Home Alai Arasi Alai Arasi Ch29 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch29 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

102
0
Alai Arasi Ch29 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch29 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch29 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 29 ஆசையும் நிராசையும்

Alai Arasi Ch29 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

இளவழுதி சொன்னான்;

‘’நாங்கள் புறப்பட்டு மூன்று நாட்களாகின்றன. ஆம் மூன்று நாட்களாகத் தீனியில்லை. பவம்” என்று அனுதாபப்பட்டான்.

மன்னர் வியப்பின் வசப்பட்டு, ”மூன்று நாட்களில் இங்கு எப்படி வர முடிந்தது?” என்று கேட்டார்.

“அலை அரசி உடன் வந்திருக்கிறாள் மரக்கலம் தடையுமின்றி பாய் புடைத்து தங்குதடையின்றி வெகுவேகமாக வந்தது. அதனால் வரமுடிந்தது. இது தங்களுக்குத் தெரியாதல்ல’’ என்றான் படைத்தலைவன்.

கேரள பெரிய மந்திரவாதியும், ”ஆமாம்; அவன் இருக்கும்போது கடலில் எந்தக் கவலையும் இல்லை” என்று ஒத்துப்பாடினார். அதற்குப் பிறகு மன்னரும் மற்ற இருவரும் மாளிகையை நோக்கி நடந்தார்கள்.

இளவழுதி மட்டும், “மன்னவா! நான் புரவிகளை ஒரு வட்டமாக பட்டிக்குள் நிறுத்தி விட்டு வருகிறேன்” என்று விடைபெற்று காட்டை நோக்கிச் சென்றான்.

அங்கு அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடம்பர் படைவீரர்களை புரவிகள் மடக்கிக் கொண்டன. இளவழுதி அவர்களை நோக்கி, “உங்கள் தளத்திற்குச்சென்று விடுங்கள், இல்லையேல் இந்தப் புரவிகளை விட்டே உங்களை மிதித்து விடக் சொல்வேன்” என்று மிரட்டினான்.

கடம்பர்கள் அதை அலட்சியம் செய்து நின்ற இடத்திலேயே நின்றார்கள். அப்பொழுது அவன் பின்புறம் நின்றிருந்த மஸ்தானா ஏதோ சைகை செய்யவே நானூறு அரபுப் புரவிகளும் தாவிக்குதித்து அசுர வேகத்தில் கடம்பர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி விரைந்தது கண்கொள்ளாக் காட்சியாயிருந்ததென்றால் அவற்றில் ஒன்று மீது தாவி உட்கார்ந்து. அதன் முகப்பில் இருந்து கொண்டு – மற்ற புரவிகளுக்கு வழிகாட்டிச் சென்ற மஸ்தானா ஏதோ சொர்க்கத்திலிருந்து இறங்கிய தேவ கன்னிகையைப் போலிருந்தாள்; அது யார் கண்களையும் பறிக்கக் கூடியதாயிருந்த தென்றல், அவள் அவ்வப்பொழுது கைகளை வீசி சைகை மலம் புரவிக் கூட்டத்தை நாலைந்து பிரிவாகப் பிரித்து அவற்றிற்குத் தலைமைத்தாங்கிச் சென்றதல்லாமல் கடம்பரை நோக்கிப் போகவிட்டது. இன்னும் அதிக வியப்பை சேரமன்னனுக்கு அளித்ததென்றால், இளவழுதிக்கு அது பெரிய அதிர்ச்சியையே அளித்தது. கடம்பர் படையும் அவ்வளவு பெரிதல்லவாகையால் பலர் புரவிகள் மிதிபட்டு மாண்டனர். இன்னும் சிலபேர் சிதறி ஓடினர்.

