Home Alai Arasi Alai Arasi Ch36 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch36 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

77
0
Alai Arasi Ch36 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch36 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch36 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 36 இரண்டு பரம சுகமும் சேர்ந்தால்

Alai Arasi Ch36 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அரபுக் கடலின் பெரும் கொந்தளிப்பாலும் , அலைகளின் எழுச்சியாலும் ஊழிக் காற்றுப் போல ‘ஓ’ வென்ற சப்தமிட்ட பெருங் காற்றாலும் என்னென்ன உற்பாதகங்கள் ஏற்படுமே என்று மற்றவர்கள் திகிலடைந்தாலும் நெடுஞ்சேரலாதன் மட்டும் சிறிதும் திகிலடையாமல், இந்த திடீர் எழுச்சிக்கு என்ன காரணமாயிருக்கும்?” என்று வினவினார்.

‘’ஹிப்பலாலாயிருக்கலாம்” என்று இளவழுதி தன் கருத்தைச் சொன்னான்.

இனவழுதியின் கருத்தை மன்னர் ஒப்புக்கொள்ளவில்லை இல்லையில்லை. இது ஹிப்பலால் அல்ல. வடக்கை நோக்கி அடிக்கிறது. இது வழக்கமான பருவக் காற்றுதான் இதற்கும் ஹிப்பலாலாக்கும் எதும் சம்பந்தமில்லை” என்று திட்டமாகச் சொன்னார்.

‘’அப்படியானால் இதற்குக் காரணம்?” என்று இளவழுதி கேள்வி தொடுத்தான். மேற்கொண்டு அவன் பேசவில்லை

கடலைச் சுட்டிக்காட்டி, “காரணம் அதோ வருகிறது” என்று மன்னார் கூறினார். இதைக் கேட்டதும் முன்னால் நின்ற இனவழுதி சாளரத்தின் மூலம் கடலை உற்று நோக்கினான். அங்கு ஒரு சிறு விளக்கு மட்டும் தெரிந்தது. “எதையும் காணோமே?” என்று சொன்னான்

“எதுவும் தெரியவில்லை? விளக்கு தெரியவில்லை ?” என்று வினவினார் மன்னர்.

ஹிப்பலாஸ் என்ற யாவனன் எகிப்திலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு கண்டுபிடித்த பருவக்காற்றுக்கு அவன் பெயர் வைக்கப்பட்டது.

‘’சிறு விளக்கு ஏதோ வந்து கொண்டிருக்கிறது வேற ஒன்றும் தெறியவில்லை அந்த விளக்கும் இந்த காற்றில் அணையவில்லை விசித்திரமாக இருக்கிறது வருவது ஒருவேளை மரக்கலமாக இருக்குமோ என்று இளவழுதி கேட்டான்.

இருக்காது மரக்கலத்திற்கு இவ்வளவு சிறிய விளக்குகள் இருக்காது. பெரிய தீப்பந்தங்கள் இருக்கும் அல்லது யவன நாட்டு பெருவிளக்குகள் இருக்கும்” என்று சுட்டிக்காட்டினார் மன்னர்.

அதை ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாக ‘’ஆம்! ஆம்!’’ என்று ஆமோதித்த இனவழுதி, ஒருவேளை பெரும் படகைச் செலுத்துவதற்குக் கூட யாரையும் காணோமே? என்றும் கேட்டான்.

‘’நன்றாக உற்றுப்பார் இனவழுதி படகில் ஓர் உகவம் இருக்கிறது அந்த உருவம் கையைத் துக்குகிறது மேலே என்றும் தான் கண்டதைச் சுட்டிக்காட்டினார் மன்னர்.

இளவழுதியும் உற்று நோக்க, அலைகளின் அத்தனைக் கொந்தளிப்பிலும் அலட்சியமாக நின்றிருந்தது அந்த ஒல்லியான உருவம், அது தன் கையை உயர்த்திய சமயத்தில் கீழிருந்த விளக்கு மெள்ள மேலே எழுந்து அந்த உருவத்தின் கைக்கு சமானமாக நின்றது.

இளவழுதி, சீக்கிரம் அந்தப் படகைப் போய்ப் பார்த்துவிட்டு வா படகிலிருந்து அந்த உருவங்களைக் கீழே இறக்கு இங்கே அழைத்து வா என்று உத்தரவிட்டார் மன்னர்.

“யார் அவர்கள்? தங்களுக்குத் தெரியமா?”

யார் இந்தக் கொந்தளிப்பில் அலட்சியமாக வருவார்கள்? இதைக் கூட யூகிக்க முடியவில்லையா உன்னால்?

