Home Alai Arasi Alai Arasi Ch3 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch3 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

107
0
Alai Arasi Ch3 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch3 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch3 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 இளவழுதி

Alai Arasi Ch3 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

மரக்கலத்தின் தளத்தில் இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே தான் ஏதோ கீழே இழுக்கப்பட்டு சரிவது போன்ற பிரமை ஏற்படவே அதற்குக் காரணம் ஏதும் கற்பிக்க முடியாத நிலையில் தனது சரிவைச் சரிக்கட்ட தளத்தின் பக்கக் கட்டை ஒன்றைப் பிடித்த பிறகும் திடீரென தான் கடலின் நீர்மட்டத்துக்கு வந்துவிட்டதையும், கடலின் வேகம் தன்னை மேலும் கீமே இழுக்க முற்பட்டதையும் கண்ட முதியவனான பெருவழுதி பெரும் திகில்பட்டுக் கதறினானென்றால் அதற்கு அவன் துணிவுக் குறைவு காரணமல்ல. மரக்கலத்தின் அடித்தளத்தில் துளை ஒன்று ஏற்பட்டாலும் மரக்கலம் அமிழ்ந்து விடுமாதலாலும், அத்துடன் தனது குடும்பத்தின் ஒரே சந்ததியான தன் பேரனும் அமிழ்ந்து விடுவானே என்ற அச்சத்தாலும், அப்பொழுதும் அவன் எந்தக் கதிக்கு உள்ளாகிவிட்டானோ என்ற பாசபந்தத்தாலுமே கிழவன் அலறினான். ஆனாலும் அடுத்தமுறை குரல் கொடுக்கவோ அலறவோ தன்னால் முடியவில்லை யென்பதையும், தன் தொண்டை திடீரென அடைத்து விட்டதையும் உணர்ந்த பெருவழுதி சட்டென்று நினைவிழந்து விட்டான்.எத்தனை நேரம் அவன் அப்படி நினைவிழந்து கிடந்தானோ அவனுக்கே புரியவில்லை. நினைவு வந்து கண்விழித்தபோது, தான் முதல் நாள் கண்டதெல்லாம் கனவா நனவா என்பதை உணர்ந்து கொள்ள கால்களை முடக்கி அவற்றை தனது கைகளால் தடவினான். அதில் நீர் ஏதும் இல்லாததையும், தனது கால்கள் ஏதோ மரக்கட்டையில் நீண்டிருப்பதையும் உணர்ந்து, முதுகை ஒருமுறை புரட்டி முதுகு மெத்தென்ற பஞ்சணையில் இருப்பதை அறிந்து சிறிது நேரம் மிரள மிரள விழித்தவன், பொழுது நன்றாக விடிந்து விட்டதையும், இரண்டு பறவைகள் தனக்கு அருகில் உட்கார்ந்திருப்பதையும், அந்த இரண்டும் கழுகுகள் என்பதையும்

புரிந்து கொண்டதால் மரக்கலத்திலிருந்து கரை அதிக தூரத்தி லில்லை என்பதைப் புரிந்து கொண்டான். தான் இறந்தால் தன்னைக் கொத்தி பட்சணம் செய்யவே அந்தக் கழுகுகள் உட்கார்ந்திருக்க வேண்டுமென்றும், அத்தகைய மரணக்கோலத்தில் தான் இருந்திருக்க வேண்டுமென்றும் ஊகித்தான் பெருவழுதி. எல்லாம் இருக்க தன்னை ஒழிக்கத் தீர்மானித்தவர்கள் தன்னை நல்ல பஞ்சனையில் படுக்க வைக்க வேண்டிய அவசியமென்ன வென்றும் எண்ணிப் பார்த்து, பஞ்சணை அளித்தவர்கள் காலுக்கு எதற்காக மரக்கட்டையை முட்டுக் கொடுத்தார்கள் என்பது புரியாததால் மேலும் வீணான சர்ச்சையில் ஈடுபட்டு மனத்தைக் குழப்பிக் கொள்ளாமல் அடுத்து நடப்பது என்ன என்பதை உணர பேசாமலே படுத்துக் கிடந்தான்.

