Home Alai Arasi Alai Arasi Ch32 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch32 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

102
0
Alai Arasi Ch32 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch32 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch32 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 32 குட்டுவனுடன் போர்!

Alai Arasi Ch32 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

இளவழுதி அந்தப் பாராட்டுதலை ஏற்றுக் கொண்டு, “நன்றி உபதளபதிகல் உன்னைப் போல் சிந்திக்கக்கூடிய நான்கு உபதளபதிகள் எனக்கு இருந்தால் பெரும் படைத் தேவையில்லை. சிறுபடை போதும்” என்று பதிலுக்குப் பாராட்டினான்,

அப்போது தெற்குத்திக்கிலிருந்து பேரரவம் கேட்டது. யானைகளின் பிளிறல்களும் மரக்கிளைகள் ஒடியும் சத்தமும் கேட்டதும், மகிழ்ச்சி கொண்டான் இளவழுதி,

அதற்குள் வரவேண்டிய எதிரிப்படை கோட்டையிலிருந்து வெளிவரவில்லை . அதைக் கவனித்த தளபதியும் உபதளபதியும் ஒருவரைப் பார்த்து ஒருவர் அர்த்தமுள்ள புன்முறுவலை வெளியிட்டுக் கொண்டார்கள். அந்தச் சமயம் கோட்டைக்குள் பேரிரைச்சல் கேட்டது. கோட்டையின் பின் கதவு பெரும் சப்த்ததுடன் திறக்கப்பட்டு பெரும் புரவிப் படையொன்று வாயு வேகத்தில் வெளி வந்தது. கொம்புகளும் சங்குகளும் ஒரே சமயத்தில் பலமாக முழங்கின. நாலைந்து முரசுகளும் கடுமையாக சப்தித்தன. அப்போது கோட்டை மதிலின்மேல் தோன்றிய ஒரு பெரிய வீரன், “இளவழுதி! இளவழுதி!” என்று சப்தமிட்டான்.

இளவழுதி நெருங்கிச் சென்றான். அவன் நெருங்கியதும் மதிலில் இருந்தவன் தனது வில்லில் ஒரு கணையைப் பூட்டி நாணை வலுவாக இழுத்தான். இளவழுதியின் மார்புக்குக் குறியும் பார்த்தான். இளவழுதி மிக அலட்சியமாகத் தனது அங்கியைப் பிரித்து மார்புப் பகுதியைக் காட்டிக் கொண்டு நின்றான். ஆனால் அவன் மார்பில் அம்பு பாயவில்லை . அதற்குப் பதில் மதில்மேல் இருந்தவன் இருமுறை தள்ளாடி பின்னால் கோட்டைக்குள் விழுந்தான். இளவழுதியின் பக்கத்திலிருந்த உபதளபதி தனது வில்லையும் அம்பறாத் தூணியையும் அடுத்திருந்த வீரனிடம் கொடுத்து, “இதை என் கூடாரத்தில் வை!” என்று உத்தரவிட்டான்.

இளவழுதி அவனைப் பார்த்தான். திடீரென அவனைத் தழுவிக் கொண்டான்.

“உபதளபதி! எதிர்பாராத சமயத்தில் அவன் மீது அம்பைப் போட்டுவிட்டாய். இது தர்மமா?” என்று வினவினான்.

“தாங்கள் எதிர்பாராத சமயத்தில் தங்கள் மீது அவன் அம்பு எய்ய முயலவில்லையா? அது எந்த தர்மத்தில் சேரும்?’’ என்று பதில் கேள்வியை வீசினான். மேலும் கேட்டான், ”தளபதியைக் காப்பது உபதளபதியின் கடமையல்லவா?” என்று.

இரவு நெருங்கியது. இளவழுதியும் மஸ்தானாவும் இளவழுதியின் மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள். பூமி நாட்டான் குட்டுவனால் மஸ்தானா கடத்தப்படுவாள் என்று நினைத்தான் இளவழுதி,

பஞ்சணைக்குச் சென்றதும் ஒருவர் அருகில் ஒருவர் படுத்துக் கொண்டார்கள். அப்போது இருவரிடையேயும் மவுனமே ஆட்சி செலுத்தியது. இரவும் ஓடிக் கொண்டிருந்தது. வேறு எந்தவிதமான சில்மிஷமும் இல்லாத நிலையில் அவர்கள் நித்திராதேவியின் உத்தரவுக்கு ஆட்படுகிற நேரம், யாரோ சாளரத்தின் வழியாக ஏறி உள்ளே குதித்தார்கள்,

அதிலிருந்த ஒருவனை அடையாளம் கண்டு கொண்ட இளவழுதி, “குட்டுவா, பூழி நாட்டு வீரம் பெண்களைத் தூக்கிச் செல்வதில்தான் இருக்கிறதா?” என ஏளனம் தொனித்த குரலில் கேட்டான்.

