Home Alai Arasi Alai Arasi Ch35 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch35 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

66
0
Alai Arasi Ch35 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch35 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch35 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 35 இளவழுதியின் புகழ்கொடி

Alai Arasi Ch35 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

இரவில் பஞ்சணை முகப்பில் ஒருபக்கமாக மஸ்தானா நின்றாள்.

‘’மஸ்தானா, சிறிது முறுவல் செய்!” என்றான் இளவழுதி,

அவள் முறுவல் செய்தாள். அடுத்த வினாடி அவள் பஞ்சணையில் – அவன் பக்கத்தில்… அவனுடைய இரும்புப் பிணைப்பில் இருந்தாள்.

இளநலம் பருகுதல், உபரி சுரதம் பருகுதல் முதலியச் சிறப்புகள் தயக்கமின்றி நடந்தன.

மறுநாள் காலை . வலியினால் வடை வந்த மஸ்தானாவை அறிகுறியாகப் பல் கண்டாலும் காணாததும் நாள் காலை உடல் முழுவதும் களைத்துச் சலித்து சொல் வலியினால் வளைந்து வளைந்து கால் தடுமாற நடந்து வெளியே வந்த மஸ்தானாவைச் சந்தித்த மன்னர் புரிந்து கொண்டதற்கு அறிகுரியாகப் புன்முறுவலும் செய்தார். அவர் சிரிப்பைக் கண்டாலும் காணாததுபோல் வேறுவழியில் நடந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த இளவழுதியைச் சந்தித்த மன்னர், ‘’இளவழுதி! சண்டையிலெல்லாம் வியூகம் வகுக்கிறாய். இங்கு ஏதாவது வியூகம் வகுத்தாயா? மஸ்தானா ஓடுகிறாளே” என்று கேட்டார்.

மன்னவா! முறைக்கு மாறாக எதுவும் நடக்கவில்லை” என்று இளவழுதி சிறிது வெட்கத்துடன் சொன்னான்.

‘காலம் மாறுகிறது. ஆண் வெட்கப்படுகிறான்; பெண் அலட்சியமாகப் போகிறாள்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட மன்னவர், “இளவழுதி! இந்த மன்மத வியூகத்தின் நுட்பங்களைச் சொல், கேட்போம்’ என்று கேட்டார்.

“இது மன்மதன் வகுத்த வியூகம் அல்ல; பாண்டியன் வகுத்த வியூகம்” என்ற இளவழுதி, “கேளுங்கள் மன்னவா! ஆனால் நான் சொல்வதில் ரசக்குறைவு இருந்தால் அதற்கு அதிவீரராம பாண்டியன் பொறுப்பல்ல” என்று கூறி விளக்க முற்பட்டான்.

அது கேட்ட மன்னர் மெய்சிலிர்த்தார்.

“கேவலம்! கேவலம்” என்றும் சொன்னார்.

“மன்னவா! இதெல்லாம் முனிவர்கள் வகுத்த வழி இதில் வெறுப்புக்கோ சங்கோஜத்திற்கோ இடமில்லை” என்றான் இளவழுதி.

மன்னர் கேட்டார்: “பாண்டியன் முனிவனா?” என்று

‘’இல்லை; அவர் முனிவர் இல்லை. ஆனால் எழுத்திலிருந்து அவர் முனிவர்களை முழுதாகப் பின்பற்றியிருக்கிறார் என்று தெரிந்தது. முனிவர்களின் எழுத்துக்களை நன்றாகச் சுவைத்திருப்பதும் நன்றாக ஜீரணித்திருப்பதும் புலனாகிறது” பிறகு நடந்ததைப் படிப்படியாகச் சொன்னான்.

பஞ்சணையிருந்த அறைக்குள் நுழைந்த சில நாழிகைக்குள் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துக்கொண்ட இளவழுதி தனக்குள் நகைத்துக் கொண்டான்.