கடம்பர்கள் வில், அம்பு, வாள், தண்டிபாலம், சிறு கோடரிகள் முதலிய போர் ஆயுதங்களைத் தாங்கி வந்ததைக் கண்டு. கடுமையான போர்ப் பயிற்சியுடைய இவர்களிடம் புரவிகள் எனன செய்ய முடியும்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு துன்பமும் அடைந்தான். ஆனால் அதற்கு வசியமில்லை யென்பதை மறுகணமே உணர்ந்து கொண்டான். அரபுப் புரவிகள் ஏதோ சூறாவளியைப் போல் கடம்பரிடையே புகுந்து அணிவகுப்பைக் குலைத்து விட்டதல்லாமல், அவர்களில் பலரைத் தல்லி மேலேயும் ஓடிவிட்டதால் அவற்றின் குளம்பினால் மதிக்கப்பட்ட கடம்பர்கள் கிளப்பிய மரண ஒலிகள் காட்டின் சூழ்நிலையை பயங்கரமாக அடித்தன.

அதைப் பார்த்த இளவழுதி மந்தகாசத்துடன் மாளிகையை நோக்கி நடந்தான். மாளிகையின் முகப்பை அடைந்ததும் திரும்பி மஸ்தானாவை இரு கைகளாலும் தழுவினான். உப்பரிகையில் நின்று இதைப் பார்த்த மன்னன் சினத்துடன் “ஆகாது இளவழுதி! அவள் குருவின் மகள்” என்று எச்சரித்தான்.

ஆனால் இளவழுதி அதைக் காதில் வாங்கவில்லை மஸ்தானாவை அணைத்தவண்ணம் சேரவாற்றை நோக்கி நடந்தான்.

எதையும் லட்சியம் செய்யாத இளவழுதி மஸ்தானாவை சேர ஆற்றில் இறக்கி அவள் ஆடைகளைக் களைந்து, “மஸ்தானா! உன் பாலைவன சுனை நீராட்டத்துக்கும் இந்த சேர . ஆற்றின் நீராட்டத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார். அங்கு தோழிகள். நீரை வாரி வாரி உன்மேல் இறைத்து பின்பு நீராடவேண்டும் இங்கு இந்த சேர ஆற்றின் நீர் உன் உடம்பின் மீது ஓடி நீராட்டிவிடும் போது களைப்பு, உடல்வலி எல்லாமே பறந்துவிடும் பார்” என்று கூறி அவளைத் தன் மடியில் படுக்க வைத்து அவள் மீது ஆற்றருவி ஓடும்படி செய்தான். இடையிடையே. உடலை அவனும் வருடினான். வருடிய இடங்களில் பெரும் ஆறுதல் தந்ததை மஸ்தானா கண்டாள். அவள் கைகள், மார்புகள், வயிறு, அதன் கீழேயிருந்த சொர்க்கம், பக்கத் தொடைகள் அனைத்தையும் பிடித்து விட்டான் இளவழுதி.

அவள் உணர்ச்சி வசப்பட்டு, ‘போதும் போதும் நிறுத்துங்கள்” என்றாள். அவன் நிறுத்தவில்லை

“இன்னும் சிறிது நேரத்தில் முடித்துவிடுகிறேன்” என்றான்.

சிறிது நேரத்தில் முடியவில்லை . அவன் பணிவிடை மும்முரமாய்த் தொடர்ந்தது. அந்தப் பணிவிடையில் அவன் கைவிரல்கள் எல்லாமே பங்குகொண்டதால் பணிவிடை அவள் இஷ்டத்துக்கும் மீறியே நடந்தது. பணிவிடை முடிந்ததும் அவளை எழுப்பித் தனது தலைப்பாகையால் அவள் உடல் முழுவதையும் நன்றாகத் துவட்டிவிட்டான். பிறகு அவள் ஆடையை அணிவித்தான். அருவியாக ஓடிய ஆற்றங்கரையிலிருந்த ஒரு புஷ்பச் செடியிலிருந்து ஒரு பூங்கொத்தை ஒடித்து அவள் குழலில் சொருகினான்.

