Home Alai Arasi Alai Arasi Ch25 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch25 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

65
0
Alai Arasi Ch25 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch25 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch25 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 25 சுனையில் வாளை மீன்

Alai Arasi Ch25 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

இல்லாத பான்ற ஒரு செழிக் நதாத
பிரமிப்புக்கு அறிக்கொண்டு,
நாலும் இந்த யே” என்று
னிடமிருந்து சற்று
க்கும் சாளரத்தில்
நீர் வசதியோ வேறு வந்த வளப்பமோ இல்லாத வறண்ட அந்தப் பாலைவனத்தில் மஸ்தானாவைப் போன்ற ஒரு செழித்த மலர் உற்பத்தியாக முடியுமென்று கனவிலும் கருதாக இளவழுதி அவள் உடல்வளத்தை உணர்ந்ததால் பெரும் பிரமிப்பிக்கு ஆளானானென்றாலும் அதை ஒரு விநாடியில் உதறிக்கொணுடு மஸ்தானா! வெளியில் பால் நிலவு இருந்தாலும் இந்த கும்மிருட்டில் உன்னை நான் பார்க்க முடியவில்லையே!’’ ஏக்கத்துடன் பேசினான்.

அவள் மெள்ள நகைத்து ஒருமுறை அவனிடமிருந்த சற்று விலகிப்படுத்து, ”என் கால்பக்கமிருக்கும் சாளரத்தின் மேல்பக்கத்தைத் திறவுங்கள்” என்றாள்.

அவன் அப்படியே திறந்ததும் சாளரத்தின் வழியாக நிலவு உள்ளே பிரவேசித்து அவளது கட்டுமஸ்தான உடல் மீது பூரணமாக விழவே இளவழுதி அவளை நன்றாக நோக்கி, ”மஸ்தானா நிலவில் நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா?” என்று கேட்டான்.

அவள் காட்டிய புன்முறுவல் அவனுக்குத் தெரியவில்லையாயினும் அவள் ஏதோ பிணங்குகிறாள் என்பதைத் அவள் கையின் ஸ்பரிசத்தினால் புரிந்து கொண்டு ”மஸ்தான உனக்கு பாலைவன அப்சரஸ் என்று பெயர் வைத்திருப்பது மிகவும் பொருந்தும்” என்று பாராட்டினான்.

“யார் வைத்தது பெயர்?” என்று கேட்ட மஸ்தானா தன் கையொன்றை அவன் கையுடன் பிணைத்தாள்.
அவன் கைவிரல்கள் அவள் கைவிரல்களுடன் பின்னி அவற்றை நெரிக்க முயன்றாலும் அவற்றில் பயனேதும் இல்லை அவளது விரல்கள் ஒவ்வொன்றும் நல்ல தடிப்பாகவும் சக்தியுடனுமிருந்ததால் இளவழுதி நெரிக்கும் முயற்சியை

கைவிட்டு மெள்ள வருடி, “பாலைவன மலரே உன் விரல்கள் மலராக இல்லையோ என்று கேட்டுக் கைவிரல்களை விட்டு தன் கையை அவள் மார்புமீது வைத்தான். அதுவும் அசாத்திய கெட்டிப்பட்டிருக்கவே, , “மஸ்தானா! இது என்ன உடல் அழகிடங்களும் கல்லாயிருக்கின்றனவே!” என்றான்.

‘’காரணம் அவையல்ல” என்றாள் மஸ்தான.

‘’வேறு எவை?” என்று இளவழுதி கேட்டான்.

‘’உங்கள் கை” என்றாள் அவள். “மலரையும் கல்லாக்கும் சக்தி அவற்றுக்கு இருக்கிறது” என்றாள் அவள்.

அது சரிதான என்று பார்க்க அவன் தனது கையை அவள் இது மார்பில் வைத்து மூர்க்கத்தனமாக அழுத்தினான். அதற்கு அசையவில்லை . அவளது இடது மார்பும், வலது மார்பும்
அப்படியிருக்கவே. “மஸ்தானா! நீ சொல்வதில் பொருள் இருக்கிறது” என்ற இளவழுதி சற்று நிதானித்தான்.

எங்கிருந்தோ ஏராளமான புரவிகள் கனைக்கும் சத்தம் அவன் காதில் விழுந்தது.