பாலை அருந்திவிட்டு பஞ்சணையில் உட்கார்ந்ததும் தன் கையிலிருந்த மலர்ச்சரத்தை விரித்து கிடந்த அவளது கூந்தலுக்கு இடையில் சுருட்டி முகர்ந்து பார்த்ததையும், கரிய குழல்களுக்கிடையே அவனது விரல்கள் செய்த விஷமக்கால் சற்றே நெளிந்து கொடுத்த மஸ்தானாவின் முனகலையும் ரசித்த இளவழுதி அப்படியே அவளது உடலையொட்டி தானும் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டதையும் நினைத்துக்கொண்டான். அப்படி அவன் அவளின் பின்புறமாகப் படுத்துக்கொண்டிருப்பதே அவளுக்கு இன்ப வேதனையை அளிக்க, அவள் மீண்டும் மீண்டும் முனகியதையும் அந்த சமயத்தில் நினைத்துக் கொன்டான்,

அந்த முனகல் ஒலியே. ஒரு வகையான ஊடல் எனக் கண்டு அவள் என்னதான் செய்கிறாள், பார்ப்போம் என்று இளவழுதி நினைத்துக்கொண்டிருந்தான். மஸ்தானா கண்கள் பரபரக்க திரும்பி பார்க்க, அவளின் பருத்த மார்பு விளைத்த இன்ப வேதனையைத் தாங்கமாட்டாது தவித்த அவனின் சிறிய இடையை தனது இடையுடன் சேர்த்துக் கொண்டதுடன் அவனது கைகளை தனது இடையுடன் சுற்றிக்கொண்டு ‘தத்தரி நெடுங்கண் சேப்பத்தடமுலை தாங்கலாற்றாது எய்த்து நுண்மருங்கல் தேம்ப ஏந்தலோடு ஆடினாள்’ எனும் நைடத வரிகளுக்கு உயிரூட்டி இன்பம் என்பது ஆணால் மட்டும் தரப்படுவதில்லை ; அது ஒரு ஸ்திரீயாலும் தரப்படுவதுண்டு -அவளும் சமபங்கு இன்பம் தரவல்லவள்’ என்று மெய்ப்பித்ததை நினைத்துக் கொண்டு மன்னருக்கு விளக்கினான் இளவழுதி.

மஸ்தானாவுக்கு தானும், தனக்கு மஸ்தானாவுமாக ஒருவரையொருவர் இறுகத் தழுவி இதழோடு இதழ் பொருத்தி மீந்து இதழமுதம் பருகி பின் தொண்டை வாய் அமிர்தமாந்தி- தளிர்த்து எழும் உவகை பொங்கதண் நறு சாந்த மார்பன் – அளப்பரு களிகொள் காமக்கடல் கத்து அழுந்தினோனே’ என்னும் அதிவீரராம பாண்டியன் வரிகள் உண்மையாகிப் போனதையும் ஒருவித உவகையுடன் மன்னன் முன் எடுத்து வைத்தான்.

மகிழ்ச்சியின் விளிம்பில் நிற்கையில் மஸ்தானாவின் மார்பில் பட்ட பற்குறிக்காக ‘நாளை உங்களது பணிப்பெண்கள் என்னைக் களிப்பாட்டும்போது இது என்ன வடு என்று கேட்டால் என்ன – சொல்வேன்!’ என்று பயந்து மஸ்தானா பொய்த் துக்கம் செய்ததன் மூலம் ‘மிலங்கொளி வயிரப் பைம்பூண் – இளமுலை – வடுக்கண்டேங்கி – பொலங்கொடி – நாணினோடும் பொய்த்துயில் கூர்ந்தாளன்றே!’ என்ற நைடத வரிகள் உண்மையானதையும் மறக்காமல் சொன்னான் இளவழுதி,

பொய்த் தூக்கத்தில் அவளைத் தொட்டதால் அவள் கடிந்து கொண்டதையும், அப்படி கடிந்து கொண்டதனால் எங்கே தான் கோபம் கொண்டு ஒதுங்கிவிடுவேனோ என்று பயந்துக்கொண்டே மேலும் ஆழ்ந்து தூங்குவது போலச் செய்து-அந்த தூக்கத்தின்போது கண்ட கனவினால் பயந்ததுபோல நடித்து திடுக்கிட்டு அலங்க மலங்க விழித்துப் பருத்த அவளின் மார்புகள் தன்னை அழுந்த அணைத்துக்கொண்டதுகூட நைடதத்தில் இருக்கிறது என்பது ‘கலவியின் வேட்கை தூண்டக் கனவினில் வெருவினாள் போன், முலைமுகடழுந்த வேந்தன் முழவுத் தோன் புல்லினாளே’ என்ற வரிகளில் நிருபணமாகிறது என்றும் விளக்கினான் இளவழுதி