அப்படிப் படுத்து அவன் மீண்டும் கண்ணை மூடிக் கொண்ட சமயத்தில் யாரோ நாலைந்து பேர் தன்னைச் சுற்றி நடமாடுவதைப் புரிந்து கொண்டதால், “இந்த மரக்கலத்தில்தான் யாருமே கிடையாதே. அப்படியிருக்க ஏது இத்தனை பேர் நடமாட்டம்? ஆட்கள் நடமாட்டந்தானா இல்லை எனது மனப்பிரமையா?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டும் விடை காணாததால், “சரி நடக்கிறது நடக்கட்டும்” என்று உதடுகளில் மெதுவாக முணுமுணுக்கவும் செய்தான். அப்பொழுது சுற்றிலும் நடமாடிய மனிதர்களில் ஒருவன் “கிழவன் சாகவில்லை ” என்று அறிவித்தான். |

“ஆம். அவன் உதடுகளும் அசைகின்றன’ என்று இன்னொருவன் சுட்டிக்காட்டினான்.

”எதற்கும் இவன் உயிருடனிருப்பதைத் தலைவிக்கு தெரியப்படுத்துவோம்” என்று முதலில் பேசியவன் கூறியதும் இருவரும் நடந்து செல்லும் காலரவம் தெளிவாக விழுந்தது பெருவழுதியின் செவிகளில்.

நேரம் ஒடிக்கொண்டிருந்தது. அந்த இருவரும் பேசிவிட்டும் போனதும் யாருமே வராதிருக்கவே மெள்ள தலையை இருபுறமும் அசைத்து நோக்கிய பெருவழுதி தனது காலடியில் மரக்கலத்தில் பாய்மரத்தின் தண்டு உராய்ந்திருப்பதையும், பாயும் புடைக். மரக்கலத்தை வேகத்துடன் இழுத்துச் செல்வதையும் உணர்ந்தால் பிரா மெள்ளச் சமாளித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்த சூழ்நிலையை நோக்கினான். மேல்திசையில் கடல் பார் கிடப்பதையும், கீழ்திசையில் பெரும் மலைத் தொன் தெரிந்ததையும் பார்த்து, கூடியவரை அந்த மர்ம மரக்கலம் கரையை அனைத்தே ஓடுவதையும் புரிந்து கொண்டதால் சிரி. ஆறுதலும் அடைந்தான். சேர நாட்டுக் கடற்கரை நெடுகிலும் பாதுகாப்பு இருந்ததாலும், வெளிநாடுகளிலிருந்து வரும் மரக்கலங்கள் தப்பித்தவறி துறைமுகம் இல்லாத பகுதிகளில் அகப்பட்டுக் கொள்வதைத் தவிர்க்க சேர நாட்டு மன்னர்கள் மேலைக் கடற்கரையில் அடுத்தடுத்து காவற்கூடங்களையும். மலையுச்சிகளில் பார்வைக் கூடங்களையும் அமைத்திருந்த தாலும், எப்படியும் யார் கண்ணிலாவது இந்த மரக்கலம் அகப்பட்டுக் கொள்ளுமென்று திட்டமாக நம்பிய பெருவழுதி, சேர நாட்டுக் காவலர் அந்த மரக்கலத்தை வளைத்து சோதனை செய்வார்களென்பதைத் தீர்மானமாக நம்பி பழைய மனத்திடத்தை மீண்டும் அடைந்தான்.

அந்தத் திடத்தின் காரணமாக மரக்கலம் அணைத்து ஓடும் கரை எதுவென்பதை நிர்ணயிக்க சற்று எழுந்தும் நின்றான். அப்பொழுது மெதுவாகக் காலைக் கதிரவனும் மேற்குத் தொடர் மலையின் உச்சிகளையும் தாவி தனது கிரணங்களை வீச முற்படவே பகல் நன்றாக ஏறிவிட்டதை உணர்ந்த பெருவழுதி இருமுறை தளத்தில் நடந்து மலையை உற்று நோக்கி சேரநாட்டு கடற்கரைக்கு தாங்கள் அருகாமையில் இருப்பதை உணர்ந்ததால் எப்படியும் ஏதாவது இரவில் சைகை செய்து சேரநாட்டுக் காவலரை மரக்கலத்துக்கு அழைக்கலாமென்று திட்டமும் இட்டான். அத்தகைய எண்ணங்களுடன் அந்த மரக்கலத்தை நன்றாக ஆராயவும். இளவழுதியுடன் எப்படியும் தனிமையில் உரையாடவும் இடம் காலம் அறிய மரக்கலத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான் .