இத்தனையையும் பரிஷ்காரமாக முடித்தபின்பு தங்களை ஆற்றில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கடம்ப வீரர் . நால்வரை நோக்கி, “வேறு வேலையிருந்தால் பாருங்கள். இந்த” மாதரசிக்கு ஒருபுரவி கொண்டு வாருங்கள்” என்று உத்தரவிட்டான். கடம்பர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பறந்தனர்.

அடுத்த மாதகுருவின் செல்லப்புரவி அங்கு வந்தது. அதன்மீது மஸ்தானாவை ஏற்றிவிட்டு அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மாளிகையை நோக்கி நடந்தான் இளவழுதி.

மாளிகையின் கதவுகள் முன்னமே மூடப்பட்டிருந்தன. இளவழுதி ஒருமுறை குரல் கொடுக்கவே கதவுகள் திறக்கப்பட்டன. மஸ்தானாவுடன் உள்ளே நுழைந்த இளவழுதி அதிர்ச்சியுற்று மீண்டும் பின்னடைந்தான். உள்ளே அலை அரசியும் கடலரசியும் இரு கயிறுகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்தார்கள். இளவழுதி தாமதிக்கவில்லை. தனது வாளை உருவி பிணைத்த கயிறுகளை அறுத்து எறிந்தான். இரு அரசிகளும் எழுந்திருந்து, ‘படைத் தலைவரே! எங்களையும் குளிப்பாட்டி விடுங்கள்” என்று கேட்டார்கள்.

இதுதான் எனக்கு வேலையா?” என்று இளவழுதி வினவினான்.

‘’புதிதாக எதையும் சொல்லவில்லையே. சற்றுமுன்பு அவளுக்குச் செய்ததை எங்களுக்கும் செய்தாலென்ன?” என்று அலைஅரசி வினவினாள்.

“மஸ்தானா! அவள் விஷயம் வேறு” என்றான் இளவழுதி,

”என்ன வித்தியாசம்? அவளும் பெண், நாங்களும் பெண்கள்தானே?” என்று அரசி வினவினாள்.

“பெண்கள் எல்லாரும் ஒன்றா?” என்று இளவழுதி வினவினான்.

”வித்தியாசமிருந்தால் நீங்கள்தான் சொல்ல வேண்டும்?’’ என்றாள் அரசி.

“சொல்கிறேன் கேள். எங்கள் மனங்கள் ஒன்றுபட்டு விட்டன’’

“அப்படியானால் திருமணம் செய்து கொள்வது தானே!’’

“அதுதான் உத்தேசம்.”

அப்பொழுது திட்டமாக வந்தது ஒரு குரல். ”உச்தேசம் நிறைவேறாது” என்று மன்னர் குரல் ஒலித்தது.

“ஏன்?” என்று வினவினான் படைத்தலைவன்,

“அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.” இதைச் சொன்ன மன்னர், “இளவழுதி! உன் ஆசையை விட்டு விடு உனக்குச் சரியான ஒரு பெண்ணைப் பார்த்து நானே திருமணம் செய்து வைக்கிறேன்” என்றும் கூறி படைத்தலைவனை திருப்திப்படுத்த முயன்றார்.

“இவள் சுதந்திரப் பறவை. இவளை மறந்துவிடு” என்ற கூறினார்.

மஸ்தானாவுக்குத் திருமணமாகிவிட்டதென்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளவழுதி, நின்ற இடத்திலிருந்து அசையும் சக்தியையும் இழந்ததால் செல்லப் புரவி மீதிருந்த மஸ்தானாவை ஒரு கையால் அணைத்தும் புரவியின் கடிவாளங்களை இன்னொரு கையால் பிடித்தும் வெளியூரி லிருந்து அரசகுமாரியை அழைத்துவரும் பணிமகனைப் போல் பவ்யமாக நின்றான். பிறகு மெள்ளப் பேசத் துவங்கி, ”மஸ்தானா அரசர் சொல்வது உண்மைதானா?” என்று வினவினான்.