தனது பரந்த மார்பில் அவளது மார்புகள் அழுந்தப்படுத்து உறங்கியதையும், மன்னரிடத்து மறக்காது சொன்னான் இளவழுதி அதுமட்டுமா! இந்தக்கணமம் நீங்கினால் அடுத்த கணத்தில் தாங்கள் உயிருடன் இருப்போமோ இல்லையோ என்ற கருத்தில் இருவருமே இன்பம் முழுவதையும் இன்றே அனுபவித்துத் தீர்த்துவிட வேண்டும் என்று தீவிரமாயிருந்ததையும், இன்பத்தின் உச்சியில் அவளது பாததூளியை எடுத்து தனது தலையில் வைத்துக்கொண்டதையும், முந்தின இரவின் இன்ப வேளையில் மஸ்தனா பேசியவற்றையும், தான் பேசியதையும் நினைத்துப் பார்த்து, மறுநாள் விழித்தபின் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத அசட்டுத்தனத்துக்கு ஆளானதுகூட அதிவீரராம பாண்டியன் சொன்ன வாக்குகளே என்றும் இளவழுதி மன்னரிடத்துச் சொன்னான்.

மன்னர் சேரலாதன் இளவழுதி சொன்னதைக் கேட்கக் கேட்க வியப்பின் எல்லைக்கே சென்றார். “இப்படியெல்லாமா ஒரு மன்னன் எழுதி வைப்பான்” என்று வாய்விட்டுக் கேட்கவும் செய்தான்

ஒன்றுதான் காதல் – நினைக்க, நினைக்க இளைத்துப் போசி உண்டு ஒன்றை நின் மகிழ்ந்ததை வெளிப்பன

இதில் வியக்கத்தக்க செய்தி ஒன்றுமில்லை மன்னவா! கற்பனையாளனுக்கு உடல் சங்கமமும், உள்ளத்துச் சங்கமும் ஒன்றுதான் காதல் ஒரு நல்ல விஷயம்தான் இந்த விஷையத்தை நினைக்க, நினைக்க உடல் உருகிப் போகிறது. இதில் உருகி மாய்த்துப் போகிறவர்களும்கூட உண்டு, ஒன்றை நினைத்து உருகிப் போவதைவிட அனுபவித்து வெளிப்படையாக இதுதான் விஷயம் என்று எழுதி வைத்துப் போவது மிகவும் சிறப்பல்லவா? அந்தக் காரியத்தைதான் அதிவீரராம பாண்டியர் செய்திருக்கிறார். அது தவறல்ல’’ என்றான் இளவழுதி ஒரு ஞானியைப் போல.

‘’இளவழுதி! ஒன்று சொல்லட்டுமா, சொன்னால் தவறாக நினைக்க மாட்டாயே?”

“தவறாக நினைக்க என்ன இருக்கிறது மன்னவா?’’

‘’மஸ்தானாவுக்கு கணவர்களாக அஹமது இருக்கிறான். ஜமாலுதீனும் இருக்கிறான். இருந்தும் மற்ற இருவரை விட மூன்றாவது கணவனான உன்னைத்தானே மஸ்தானா அதிகம் விரும்புகிறாள். இது எப்படி என்று அவ்வப்போது நான் நினைப்பதுண்டு?. அந்த நினைப்புக்கு இப்பொழுது சரியான விடை கிடைத்துவிட்டது. ஆமாம், மஸ்தானாவை மீட்டும் வித்தையை நீ நன்றாகக் கற்று வைத்திருக்கிறாய். அதுவும் சுத்த இலக்கணப்படி அவளை மீட்டுகிறாய் போலிருக்கிறது. இல்லாவிட்டால் உன்னையே அவள் சுற்றிச் சுற்றி வர வேறு காரணம் என்னவாயிருக்க முடியும்?” என்று வினவினார் மன்னர்.

மன்னரின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று பரியாமல் சில விநாடிகள் தயங்கினான் இளவழுதி. அவனேகூட மஸ்தானா தன்பேரில் தீவிர அன்பு கொண்டதற்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்ததுண்டு? அதற்கான விடையைக் காண அவனால அப்போதெல்லாம் முடிந்ததில்லை. இப்பொழுது

