Home Alai Arasi Alai Arasi Ch33 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch33 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

55
0
Alai Arasi Ch33 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch33 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch33 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 33 பட்டத்து யானை மீது மஸ்தானா!

Alai Arasi Ch33 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

இளவழுதி சொன்னபடி சரியாக நடுநிசிக் புரவிகள் பெருங்கூட்டமாகப் புதருக்கு எதிரில் வந்து நிரம்பின. புரவிக்களுக்கு முன்பாக வந்த உதவித் தளபதி புதருக்கு நெருப்பு வைத்தான்.

சற்று நேரத்தில் அங்கு தோன்றிய இளவழுதி தனது புரவியிலிருந்து கீழே குதித்து, வேறு பாதை வழியாக புதரைத் தாண்டி இன்னொரு பக்கம் சென்று சங்கு ஒன்றை எடுத்து பலமாக ஊதினான்.

புரவிகள் பல நாலாபக்கங்களிலும் கூட்டம் கூட்டமாக ஓடத் துவங்கின. கடற்கரையும் புதருக்கு எதிரிலிருந்த மலைச்சதுக்கமும் புரவிகளால் நிரம்பி வழிந்தன. அப்போது எங்கிருந்தோ பெரிய யானைப்படை ஒன்று வரும் சத்தம் கேட்டது. குட்டுவன் தனது யானைப்படைத் தொடர ஒரு பெரும் யானை மீது வந்து கொண்டிருந்தான். அங்கு யானையின் மத்தகத்தில் உட்கார்ந்திருந்த மஸ்தானாவின் இரு கால்களும் யானையின் முகத்தில் தொங்கி ஏதோ மாணிக்க அலங்காரப் பட்டைகள் இரண்டு தொங்குவது போன்ற பிரமையை அளித்தது.

திடீரென்று குட்டுவன் தனது சங்கை எடுத்த முழங்கினாலன். கடலை நோக்கி அவனது யானைப்படை நகர்ந்தது. அதன் முதல் வரிசையில் குட்டுவன் சென்றான். கடல் அலைகளை அடைந்ததும் யானைப்படை அப்படியே நின்றது. அதன் எதிரே சுவர்போல் அராபியப் புரவிப்படை மறித்து நின்றது. அடுத்து சிலவிநாடிகளில் இன்னொரு புரவிப்படை வெகுவேகமாக மலைச்சரிவில் இறங்கி கடற்கரையை நோக்கி வந்தது. இந்த இரண்டு புரவிப் படைகளுக்கு எதிரில் சிக்கிக் கொண்ட யானைப் படையை நோக்கி, இளவழுதியின் திட்டப்படி சேரநாட்டு வில்லவர் அம்பு மழை பொழியவே, அவற்றால் தாக்குண்ட யானைகள் அணிவகுப்பு

கலைந்து ஓடத் தலைப்பட்டன அப்போது இரு புரவிப் படைகளும் அவற்றை நெருக்கவே மும்முரமான போர் துவங்கியது. எங்கும் யானைகளின் பிளிறல்களும், புரவிகளின் கனைப்புகளும் ஒரு பங்கரமான சூழ்நிலையைச் சிருஷ்டித்தன. அப்போது இளவழுதி தனது புரவியின் மீது வெகுவேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டும் ஏதேதோ சைகைகள் செய்து கொண்டும் கடற்கரைக்கு வந்தான்.

