Home Alai Arasi Alai Arasi Ch30 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch30 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

140
0
Alai Arasi Ch30 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch30 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch30 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 30 நற்செய்தி

Alai Arasi Ch30 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

வடகரை மாளிகையின் முகப்பு நல்ல சதுக்கமாகவும் நன்றாக செதுக்கப்பட்டு நிலம் கெட்டிப்பட்டும் இருந்தது. கடல் மணல் நிரம்பக் கொட்டப்பட்டும் மற்போருக்கு நல்ல வசதியாகவும் இருந்தது அந்த இடத்தில் பெரும் ராட்சன் போல இறங்கிய ஜமாலுதீனை, புரவி வாணிப கங்கானிகளும், மாளிகைக் காவலரும் கண்டு பிரமித்தனர்.

கடம்பர் சிலரும் கூட பிரமிப்புடன் பார்த்தனர். சிலர் படைத்தலைவனிடம் அனுதாபம் கொண்டனர். இவளிடம் படைத்தலைவர் சிக்கி மாள்வது திண்ணம் என்று உள்ளூர எண்ணி வருந்தினர். மற்றும் சிலர், நம்மிடமிருக்கும் ஒரே வீரனை இழக்க நேரிடுமே என்று அனுதாபம் கொண்டனர். மகாபாரதத்தைப் படித்தே கேட்டோ அறிந்தவர்கள் பீமன், கடோற்கஜன், ஜராஸ்ந்தன் உண்மையாக இருந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகவே வந்தவன் போல் அரபு புரவியிலிருந்து கீலே குதித்து தொடைகளையும் தட்டிக் கொண்டு அட்டகாசமாக காட்டிக் கொண்டான். மற்போரின் முடிவைப் பற்றிப் பலரும் பலவிதமாக போட்டுக் கொண்டிருக்கையில் மாளிகையின் வாயில் வழியாக இளவழுதி தனது மெல்லிய கைகளை ஆட்டிக் கொண்டு வெளியே வந்தான். அவனைப் பலரும் அனுதாபத்துடன் நோக்கினர், பலிக்குச் செல்லும் ஆட்டைக் காண்பவர் போல உப்பரிகையிலிருந்த மஸ்தானாவும் கண் கலங்கினாள். சிறிது தேம்பவும் செய்தாள். அத்தனையையும் கவனித்தபடி மிகுந்த அசட்டையுடன் அரங்கத்தில் புகுந்த இளவழுதியை அணுகி அரபு ராட்சதனான ஜமாலுதீன் தனது இரு பெரிய கைகளாலும் அவனை அணைத்து இறுக்கினான்.

ஏதோ பெரியக் கரடியின் பிடியிலகப்பட்டதை போல் எண்ணிய இளவழுதி தனது கைகளை முஷ்டியாகப் பிடித்து அவன் வயிற்றில் வேகமாகக் குத்துக்களை விட்டாள் மர்மஸ்தானங்களாகப் பார்த்து வயிற்றில் பலவீனமான இடத்தில் சரமாரியாக விட்ட குத்துக்கள் அந்த ராட்சதனையும் முகம் சுழிக்க வைத்தது. அப்பொழுது ஜமாலுதீன் சொன்னான் “பிழைத்துப்போ தமிழா! இத்துடன் உன்னை விட்டுவிடு என்றான் ஏளனக்குரலில்

‘’அஞ்சாதே அரபு வணிகா, அடுத்த குத்துக்களை சிறிது வலிக்காமல் கொடுக்கிறேன். மார்பை தடவி விடுகிறேன். பொட்டிலும் குத்தவில்லை” என்று சமாதானம் சொன்னான் படைத்தலைவன். ஆனால் அந்த சமாதானத்தை ஏற்காத ஜமாலுதீன் முன்னைவிட மும்முரமாகப் போரிடத் இளவழுதியின் காலொன்றை தனது புஜங்களுக்கிடையே மேலே தூக்க, இளவழுதி மல்லாந்து கீழே விழுந்தான் மன அதே விநாடி அவன் மீதுத் தாவி உட்கார்ந்தான் ஜமாலுதீன்.

