Home Alai Arasi Alai Arasi Ch28 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch28 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

69
0
Alai Arasi Ch28 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch28 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch28 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 28 மன்னன் செய்த எச்சரிக்கை

Alai Arasi Ch28 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

பவுர்ணமி கழிந்து ஏழு நாட்களான போதிலும், அதன் விளைவாக சந்திரன் நான்கு நாழிகைகள் கழித்து உதயமானாலும் தனது பிரகாசத்தையோ, கலைகளையோ சிறிதும் குறைக்காகமல் பரிபூரண பிரகாசத்தோடு கடல் பகுதியையும், துறைமுகம் பாறைகளையும் மனோகரமாக அடித்துக் கொண்டிருந்தான் மரக்கலம் வேகமாகச் சேரநாட்டை நோக்கிப் போய் கொண்டிருந்ததால் பாறை மெள்ள மெள்ள தூரமாகப் போய்க் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் மறைந்து விட்ட அவன் அத்துடனிருக்காமல் இளவழுதியின் மரக்கல அறைகுள்ளும் தனது கிரணங்களை வீசி, பஞ்சணையில் படுத்திருந்த மஸ்தானாவின் கட்டுமஸ்தான உடல் முழுவதும் தழுவலானான். அதைக் கண்ட இளவழுதி, மஸ்தானாவின் கிழிந்த உடைக்குள்ளும் கிரணங்கள் பாய்வதைக் கண்டு, குருபத்தினியை நிர்வாணமாகப் பார்த்த அயோக்கிய சந்திரன் மஸ்தானாவைத் தழுவாமல் விட்டு விடுவானா என்று அவனைத் தூஷித்துக் கொண்டே மஸ்தானாவின் உடை கிழிந்த இடங்களில் தனது கையை வைத்து ஆசுவாசமாகத் தடவலானான்.

“மஸ்தானா! அஞ்சாதே! எதற்கும் நான் இருக்கிறேன்” என்று தைரியமும் சொன்னான்.

மஸ்தானா புன்முறுவல் கொண்டு, “எதற்கும் என்றால்?” என்று கேள்வியைத் தொடுத்தான்.

“அதை விளக்க அவசியமில்லை ” என்ற இளவழுதி, செல்லப் புரவி குளம்பை வைத்து அழுத்தியிருந்ததால் தொடைக்கு மேலும் கிழிந்து விட்ட உடைப் பகுதியால் தெரிந்த தொடையையும் இடையையும், அடிவயிற்றையும் பார்த்து “அப்பா, எத்தனை கற்கள் குத்தியிருக்கின்றன!” என்று வருத்தம் தெரிவித்தான்.

‘’மார்பில் ஏதும் கல் குத்தவில்லையா? என்று அனுதாபத்துடன் கேட்டு மார்புக் கச்சையையும் அவிழ்க்கலானான்.

‘’நிறுத்துங்கள் போதும்’’ என்று அவன் கோபத்துடன் சொன்னாள்.

அப்பொழுது அறை மூலையில் நின்றிருந்த முதியவர் பெருவழுதி, “என்னடா இது? என்று வினவினார்

அதற்கும் இளவழுதி பதில் சொன்னாளில்லை. அறைக் கதவை மெள்ளத் திறந்து கொண்டு, உள்ளே நுழைந்த அலை அரசி சொன்னாள்;

உங்கள் பேரன் மதகுரு மகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்’’ என்று கூறி நகைத்தாள்.

மஸ்தானா பஞ்சணையிலிருந்து எழுந்திருக்க முயன்றாள். அவளை தனது இடது கையால் பஞ்சணையில் தள்ளிவிட்டு, எழுந்து உட்கார்ந்த இளவழுதி, அலை அரசி நீ இங்கு எப்படி வந்தாய்? எப்பொழுது வந்தாய்?” என்று வினவினான் சற்று கோபத்துடன்,

‘’சேரமன்னர் என்ன சொன்னார்?” என்று அவள் திருப்பி கேட்டாள்.

‘’என்ன சொன்னார்?” என்று ஏதும் புரியாததுபோல இளவழுதியும் வினவினான்.

‘’நினைப்பில்லையா உங்களுக்கு..? அரபு நாட்டுக்கு தங்களையும் என்னையும் அஹமதையும் போகச் சொன்னாரே! நீங்கள் அழைத்து வரவில்லை. நான் வந்தேன் என்றாள்.

“உங்கள் மரக்கலத்திற்குப் பின்னால் என்னுடைய மரக்கலம் வருகிறது. சற்றே தளத்தில் சென்று பாருங்கள் என்றும் கூறினாள்.

