Home Alai Arasi Alai Arasi Ch31 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch31 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

108
0
Alai Arasi Ch31 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch31 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch31 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 31 மாந்தை கோட்டை

Alai Arasi Ch31 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

குடக்கோ நெடுஞ்சேரலாதன் வந்த செய்தியைக் கேட்டதும் இளவழுதி குழம்பிய சித்தத்தால் ஏற்பட்ட கவலை பாய்ந்த முகத்துடன் மன்னனை உற்று நோக்கினான்.

மன்னர் சொன்னார் :

‘’இளவழுதி! வடபுலத்தரசர்கள் வழக்கம்போல் துணிவுடன் நமது எல்லையில் புகுந்துவிட்டார்கள். இனி நடக்கவேண்டியதைக் கவனி” என்றார்.

இளவழுதி, ”மன்னவா! நமது நாட்டிற்கு வடபுலத்திலிருந்து எப்போதும் எதிர்ப்பு வந்திருக்கிறது. மாற்றார் நமது நிலத்தை ஆட்கொள்வதும் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு போரிடுவதும் நமது மரபாகிவிட்டது. இதைப் பற்றித் தாங்கள் கவளைக் கொள்ள வேண்டாம். வடக்கத்தியானை நான் கவனித்துக் கொள்கிறேன். இப்பொழுதே “மாந்தைக்குப் புறப்படுகிறேன்” என்றான்.

அரசர் கேட்டார்.

‘பழயங்காடி’ என்னும் புகை வண்டி நிலையம் இதன் ஒரு பகுதி. அகநானூறு பாடல் 127-ல் சங்க கால கவி மாமூகனார் மாந்தை நகரின் சிறப்புப் பற்றி புகழ்ந்துரைக்கிறார். அது போலவே நற்றிணை (35-395), பதிற்றுப்பத்து (15-வது) பாடல்களில் சங்க காலக் கவிஞர்களில் ஒருவரான கண்ணனார் மாந்தை நகரின் எழிலையும், அதன் நகர அமைப்பு, கோட்டை கொத்தளங்கள், அகழி போன்றவற்றையும் விரிவாக எடுத்துரைக்கிறார்.

“நமது தலைநகருக்கா?”

“ஆம், மன்னவா… அங்குதான் இப்பொழுது நாம் வந்திருக்கும் நானூறு அரபுக் குதிரைகளையும் நிறுத்தியுள்ளேம். அவற்றை நமது புரவிகளுடன் சேர்த்து அழைத்து பழக்கி அணிவகுத்துப் போரிட ஏற்பாடு செய்ய வேண்டும் மாந்தையிலிருந்து இன்னும் இரண்டே நாளில் நான் வடபுலத்துக்குச் செல்கிறேன். தங்களுக்கு அவகாசம் இருந்தால் தாங்களும் கலந்து கொள்ளலாம்” என்றான்.

“கண்டிப்பாய் அவகாசமிருக்கும், இலவழுதி வடக்கத்தியாருக்கு தலைவணங்கவா குடக்கோ இருக்கிறான் அவர்களைப் புறமுதுகு கண்டு பின்பு தலைநகரம் மீளுகிறேன்’’ என்றார் மன்னர்,

மீண்டும் மன்னர் சொன்னார் : “உனக்குத் தேவையானால் ஓர் உபதளபதியை நியமித்துக் கொள்” என்றார்.

”மன்னவா! ஏற்கனவே நியமித்துக் கொண்டு விட்டேன் இளவழுதி சொன்னான்.

“என்னைத்தானே! என்று கேட்டுக் கொண்டு ஜமாலுதீன் அங்கு வந்தான்.

“சே சே! நீயா!” என்று இழிவாகப் பேசினான் இளவழுதி.

“வேறு யார்?” என்று ஜமாலுதீன் கேட்டான்.

“மஸ்தானா!” என்று இளவழுதி பதில் சொன்னான்.

“பெண்ணா ?” என்று மன்னர் சந்தேகத்துடன் கேட்டார்.

அந்தச் சமயத்தில் மாளிகையிலிருந்து வெளிவந்த மஸ்தானாவை நோக்கி, “இவளைப் பார்த்தால் பெண்ணாகவாக் தெரிகிறது? பத்து ஆண்பிள்ளைகளுக்குச் சமானம், பத்து ஆண்பிள்ளைகளை நிர்வகிக்க வல்லவள் சற்று முன்பு நாமே பார்த்தோமே ஜமாலுதீனை எப்படித் தூக்கியெறிந்தாள்?’’ என்ற இளவழுதி,”மஸ்தானா! நீ போய் ஒரு புரவியை எடுத்து கொண்டு வா, நாம் மாந்தைக்குப்போகிறோம்” என்றான்.