மன்னவர் கணிப்பு அவனை ஆச்சரியமும், ஏன்அதிர்ச்சியுறவும் வைத்திருக்கிறது. ‘தான் மஸ்தானாவை மடக்கி வைத்திருப்பது என்பது மன்னர் கண்டுபிடித்துச்சொன்ன இந்த வழிகளில்தான?. இதுதான் உண்மையென்றால் இதை உடனடியாகக் சொல்லத்தயக்கமேன்? இல்லையென்றால் வேறு காரணம் கூறவும் தாமதம் ஏன்?’ என்று இளவழுதி உள்ளூர சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் அஹமத் உள்ளே நுழைந்தான். அதே சமயத்தில் ஆற்றில் நீராடி புத்தாடை புனைந்து, மலரைச்சூடி மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்த மஸ்தானா உடல் இளைத்து கம்பனுடைய மெல்லியல் என்ற பெண்கள் இலக்கணத்துக்க் கிட்டத்தட்ட சரியாக இருக்கவே,

“ஒரே நாளில் என்ன இப்படி இளைத்து விட்டாயே மஸ்தானா?” என்று மன்னர் அங்கலாய்ப்புடன் கேட்டார்,

“இது இளைப்பா?” என்று அஹமத் வினவினான் விஷமத்துடன்

“இல்லை, தங்களைவிட சற்றுக் குறைவுதான்” என்றாள் மஸ்தானா.

இதைக் கேட்ட இளவழுதி நகைத்தான்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று உக்ரத்துடன் வினவினான் அஹமத்

“அஹமத், எடையோ சதையோ ஒரு மனிதனுடைய சக்தியை நிர்ணயிப்பதில்லை. அதற்கு உதாரணம் சமீபத்தில் கடல்போரில் பார்த்தோம். யானை, புரவியைவிட பலமானது என்றாலும் புரவிப்படை யானைப்படையை எளிதில் ஊடுருவி விட்டது. நாம் மாளிகைகள் கட்டும் போது வஜ்ரம் பாய்ந்த பெரிய மரங்களை உத்திரமாகப் போடுகிறோம். ஆனால் அவற்றை சிறு புழுக்கள் துளைத்து விடுகின்றன. இதோ இந்த மஸ்தானாவுக்கு நீயும் ஜமாலுதீனும் மணவாளர்களாக இருந்தாலும் என்னைப்போன்ற ஒரு பூஞ்சையையும் மன்னர் மணவாளனாக்க வேண்டிய

அவசியம் ஏற்பட்டு விட்டது” என்று சலிப்பு மிகுந்த குரலில் கூறியதன்றி மஸ்தானாவைப் பார்க்கவும் செய்தான் இளவழுதி,

மஸ்தான அவன் கண்களைச் சந்திக்க இயலாமல் தனது பார்வையை நிலத்தில் ஒட்டினாள். இதைக் கவனிக்கவே செய்த அஹமத்,

வெட்கப்படாதே மஸ்தானா” என்று தைரியமும் சொன்னான்.

“எதையும் இன்றிரவு சரிக்கட்டி விடுவார் மாப்பிள்ளை அஹமத்’’ என்று மன்னர் சொன்னார்.

மஸ்தானா அர்த்தபுஷ்டியுடன் அஹமதை நோக்கினாள். அஹமத் முகத்தை ஏதோவிதமாகக் கோணிக் கொண்டு தன் அசட்டுத்தனத்தை நன்றாகவே வெளிப்படுத்தினான். அதை மன்னர். மஸ்தானா, இளவழுதி மூவருமே கவனித்தாலும், மன்னர் மட்டுமே பேசினார்.

‘’அஹமத் நீ வீரனாக நடந்து கொண்டதால் அரேபியாவில் நீ இழந்திருக்கும் சிற்றரசை நானே கைப்பற்றித் தருகிறேன். அதற்காக இளவழுதியை அனுப்பும்படி மதகுரு கேட்டிருக்கிறார். இளவழுதி, நீ போகும்போது உன்னுடன் வருவான். உனக்காகப் போராடுவான். ஆகையால் உன் வெற்றியைப் பற்றியோ, நீ அரசனாவதைப்பற்றியோ எந்தவித சந்தேகமும் வேண்டாம்” என்று மன்னர் உறுதியாகப் பேசினார்.

இளவழுதி மஸ்தானாவை நோக்கி தனது பார்வையைச் செலுத்தி,

“அராபிய அரசி என்ன சொல்கிறாள்?” என்று வினவினான்.

‘அராபிய அரசியாக இருந்தாலும் நான் கணவனுக்கு மனைவிதானே. ஆகையால் அவரே பதில் சொல்லட்டும்!” என்று அஹமதைச் சுட்டிக்காட்டினாள்.

