக்கொண்டு வந்தான்.

“மல்யுத்தம் உனக்குப் பழக்கமா?” என்றும் விசாரித்தான் அஹமது.

இளவழுதி, அவருக்குச் செவிசாய்க்கவில்லை.

‘மதகுரு யானையை மனிதன் அடக்குவதில்லையா மனிதனுக்கு அடங்காத மிருகம் உலகத்தில் எங்கிருக்கிறது?” என்ற கூறிக்கொண்டே அஹமதை நெருங்கினான்,

அடுத்தகணம் அஹமதின் இரண்டு உலக்கை போன்ற கைகள் இளவழுதியைச் சுற்றிப் பிடித்தன. இளவழுதிக்குத் தனது எலும்புகள் நொறுங்குவதாகத் தோன்றியது. அவன் சட்டென்று கேரளத்தில் தான் பயின்ற வித்தையைக்காட்டி அஹமதின் பிடியிலிருந்து நழுவி வெளியே வந்தான். அடுத்து தனது கால் ஒன்றை அஹமதின் கால்களுக்கிடையே கொடுத்து ஒரு திருப்பு திருப்ப அஹமது மீண்டும் மணலில் மல்லாந்து விழுந்தான், அவன் விழுந்ததும், மல்லாந்த அவன் உடல்மீது பாய்ந்த இளவழுதி தனது கைகளை அவன் கழுத்தில் பொருத்தினான். அடுத்த விநாடி அஹமது பெரிதாக அலறினான். இளவழுதியின் விரல்கள் அஹமதின் குரல்வளையைப் பிடித்து நெரித்துக் கொண்டிருந்தன.

அஹமது மூச்சுவிடத் தினாறினான். அப்போது நெருங்கி வந்த மதகுரு இளவழுதியை முதுகில் தட்டி, “தமிழா! அஹமதை விட்டுவிடு! இந்தத் தண்டனை அவனுக்குப் போதும்” என்றார்.

இளவழுதி அஹமதை விடுதலை செய்து எழுந்தான்

‘’என்னுடன் வா!” என்றார் மதகுரு

இளவழுதி முதல் நாள் மதகுரு, “நேரமாசி

இளவழுதியை கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு மூன்றடுக்கு மாடிக்குச் சென்று படிகளில் ஏறி மேல் அடுக்கில் முதல் நாள் படுத்திருந்த அறைக்குமுன் வந்து நின்ற நேரமாகிறது படுத்துக்கொள்’ என்றார்.

வெளியே சந்திரவெளிச்சம் பலமாக இருந்தபோதிலும் மாளிகைக்குள் கும்மிருட்டாக இருந்தது. இருப்பினும் தனது அறைக்குள் வேறு யாரோ படுத்திருப்பதைப் பார்த்த இளவழுதி, மெதுவாக உள்ளே நுழைந்து தனது படுக்கையில் படுத்தான் அவன் கண்ணை மூடிய சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு கை அவனை நோக்கி ஊர்ந்து வந்து அவனது கை ஒன்றைப் பிடித்து மெல்ல இழுத்தது. அப்படி இழுக்கப்பட்ட கை சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வழவழத்த மேட்டின் மேல் இருப்பதை இளவழுதி உணர்ந்தான்.

பிறகு மிக மெதுவாக, ”யார் நீ?” என்று வினவினான்.

பிறகு நாலைந்து அடிகளுக்கு அப்புறம் இருந்து, “நான் தான்!” என்று பதில் வந்தது.

“யார் சந்திரமுகியா?” என்று விசாரித்தான் இளவழுதி,

“எனக்கு தந்தை வைத்த பெயர் அதுவல்ல!” என்றது அக்குரல்

“வேறு என்ன பெயரோ?”

“மஸ்தானா” என்ற அந்த உருவம், ‘தமிழகப் படைத்தலைவரே! உமக்கு ஆனாலும் துணிச்சல் அதிகம்!”