அவன் எழுந்து சுதவண்டை சென்றதும், ‘ஆம் இளவழுதி வருகிறது.” என்று சாட்சியம் சொன்னார் பெருவழுதி,

கதவைத் திறக்க முயன்றான் இளவழுதி. அலை அரசி குறுக்கே நின்றாள் கைகளை இருபக்கமும் மறித்து அப்படி நின்றதாலும் உணர்ச்சிப்பெருக்கால் அவள் மார்பகம் ஏறி ஏறி இறங்கியதாலும், இளவழுதி அவளைத் தனது இடது கையால் மெள்ள அகற்றி தாளைத் திறந்து வெளியே சென்றான். பின்னால் அந்தப் பழைய பிசாசு மரக்கலம் வெகு வேகமா வந்து கொண்டிருந்தது. அதன் முகப்பில் முசிறி பரதவர் பலர் இருந்தார்கள். இளவழுதியைத் தளத்தில் கண்டதும் கைளை அசைத்து ஆரவாரம் செய்தார்கள்.

இளவழுதி அவர்களை நோக்கி ஓடினான். அதற்குள் பின்னால் வந்த மரக்கலத்தின் முற்பகுதி இளவழுதியின் மரக்கலத்தோடு இலேசாக இணைந்து விடவே, ஒரே தாவாகத் தாவி அந்த மரக்கலத்தில் குதித்துவிட்டான். அடுத்த வினாடி தன் சகோதர பரதவர்களின் அணைப்பில் இருந்தான். இந்த மரக்கலத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த அலை அரசி மெதுவாக நகைத்தாள்.

இருக்கட்டும். இரவு பார்க்கிறேன்’ என்றும் தளக்குள் சொல்லிக் கொண்டாள் இரவும் வந்தது. பரதவ இளைஞர்கள் மேலே மூடாத அந்தப் பழைய அறைக்குள் சென்று பார்த்தனர். அலை அரசி அங்கு பஞ்சனையில் படுத்திருந்தாள். பஞ்சணைக்குப் பக்கத்தில் இளவழுதி மண்டியிட்டு உட்கார்ந்திருந்தான். அவன் தலை அவள் மடியிலிருந்தது. அதைக் கண்ட இளைஞர்கள் பின்வாங்கினர் அலை அரசி பெரிதாக நகைத்தாள் இளவழுதியின் தலையில் தட்டிக் கொடுத்து, உங்கள் நண்பர்கள் போகிறார்கள்’ என்றும் உணர்த்தினாள்.

தலையைச் சடேரென்று துக்கிய இளவழுதி எழுந்திருக்க முயன்றான் அவனைப் பின்னாலிருந்து இருகைகள் உந்த அவன் அலை அரசியின் மீது விழுந்தான். அலை அரசியின் மலர்க் கைகள் கழுத்தை வளைத்தன – இறுக்கின – மார்புமீது பதிய வைத்துக்கொண்டன, இரண்டு தலையனைக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட இளவழுதி முனகினான்,

“விடு அரசி” என்று அவளிடமிருந்து விடுவிடுத்துக் கொண்டு கிளம்பவும் முயன்றான், அலை அரசியின் கைகள் அவனை எழுந்திருக்க விடவில்லை .

யாரென்று திரும்பிப் பார்த்தான். கடலரசி நின்று கொண்டிருந்தாள், அவள் கைகள் நீளவும் தொடங்கின, ஆனால் அந்தப் பரதவ இளைஞன் அவளிடம் சிக்கினானில்லை, ஒருபுறமாகத் தள்ளிவிட்டு, அலை அரசியின் கைகளையும் நீக்கிவிட்டு எழுந்தும் விட்டான். அப்பொழுது வெளியிலிருந்த பரதவ இளைஞர்கள் பெரிதாகக் கூச்சலிட்டார்கள் காரணம் என்னவாக இருக்குமென்று அறிய வெளித்தளத்துக்குச் சென்றான் இளவழுதி காரணத்தைக் கண்டதும் பேரதிர்ச்சியுற்றான்.

கரைத் துறைமுகம் எதிரே தெரிந்தது. கடற்கரை அருகில் அலைகள் காலில் மோத சேரமன்னன் நெடுஞ்சேரலாதன் வந்து கொண்டிருந்த மரக்கலத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

மரக்கலத்தின் தளத்தில் பெருவாரியான புரவிகள் இருந்ததையும், சில பரதவ இளைஞர்கள் நின்றதையும் பார்த்த அரசர், ‘இந்த இளவழுதி எங்கே போனான்?’ என்று அனுப்புடன் கேட்டுக் கொண்டார்.