அவன் சரீர பளுவையும் அவன் கைகள் கழுத்தை நெரிக்க முற்பட்டதையும் தாளாமல் இளவழுதியும் முகம் சுளித்தான் அந்த களிப்பில் வேதனை தெரிந்ததால் இளவழுதியின் முடிவுக்கு அது ஆரம்பமென்று பலரும் நினைத்தனர் மஸ்தானா உப்பரிகையிலிருந்து ஓடி வந்து இளவழுதியின் பக்கத்தில் உட்கார்ந்து, “படைத்தலைவரோ அஞ்ச வேண்டாம். உங்களுக்கு எந்த ஒரு தீங்கு நேர்ந்தாலும் இவரது பெரிய குதிரை வியாபாரத்தை ஒழித்து விடுகிறேன்” என்றாள்!

அதைக்கேட்ட ஜமாலுதீன் முகத்தில் அச்சம் தெரிந்தது. அவனுடைய பலவீனமான இடத்தைப் புரிந்து கொண்ட இளவழுதி, “இனி இவன் புரவிகள் தமிழ்நாட்டில் நுழையவிடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். இடியே தலையில் இறங்கியக வியாபாரந்தான் அவனை தந்தது. அதுவும் அவன் வாணிபம் தமிழ்நாட்டில்தான் அதிகம் என அறிஞர் வாஸ்ப் சொல்கிறார்,

நடுங்கிய ஜமாலுதீனின் அருகில் சென்ற இளவழுதி அவன் கையைப் பிடித்துக் ‘கரகர’வெனச் சுழற்றி எறியவே, அராபியன் வெகுவேகமாக மாளிகையின் முகப்பில் விழுந்து தலை மோதிக் கொள்ள, அவன் தலையிலிருந்து குருதி ஆறாகப் பெருகியது. அவன் கண்கள் பஞ்சடைந்தன. அவன் மூர்ச்சையடைந்தான்.

ஆனால் மறுநாள் ஏற்பட்ட நிகழ்ச்சி அன்றைய நிலைக்கு அடியோடு மாறியது.

மஸ்தானா-இளவழுதி திருமணம் நடப்பதற்குப் பெரும் தடையை ஏற்படுத்தினான் ஜமாலுதீன்.

மறுநாள் மணவறையில் முத்துப் பந்தலில் உட்கார்ந்திருந்த இளவழுதியின் முன்பு ஒரு பெரும் வாளின் நுனி நீண்டது. ‘’தமிழா! எழுந்துவிடு. இல்லையேல் மணவறை பிணவறையாகி விடும் என்ற அமங்கலச் சொற்களும் உதிர்ந்தன, மணவறையைப் பலர் சூழ்ந்து நின்றதையும் இளவழுதி கவனித்தான். அப்படிக் இந்த கூடியிருந்த வீரர்களில் பலர் கடம்பர் என்பதை அறிந்து, “நீங்களா! ஒருவனைக் கொல்ல இத்தனைப் பேர் வேண்டுமா?” என்று என்னத்துடன் வினவினான் இளவழுதி,

அடுத்தகணம் முத்துப் பந்தலுக்குள் மூன்று கடம்பர் நுழைந்து விட்டனர். வாட்கள் மூன்று இளவழுதியின் மார்பைத் தடவின. அடுத்து ஒரு அலறல் கேட்டது. மணவறையிலிருந்த அனைவரும் திகைத்தனர். மஸ்தானா மூர்ச்சையடைந்தாள். அடுத்து நிகழ்ந்தது ஒரு பிரளயம்,

ஜமாலுதீனுக்கு மாமிசபலத்துடன் சிறிது மூளையும் இருந்ததை இளவழுதி புரிந்து கொண்டான். மற்போர் நடந்த மாலையிலிருந்து

இரவு வரை ஜமாலுதீன் அடியோடு எங்கோ மறைந்து விட்டால் திரும்ப அவன் தோன்றியது மணவறையில்தான் .