அப்பொழுது அங்கிருந்த உதவி படைத் தளபதியிடம் ஏதோ சொல்ல, அவன் பல வீரர்களை ஏவி புரவிகளின் அணிவகுப்பை நாலாகப் பிரித்து யானைப் படைக்குள் ஊடுருவி விட்டான். ஒரு போர் வந்ததால் யானைப்படை பலமுள்ளதா புரவிப்படை பலமுள்ளதா, என்று நிர்ணயிக்க ஒரு சந்த்தர்ப்பம் ஏற்ப்பட்டது. அப்பொழுது இளவழுதி புரவிப்படயின் ஒரு பகுதியை பின்னால் வரும்படிச் சொல்லி யானைப் படைக்குள் ஊடுருவி, ஏற்கனவே ஊடுருவிய புரவிப் படைகளை சற்றுத் திருப்பி யானைப் படையின் பக்கப்பகுதிகளையும் மூன்றாகப் பிளந்து விட்டான். பின்பக்கமாக மூன்றும், முன்பக்கத்தில் மூன்றுமாகப் பிளக்கப்பட்ட யானையின் அணிவகுப்பு கலைந்து நாலாப்பக்கத்திலும் ஓட ஆரம்பித்தன.

புரவிகளின் அணிவகுப்பு மட்டும் ஒரே சீராக நாலாப் பக்கத்திலும் அவற்றை வளைத்துப் போரிட்டதால் சில கடலுக்குள் ஓடின. மற்றும் சில மலைச்சரிவில் ஏறி பாம்புப் புதரை நோக்கி விரைந்தன. புதரின்மேல் வைக்கப்பட்ட தீக்குத் தப்பி புதரிலிருந்து சீறி வந்த சர்ப்பங்களால் கடிபட்ட யானைகளும், அலைகளால் கடலில் இழுத்துச் செல்லப்பட்ட யானைகளும் கிளப்பிய ஒலிகளும், இடையே இளவழுதியின் தலைமையில் மலைச்சரிவில் ஏறிச் சென்ற புரவிப்படை வீரர்கள் புதர்க்கோட்டையின் மதில்கள்

மீது ஏறி செய்த சங்கநாதங்களும், ஊதப்பட்ட எல்லாமாகக் கலந்து ஏதோ பெரும் பிரளயம் சுட்டிக்காட்டின. இடையே திடீரென்று கோட்டையின் மீது உயர்த்தப்பட்ட சேரனின் வில் அம்பு இலச்சினைக் கொடியும், அதே சமயத்தில் வீரர்கள் வெளியிட்ட வெற்றிக் கோஷங்களும் சேரநாடு பேரரசின் பதவியை எய்திட்ட நிலையைச் சுட்டிக்காட்டின அப்பொழுது தூரத்தில் நெடுஞ்சேரலாதன் ஒரு பெரிய புரவியில் வந்து கொண்டிருந்தாரங.

பெருஞ்சேரல் இரும்பொறை ஒரு பெரிய புரவியின் மீது இரும்புக் கவசங்களை வழக்கப்படி அணிந்து சேரன் வந்து கொண்டிருந்தான். இளவழுதி சில வீரர்கள் கூட்டத்துடன். மன்னரை எதிர்கொண்டு, “சேர மன்னர் வாழ்க என்று வாழ்த்துரை கூவி, “குட்டுவன் யானைத் திமிர் அழிந்தது’’ என்று கூறி சங்கை எடுத்துப் பலமாக ஊதினான்.

காட்டு மலர்களைக் கொண்டு மாலையொன்றைத் தொடுத்து மஸ்தானா பக்கத்திலிருந்து நீட்ட, அதை வாங்கி மன்னன் கழுத்தில் போட்டான் இளவழுதி.

மாலையைப் போட்டு முடித்த கையோடு ”மஸ்தான நீ எப்படி எதிர்த்தரப்பில் சேர்ந்தாய்?” என்று கேட்கவும் செய்தான் இளவழுதி.

