Home Alai Arasi Alai Arasi Ch27 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch27 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

58
0
Alai Arasi Ch27 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch27 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch27 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 27 மீண்டும் வடகரை

Alai Arasi Ch27 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

செழித்த உடலில் ஒட்டிய ஈர உடையாலும் அது பிரித்துக்காட்டிய எழில் பகுதிகளாலும் மிகக் கவர்ச்சியோடு காணப்பட்ட மதகுரு மகளை மடியில் போட்டுக் கொன்டு அவன் மேனியிலிருந்த மணலைத் தட்டிய இளவழுதி அவளது வயிற்றிலும், முதுகிலும் கூட மணற்கர்கள் குத்தி சிவந்த மாணிக்கங்களைப் பார்த்து பரவசப்பட்டான். மார்பிலும் வயிற்றிலுமிருந்த மணலை ஆசையுடன் தடவித் தடவி தட்டவும் செய்தான். பிறகு தன் தலைப்பாகையை எடுத்து அவளது உடல் முழுவதையும் நன்றாகத் துடைத்தும் விட்டான்.

அந்த சமயத்தில் காலைக் கதிரவன் தனது கிரணங்களை மெதுவாக அவர்களிருவர் மீதும் வீசவே, மஸ்தானாவின் உடலில் இருந்த மாணிக்கங்கள் நீரோட்டமுள்ள நிஜ மாணிக்கங்களை போலவே காணப்பட்டன. அவன் அவள் அழகைப் பருகிக் கொண்டு, தலைப்பாகையால் அவளைத் துடைத்திக் கொண்டிருந்த சமயத்தில் மதகுரு வேகமாக வந்தார்.

”தமிழா! என்ன இது?” என்று கோபத்துடன் விசாரிக்கவும் செய்தார்.

”ஒன்றுமில்லை ….. மணலைத் தட்டுகிறேன்” என்றான் இளவழுதி,

”தட்டியாகிவிட்டதில்லையா? இனி அவளைப் போக விடலாமே!” என்றார் மதகுரு.

‘இவள் ஆடை பல இடங்களில் கிழிந்திருக்கின்றன. அப்படியே சென்றால் விகாரமாயிருக்குமே” என்று இளவழுதி அவரை மறுத்துப் பேசினான். ”உடைகளை யார் கிழித்தது?” என்றும் கேட்டான்.

அதற்கு மதகுரு பதில் சொல்லவில்லை மஸ்தானாவே சொன்னாள், “என் சகோதரர்!’’ என்று.

அருகில் நின்ற ஒரு புரவிக் குட்டியையும் பார்த்தாள். அதன் காலையும் சுட்டிக் கட்டிக் காட்டினாள் புரவி தனது குளம்பை மணலில் கிடந்த அவள் ஆடையின் தலைப்பில் வைத்திருந்தது.

‘’பார்த்தீர்களா? நான் எழுந்திருந்தால் இந்த ஆடை என்னவாகுமென்று சர்ரென்று கிழிந்து போகும்” என்று அதுவரை கிழிந்ததற்குக் காரணம் காட்டினாள்.

இளவழுதியும் புரிந்து கொண்டு புன்முறுவல் செய்தான். பிறகு எழுந்திருந்து அவளைத் தூக்கி அந்தப் புரவி மீது உட்கார வைத்தான் புரவி வேகமாக படகுத் துறையை நோக்கி ஓடியது.

மதகுருவும் அதைத் தொடர்ந்து செல்ல சற்றே திரும்பினார். அதனால் அதற்குள் ஒரு பெரிய வண்டி வந்து அதிலிருந்து ஒரு பெரிய கோணி இறக்கப்படவே, அவர் நின்ற இடத்திலேயே நின்றார்.

பிறகு கோணியின் வாயை அவிழ்த்து கையை விட்டு அதிலிருந்து சுடச்சுட இருந்த கொள்ளினை இரு கைகளால் எடுத்தார். பிறகு வாயால் ஊத, சுனையிலிருந்த புரவிகள் ஓடிவந்தன. அவர் இரு கைகளால் கொள்ளினை எடுத்து நீட்ட நீட்ட ஆவலுடன் அவை உண்ணவும் செய்தன.

இளவழுதியும் அவரைப் பின்பற்ற முயன்று தன் கைகளிலும் கொள்ளினை எடுத்துக் கொண்டான். ஆனால் புரவி எதுவும் அவனை அணுகவில்லை. கொள்ளினை உண்ணவும் இல்லை. வந்தவழியே திரும்பி ஓடிவிட்டன.

மதகுரு சொன்னார் :

“இந்தக் குழந்தைகள் வேறு யார் உணவு கொடுத்தாலும் சாப்பிடாது.”