மணவறை சொர்க்கலோகம் போல் சிங்காரிக்கப்பட்டிருந்தது மணவறை நுழைவாயிலில் புஷ்பச்சரங்கள் தொங்கின.

நான்கு பேர் படுக்கக் கூடிய பெரிய அம்சதூளிகா மஞ்சத்தை சுற்றிலும் பாண்டிநாட்டு முத்துச்சரங்கள் தொங்கின, பஞ்சனை மீது புஷ்பங்கள் ஏராளமாகத் தூவப்பட்டிருந்தன. அறையின் ஒரு மூலையிலிருந்த கணப்புச் சட்டியிலிருந்து சாம்பிராணி வாசனை எழுந்து அறையை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. திருமணத் தம்பதிகள் அருந்துவதற்காகப் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, போட்டுக் காய்ச்சப்பட்ட பசும்பால் ஒரு பெரும் சொம்பில் வைக்கப்பட்டிருந்தது. தவிர உள்ளிருக்கும் மஞ்சத்தில் ஏராளமான பலகாரங்களும், பழங்களும் வைக்கப்பட்டிருந்தன.

அந்த சமயத்தில் பத்து கடம்ப வீரர்களுடன் உள்ளே நுழைந்து ஜமாலுதீன், ‘உம் ஆகட்டும்’ என்று ஊக்குவிக்க மூன்று கடம்பர்கள் தங்கள் வாட்களை உருவி இளவழுதியின் மார்பில் நிறுத்தி “இளவழுதி! எழுந்து ஓடிவிடு! மணவறை பிணவறையாகிவிடும் என்று மிரட்டியதன்றி வாட்களை சிறிது ஊன்றவும் செய்தனர்.

ஆனால் இளவழுதி இவற்றை லட்சியம் செய்யாது ஒரு கடம்பன் மீது மோத அவன் அலறிக்கொண்டே மற்ற வீரர்கள் மீது விழுந்தான். அடுத்து அந்த மணவறைப் போர் அறையாயின் விநாடி நேரத்தில் பஞ்சணையிலிருந்து துள்ளியெழுந்த இளவழுதி தன் தலையணைக்குக் கீழிருந்தக் குறுவாளை எடுத்து எதிரிலிருந்து கடம்பன் ஒருவன் மீது எறிய, அது அவன் ஊட்டியில் பாயவே அவன் பயங்கரமாக அலறினான். அவன் முன்னாலிருந்த கடம்பன் சற்றுப் பின்னடைந்தான்.

இளவழுதி அவன் பின்னே பஞ்சணையிலிருந்துக் கீழே குதித்து கடம்ப வீரன் ஒருவன் கையிலிருந்த வாளைப் பிடுங்கிக் கொண்டு போருக்குச் சித்தமானான், அடுத்த விநாடி வாட்களுடன் வாட்கள்

மோதும் சத்தம் அந்த அறையெங்கும் ஒலித்தது. அந்த ஒலி கீழேயிருந்த மன்னர் காதிலும் விழவே தன் வீரர்களை ஏவி மேலே நடப்பதைப் பார்க்க அனுப்பினார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மஸ்தானா மூர்ச்சை தெளிந்து தாள்ளாடி எழுந்தாள். அவளைப் பார்த்த மன்னர் அனுதாபம் கொண்டு ‘’என்ன அலங்கோலம் இது?” என விசாரித்தார்.

“ஜமாலுதீன் எங்கிருந்தோ கடம்பர்களை அழைத்துக் கொண்டு வந்து மணவறையிலேயே படைத்தலைவரை ஒழித்துவிடப் பார்த்தான். ஆனால் அது அவரிடம் நடக்க வில்லை ” என்று சொல்லிக்கொண்டே மறுபடியும் மூர்ச்சையாகி விழப்போன வளைப் பின்னால் வந்த இளவழுதி அணைத்துத் தூக்கிக் கொண்டு மறுபடியும் மேலே அழைத்து சென்றார்.