இதனால் மாளிகைக்கு நடுவில் நின்ற மன்னர் சினத்தின் வசப்பட்டு, ”அரசன் மீது பொய்க்குற்றம் சாட்டுகிறாயா இளவழுதி?” என்று வினவினார் கோபம் குரலிலும் ஒலிக்க.

“இல்லை மன்னவா மஸ்தானாவுக்குத் திருமணமாகியிருந்தால் அவள் தந்தை அவளை ஏன் என்னுடன் தனியாக அனுப்பி வைத்தார்? அவள் கணவனை எனக்கு ஏன் அறிமுகப்படுத்தவில்லை ?” என்று வினவினான்.

சேரமன்னர் சிறிது சிந்தித்துவிட்டு, “மதகுரு காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டார். நாளை அவரே இங்கு வருகிறார். அவரையே கேட்டு விடுவோம்” என்றார்.

வந்து அன போலிருந்தான். அவ மனைவியைத் தூக்கி வேண்டும். உன் .

மதகுரு மறுநாள் வந்தார். தனித்து வரவில்லை. மஸ்தானாவின் கணவனையும் அழைத்து வந்திருந்தார். அவன் பெரிய ராஷஸன் போலிருந்தான். அவன் இளவழுதியைக் கண்டதும், “டேய் என் மனைவியைத் தூக்கி வர உனக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும். உன் மனைவியை இன்னொருவன் கொண்டு போயிருந்தால் நீ என்ன செய்வாய்?” என்று வினவினான்.

‘’அதற்குத்தான் நானும் வந்திருக்கிறேன்” என்றான் மஸ்தானாவின் கணவன். “நாளை மற்போரில் முடிவு செய்வோம், மஸ்தானாவின் கணவன் யார் என்பதை?” என்றும் சொன்னான்.

அதுவரை எட்ட செடி மறைவிலிருந்த அஹமத் வெளியே வந்து “முடிவை இப்பொழுதே சொல்லி விடுகிறேன். நாளைக்கு நான் படைத்தலைவரை நியமிக்க வேண்டும். அவருக்கு வேறு மனைவியையும் தேட வேண்டும்” என்றான்.

சற்று நிதானித்த இளவழுதி, “இவர் யார்? இவர் பெயரென்ன? தொழில் என்ன?” என்று கேட்டான்.

“இவர் பெயர் ஜமாலுதீன். பாண்டி அரசர்கள் இவரிடமிருந்துதான் புரவிகளை வாங்குகிறார்கள். இவரும் ஹார்மோஸ் என்ற இடத்தில் பெரும் புரவிப் பண்ணை வைத்திருக்கிறார். மதகுருவைவிட இவர் புரவி வாணிபத்தில் சிறந்தவர். உலக அறிவிலும் சிறந்தவர். இவரால் மாதகுருவுக்கு பெரும் லாபம்” என்றான் அஹமத்

“சரி, நாளை?” என்றான் படைத்தலைவன்,

பதிலுக்கு மஸ்தானாவின் கணவன் அசுரத்தனமாக நகைத்தான் “படைத்தலைவரே! அவருடன் போரிட ஒப்புக் கொள்ளாதீர்கள் உங்களைப் பிண்டமாயப் பிய்த்துப் போட்டுவிடுவார் கெஞ்சினான் என்று கொஞ்சினான் அஸமத்.

அந்த கெஞ்சலுக்கு ஜமால் பதில் சொன்னான். … தழிழா! வேண்டுமானால் மஸ்தானாவுக்குப் பின் மறைந்து கொள்’’என்று

“தமிழன் சாவுக்கு அஞ்சுவதில்லை. வந்த போரையும் விடுவதில்லை ” என்றான் இளவழுதி,

மறுநாள் மாளிகை முகப்பிலேயே மற்போர் துவங்கியது.

இளவழுதியைக் கண்டு அனைவருமே பரிதாபப்பட்டனர் ஜமால் பெரிய அசுர நடை நடந்து இளவழுதியை நோக்கி வந்தான், பூனை எலியை நோக்கி வருவது போல.

Previous articleAlai Arasi Ch28 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch30 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here