அவளும் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு பெரிய புரவி மீது ஏறிக் கொண்டு வந்தாள். இளவழுதியும் இன்னொரு புரவியில் ஏறிக்கொள்ள இருவரும் மேல்திசையை நோக்கிப் புரவியை சென்றார்கள். அவர்கள் போவதை மன்னர் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் பார்த்துக் கொண்டு நின்றார்.

மறுநாள் நெடுஞ்சேரலாதன் பெரும்படை இளவழுதியின் தலைமையில் மாந்தையிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றது. இளவழுதியின் பக்கத்தில் மஸ்தானா மிக கம்பீரமாக போர் உடையில் தனது புரவியில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்தாள். அவள் கையிலிருந்த நீண்ட வாளானது அடிக்கடி தலைக்குமேல் எழுந்து ஆடவே, அதற்குத் தகுந்தபடி படைகள் அணிவகுத்துப் பிரியலாயின.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவைகள் முக்கோண வடிவத்திற்கு வந்து ஒருவித அமைப்பிற்குள் வரவே, அதைப் பார்த்த இளவழுதி மஸ்தானாவை நோக்கி, ”உபதளபதி! நாம் இனி வடக்கத்தியரை ஜெய்த்துவிடுவோம்” என்று திட்டமாகக் கூறினான்,

அவள் மகிழ்ச்சிப் புன்முறுவல் கொண்டாள். அன்றிரவு படைகள் தளமடித்துத் தங்கியபோது படைத்தலைவன் உபதளபதியோடு தனது கூடாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். மஸ்தானா அவன் பிடியிலிருந்து நழுவ மயன்றாள். முடியவில்லை. ஏதேச்சையாகக் கூடாரத்திற்குள் நுழைந்த மன்னர், “படைத்தலைவரே! நல்ல உபதளபதியைச் சேர்த்துக் கொண்டீர். ஜாக்கிரதையாகக் காப்பாற்றும் இல்லாவிடில் மதகுரு சீற்றத்துக்கு ஆளாவோம். நாளைப் போர் மூளும் போது இவள் பேரில் ஒரு கண்ணை வைத்திரும்” என்றார்.

இளவழுதி நகைத்து, “இவள் பேரில் நான் கண் வைக்க நேரம் எது?” என்று கேட்டான்,

அப்போது மன்னர் நகைத்தார்.

மறுநாள் போர் துவங்கியபோது மற்றும் பலர் நகைத்தனர் படைகளை அணிவகுத்த பின்பும் இளவழுதி மஸ்தானாவை சுற்றிக் கொண்டிருந்தான்.

வடபுலத்துத் தளபதி “இவனைப் பிடிப்பதைவிட பெண்ணைப் பிடிப்பது நல்லது” என்று சொன்னான்.

வீரர்களும் ஆமோதிப்பதற்கு அறிகுறியாக தலைவன் அசைத்தார்கள்,

மறுநாள் பிற்பகல் மஸ்தானாவைக் காணவில்லை.

இளவழுதி குணத்தைப் பற்றி ஒன்று சொல்வதுண்டு. அவன் எதையாவது செய்வது என்று தீர்மானித்து விட்டால் செய்துதான் முடிப்பான் என்று அவனுக்கு ஒரு பிரக்யாதி இருந்தது. ஆகவே அவன் அன்றே மாந்தை நகரை நோக்கிப் புறப்பட்டுவிட்டன். மாந்தை என்பது தற்சமயம் கண்ணனூருக்கு அருகில் பதிமூன்று மைல் தூரத்தில் ‘மாதை’ என்று ஒரு சிறு கிராமமாக இருந்து வருகிறது என்று தமிழ்ப் பேராசிரியரும் சரித்திர ஆராய்ச்சி யாளருமான ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையவர்கள்”பண்டை நாளில் சேரமன்னர்கள்’ என்ற நூன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மாதை ஒரு காலத்தில் பெரிய கோட்டை கொத்தளங்களுடன் பாதுகாப்பு அரணாக இருந்ததாக ஒரு மலையாளப்பாட்டு இருப்பதாகவும் அவர் தமது கூற்றுக்கு சான்று கூறுகிறார்.

