Home Alai Arasi Alai Arasi Ch34 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch34 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

57
0
Alai Arasi Ch34 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch34 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch34 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 34 தகடூர் வெற்றி

Alai Arasi Ch34 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

தான் பாஞ்சாலி என்பதற்கு சேரமன்னனும் சாட்சி என்று சொன்னதைக் கேட்ட மஸ்தானா சிறிது முகம் சுளிக்கவே செய்தாளானாலும் சிறிதும் அச்சத்தைக் காட்டாமல்,

என்னவா! தங்களுக்கு இந்த தொழில் தேவையா?” என்று கேட்டாள். மன்னர் முறுவல் கொண்டார். ”மக்களுக்கு மகிழ்ச்சி தரும் எந்த வேலையும் மன்னனின் வேலைதான் மஸ்தானா. அதில் தவறு ஒன்றுமில்லை ” என்று கூறினார் முறுவலிரைடே ,

நான் தங்கள் மகள் ஸ்தானத்தில் இல்லையா? என்னுடைய கற்புக்கு மாசு கற்பிக்க ஒரு தந்தை முயலலாமா?” என்றாள் மஸ்தானா” மாசு கற்பிக்கும் வேலையில் இறங்குவது தம் தொழில் கடமைகளில் ஒன்றா?” இதை மிகுந்த துணிவுடனும் சீற்றத்துடனும் கேட்டாள் மஸ்தானா, மன்னரை ஏறெடுத்து நோக்கி.

“மாசு கற்பித்தேனா?” என்று ஏதும் புரியாதது போல் மன்னர் வினவினார்.

“ஆம்! நான் பாஞ்சாலியென்பதற்கு தாங்களும் சாட்சி என்று சொல்லவில்லையா?”

“சொன்னேன். ஆனால் பாஞ்சாலி கற்புடையவள் அல்லவென்று யார் சொன்னது? வியாசமுனிவர் மஹாபாரதத்தில் சொல்லவில்லையா?”

“ஐந்து பேரை மணந்தாள்.”

“ஆம்! ஆனால் ஐவரில் யாருக்கும் அவள் துரோகம் செய்ததாக வரலாறோ புராணமோ கிடையாது. தவிர அவளை மணந்தவளாகக் கூடப் புராணம் கூறவில்லை . ஐந்து கன்னிகைகளில் ஒருத்தியாகவே வைத்திருக்கிறார்கள். திரௌபதியை கற்பிற்கு

இலக்கணமாகவே மதிக்கிறது புராணம். ஆகவே, உனக்கு நான் எப்படி மாசு கற்பித்ததாக ஆகும்? புராணங்களில் ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் அரைகுறையாகப் படித்துவிட்டு. மேற்கோள் காட்டும் பெரியவர்களின் பட்டியலில் நீயும் சேர்ந்துவிட்டாயா மகளே?” என்று சற்று துயரத்துடன் சொன்னார் மன்னர். மேலும் சொன்னார் – “மஸ்தானா, புராணத்தின் உட்கருத்தை புரிந்து கொள்ளாமல் கண்டபடி கதை கட்டுவது பாமரர்கள் சிறிதாவது அறிவுடையவர்கள் செல்லும் வழியல்ல. “இதைச் சேர மன்னர் மிகுந்த திடத்துடனும் திட்டமாகவும் சொன்னார்.

“எத்தனைப் பேரை மணந்தாலும் அவள் பதிவிரதை தானா?’’ என்று மஸ்தானா வினவினாள்.

சேரமன்னர் சிறிது நகைத்தார். ”கற்பெனப்படுவது சொற்திறம்பாமை என்பது தமிழ் இலக்கணம். யாரை மணந்தாலும் அவன் சொல்லை மீறாமல் அவன் செல்லும் வழி அவளும் செல்லும் வரை அவள் கற்புக்கு ஊறு ஏதுமில்லை. நிழலைப்ப போல அவள் கணவனைப்பின் தொடர வேண்டும் என்றுதான் நெறி வகுக்கப்பட்டிருக்கிறது” என்றார் மன்னவர்,

மஸ்தானா சற்று நிதானித்துவிட்டு, ”மன்னவா! தாங்கள் சொன்ன கணக்கில் எனக்கு மாப்பிள்ளைகள் நால்வர் ஏற்பட்டார்கள், ஐந்தாவது யார் என்று தெரியவில்லையே? என்றாள்.