அவர்களைப் பின்பற்றி ஜமாலுதீனும் சென்றான். அப்போது சேரமன்னர்,”ஓமாலுதீன்! உனக்கு இங்கு என்ன வேலை?” என்று எரிந்து விழுந்தார்.

ஜமாலுதீன், ”மன்னா இந்தக் கேள்வியே சரியில்லையே. மணவறையில் மணமகனுக்கு என்ன வேலையென்று கேட்டால் என்ன பதில் சொல்வது?” என வினவவும் செய்தான்.

இந்த சம்பவங்களால் நாணத்தினால் குன்றிப்போன மஸ்தானா மளமளவென்று மாடியறைக்குச் சென்று மணவறைக் கட்டிலில் படுத்துவிட்டாள். அவள் படுத்ததும் முதன் முதலாக உள்ளே நுழைந்தவன் ஜமாலுதீன்.

அவனைக் கண்டதும் “நீ எங்கு வந்தாய்?” என வினவினாள் மஸ்தானா.

ஒரு மணமகள் மணமகனைப் பார்த்துக் கேட்கும் கேள்வியா இது?’’ என்று கூறிக் கொண்டே அவளை மெல்ல அணுகி அவள் பக்கத்தில் ‘தொப்பென விழுந்தான். அவன் பளுவைத் தாங்க முடியாத கட்டில் கிறீச் கிறீச் என அலறியது. மெல்ல ஜமாலுதீன், தன் கையை மஸ்தானாவின் மேல் போட்டு அவனை அணைத்தான்.

மஸ்தானா அவன் கையைத் தூக்கி அப்புறம் தள்ளினாள்.

அப்போது உள்ளே நுழைந்த இளவழுதி, ஜமாலுதீன் ஒருபுறமாக ஒதுக்கிவிட்டு அவனிருந்த இடத்தில் தான் படுத்து கொண்டான். அவன் கைகள் மஸ்தானாவை அணைத்து கொண்டன,

ஜமாலுதீன் “இது தகுதியல்ல இளவழுதி.. என்று முறையிட்டான்.

‘’எது?’’

“என் மனைவியை நீ அணைப்பது”

‘’அவளைத்தான் மற்போரில் பணயம் வைத்து என்னிடம் தோற்றுவிட்டாயே. இனி அவள் எனக்குத்தான் சொந்த என உரிமை கொண்டாடினான் இளவழுதி,

அப்பொழுது, “மஸ்தானா! இவனை நீ ஏற்றுக் கொள்கிறாயா? என்று ஜமாலுதீன் வினவினான்,

“நீங்கள் தோற்றபிறகு வேறு என்ன செய்வது?” என அவன் கேட்டாள்

“மஸ்தானா! இது இத்துடன் நிற்காது. இவனை உன் தகப்பனா மருமகனாக ஒப்புக் கொள்ளவே மாட்டார். இவன் உன்னைக் கட்டினால் நீ தாங்கமாட்டாய், இவன் கரடி போன்றவன். இவன் தழுவல் கரடித் தழுவல் – என்னை இறுக்கியபோதே என் எலும்புகள் முறிந்துவிடும் போலிருந்தன” என்றான் ஜமாலுதீன்.

இதைக்கேட்டு நகைத்தாள் மஸ்தானா, ”ஜமாலுதீன்! அந்த மற்போருக்கும் காமப்போருக்கும் வேறுபாடுகள் உண்டு. தவி இவர் என்னை ஏற்கனவே அணைத்திருக்கிறார்” என்றாள் நகைப்பினூடே.

‘’எங்கு?’’

பஸ்ராவில், என் தந்தையின் முன்பாக அப்போது இவர் இறுக்கின இறுக்கில் என் மார்பே வெடித்துவிடும் போலிருந்தது. அதற்கு இவரே சிகிச்சையும் செய்தார்’ என்ற அவள் குரலில் பெரிதும் ஒலித்தது.