“தாங்கள் பூகித்து விட்டர்களா?’’

“ஆகா, யூகித்து விட்டேன். அலை அரசிதான் வருகிறாள் இந்தக் கொந்தளிப்பில் வேறு யாராக இருக்க முடியும் . சீக்கிரம் போய்வா” என்று மன்னன் துரிதப்படுத்தினான்,

இளவழுதியும் தடையேதும் சொல்லாமல் விரந்தான் படகுத் துறைக்கு படகை அவன் நெருங்கும் முன்பு அதிலிதிலிருந்து அலை அரசியே குதித்து அவன் கையைப் பிடித்து வாருங்கள் மன்னரிடம் போகலாம்” என்றாள்.

“இப்பொழுது மன்னரிடம் என்ன வேலை?” என்று இளவழுதி அதிகாரக்குரலில் கேட்டான்

“வாருங்கள், மன்னரிடமே அதைக் கேட்கலாம்” என்ற அவள் அவன் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு மன்னரிருந்த இடத்தை நோக்கிச் சென்றாள்,

அவர்கள் சற்று தூரத்திலிருக்கும்போதே, “வா அலை அரசி வா இளவழுதி, உங்களை இப்பொழுதே அரேபியாவுக்கு அனுப்பி விடுகிறேன் என்று சாளரத்திலிருந்தே இரைந்து பேசினார் மன்னர்.

சாளரத்தை நெருங்கியதும் அலை அரசி கேட்டாள்.

“மன்னவா! இன்றேவா அனுப்பப் போகிறீர்கள்?”

“இல்லை, இப்பொழுதே” என்றார் மன்னர்.

“கடலைப் பார்த்தீர்களா. இதில் யாராவது பயணம் செய்ய முடியுமா?” என்று அலை அரசி வினவினாள்,

மன்னர் முறுவல் செய்து, கொந்தளிப்பில் வந்தவர்களால் திரும்பவும் முடியும்” என்று குரலில் சற்று இகழ்ச்சி தோன் சொன்னார்.

“அதுவும் அலை அரசியால் முடியாது என்றால் வேறு யாராக முடியும்?” என்று மீண்டும் சொன்னார். இம்முனை இகழ்ச்சியில்லை; பாராட்டு இருந்தது குரலில்

“ஏன் இவ்வளவு அவசரம்?’’ என்று அலை அரசி கேட்டாள்,

“மதகுரு உத்தரவிட்டுவிட்டார். இனிமேல் தாமதிக்க முடியாது கிளம்புங்கள்” என்றார் மன்னர்.

‘’மாதகுருவின் பெயரைக் கேட்டதும் யாரும் பேசவில்லை. அலை அரசி கூட மௌனமாகவே நடந்தாள் படகை நோக்கி படகை னெருக்கியதும் முதலில் அவள் அதில் ஏறி இளவழுதியையும் ஏறும்படி சைகை செய்தாள். அவன் எறியதும் அலைகள் அடங்கின காற்றும் திசைமாறி படகை வடமேற்கில் திருப்பிச் சென்றது.

“துடுப்புகள் எங்கே?’’ என்று இளவழுதி வினவினான்.

“எதற்கு?” என்று அலை அரசி கேட்டாள்,

“துழாவிப் படகைச் செலுத்த”

‘’இந்தக் கொந்தளிப்பில் துடுப்பு பயன்படாது. தவிர, படகுக்கும் போய்ச் சேரவேண்டிய இடம் தெரியும். அது தானாகவே போகும்” என்று விளக்கினாள் அரசி.

அப்போது படகின்மீது கயிற்றுச் சுருள் ஒன்று விழுந்தது போன்ற பிரமை ஏற்பட்டது இளவழுதிக்கு அடுத்து படகு அசுர வேகத்தில் சென்றது – கடல் நீரைக் கிழித்துக் கொண்டு. அலையின்மீது தாவித்தாவி அதன் வேகத்தைக் கண்டு இளவழுதி பிரமித்துப் போனான். அலை அரசி மட்டும் கீழே குனிந்து எதையோ ஒரு பாத்திரத்தை எடுத்து இளவழுதியிடம் கொடுத்து, உங்களுக்கு உணவிருக்கிறது, புசியுங்கள்” என்றாள். “அடுத்த உணவு பஸ்ராவில்” என்றும் கூறினாள்.

இளவழுதி பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து மெள்ள புசித்து, மீதியை பாத்திரத்துடன் அலை அரசியிடம் நீட்டி, “இந்தா நீ சாப்பிடு” என்றான்.

“எனக்கு வேண்டாம்.”

“பட்டினி கிடக்கப் போகிறாயா?”