“நானா சேர்ந்தேன்? நீங்கள் மந்திராலோசனை முடித்தவுடன் மறுநாள் எப்படி அணிவகுப்பை நிறுவலாம் என்று முடிவு செய்ய அஹமதுடன் அந்தப் புதர்கோட்டைக்குச் சென்றேன். வழியில் எங்கள் இருவரையும் மடக்கி சிறையெடுத்துச் சென்றான் குட்டுவன். போகும் வழியில் எப்படியோ அஹமத் தப்பி ஓடிவிட்டான். என்னால் தப்ப முடியவில்லை. குட்டுவன் என்னைச் சிறையிலடைத்து போர்த்திட்டம் பற்றி விசாரித்தான். எனக்குத்

தெரியாது என்று சொல்லவே, அதை அவன் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே என்னை வற்புறுத்த முயன்றான். பயனில்லாது போகவே, என்னைக் கொன்று விடுவதாகவும் தன். பிறகு அவனிடமிருந்து தப்ப முயன்றேன். முடிவில்லை பிறகு பட்டத்து யானை மீது குட்டுவன் என்னை ஏற்றி அனுப்பினான். ‘இது பட்டத்து யானையாயிற்றே?’ என்று நான் மறுத்தேன். குட்டுவன் ‘பட்டமகிஷி அதில் போவதில் என்றான். அவன் கெட்ட எண்ணம் எனக்குப் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை. உங்களையும் டையையும் அதிர்ச்சியுறச் செய்ய வேண்டுமென்ற சில்தான் அவனது யானையின் முன்னர் என்னை அமரச் செய்தது சரி: நமது படைகளுக்கு எந்த வகையிலும் இவனுடன் இருந்து கொண்டே உதவ முடியாதா? என்று வந்து விட்டேன்” என்றாள்.அவள் குரலில் பெருந்துயரம் பரிபூரணமாக ஒலித்தது.

எப்படியும் குட்டுவன் என்னை இன்றிரவு புதர்க் கோட்டையில் எதிர்பார்க்கிறான்” என்று சொல்லவும் செய்தாள்.

‘’அதற்கு வழி செய்வோம்” என்றான் இளவழுதி.

அது புது வழியாக இருக்கும்” என்று அஹமத் இடைபுகுந்து பேசினான்.

அங்கு புதர்க் கோட்டையில் காத்திருந்த குட்டுவனிடம் பட்ட மகிஷி வந்தாள். அவளைத் தழுவிய குட்டுவன் திடீரென மூச்சுவிட முடியாமல் திணறினான். அஹமதின் இரும்புப்பிடி வென் எலும்பை முறித்துக் கொண்டிருந்தது. அந்தக் கோட்டையின் இன்னொரு அறையிலிருந்து சிரிப்பொலி ஒன்று கேட்டது. அது மஸ்தானாவின் குரல் என்பதை உணர்ந்த குட்டுவன் திடீரெனத் திரும்பி அந்த அறையை நோக்கி ஓடினான். அங்கு அவனை, உருவிய வாளுடன் நின்ற இளவழுதி வரவேற்றான். இன்னும் பத்துப் பெண்களும் அந்த அறையில் குறுவாட்களுடன் நின்றிருந்தார்கள்.

குட்டுவன், தான் சதியில் சிக்கிக் கொண்டிருப்பதை சந்தேகமற உனர்ந்து கொண்டான்.

“இந்தச் சதிக்கு வித்திட்டவன் யார்?” என்று கேட்கவும் செய்தான்

‘’இதில் சதி ஏதுமில்லை. இன்னொருவன் மனைவியைக் கற்பழிக்க முயன்ற குற்றத்தின் விளைவு, அறம் காப்பாற்றப்பட்டது என்றான் அஹமத்,

நாங்கள் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தால் பாஞ்சாலியாகியிருப்பாள். முதல் கணவன் நான் – இரண்டாவது. ஜமாலுதீன் – மூன்றாவது இதோ இளவழுதி – நான்காவக நீ இன்னும் ஒருவன்தான் பாக்கி” என்று விளக்கவும் செய்தான் அஹமத்.

“இது உண்மை என்று எனக்கு எப்படித் தெரியும்?” என்று குட்டுவன் கேட்டான்

‘’நான் சாட்சி என்று சொல்லிக் கொண்டே ஜமாலுதீன் உள். நுழைந்தான் “நானும் சாட்சி” என்றார் சேர மன்னர்.

Previous articleAlai Arasi Ch32 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch34 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here