முதல் நாளிரவு தான் பார்த்த மரக்கலத்துக்கு முற்றும் மாறாயிருந்தது அன்று காலையில் அவன் கண்ட மரக்கலம், யவனர் மரக்கலங்களைப் போல் இரண்டு தளங்களைக் கொண்டிருந்த அந்த மரக்கலத்தின் அடித்தளத்துக்குச் செல்ல தனிப்படிகள் இருந்ததையும், மேல் தளமும் உறுதியான கட்டைகளாலும் வைரம் பாய்ந்த மரப்பலகைகளாலும் இணைக்கப்பட்டு பெரும் போரையும் தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். இவை தவிர சேர நாட்டுக் கோட்டைப் பாதுகாப்புக்கு யவனர்கள் சித்தம் செய்த யந்திரங்களைப் போல் இரண்டு யந்திரங்களும் தளத்துப் பலகைகளுக்கு அருகில் இருபுறத்திலும் பொருத்தப்பட்டிருந்த தையும் கிழவன் கண்டான்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் எடைபோட்டுக் கொண்டும் நடந்த பெருவழுதி தளத்திலிருந்து அடித்தளத்துக்கு இறங்கிச் சென்றான். அடித்தளத்தில் துடுப்புகளைத் துழாவ பல அடிமைகள் இருந்ததையும், அவர்கள் தப்பாதிருக்க சங்கிலிகளால் அவர்கள் வரிசையாகப் பிணைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து, முந்திய இரவில் இவர்கள் எங்கு போனார்கள் என்று சிந்தித்தான். மெள்ள அவர்களுடன் பேச்சுக் கொடுக்க முற்பட்டு, “மாலுமிகளே! நீங்கள் ஏன் இப்படி அடிமைத்தொழில் செய்ய வேண்டும்?” என்று வினவினான்.

பதிலுக்கு அந்த மாலுமிகள் கொல்லென்று சிரித்தார்கள். அந்தச் சிரிப்பை அடுத்து அரசி பெருவழுதியைத் தள்ளிக் கொண்டு துடுப்பு துழாவும் மாலுமிகளிடம் சென்று இருபுறமும் தனது கைகளை நீட்டினாள். இருபுறத்திலுமிருந்த மாலுமிகள் அவன் கைகளில் தங்கள் உதடுகளைப் புதைத்து முத்தம் கொடுத்தார்கள் அப்படிக் கைகளை நீட்டிக் கொண்டே கடைசிவரை சென்ற அரசி திரும்பி அவர்கள் தலைகளில் தனது கைகளை வைத்து வாயில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே திரும்பினாள். திரும் வந்தபோது அவள் பெருவழுதியை ஏறெடுத்தும் பாராமல் கீழ்த்தளத்திலிருந்து மேல்தளத்துப் படிகளில் ஏறிச் சென்றுவிட்டாள்.

இந்த அதிசயத்தைக் கண்ட பெருவழுதி அவளைத்தானும் தொடர்ந்து படிகளில் ஏறிச் சென்றான். மேல் தளத்து மாலுமிகளும் அவளைக் கண்டதும் தலைவணங்கி அவள் கைகளில் உதடுகளைப் புதைத்தார்கள். இத்தனைக்கும் அவர்கள் யாரும் பெருவழுதியைப் பார்க்கவோ பேசவோ இல்லை பெருவழுதியென்ற ஒருவன் அங்கு நடமாடாததுபோலவே அனைவரும் நடந்து கொண்டதால், சிறிது சினத்தின் வசப்பட்டு “நான் ஒரு மனிதன் உங்களிடை உலாவுகிறேன்” என்ற இரைந்தான் முதியவனான பெருவழுதி.