“குழந்தைகள் விழித்துக் கொண்டன” விளக்கம் தந்தாள் மஸ்தானா,

  ‘’குழந்தைகளா?’’ என்று வியப்புடன் வினவினான் தமிழக வீரன்.

ஆம் என் தந்தையின் குழந்தைகள்” என்ற மஸ்தானா, “என் தந்தை உங்களுக்கு அவற்றைச் சீக்கிரம் காட்டுவார்.” என்றாள்.

அந்தச் சமயம் மதகுரு சாளரத்தில் தோன்றி, “ஆம் இளவழுதி! வா போவோம், நேரமாகிறது. குழந்தைகள் அழைக்கின்றன” என்றார்.

பேசாமல் அவரைப் பின் தொடர்ந்தான் இளவழுதி மதகுரு வெளியே வந்து அங்கிருந்த செல்லப் புரவிமேல் தான் ஏறிக் கொண்டு இன்னொரு புரவியை இளவழுதிக்குக் கொடுத்தார் பிறகு இருவர் புரவிகளும் வேகமாக தோப்புக்குள் பாய்ந்து சென்றன. இரண்டு நாழிகை பயணத்துக்குப் பிறகு ஒரு பெரிய ஈச்சந்தோப்பை அடைந்ததும், அந்தத் தோப்பில் ஏராளமாக புரவிகள் வேலியிட்டு அடைக்கப்பட்டிருந்ததையும், மதகுருவைப் பார்த்தவுடன் அவற்றில் பல கழுத்துகளைத் தூக்கிக் கனைத்ததையும் கண்ட இளவழுதி, ”மதகுரு! வரவேற்பு பலமாயிருக்கிறது” என்றான்.

மதகுருவும் அதை ஆமோதித்து, ‘பொறுத்துப்பார்” என்றார்,

சற்று நேரத்திற்கெல்லாம் பல புரவிகள் அவரிடம் நெருங்கி மதகுரு உடலுடன் தங்களது உடல்களை உராய்ந்தன. சில குட்டிப் புரவிகள் கழுத்துகளைத்துக்கி அவர் தோள் மீது வைத்தன. மதகுரு அவற்றின் கன்னத்துடன் தன் கன்னத்தை உராய்ந்து ‘’அட செல்லங்களா செல்லங்களா!” என்று இரைந்து சொல்லி தட்டியும் கொடுத்தார்.

பிறகு அந்த இனம்புரவிகள் அவரிடமிருந்து பிரிந்து வெளியே ஓடின மதகுருவும் தொடர்ந்தார். இளவழுதியைத் தன்னைப் பின்பற்றும்படி சைகையும் செய்தார்.

இளவழுதி அவர் கட்டளைப்படி பின்தொடர்ந்து சென்றான். சற்று நேரத்திற்கெல்லாம் அவன் பார்த்தது முற்றும் எதிர்பாராத பிரமிக்கத் தக்க காட்சியாயிருந்தது.

எதிரே இருந்த அந்தப் பாலைவனச் சுனையில் புரவிகள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தன. அவற்றுக்கிடையே நீரிலிருந்து ஒரு நிர்வாணப் பெண்ணுருவம் எழுந்து நின்றது. வாளை மீன் போல் செழித்த அவள் வழவழத்த உடலைப் பார்த்த இளவழுதி, “மதகுரு மதகுரும்” என்று வியப்பால் கூவினான்.

மதகுரு புன்முறுவல்கொண்டு கட்டளையிட்டார். எந்த நாகரிக மனிதனும் இடக்கூடாத கட்டளை அது.

“என் சாம்ராஜ்யத்தைப் பார்த்துவிட்டாயல்லவா! புரவிகள்தான் என் சாம்ராஜ்ஜியம் இவற்றையெல்லாம் நான்தான் வளர்த்தேன். இவற்றைக் குளிப்பாட்டுவதும், தேய்த்து விடுவதும், உணவூட்டுவதும் நான்தான். இவை என்னைத் தாய்போல் பாவிக்கின்றன. மஸ்தானாவைவிட நான் இவற்றை நேசிக்கிறேன்” என்றார்.