‘’என்ன சிகிச்சை ?” என உறுமினான் ஜமாலுதீன்.

கையால் மார்பை மெல்ல வருடினார். தனது உடலையும் வைத்து இதகமாகப் புரட்டினார். இன்னும் ஏதேதோ செய்தார் என்று அரைகுறையாக விஷயத்தைச் சொன்னாள். ஜமாலுதீன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “மஸ்தானா! உன் வாழ்வையும் இந்தத் தமிழன் வாழ்வையும் நீயே கெடுத்துக் கொண்டுவிட்டாய்” என்று சிறிய ஜமாலுதீன் “நாளை இந்தத் தமிழன் இருக்க மாட்டான்” என்றும் சொன்னான்.

‘’அபசகுனமாகப் பேசாதே!” என்று எரிச்சலுடன் பேசிய இளவழுதி, ஜமாலுதீன் கையைப் பிடித்துக் கட்டிலிலிருந்து கீழே மாடிப்படியில் தரதரவென இழுத்துக்கொண்டு ஓடி மாளிகையின் வாசலில் இருந்த சதுக்கத்தில் நிறுத்தி, “எங்கே உன் மற்போர் சாமர்த்தியத்தை மறுபடியும் பார்ப்போம் ஜமாலுதீன்?” என்றான் ஜமாலுதீன் தன் கைகளை உதறிக்கொண்டு அட்டகாசமாக நின்றான். உக்கிரமாக நடந்த சண்டையில் மறுபடியும் ஜமாலுதீன் தோல்வியுற்றான்.

இளவழுதி அவனைத் தன் தோளின் மீது போட்டுக் கொண்டு கடற்கரையை அவன் அணுகியபோது அதிர்ச்சியொன்று காத்திருந்தது. புதியதாக ஒரு மரக்கலம் வந்திருந்தது. அதில் மதகுரு நின்றிருந்தார். அவரைக் கண்டதும் இளவழும ஜமாலுதீனை கீழே இறக்கி விட்டான். மதகுருவைப் பார்த்ததும்

இருவரது சப்தநாடியும் ஒடுங்கிவிடவே அசைவற்று நின்றனர் மரக்கலத்தின் முகப்பில் நின்றபடியே மதகுரு கேட்டார், உங்கள் இருவரில் யார் என் மருமகப்பிள்ளை ? என் மகள் எங்கே? சர்வ சாதாரணமாகக் கேட்டார்.

“நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்?” என இளவழுதி வினவினான்.

”எனக்குத் தெரியாதது எதுவுமில்லை . வேண்டுமானால் உங்கள் மன்னரைக் கேளுங்கள்’ என்ற மதகுரு ‘ உங்கள் மன்னருக்கு நாளை ஒரு நற்செய்தி வரும்” என்று சொன்னார்.

இதைக்கேட்ட இளவழுதி மாளிகை நோக்கி ஓடினான், நடந்ததை மன்னரிடம் சொன்னான். மன்னர். செய்தியாயிருக்கும் என சிந்தித்தார்? மறுநாள் காலை வந்தது செய்தி. வடபுலத்தரசர் இருவர் சேரநாட்டு வடகோடி நிலங்களைக் கைப்பற்றி விட்டதாக ஒற்றர்கள் சொன்னார்கள். மன்னர் ஏதும் பேசவில்லை. இளவழுதியை நோக்கினார். அடுத்து இளவழுதி “மன்னவா! தாங்கள் அனுமதித்தால் நான் இன்றே நமது புரவிப் படைகளுடன் வடக்கே செல்கிறேன்” என்று வேண்டி நின்றாலன். மன்னர் பதிலேதும் கூறவில்லை .

இளவழுதி அந்த விநாடி முதல் மும்முரமாகப் போர் ஏற்பாடுகளில் இறங்கினான்.

Previous articleAlai Arasi Ch29 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch31 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here