“ஏன்?” என்றான் இளவழுதி.

இவற்றை சிறு குட்டியிலிருந்து வளர்த்தது நாந்தான்.தாயைத் தவிர குழந்தை வேறு யாரிடமும் பால் அருந்த விரும்பாதது என்பதைப் புரிந்து கொண்டால்? நீ இதையும் புரிந்து கொள்ளலாம்” என்ற மதகுரு. ”இவற்றுக்கு இந்த கட்டியது நான்தான்” என்றும் கூறினார்.

“சுனையை நீங்கள் கட்டினீர்களா?” என்று வியப்புடன் வினவினான் இளவழுதி.

“இல்லாவிட்டால் பாலைவனத்தில் இவ்வளவு பெரிய குளம் ஏது?” என்று கேட்ட மதகுரு. ”இந்தப் பாலைவனத்தில் பல இடங்களில் உள்ள சோலைகளில் சுனை எதுவும் கிடயாது என்றும் விளக்கினார்.

மேலும் சொன்னார் :

“தமிழா! இயற்கை மனிதனைக் கைவிடுவதில்லை பொழிகிறது. அதை மண் ஈர்த்துக் கொள்கிறது. நன்றாக வெட்டினால் ஊற்று நிச்சயம் கிடைக்கும். ஆனா அந்த வேலைக்கு மனிதன் இஷ்டப்படுவதில்லை. சோம்பேறித்தனமக சுயமுயற்சி ஏதுமில்லாமல் சுகத்தை அனுபவிக்க விரும்புகிறான் உலகத்தின் தொல்லைகளுக்கெல்லாம் இதுதான் காரணம்” என்று விளக்கிய மதகுரு. ”இந்த இடத்தில் மழை நின்ற பிறகும் ஈரம் இருந்தது நான் ஆட்களைவிட்டு சுற்றிலும் வெட்டி குளமாக எடுத்தேன். அந்த நீர் இன்னும் வற்றவில்லை . இதனால் புரவிகளுக்கும் நல்லது. மற்ற குடியிருப்பில் இருக்கிறவர்களுக்கும் உதவுகிறது. புரவிகள் பிழைக்கின்றன. குடியிருப்புகள் நாசம் அடையவில்லை. இதனால்தான் நான் மட்டும் இந்த பாலைவனத்தில் புரவி வியாபாரியாக இருக்கிறேன்’ என்று விளக்கினார் மதகுரு.

அவர் உழைப்பினால் உயர்ந்தவர் என்பதை இளவழுதி புரிந்து கொண்டான்.

“ஆம் மதகுரு! உழைப்புக்கு மிஞ்சிய சக்தி உலகத்தில் இல்லை” என்றான்.

அந்த சமயத்தில் அவர் அதிர்ச்சியடையும்படியான ஒரு அல நிகழ்ச்சி நடந்தது மணலில் இளவழுதி மடியிலிருந்து விலகி உட்கார்ந்த மஸ்தானா சட்டென்று எழுந்து. இளவழுதியின் கழுத்தின் மீது உட்கார்ந்து தன் இருகால்களையும் அவன் இரு தோள்கள் பக்கமாகத் தொங்கவிட்டாள்.

“அப்பா! இவரை யானையென்று வைத்துக் கொண்டால் முகப்படாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்?” என்றாள்.

அவரது முடிவிற்கு இளவழுதி காத்திருக்கவில்லை . தன் இரு கைகளாலும் அவளது தொடைகளைப் பற்றி, “ஏன் இருக்காது? இருக்கும் இருக்கும்” என்றான்,

மதகுரு தன் தலையை அசைத்து, “சரியாகத்தான் இருக்கிறது தமிழா” என்றார். “நீ மரக்கலம் போ. நாளைக்கே புரவிகள் வந்து சேரும்” என்று உறுதியும் கூறினார்.

இளவழுதி மஸ்தானாவின் கையோடு தன் கைகளையும் சேர்த்துக் கொண்டு படகுத் துறையை நோக்கிச் சென்றான். பாளைப் படகில் உட்கார வைத்து, தானும் ஏறித் துடுப்புகளைத் ரவலானான். மரக்கலத்தை அடைந்ததும் தான் முதலில் அதன் நீ ஏறிக் கொண்டு, கைலாகு கொடுத்து அவளை மரக்கலத்தில் எற்றிக் கொண்டான். பிறகு தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான். மாலுமிகள் இருவர் அவன் அறையிலேயே உணவு பரிமாறினார்கள். நேரம் மெள்ள மெள்ள நகர்ந்து இரவும் நெருங்கியது.