குட்டுவன் சற்று சிந்தித்தான். “இங்கே வீரர்களிடமும் செல்லும்” என்று கூறி, “வாளை எடுத்தக் கொள்ளும்” என்றான்.

அந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட சேர படைத்தலைவன் தனது கச்சையில் வரிசையாகச் சொருகியிருந்த ஐந்தாறு குறுவாள்களை ஒவ்வொன்றாக எடுத்து எங்கோ குறிபார்த்து வீசினான். அடுத்து

நகர்ந்து கொண்டு ஊளை போலக் கின் அடித்தன. அப்பொ தொங்கியதைப் பார் வெட்டி, “வா மஸ்து அவள் கையைப் பிடி ஏக காலத்தில் குட்டு

நாலைந்து யானைகள் பெரிதாக அலறிக் கொண்டு வாயில் வழியாக ஓடின. ஒவ்வொன்றின் முதுகிலும் நாலைந்து சர்ப்பங்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. யானைகளின் பிளிறல் நரிகளின் ஊளை போலக் கிளம்பி அந்தக் காட்டுப் பகுதியை பயங்கரமாக அப்பொழுது ஒரு சர்ப்பம் குட்டுவன் தலைக்கு நேரே தொங்கியதைப் பார்த்த இளவழுதி அதையும் தன் வாளால் வெட்டி மஸ்தானா! இவரை நாளைக்கு சந்திப்போம்” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

ஏக காலத்தில் குட்டுவனும் வெளியேற, இளவழுதி அங்கிருந்து நேராக மன்னர் மாளிகைக்கு வந்தான்,

அந்த விடியற்காலை நேரத்திலும் அங்கு வாயிலுக்கு அப்பால் சிறிது தூரத்தில் ஒரு பெரிய புரவியின் மீது ஆஜானுபாகுவாக ஓர் வீரன் உடல் முழுவதும் இரும்புக் கவசம் அணிந்து தனது பெரிய வாளை உருவி உயரப்பிடித்துக் கொண்டு, அமர்ந்திருந்ததைக் கண்ட இளவழுதி ‘இவர் எங்கே வந்தார்?’ என்று தனக்குள் வினவிக் கொண்டான்.

அந்த மனிதனும் புரவியை நடத்திக் கொண்டு உள்ளே வந்து, புரவியிலிருந்து கீழே குதித்து, “படைத்தலைவரே! மற்ற சேர மன்னர்கள் வரவேற்கும் முறை இதுதானா? உங்கள் மன்னர் ‘அதிராஜன்’ ஆகிவிட்டதால் ஏற்பட்ட செருக்கா இது?” என்று இரைந்து சீற்றம் ஒலித்த குரலில் வினவினான்.

“இங்கு செருக்கு ஏதுமில்லை. இருந்தால் அதிராஜனாகிய தங்களிடம் தான் இருக்க வேண்டும்” என்று அவன் கழுத்தில் அணிந்திருந்த ஏழு கிரீடங்கள் கொண்ட மாலையைச் சுட்டிக் காட்டினான்.

அப்பொழுது முரசுகள் ஒலிக்க உள்ளிருந்து வந்த நெடுஞ்சேரலாதன், வந்திருந்த மன்னனை நோக்கி, “யார்… தகடூர் எறிந்த பெருமகனா?” என்று விசாரித்தான்.

ஆம் மன்னவா! தாங்களும் சீக்கிரம் இந்த மாலையைச் சூடலாம். அதற்குரிய வழியும் செய்து வருகிறீர்கள்” என்று குற்றம் சாட்டினான்.

நெடுஞ்சேரலாதன் ஏதும் புரியாமல் படைத்தலைவனை நோக்கினான்.