“இல்லை .”

“வேறு எதைச் சாப்பிடுவாய்?”

“காற்று நிரம்ப வருகிறது. வாயு பட்சணம்” என்றாள்.

இரவு மெள்ள மெள்ள போய்க்கொண்டிருந்தது. படகு திடீரென மேலே எழுந்து கவிழ்ந்துவிடும் நிலைக்கு வந்தது.

“கீழே ஏதோ திமிங்கிலமோ பெரிய சுறாவோ வந்திருக்கிறது’’ என்று காரணம் காட்டினாள் அலை அரசி,

‘’அப்படியானால் நமது கதி என்ன?” என்று இளவழுதி வினவினான்.

“நமக்கு எந்த ஆபத்தும் வராது. நம்மை மதகுரு பஸ்ராவிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்” என்று சமாதானம் சொன்னாள் அலை அரசி.

“அவருக்கு கண் இவ்வளவு தூரம் தெரியுமா?” என் சந்தேகத்துடன் கேட்டான் இளவழுதி,

அவள் சொன்னாள். “வெளிக்கண் தெரியாது. உட்கம் தெரியும். அதனால் உலகம் முழுவதும் அவரால் இருந்த இடத்திலிருந்தே பார்த்தும் செயல்படவும் முடியும், மதகுரு சாமான்யன் அல்லரங்” என்ற அலை அரசி அலட்சியமாக படகில் உட்கார்ந்து லேசாக தலையை ஒருபுறம் சாய்க்கவும் முற்பட்டாள்.

அவள் தலையை பிடித்துத் தன் மடியில் படுக்க வைத்துக்கொண்ட இளவழுதி, ”மிகவும் அலுத்திருக்கிறாய், சூழ்நிலையும் பயங்கரமாய் இருக்கிறது. கண்ணை மூடி உறங்கு. உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவள் முதுகில் தனது கையால் ஆறுதலாகத் தடவிக் கொடுத்தான். அவனுக்கு பதில் சொல்லவில்லை. மேற்கொண்டு சரசத்துக்கும் கொடுக்கவில்லை கையை எடுத்து அப்புறம் தள்ளினாள்.அவன் கை விழுந்த இத்தில்ட நன்றாக சுருட்டப்பட்ட கயிறு இறுந்தது ஆகையால் கயிறு ஏற்கனவே உண்மைதான் என்றும் தீர்மானித்து கயிற்றுச் சுருளை கையில் எடுத்துக் கொண்டான்,

‘’அலை அரசி, இதோ கயிறு இருக்கிறது” என்றும் சொன்னான்,

“கயிறு எதற்கு?” அவன் குழைந்தாள்.

என்னைக் கட்டிப்போட” என்றான் இளவழுதி

‘’உங்களைக் கட்டிப்போட கயிறு தேவையில்லை” என்றாள் அவள் “கயிற்றைவிட பலமான வசதி இருக்கிறது” என்று கூறியவண்ணம் தனது இரு கைகளையும் அவன் கழுத்தில் சுற்றி மெள்ள இறுக்கினாள் அவனும் திமிறாமல் அவளின் கைகளின் உடே தன் கழுத்தையும் தலையையும்கூட உருட்டினான். அப்படி உருண்ட தலை சற்று கீழே வரவே இரண்டு தலையணைகளிலும் புதைந்து ஆசுவாசப் பெருமூச்சுவிட்டான் இளவழுதி

அவளும் திடீரென ஒரு திரும்பு திரும்பி அவன் தலையை தன் மார்பில் இறுக அணைத்துக்கொண்டாள்.

“இப்பொழுது எப்படியிருக்கிறது… சுகமா?” என்று கேட்டாள் அவள்.

“பரம சுகம்” என்றான் அவன்.

தலையை லேசாகத்திருப்பி, அவள் வலது மார்பின் முகட்டில் வைத்து, “இப்பொழுது எப்படி இருக்கிறது?” என்று கேட்கவும் செய்தான்.

அவளும் “பரம சுகம்” என்று அவன் சொன்ன சொற்களையே திருப்பினாள்.

“இரண்டு பரம சுகமும் சேர்ந்தால் சொர்க்கம்” என்றான் அவன்,

“சொர்க்க வாயில் திறந்துதான் இருக்கிறது” என்று அவள் சொல்லி நகைத்தாள்.