“அதில் அதிக கஷ்டமிருக்காது” என்றான் குட்டுவன் இடை புகுந்து

“பார்த்தாயா மஸ்தானா! பூழி நாட்டு மன்னனே உன்னை ஏற்க சித்தமாயிருக்கிறான்’ என்று கூறினார் சேரமன்னர்.

வால்மீகி ராமாயணம். மணமுடி படலத்தில் ஜனக சொல்வதாக,

ஆம் மன்னவா! ஒரு தோல்வியை ஈடுசெய்ய இன்னொரு வெற்றி வேண்டாமா?’’ என்றான் குட்டுவன்.

“எது தோல்வி?’’

இப்பொழுது நடந்த சண்டையில் நான் அடைந்த தோல்வி இந்த சண்டை சரித்திரத்தையே மாற்றுகிறது மன்னவா” என்றான் குட்டுவன் சிறிது தளர்ந்த குரலில்.

”விளங்கச் சொல்ளுங்கள்’’ என்று சேரமன்னர் கேட்டார்.

“யானைப்படையை புரவிப்படை வெல்லுமென்பது புதுக்கருத்து. அதுவும் இத்தனைப் பெரிய நஷ்டம் போர் மான நஷ்டம் இரண்டும் சேர்ந்தது. எத்தனை பெரிய பாதகம் எனக்கு சேரமன்னா, எனது காணிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று குட்டுவன் சேர மன்னர் முன்பு மண்டியிட்டு தனது மகுடத்தையும் கழற்றி அவர் காலடியில் வைத்தான். ‘’தாங்கள் அதிராஜனாவதற்குத் தேவையான ஏழு மகுடங்களில் என் மகுடத்தை முதல் காணிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

சேரமன்னர் கண்களில் நீர் திரண்டது. அவர் தனது காலை ஒரு அடி முன் எடுத்து வைத்து வலது கையை குட்டுவன் தலைமீது வைத்து, ”குழந்தாய்! இன்று நடந்தது தோல்வியல்ல. இளவழுதியின் தந்திரம், படைபலமல்ல” என்றார்.

‘வெற்றிக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் வெற்றி வெற்றிதான். தோல்வி தோல்விதான். ஆகையால் வெற்றியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்ற குட்டுவன்,

“மன்னவா! இளவழுதியின் சிறப்பைப் பற்றி, யுத்த தந்திரத்தைப் பற்றி உலகமே வியந்து போகிறது. எனது தோல்வியால் நான் அதைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அணிவகுப்பில் கூட நெடுக்கில் நான்காகவும் குறுக்கில்

மூன்றாகவும் அணி செய்து படையைப் பிளந்த எதிரியைப் பற்றி இதுவரை யாரும் கேள்விப்பட்டது கூடக் கிடையாது. வியூக சாஸ்திரத்தை பரிபூரணமாக அறிந்த இளவழுதி ஒரு தனிப்படைக்குச் சமானம். இளவழுதிக்கு மற்ற படைத்தலைவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு இதுதான் இளவழுதியிடம் அறிவு, சாஸ்திர ஞானம் இணைந்திருக்கிறது. தாங்கள் அதிராஜனாவது திண்ணம் வெகு சீக்கிரம், அந்த நாள் அதிக தூரத்தில் இல்லை’’ என்று பேசினான் குட்டுவன்.

சேர மன்னர் முகத்தில் திருப்தி துளிர்விட்டது. “இது வரை தகடூர் வெற்றியைச் சேர்த்து மூன்று மகுடங்கள் கிடைத்துள்ளன வடபுலத்தார்கள் இருவரையும் வெற்றி கொண்டதாக குடித்தாலும் மொத்தம் நான்கு கிரீடங்கள்தானே ஆகும் இன்னும் மூன்று மகுடங்களுக்கு நான் எங்கே போவது?” என்று வினவினார் சேரமன்னர்.