அப்பொழுது குட்டுவன் சொன்னான். “மகாராஜா ஏற்கனவே இரண்டு வடபுலத்து அரசரை அழிக்க படைகளை நிறுவி விட்டீர்கள். நான் ஒருவன் உங்கள் தாயத்தான். என்னையும் சேர்த்து மூன்று அரசர்களாகிவிட்டோம். இந்த பெருஞ்சேரல் இரும்பொறை தனியாக சிக்கிக் கொண்டிருக்கிறார். இவரையும் அழித்துவிட்டால் உங்களுக்கு கழுத்தில் நான்கு கிரீடங்கள் ஏற்படுகின்றன. இன்னும் நான்கு கண்டுபிடிப்பது பிரமாதம் அல்ல’’ என்றான்,

நெடுஞ்சேரலாதன் குட்டுவன் சொன்னதை ரசித்ததாகத் தெரியவில்லை. “உன்னை அழிக்கப் போவதாக யார் சொன்னது?”

குட்டுவன் இளவழுதியை நோக்கினான். ”உங்கள் படைத் தலைவர் நேற்றுதான் குறுவாள்களை எறிந்து என் யானை படையில் கால்வாசிப் படையைத் தகர்த்து விட்டார்.”

“ஒரு மன்னன் படையின் ஒரு பகுதியை இன்னொரு மன்னனின் படைத்தலைவன் அழித்துவிட்டால் அவன் செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்டான் குட்டுவன்.

நெடுஞ்சேரலாதன் புருவங்கள் சற்றே மேலெழுந்தன.

“சரியான க்ஷத்திரியனாயிருந்தால் போர்க்கொடி உயர்த்த வேண்டியதுதான்” என்று சொன்னார்.

“சரி மன்னவா! நான் போருக்குத் தயார்! எங்கு சந்திக்கலாம்?” என்று குட்டுவன் மறுபடியும் வினவினான்.

அதை எனது படைத்தலைவருடன் விவாதித்து முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று மன்னவன் கூற, இளவழுதி குட்டுவன் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்

அங்கு சொன்னான் : ”போர் செய்வது என்றால் இடத்துக்கா பஞ்சம் தங்கள் பாம்புப் புதர்க் கோட்டைக்கு எதிரிலேயே வைத்துக் கொள்ளலாம். நாளையே நான் தங்களைச் சந்திக்கிறேன்” என்றான் இளவழுதி.

இளவழுதி பின்னாலிருந்தே கூறினான் “நாளைக் காலை சூரியன் உதித்த இரண்டு நாழிகைகளுக்குப் பிறகு என் புரவிப்படை அந்தப் பாம்புப் புதருக்கு அருகில் சித்தமாயிருக்கும்” என்றான்.

‘’எனது யானைப்படையும் தங்களை வரவேற்கக் காத்திருக்கும்” என்றான் குட்டுவன்.

காலை வேளையும் துரிதமாக அகன்றது. நெடுஞ்சேரலாதன் படைத்தலைவனை நோக்கி, “போர் விஷயத்தை இவ்வளவு நீக்கிரம் முடிவு செய்து விட்டாயே, நாளைக் காலைக்குள் படைகளை சித்தம் செய்ய முடியுமா?” என்று வினவினார்.

இளவழுதி சற்றே சிந்தனையில் இறங்கிவிட்டு, “மன்னவா! உங்கள் படைத்தலைவன் முடியாததைப் பற்றி வீராப்பு பேசுவதில்லையென்பதை தாங்கள் அறிய மாட்டீர்களா?” என்று கேட்டான்

குட்டுவன் தன் அரண்மனைக்குப் பக்கத்தில் பாம்புப் புற்றுகளை வளர்த்து வருவதால் அந்தப் பகுதி அப்பெயர் பெற்றது.

பிறகு, ”மஸ்தானா வா, நாளைப் போரைப் பற்றி விவாதிப்போம்” என்று அவளை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த படிகளில் ஏறி மேலே சென்றான்.

பள்ளியறை வாசல் அவர்களுக்காகத் திறந்திருந்தது. இன திரும்பி மாடிப்படிக்கருகில் சென்று,

“மன்னவா! நமது வில், அம்பு, இலச்சினைக் கொடி நாளைக் காலையில் பாம்புப் புதருக்கு எதிரில் உயர்த்தப்படும் தாங்கள் அவசியம் வர வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டு தலையையும் தாழ்த்தினான் வணக்கத்திற்கு அறிகுறியாய்

மன்னனிடமிருந்து பதிலேதும் வரவில்லை . ஆனால் அஹமத் வெகு வேகமாகப் படிகளில் ஏறி வந்து கொண்டிரு அவனை எதிர்கொண்ட இளவழுதி, ”வாருங்கள்! நீங்களும், நாளைப் போரைப் பற்றிப் பேசுவோம்” என்று அவனையும் மந்திராலோசனைக்கழைத்தான்.