மாலுமிகள் இருவர் அந்த அறைக்கு வந்து பஞ்சணையைத் தட்டிப்போட்டு விளக்கொன்றை ஏற்றினார்கள். பஞ்சணையில் மஸ்தானாவைத் தூக்கிப் படுக்க வைத்த இளவழுதி, “மஸ்தானா! நிம்மதியாக உறங்கு. நாளை நாம் நாடு செல்வோம்” என்றான்.

மஸ்தானா பஞ்சணையில் நன்றாக மல்லாந்து படுத்து தனது வலுவான கால்களை நீட்டிக் கொண்டாள். இளவழுதி அவள் மீது குனிந்து. அவளது ஆடையின் இதய முடிப்பைக் தளர்த்த முயன்றான். அதே வினாடி – அறைக் கதவு திறக்கப்பட்டு அலை அரசியும், கடலரசியும் உள்ளே வந்தார்கள்.

வந்தவர்கள் நேராகப் பஞ்சணை அருகில் வராமல் எட்டவே நின்றனர். ஆனால் அலை அரசி மட்டும், ”படைத் தலைவரே முன்பு எங்களை புடவையால் மூட முயன்றீர்கள். இப்பொழுது நீங்களே ஆடையை நீக்கப் பார்க்கிறீர்களே?” என்ரு கூறி புன்முறுவல் கொண்டாள்.

“ஆம்! ஆம்! ஏன்…? ஏன்?” என்று கடலரசியும் ஒத்துப் பாடினாள்.

இளவழுதி அவர்களை உற்று நோக்கினான்,

“எந்த சமயத்தில் எது தகுமோ அதைச் செய்கிறேன். என்று சமாதானம் கூறினான்.

“இப்பொழுது இதற்கு என்ன உசிதம்?” என்று அலை அரசி கேட்டாள்.

“சமயம் வரும்போது சொல்கிறேன்” என்று முடிவு கட்டினான் இளவழுதி.

அடுத்து அவர்கள் இருவரையும் வெளியே போகும்படி சைகையும் செய்தான். தான் எழுந்து சென்று கதவை மூடித் தாளிட்டான்.

மீண்டும் இதய முடிச்சை அவிழ்ப்பதில் முனைந்தாள் அப்பொழுது வெளியே யாரோ ‘டக்டக் கென்று கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

மஸ்தானா கேட்டாள், “அவர்களை ஏன் அனுப்பி விட்டீர்கள்?” என்று,

இப்பொழுது நம்மிருவரைத் தவிர வேறு யாருக்கும் இங்கு வேலை கிடையாது” என்றான் இளவழுதி,

பிறகு எழுந்து சென்று கதவின் தாளை நீக்கினான். கதவைத் திறந்து முதியவர் பெருவழுதி உள்ளே நுழைந்தார்.

உள்ளே நுழைந்த பெருவழுதி அங்குள்ள நிலவரத்தைக் கண்டு குழப்பம் அடைந்து, “இளவழுதி! இவள் யார்?” என்று வினவினார்.

மதகுருவின் மகள்” என்று பதில் சொன்னான்.

‘’இவளுக்கு இங்கென்ன வேலை?” என்று பெருவழுதி கேட்டார்.

அப்பொழுது மஸ்தானா சொன்ன பதில் அவரை அதிர்ச்சிக்கும் திகிலுக்கும் உள்ளாக்கியது.

பெரியவரே! கணவனிருக்குமிடத்தில் மனைவி இருக்காமல் எங்கே இருப்பாள்?” என்று கேட்டாள்.

“கணவனா? மனைவியா?” என்று வாயைப் பிளந்தார் முதியவர் பெருவழுதி

‘’ஆம் தாத்தா! இவள்தான் என் மனைவி, மதகுருவின் மகள்” என்று இளவழுதி சர்வசாதாரணமாகச் சொன்னான்.

பாட்டன் முகத்தில் வெறுப்பு நிலவியது.

உன்னைப் புரவிகள் வாங்க அல்லவா மன்னர் அனுப்பினார்?” என்று குற்றஞ்சாட்டும் குரலில் கேட்டார் பெருவழுதி ,

இளவழுதியின் முகத்தில் சற்றே சிந்தனை படர்ந்தது.

“உங்கள் பேரன் கடமையிலிருந்து வழுவுபவன் அல்ல. இவளை வாங்கினால் புரவிகளை வாங்கியது போலத்தான். நாளை பாருங்கள் தெரியும்” என்றான்.

தெரியத்தான் செய்தது. தெரிந்ததோ கண்கொள்ளாக் காட்சி பரம விசித்திரம்!

Previous articleAlai Arasi Ch26 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch28 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here