இதுவரை மௌனம் சாதித்த இளவழுதி, “மன்னவா! வடபுலம் செல்லும்போது நம்மை யார் யார் எதிர்ப்பார்கள் என்பதை இப்பொழுது எப்படி நிர்ணயிப்பது?” என்று கேட்டவன், “இமயத்துக்கும் பொதியமலைக்கும் இடையே இருப்பது தமிழ்நாடு என்றாலும் மொத்தம் 56 நாடுகளில் வடக்கில் இருப்பது எத்தனை என்பது அங்கு போகும்போது தான் தெரியும் என்றான்.

மேலும் தொடர்ந்து, “மன்னவா! தங்களை அதிராஜனாகப் பார்க்காமல் இந்த இளவழுதி சாகமாட்டான்” என்று உணர்ச்சியுடன் பேசவும் செய்தான்.

மன்னர் முறுவல் காட்டினார். “அதற்கு அப்புறமும் நீ சாக அவசியமில்லை , இளவழுதி! அதிராஜனாக ஆன பிறகு எதிரிகள் அளவு அதிகரிக்கும். ஒவ்வொரு வெற்றியும் ஒரு புது எதிரியை உண்டாக்கும். ஆகவே அப்பொழுது உன் உதவி அதிகமாகத் தேவையாயிருக்கும்’’ என்று மன்னர் வினவினார்.

இப்பொழுது குட்டுவன் உரையாடலில் உட்புகுந்து. “மன்னவா! தாங்கள் சொல்வது தவறு. நான் இப்பொழுது தோற்றுவிட்டேனென்றால் தங்கள் எதிரியாக மாறிவிட்டேன் என்றா அர்த்தம்?” என்று வினவினான். “சேரகுல ரத்தம் என் உடம்பில் ஓடும்வரை நானும் நண்பனே!” என்று கூறித் தனது பணிவைத் தெரிவித்துக் கொண்டான்.

இனி அச்சமில்லை எனக்கு” என்றார் சேரலாதன்.

“ஏன்?”

‘’தம்பியுள்ளவன் படைக்கஞ்சான் என்ற தமிழ்ப் பழமொழி பொய்க்குமா?” என்று தெம்புடன் பேசினார் சேரலாதன்.தொடர்ந்து மன்னர் சொன்னார் : “இந்த மகுடத்தை ஏழாவது மகுடமாக வைத்துக் கொள்வேன். அது வரை நீ பழைய சுதந்திர மன்னனாகவே இருப்பாய்” என்று கூறி குட்டுவனின் மகுடத்தை தன் கைகளால் சூட்டினார் சேரலாதன்.

‘’சேரர்குல தாராள மனப்பான்மை எங்கு போய்விடும், இரத்தில் ஓடத்தானே செய்யும்” என மன்னனை மறைமுகமாகப் பாராட்டிய இளவழுதி, ”வடபுல யாத்திரைக்குத் திட்டமிட வேண்டும். ஆகவே நான் செல்கிறேன்” என்று கூறி வாயிலை நோக்கி நடந்தான்.

‘’நீ எங்கும் போக முடியாது!” மன்னர் கட்டளையாகச் சொன்னார்.

“ஏன்?” இளவழுதி வியப்புடன் வினவினான். “நான் விட்டாலும் உன் மனைவி விடமாட்டாள். நீ அவளுக்குச் செலுத்த வேண்டிய கடமை இருக்கிறதல்லவா? என்ற மன்னர் முறுவல் கொண்டார்.

மஸ்தானாவும், ”ஆம்! எங்கும் போக முடியாது எப்படி போகலாம்? என்னைக் கைவிட்டு கடற்கரை வரையில் உங்களால் போக முடியாது. என் தந்தை விட மாட்டார்’’என்றாள்.

மன்னர் சொன்னார் “உங்கள் வாழ்க்கையை இன்றிரவு முடிவு செய்யும்.”

இரவு வந்தது எப்பேர்ப்பட்ட இரவு! முந்தைய இரவுகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் இரவு. நைடத இரவு. அந்த இரவில் இளவழுதி மஸ்தானாவுக்கு பல பாடங்களைப் போதித்தான் எல்லாம் இலக்கண முறைப்படி, அதிவீரராமபாண்டியன் அப்போது உயிருடன் இருந்திருந்தால், தான் இயற்றிய நைடதத்தைப் பற்றி பெருமை கொண்டிருப்பான்.

Previous articleAlai Arasi Ch33 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch35 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here