அந்தச் சமயத்தில் மரக்கல ஓரத்தில் தோன்றி இரு கைகளையும் உயரே தூக்கி சுரங்குவித்து தலைவணங்கி மன்னனுக்கு வணக்கம்

தெரிவித்தான் இளவழுதி மன்னன் அவனை ஆசீர்வதிக்கும். பாவனையில் தனது வலது கையை உயரத் தூக்கிக் காட்டினார் அந்த ஆசீர்வாதமும் சட்டென்று நின்றது. காரணம், மாஸ்தானா அருகில் இளவழுதியை பின்புறமாக வந்து அவனை அனத்துக் கொண்டதுதான்.

வடகரைத் துறைமுகத்தில் மேலைக் கடலலைகள் பாதங்களைத் தழுவ நின்றிருந்த சேரமானைக் கண்ட இளவழுதி, “நமக்க எங்கும் வரவேற்பு பலமாயிருக்கிறது. அங்கு மதகுரு நின்றிருந்தார். இங்கு மன்னரே நிற்கிறார்… அவர் பின்னால் படைப்பகுதி ஒன்றும் காணப்படுகிறது” என்று தன் பக்கத்தில் நின்ற மஸ்தானாவை நோக்கிக் கூறினான்.

மஸ்தானாவும், “தங்களைப் போன்ற பெரிய வீரருக்கு எந்த வரவேற்புதான் தகுதியாகாது?” என்று பாராட்டும் முறையில் பேசினாள்.

கரையில் நின்ற, சேரமானும் பக்கத்தில் நின்ற கேரள பெரிய மந்திரவாதியை நோக்கி, “அதோ மரக்கலத்தில் இருக்கும் புரவிகள் நானூறு இருக்குமா?” என்று வினவினார்.

“ஏன் இருக்காது?” என்று மந்திரவாதி கேட்டார்.

“தளம் சிறிதல்லவா! மரக்கலத்தில் பெருவாரியான புரவிகளைக் கொண்டு போக முடியுமா?” என்றும் மன்னர் திரும்பு கேட்டார்.

கேரள பெரிய மந்திரவாதி, “ஏன் முடியாது? இந்தியாவிலிருந்து சிங்களம் சென்ற சங்கமித்ரை மூவாயிரம் புரவிகளை மரக்கலத்தில் கொண்டு போயிருந்ததாக வரலாறு இருக்கிறதே. மூவாயிரம் புரவிகள் மரக்கலத்தில் கொள்ளுமானால் நானூறு புரவிகளை ஏன் கொண்டு போக முடியாது?” என்று வரலாற்று மூலமாக வரலாற்றுப் பிரச்சனையைக் கிளப்பினார்.

அப்பொழுது இளவழுதி ஒரு படகை எடுத்துக் கொண்டு மஸ்தானாவையும் அழைத்துக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தான்.

‘’இது யார்?” என்று மன்னர் கேட்டார்.

“மஸ்தானா!” என்று படைத்தலைவன் பதில் சொன்னான்.

“அப்படியென்றால்?”

“மதகுருவின் மகள். இத்தனை புரவிகளுக்கும் சொந்தக்காரி.”

மன்னர் மஸ்தானாவையும் ” மரக்கலத்தையும் நோக்கினார் ‘’அந்தப் புரவிகள் கரைக்கு எப்படி வரும்?” என்றும் வினவினார்.

மஸ்தானா தனது இரு கைகளையும் உயரே தூக்கி கைகளை இருமுறை தட்டினாள். அடுத்த விநாடி புரவிகள் பலமாக கர்ஜனை செய்து மரக்கலத் தளத்தினின்று தாவிக்குதித்து வெகுவேகமாகக் கரையை நோக்கி ஓடி வந்தன. அடுத்து, மன்னர் உத்தரவுப்படி அங்கு கொண்டுவரப்பட்ட கொள்ளு அண்டாவிலிருந்த தீனியை ஆவலுடன் தின்றன. இளவழுதி தன் இரு கைகளிலும் கொள்ளினை எடுத்து நீட்டினான்.

மன்னர், “உனக்கும் புரவிகளுக்கும் ரொம்பப் பரிச்சயமோ?” என்று வினவினார்.

‘’மிருகங்கள், மனிதனைப் போன்றவை. உணவு அளிப்பவர்களிடம் நன்றியுடன் இருக்கும். தாங்களும் தீனி கொடுங்கள்” என்று மன்னனை ஊக்கினாள் மஸ்தானா.

மன்னரும் சளைக்காமல் தீனியை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். புரவிகளும் ஒவ்வொன்றாக அவரிடம் வந்து தனியைத் தின்று வடகரை காட்டுக்குள் ஓடிவிட்டன.

Previous articleAlai Arasi Ch27 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch29 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here