அவன் மெள்ள குனிந்து அவள் இதழ்களை தனது இதழ்களால் மூடினான். அவள் உணர்ச்சிப் பெருக்கால் அசைந்தாள் அவனும் உணர்ச்சி மேலீட்டால், ”அரசி! அரசி!” என்று இருமுறை முனகினான்,

அப்பொழுது அரசியின் மேலாடை அறுந்து அவன் முகத்தில் திரும்பத் திரும்ப தடவியதால் அவன் எழுந்து உட்கார்ந்த அந்த ஆடையை சரிப்படுத்த முயன்றான்,

”இங்கு யாருமில்லை” என்று சுட்டிக்காட்டிய அவள் ஆடையின் தலைப்பை எடுத்து தனது இடையில் சொருகிக் கொண்டாள் வானத்தில் ஓடிய பிறைச்சந்திரன் அவள் சைகை பயன் அளிக்கவில்லை என்பதை நிரூபிக்க நன்றாகவே தனது கதிர்களை அவளின் உடலின்மீது பாய்ச்சினான். சந்திரனின் அந்த வெளிச்சத்துக்குக்கூட அவள் பூவுடல் அதிக மெருகுடல் பிரகாசித்தது. அவன் கைப்பட்ட இடங்களில் மட்டும் சிறிய இரத்தம் பாய்ந்தது. சில இடங்கள் சிவப்பாகவும், சில இடங்கள் வெண்மையாகவும் இருந்ததால் அவள் ஒரு தாமரைக் தடாகம் போல் தோன்றினாள். இளவழுதி மேற்கொண்டு உணர்ச்சிவசப்பட்டாலும் செயல் படாமல் படகில் அவள் பக்கத்தில் படுத்து, காலை நன்றாக நீட்டிக் கொண்டான்.

“அரசி! நீயும் உறங்கு. நானும் உறங்குகிறேன். காலையில் பேசிக்கொள்வோம்”

”அதற்குள் உறக்கம் பிடித்துவிட்டதா?” என்று அவள் கேட்டாள்

“உறக்கம் வராது, வரும் நேரமுமல்ல இது.”

“வேறு எதற்கு நேரம்?”

அவன் அவள் கழுத்தில் தனது உதடுகளைப் புதைத்து. “சொல்லத் தெரியவில்லை’’ என்றான்.

அவள்,சொல்லித் தெரிவதில்லை” என்று கூறியதுடன் தனது மார்பை அவனை நோக்கித் திருப்பி, அவன் மார்பிலும் அழுத்தி, ஒரு கையால் அவன் கழுத்தை வளைக்கவும் செய்தாள்.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அவன் கொண்டான். அடுத்த சில விநாடிகள் அவன் கையில் அவள் பூவுடல் இருந்தது. அவளைத் தூக்கி தன் மார்புமீது கிடத்திக்கொண்டான். ”இயற்கையின் சக்தி அமானுஷ்யமானது! என்றும் சொன்னான்.

அவள் சொன்னாள்: ”மனிதன், மனிதனாகத்தான் இருக்க வேண்டும், அவனுக்குரிய கடமைகளைப் புரிய வேண்டும்.”

“என்ன கடமைகள்?” அவன் வினவினான்.

‘’சொல்வத் தெரியவில்லை” என்று அவன் பாடத்தையே திருப்பிப் படித்து, ‘இதற்கு உபாத்தியாயர் தேவையில்லை” என்றாள்,

“எதற்கு?” என்று அவன் கேட்டான்.

“நாளை தெரியும்” என்றாள் அவள்.

“எப்படி?” அவன் கேட்டான்.

“நான் சொல்லித் தருவேன். நான் உபாத்தியாயர் பதவியை ஏற்றுக்கொள்வேன்” என்றாள்.

போதனை மறுநாள்வரை காத்திருக்கவில்லை. அன்றிரவே, அந்தப் படகிலேயே துவங்கி விட்டது கடலரசன் உதவியால் திடீரென எழுந்த ஓர் அலை படகை ஒரு ஆட்டு ஆட்டவே, அலை அரசியின் உடல் பக்கவாட்டில் திரும்பி இளவழுதியின் உடலுடன் பதிந்தது.

அப்புறம் போதனை நிற்கவில்லை. வெகு வேகமாகத் தொடர்ந்தது. வன்னி மரக்கட்டைகள் இரண்டு உராய்ந்தால் தீப்பொறிகள் கிளம்புவதுபோல் அவர்கள் இருவரின் உடல்களில் இழைப்பினால் உணர்ச்சிப் பொறிகள் பறந்தன போதனை திடீரென சூடு பிடித்து உச்சஸ்தாயிக்குச் சென்றுவிட்டது இருவரிடமிருந்தும் பாம்பு சீறுவதுபோல் ‘உஸ், உஸ் பெருமூச்சு எழுந்தது.

Previous articleAlai Arasi Ch35 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch37 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here