அவனுக்கு யாருமே பதில் சொல்லாமல் அவனைப் பார்த்து மிகுந்த மேட்டிமையுடன் புன்முறுவல் செய்தார்கள். அவர்களில் தலைவனைப் போல் கானாப்பட்ட ஒருவன் மட்டும் பக்கப் பலகையில் சாய்ந்து நின்ற வண்ணம், “பெரியவரே உமக்கு என்ன வேண்டும்?’ என்று விசாரித்தான். அவன் தமிழ் பரம சுத்தமாயிருந்ததைக் கண்ட பெருவழுதி வியப்பிற்குள்ளாகி, “நீ தமிழனா?” என்று கேள்வியொன்றைத் தொடுத்தான்

“ஆம்” – எந்தவித உணர்ச்சியுமில்லாமல் பதில் வந்தது அந்த மனிதனிடமிருந்து

“மற்றவர்?’’

பாதிப்பேர் தமிழர், பாதிப்பேர் வெளிநாட்டார். ஆனால் அனைவருக்கும் தமிழ் தெரியும்.’’

“எதற்காகத் தமிழ் பயின்றீர்கள்?”

அரசி உத்தரவு”

“எந்த அரசி இப்பொழுது போனாளே ” என்று துவங்கிய சொற்களை முடிக்கவில்லை கிழவன், அந்த மனிதன் ஒரே பாய்ச்சலாக அவன் மீது பாய்ந்து கழுத்தை இறுகப் பிடித்தான் கிழவன் மூச்சுத் திணறினாலும் அத்துடன் கேட்டான். “நான் என்ன குற்றம் செய்தேன் நீ கழுத்தைப் பிடிக்க?” என்று.

”அரசியை அவள் என்று அவமரியாதையாகப் பேசினாய் உன்னை இப்பொழுதே கடலில் எறிந்து விடுகிறேன்’ என்று மேலும் கழுத்தை இறுக்கினான், கழுத்தைப் பிடித்தவன்.

ஆனால் பெருவழுதியின் வலிமை அவனுக்குப் புரியாததால் பெருவழுதி மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒருமுறை திமிறியதும் அந்த மனிதன் தளத்தில் சாய்ந்தாள். அடுத்துப் பெருவழுதி மீது ஒரே சமயத்தில் பலர் பாய்ந்து அவனைக் கீழே தள்ளினார்கள் ஒரு மாலுமி தனது நீண்ட கத்தியை எடுத்து பெருவழுதியின் தலைக்கு உடலிலிருந்து விடுதலையளிக்க ஓங்கினான் தனது ஆயுள் முடிந்துவிட்டதென்றே கருதினான் பெருவழுதி ஆனால் கத்தி கீழே இறங்கவில்லை. அவனைத் தள்ளிய மாலுமிகள் சட்டென்று விலகி நின்றார்கள் பெருவழுதி மெள்ளச் சமாளித்துக் கொண்டு தனது திடீர் விடுதலைக்குக் காரணத்தைத் தேட சுற்று முற்றும் பார்த்தான்.

தளத்தின் நடுப் பாய்மரத்தினருகே அரசி நின்றிருந்தாள், அவள் இடையை இடது கையால் அணைத்த வண்ணம் நின்றிருந்தான் இளவழுதி, அவன் கண்கள் சுற்றிலுமிருந்த மாலுமிகளைக் கடுமையாக நோக்கிவிட்டு பெருவழுதி மீது நிலைத்தன. “இவர்

என்ன குற்றம் செய்தார்?” என்ற கேள்வியொன்றைய சினத்துடன் வீசினான் இளவழுதி,

“அரசியை அவமதித்துப் பேசினார்” என்றார் தலைவனா காணப்பட்ட மாலுமி.

அதற்க்குமேல் அவன் விசாரிக்கும் முன்பு ”மகனே! இளவழுதி என்று கூவிக் கொண்டு பேரனை நெருங்க முயன்றார் பெருவழுதி.

தனது வலது கையை உயர்த்தி அவரை இருந்த இடத்திலேயே நிற்கும்படி சைகை செய்த இளவழுதி, ”பெரியவரே! நீர் யார், இங்கு எதற்காக வந்தீர்?” என்று வினவினான்.

Previous articleAlai Arasi Ch2 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch4 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here