“என்ன துணிச்சல்?”-இன்பக்குரலில் வினவினான் இளவழுதி,

“என் தந்தை எதிரிலேயே என்னைக் கட்டிப்பிடிக்க என்ன துணிச்சல்?” என்ற அந்தக் குரல் மிக இன்பத்துடன் இழைந்தது எழுந்து உட்காரவும் செய்தது. அதன் காரணமாக இளவழுதியின் கை விழுந்துவிட, அவன் மீண்டும் கையை உயர்த்தி பழைய மேடையைத் தேடினான். அது அவனுக்கு அகப்படாது போகவே, அந்தப் பழைய கையே அவனது கையைப் பற்றி மீண்டும் இடத்திற்கு அழைத்துச் சென்றது.

அந்த இடத்தில் பதிந்த கை, இம்முறை வாளாயிருக்கவில்லை மெள்ள அக்கம்பக்கத்தில் துளைத்து இன்னொரு மேட்டையும் பிடித்துக் கொண்டது. அந்த மேடுகளின் ஸ்பரிசத்தினால், உணர்ச்சி வசப்பட்ட இளவழுதி “மஸ்தானா!… மஸ்தானா என்று முனகினான். அந்த முனகலில் ஏதோ செய்தி இருந்திக்க வேண்டும்.

மஸ்தானா மீண்டும் அவனது கையைப்பிடித்து வேறு சொர்க்கங்களை அறிமுகப்படுத்தினாள். அப்படி இழுத்துச் செல்லப்பட்ட கை. அவளுக்கு இடையே இல்லாததையும் இடைக்கு அடுத்தபடி பெரிய பின்னெழில்கள் அளவுக்கு மீரி இருந்ததையும் கண்டு, அவற்றின் மீது கையை விளையாட விட்டான்.

இம்முறை முனகியது மஸ்தானா, ‘ஹும்… ஹும் மென்று முனகி திரும்பிப் படுக்கவும் செய்தாள். அப்படி படுத்தபோது இளவழுதியின் கை, அவளது வயிற்றுக்குக் கீழே அகப்பட்டுக்கொண்டது. அவன் மெள்ள எழுந்து உட்கார்ந்து, அவளைத் தன்னை நோக்கித் திருப்பி, ”மஸ்தானா, இந்தப் பாலைவனத்தில் இவ்வளவு அழகிய மிருதுவான புஷ்பமிருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றான்.

அப்பொழுது மஸ்தானா தன்னுடைய வயிற்றுக்கு சிக்கியிருந்த அவனது கையை இறைவனது சிருஷ்டியில் எது எங்கிருக்கும் சொல்லமுடியும்?” என்றாள்.

உட்கார்ந்தபடி அவளை நோக்கிய இளவழுதி, அவளே ஒரு வெண்புரவியைப் போல் போர்த்திக்கொண்டிருந்த வெள்ளைப் போர்வையைச் சற்றே நீக்கி, “மஸ்தானா! தத்துவம் பேசுகிறாய்! !” என்றான் அவள் காதுக்கருகே குனிந்து.

மஸ்தானாவின் கைகள் இரண்டும் எழுந்து அவனை இறுக்கித் தன்மீது பதியவைத்துக் கொண்டன. இளவழுதி அவள் கைகளை மெள்ள நீக்கி அவளுடைய வெள்ளைப் போர்வைக்குள் தானும் நுழைந்து அவளது மார்புகளுக்குள் தன் முகத்தை மறைத்துக் கொண்டான்.

“மஸ்தானா… மஸ்தானா…” என்று அந்த நிலையிலேயே அவளது இதயத்துடன் பேசினான்.

உணர்ச்சிமிகுதியால் அவளது இயதம் ‘படக் படக்’ கென்று அடித்துக் கொண்டது.

“மஸ்தானா! நான் தத்துவம் சொல்லட்டுமா?” என்று அங்கிருந்தபடியே வினவினான் இளவழுதி. இம்முறை அவள் பணைத்தை மார்பில் முகத்தைப் புரட்டவும் செய்தான். அவள் உடல் லேசாக நடுங்கியது.

“என்ன தத்துவம், படைத்தலைவரே?” என்று அவள் மெதுவாக வினவினாள்.

“மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை இருந்து வரும் நிரந்தரத் தத்துவம் – அதாவது ஆண் – பெண் தத்துவம்!” என்று மெதுவாகப் பேசிய இளவழுதி அவள் கன்னத்தில் தன் உதடுகளைப் புதைத்தான்,

அவள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தாள். “இது சொல்லித் தெரிய வேண்டிய தத்துவமில்லை, இயற்கையே படிப்பினையைத் தருகிறது” என்று சொல்லிய அவள் மேலும் ஏதோ சொல்லப்போனாள். ஆனால் இரண்டாவது முறை அவள் வாயைத் திறக்குமுன், அவள் உதடுகள் இளவழுதியின் முரட்டு உதடுகளால் மூடப்பட்டிருந்தன. அவனுடைய பற்களில் இரண்டு அவள் கீழ் உதட்டைக் கவ்வின. அதுவரைக் காட்டியிருந்த அடக்கத்தையும் கை விட்டாள் மஸ்தானா. அவளும் தன் உதடுகளால் அவனது உதடுகளைக் கவ்வினாள். அடுத்து இருவர் உடல்களும் ஒன்றுடன் ஒன்று இழைந்து கொண்டிருந்த்தன அப்போது அந்தப் பாலைவன மலரின் வலு என்னவென்பதை இளவழுதி புரிந்து கொண்டான்.

அவள் அவனைக் கட்டியது அசுரக்கட்டாக இருந்த இதைவிட அஹமதின் மல்யுத்தக்கட்டே பாதகமில்லையென்று இளவழுதி நினைத்தான். ஆனால் தன் உடலை ஒருமுறை நிமிர்ந்து திமிறி அவளது கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு நகர்ந்து தன் படுக்கையில் படுத்தான். ஆனால் அவ்வளவு சுலபமாக அவனால் தப்பிச்செல்ல முடியவில்லை . அவள் கைகள் அவனது உடல் முழுவதையும் திரும்ப இழுத்தன. அவள் கால்கள் அவன் கால்களைச் சுற்றி நெரித்தன. அதற்குமேல் ஓர் ஆண் மகனுக்கு அழகல்ல என்று நினைத்த இளவழுதி அவளை தனது கைகளால் இழுத்துத் தனது படுக்கையில் போட்டான்.

பிறகு எழுந்து நின்று, “மஸ்தானா நாளை சந்திப்போம் என்றான்.

“நாளைக்கு எது எப்படியோ?” என்ற மதகுருவின் குரல் அறை வாயில்படியிலிருந்து ஒலித்தது.

மஸ்தானாவை விட்டுத் திரும்பிய இளவழுதி மதகுருவை நோக்கிச் சென்றான்.

“மதகுரு! என்ன சொல்கிறீர்கள்? நாளைக்கு ஏன் இந்தக் கதை தொடரக்கூடாது?” என்று கேட்டான்.

மதகுரு மெள்ள நகைத்தார். அவர் நகைப்பில் நச்சு இருந்தது

“இளவழுதி! உலகில் எல்லாம் நம் இஷ்டபடி நடந்துவிடுவதில்லை’’என்றார் மதகுரு,

இளவழுதியும் நகைத்தான் இளக்காரமாக, ‘’மதகுரு! எதுவும் நமது நம் நமது சாமர்த்தியத்தில் இருக்கிறது’’என்றான்.

மதகுரு அவனை நெருங்கி வந்து அவன் தோள் மீது கை வைத்தார்.

“நாளை எனது சாம்ராஜ்ஜியத்தைப்பார். பிறகு தெரியும் என்றார்.

இளவழுதி தனது படுக்கையிலிருந்த மஸ்தானாவைச் சுட்டிக்காட்டி, “இதைவிடப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை வைத்திருக்கிறீர்களா?” என்றான்.

“நாளை பார் தெரியும்” என்றார் மதகுரு.

காலையில் சாம்ராஜ்ஜியத்தைக் காட்ட அழைத்துச் சென்றார் அவனை.அதைப் பார்த்தபிறகு பிரமிப்பும் அதிர்ச்சியும் அடைந்தான் படைத்தலைவன், பாலைவனத்தில் இப்படியும் இருக்க முடியுமா? என்றும் எண்ணி வியப்பின் எல்லையை எய்தினான்.

Previous articleAlai Arasi Ch23 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch25 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here