நல்ல வேளையாக இளவழுதி தோன்றிய காலத்தில் அந்த பழையபடியே பெரும் கோட்டையாக இருந்தது. அந்த கோட்டையின் முன்பு நின்று அதை ஏற இறங்கப் பார்த்தான் நல்ல பலமான‘ கோட்டை என்றும் சொல்லிக் கொண்டான் பின்னால் திரும்பி, “உபதளபதி! இந்தக் கோட்டையைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான் ஏற்கனவே இருந்த உபதளபதியிடம்,

உபதளபதி தங்கு தடையில்லாமல் பதில் சொன்னான் ‘’நமது படையைக் கொண்டு இதைப் பிடிக்க முடியாது” என்று.

‘’ஏன்?’’

உபதளபதி, “படைத்தலைவரே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. இந்தக் கோட்டைக்கு ஆறுவாயில்கள் இருக்கின்றன. அரேபியாவில் வாங்கி வந்த நானூறு புரவிகளை நான்கு பிரிவுகளாய்ப் பிரித்து விட்டோம். இந்த நாங்கில் எந்த இரண்டு பிரிவுகள் இரண்டு பகுதிகளைத் தாக்கினாலும், மற்ற இரண்டு வாயில்கள் வழியாக எதிரி வேளியே வந்து நம்மைச் குழ்ந்து கொள்வான். விளைவு தங்களுக்குப் புரியாததல்ல” என்றான்,

இளவழுதி உபதளபதியை முதுகில் தட்டிக் கொடுக்க உபதளபதி! நீ தளபதி பதவிக்குத் தகுதியாகிவிட்டாய், நன்றாய் சிந்த்திக்கிறாய். சரி, இதற்குப் பதில் சொல். எதிரி நீ சொன்னபடி நம்மைச் சூழ்ந்து கொண்டால் நாம் செய்ய வேண்டியது என்ன?’’ என்று வினவினான்.

படைத்தலைவரே! எதிரி இரண்டு வாயில்கள் வழியே வெளியே வந்தால் அவனை அங்கேயே மறித்து அழித்துவிட வேண்டும். பின்னால் வந்து அவன் நம்மைச் சூழ இடம் கொடுக்கக் கூடாது. அப்படியே அவன் முயன்றாலும் நமது பிரிவுகளில் இரண்டை அவன்மீது ஏவி அழித்துவிடலாம்!” என்றான் உபதளபதி,

“நன்று சொன்னாய் உபதளபதி. ஆனால் நாம் அவனை அழிக்கப் போகும் போது அவன் கையைக் கட்டிக் கொண்டு சும்மாவா உட்கார்ந்திருப்பான்? நம்மை எதிர்க்க மாட்டானா?’’ என்று இளவழுதி வினவினான்.

“படைத்தலைவரே! அவன் என்ன செய்தாலும் அவன் அடித்தால் பிரயோஜனம் இல்லை ” என்று சொல்லி படைத்தலைவன் அருகில் வந்து அவன் காதில் ஏதோ முணுமுணுத்தான்.

அதைக்கேட்ட இளவழுதியின் முகத்தில் விவரிக்க வொண்ணாத வியப்பு விரிந்தது.

“அப்படியா? எப்போது அனுப்பினாய் செய்தியை பூழி நாட்டிற்கு?”

“இங்கு வந்த அன்றே அனுப்பிவிட்டேன். எந்த நிமிஷத்திலும் பூழி நாட்டு அதிபதியை எதிர்பார்க்கலாம். அவன் பெரும் யானைப்படையும் கூட வரும். ஆகையால் எதிரி வெளியே வந்ததும் யானைப்படை அவர்களைத் துவம்சம் செய்துவிடும்,’’

இதைக்கேட்ட இளவழுதி, உபதளபதியின் முன்யோசனையை வியந்து மகிழ்ச்சிப் புன்முறுவல் செய்தான்.

“உபதளபதி! அடுத்த பெரும் போர் ஏற்படுமுன் நாமும் ஒரு யானைப்படையைச் சேர்த்து விடுவோம்” என்று கூறிய இளவழுதி, “நால்வகைப் படையில் நம்மிடம் இப்போது இரண்டு தானே இருக்கிறது!” என்று வருத்தத்துடனும் சொன்னான்.

இதைக் கேட்ட உபதளபதி, ”தவறு தளபதியாரே! தாங்கள் ஒருவர் இரண்டு படைகளுக்குச் சமானமாயிற்றே! பெரும் போர்கள் தளபதிகளின் சாமர்த்தியத்தாலும் தந்திரத்தாலும் ஜெயிக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, படை எண்ணிக்கையால் ஜெயிக்கப்படவில்லை என்பது தாங்கள் அறியாததல்ல’ என்று பணிவுடன் கூறுவது போல் பாராட்டினான்.

Previous articleAlai Arasi Ch30 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch32 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here