மேலும் சொன்னார். ”நான் சில குழந்தைகளைத் தேய்த்துக் குளிப்பாட்டப் போகிறேன். அதுபோல் நீயும் மஸ்தானாவைத் தேய்த்துக் குளிப்பாட்டு!” என்று கூறி சுனைக்குள் இறங்கினார்.

மதகுரு சுனைக்குள் அலட்சியமாக இறங்கி புரவிக் குட்டியொன்றின் பிடரி மயிரைப் பிடித்துக் கையிலிருந்த வைக்கோலால் அதன் முதுகில் நன்றாகத் தேய்க்கலானார். வைக்கோலை எறிந்துவிட்டுத் தன் இரு கைகளாலும் தண்ணீரை வாரி இறைத்துத் தெளித்தார். பிறகு அதைப் பிடித்து தண்ணீரில் தள்ளி அதன் மீது தானும் விழுந்தார். இதைக் கண்ட இளவழுதி, மதகுரு மதகுரு!” என்று அழைத்தான்.

“என்ன தமிழா?” என்று மதகுரு வினவினார்.

‘’நீங்கள் புரவிக்கு செய்ததையெல்லாம் நான்…?” வாசகத்தை முடிக்கவில்லை இளவழுதி.

‘’ஆம் மஸ்தானாவுக்கு நீ செய்ய வேண்டும்” என்று மதகுருவே முடித்தார்.

எட்ட சில புரவிகளுக்கு மத்தியில் நின்ற மஸ்தானாவை இளவழுதி நோக்கினான். மஸ்தானா அவனை அருகில் வரும்படி சைகை செய்தாள். மெள்ளப் புரவிகளை இடித்துத் தள்ளிக் கொண்டு மஸ்தானாவின் அருகில் வந்தான்.

பிறகு மதகுருவின் ஆக்ஞைப்படி கையிலிருந்த வைக்கோலை அவள் முதுகைத் தேய்க்கலானான். அப்படித் தேய்த்துக் கொண்டே வந்தவன் பாதி தேய்த்ததும் சட்டென்று உட்கார்ந்து அவளது பருத்த தொடைகளைத் தழுவிக் கொண்ட “மஸ்தானா! இது என்ன அக்கிரமம்” என்று கேட்டான் துன்ப குரலில் ஒலிக்க,

அவள் தொடை பூராவும் சின்னஞ்சிறு கற்கள் பதிக்க சிவப்பாக ஏதோ மாணிக்கம் பதித்தாற்போல் அடை செய்திருந்தது.

மஸ்தானா அவனைக் குனிந்து நோக்கி, “பாலைவனச் சிறு கற்கள் நான் விழுந்தபோது பதிந்துவிட்டன” என்று காரணம் சொன்னாள். இளவழுதிக்கு இருந்த ஆத்திரத்தில் தான் என்ன சொல்கிறோம் என்பதை அறியாமலேயே இந்த பாலைவனத்தையே ஒழித்து விடுகிறேன்” என்று கூறினான்.

அடுத்த கணம் அவன் இதழ்கள் அந்தத் தொடைக்கு ஒத்தரம் கொடுத்துக் கொண்டிருந்தன.

”வேண்டாம் நிறுத்துங்கள்” என்ற மஸ்தானா தனது கையை அவன் முகத்தை வேறுபுறம் திருப்பினாள்.

“ஏன்?” என்று கேட்டான் இளவழுதி,

“நீங்கள் செய்வது தவறு” என்றாள் அந்தப் பாலைவன அழ

“என்ன செய்ய வேண்டும்?” என்று இளவழுதி கேட்டான்

“தந்தை என்ன செய்தார்?” என்று அவள் பதிலுக் வினவினாள்

“என்ன செய்தார்?” ஏதும் அறியாதது போல் கேட்டான் இளவழுதி

மஸ்தானா கூறினாள்,

‘’ என் தந்தை புரவியைத் தேய்த்துத் தண்ணீரில் தள்ளி அதன் மீது விழவில்லை?’’

“ஆம்”

“அதைத் தானே நீங்களும் செய்ய வேண்டும்” என்றாள் மஸ்தானா.

இளவழுதி தனது இடது கையால் அவளைப் பிடித்து நீரில் தள்ளினான், ஆனால் மேலே விழவில்லை.

Previous articleAlai Arasi Ch24 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch26 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here