அஹமத் பதிலுக்கு நகைத்தான் : “படைத்தலைவரே! பேச்சினால், போரை ஜெயிக்க முடியாது” என்றான் இளக்காரமான குரலில்

“ஆனால் சரியான திட்டத்தில் ஜெயிக்கலாம், திட்டமிட பேச வேண்டும்” என்ற இளவழுதி தரையில் உட்கார்ந்து, ”அஹமத் நீயும் உட்கார். மஸ்தானா நீயும் வா, வந்து கவனி” என்று கூறி தரையில் பல கோடுகளை இழுத்தான், கையிலிருந்த சுண்ணாம்புக் கட்டியால்,

“இதுதான் அந்தப் புதர்” என்று ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி “இதன் எதிரில் உள்ள பெரிய சதுக்கத்தில் நமது புரவிப்படை நிறுத்தப்படும். குட்டுவன் யானைப் படை வர நேர்வழி ஒன்றுதான் இருக்கிறது. ஆனால் அவன் படைகளை மூன்றாகப் பிரித்து பக்கவாட்டிலும் வரலாம். அப்படி வந்தால் அவனை நமது வில்லவர் கவனித்துக் கொள்வார்கள். இரண்டு பக்கங்களிலும் ஏறிவரும் அவனது யானைப்படை மீது வில்லவர் அம்பு மாரி பொழிந்தால் யானைகள் கட்டுக்கடங்காது தறிகெட்டு நாலாப் பக்கங்களிலும் ஓடும் அவனைத் தொடருவேன், யானைகளுக்கு கடல் ஒன்றுதான் வழி, ஆகவே அதற்குள் நமது புரவிகள் வேகமாகச் சென்று அவனை மறித்து இரண்டு வரிசைகளாக அவனது அணிவகுப்பைக் குலைத்துவிடும். மற்றொரு பகுதி மஸ்தானாவின் தலைமையில் மலைச்சிரிவில் வந்து யானைப் படையைப் பின்புறமாக வளைத்துக் கொள்ளும். நமது இரண்டு படைகளுக்கும் நடுவில் எதிரியின் யானைப்படை நொறுக்கப்படும். அப்பொழுது நமது ஜெயக்கொடியை உயர்த்தலாம். மன்னரும் அங்கிருப்பார். மற்ற சம்பிரதாயப்படி நடக்கும்” என்று விவரித்தான் இளவழுதி.

அப்போது அஹமத். “நல்லது. என்னை விலக்கியே விட்டிர்களே” என்று குறைபட்டுக் கொண்டான்.

“தவறு அஹமத்! உங்களை விலக்கி இந்தப் போர் உங்கள் கடமைதான் முக்கியம்” என்று சாமாதானம் சொன்னான்,

அது என்ன கடமையோ?” என்று அஹமத் வினவினான்.

இப்பொழுது அரேபியாவிலிருந்து வந்திருக்கும் புரவிககெளெல்லாம் உன்னால் பயிற்சியளிக்கப்பட்டவை. அவற்றை நீதான் அணிவகுக்க வேண்டும். அதற்கு என்னென்ன சைகைகளோ, எழுப்ப வேண்டிய போர் ஒலிகள் என்னென்னவோ அவற்றையெல்லாம் நீதான் தீர்மானிக்க வேண்டும். பரவிகளையும், சாரதிகளையும் நடுநிசிக்கு இங்கு அனுப்பிவிடுகிறேன். அவற்றை இரண்டு அணியாகப் பிரித்து அந்தப் பாம்புப் புதருக்கு எதிரிலும், பின்னாலும் சரிபாதியாக நிறுத்தி வையுங்கள். நான் விடியுமுன்பே அங்கு வந்து விடுகிறேன். எனக்கு முன்பே உனக்கு உதவ உதவி தளபதி வருவார்” என்றான்.

அத்துடன் மந்திராலோசனை கலைந்தது.

Previous articleAlai Arasi Ch31 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch33 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here