அஹமத் இருமுறை நெளிந்தான்.

“உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி. வோறு எதற்கு மில்லாவிட்டாலும் மஸ்தானாவை அரசியாக்குவதற்காகவாவது நான் இந்தப் போரில் ஈடுபடுகிறேன். என் சொத்தை இப்பொழுது கைப்பற்றியவர் எனது சிறிய தந்தையாக இருந்தாலும் அவரை நான் விடப்போவதில்லை. என் தந்தை போகும்போது என்னை சிறிய தந்தை கையில் பிடித்துக் கொடுத்து, ‘இவனை உன் மகன் போல் நடத்து, வயது வந்ததும் அரசை அவனிடம் ஒப்படைத்து விடு’ என்று கூறிச் சென்றார். ஆனால் அதிகார ஆசை, யாரை விட்டது. என் சிறிய தந்தை, என் தந்தைக்குக் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்கவிட்டு, தானே அரசனாகி விட்டார் அதை மாமா (மதகுரு) எதிர்த்து வருகிறார். ஆனால் அவர் விருப்பம் ஒன்றை நான் ஏற்கனவே நிறைவேற்றி விட்டேன் மஸ்தானாவை எனக்குக் கொடுக்கத் தீர்மானித்திருந்தார் அதற்காகவே என்னை அரசபீடத்தில் ஏற்றவும் ஏற்பாடு செய்தார் அதற்காகவே தன் வளர்ப்புப் பெண்களான அலை அரசியையும், கடல் அரசியையும், இளவழுதியையும் அழைத்துவர சேரநாட்டுக்கு அனுப்பினார்” என்றான் அஹமத்

“இளவழுதியின் வீரத்தைப் பற்றி அரபு நாட்டில் பெரிய பரவியிருக்கிறது. அதனால் இளவழுதியைக்கொண்டே என் அரசை மீட்க மாமா தீர்மானித்தார்” என்று விளக்கினான் அஹமத்.

மன்னர் உவகையும் பெருமிதமும் கலந்த பார்வையை இளவழுதிமீது வீசியதன்றி, “இளவழுதி! உன்னால் சேரநாட்டு மதிப்பும் வீரமும் பிறநாட்டில் பரவுவதைக் கேட்க நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சேரநாடு உனக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறது. இனிமேல் அதன் நிர்வாகத்தில் உனக்குப் பங்கிருக்கும்” என்றும் கூறினார் சொற்களில் பெருமிதம் ஒலிக்க,

பதிலுக்கு இளவழுதி தலைதாழ்த்தி மன்னருக்கு நன்றி தெரிவித்தான். அப்பொழுது மஸ்தானா இளவழுதியை அணுகி அவன் கையைப் பிடித்து, “வாருங்கள் போகலாம்!” என்ற அழைத்தாள்.

‘’எங்கு?” வியப்புடன் வினவினான் இளவழுதி

‘’அரேபியாவுக்கு அழைப்பு வந்திருக்கிறது’’

“அழைப்பது யார்?”

வேற யார்? என் தந்தைதான். மதகுரு” என்றாள் மஸ்தான

‘’ஆம்! அவர்தான் அழைக்கிறார். போய்வா இளவழுதி” என்று மன்னரும் சொன்னார்.

மன்னவா! தங்களுக்கு எப்படித் தெரியும். எங்கோ இருக்கும் அவர் அழைப்பது?”

‘’இப்பொழுதுதான் அவர் சொற்கள் என் காதில் ஒலித்தன, இப்பொழுதும் அலை அரசி வருகிறாள் உன்னை அழைத்துப்போக என்றும் மன்னர் கூறினார்,

அப்பொழுது திடீரென கடற்பகுதியில் அலைகளின் இரைச்சல் மிகப் பெரிதாகக் கேட்டது. கடலை சாளரத்தின் மூலம் நோக்கிய மன்னர்,

இதோ அவளே வந்துவிட்டாள்” என்று உற்சாகத்துடன் கூறி கையை கடலை நோக்கிச் சுட்டிக்காட்டினார்.

எல்லோரும் சாளரத்தை நோக்கி ஓடினார்கள்.

அப்பொழுது ஊழிக்காற்று ‘ஓ ஓ’ என்ற சப்தத்துடன் அறைக்குள் நுழைந்தது.

Previous articleAlai Arasi Ch34 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch36 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here