Home Alai Arasi Alai Arasi Ch37 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch37 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

229
0
Alai Arasi Ch37 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch37 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch37 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 37 மின்னல்வேக நிகழ்ச்சிகள்!

Alai Arasi Ch37 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

உணர்ச்சித் தீப்பொறிகள் இருவர் உடலினின்றும் பாய்ந்து சென்றன அவற்றை அணைக்கவோ என்னவோ கடலின் பக்க்கவாட்டில் எழுந்த ஒரு பெரிய அலை, நீர்த்திவலைகளை அவர்கள் மீது அள்ளித் தெளித்தது.

இளவழுதி தன் மேல்துணியால் அவள் நனைந்த உடலைத் துடைக்க ஆரம்பித்தான். சில சமயங்களில் ஆடையில்லாமல் அவனுடைய கையே அவளுடைய உடலைத் துருவித் துருவித் துடைத்தது.

அவன் ஏதோ செயல்பட முயன்றபோது, “நாளை ஆகட்டும்” என்ற அலை அரசி தன்னை விடுவித்துக் கொண்டாள் இருவருக்கும் அலுப்பு அதிகமாகவே அசதி ஆட்கொண்டு அவர்கள் கண்களை மூடினர்,

பொழுது விடியும் சமயத்தில் அலை அரசியின் வயிற்றுக்கருகில் ஏதோ நீண்டு வளைந்து அழுந்தவே அவள் திகிலுற்று ‘ஐயோ’வெனக் கூவினாள். அதனால் சரேல் என்று எழுந்த இளவழுதி, “என்ன விஷயம்?” என் வினவினான்.

அவள் தன் வயிற்றைச் சுட்டிக்காட்டினாள். அதன் மீது சுறாமீன் – ஒன்று வழவழப்பாக ஒரு ஜாண் நீளத்திற்கு படுத்திருந்தது. “ஓ! மீன்தானா?” என்று ஏமாற்றக் குரலில் அவள் கேட்டாள். “வேறு எதை எதிர்பார்த்தாய்?” என்று அவன் வினவினான்

அவள் முகத்தில் விவரிக்க இயலாத நாணம் நிலவியது. ‘எதை? எதை?’ என்று தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

தெரிந்தும் சொல்ல இயலவில்லை அவளால் இயலவில்லையா? துணிவில்லையா?

சென்றமுறை சகல வசதிகளுடன் கூடிய மரக்கலப் பயணம்போல் இம்முறை இல்லாவிட்டாலும், திறந்த படகிலேயே பயணம் செய்ய நேரிட்டதாலும் எந்தவித அலுப்போக களைப்போ இல்லாமலேயே பயணம் நடந்தது. தனிப்படகில் செய்தாலும்கூட, பயணத்துக்கு வேண்டிய சகல வசதி அலை அரசி வந்திருந்ததால் புதுமணத் தம்பதிகள் தனிக்குடிதனம் நடத்துவதுபோல அடுத்த பதினைந்து நாள் பயணமும் நடந்தது.

உணவு தயாரிக்க வேண்டிய சாமான்கனை ஒரு மரப்பெட்டியில் வைத்து படகின் ஒரு மூலையில் அலை அரசி வைத்திருந்தாள். சமைப்பதற்கு அவள் கொண்டு வந்திருந்த சின்ன விளக்கையே இரண்டு செங்கல்லுக்கு மத்தியில் வைத்து அடுப்பை உண்டாக்கிக் கொண்டாள். சமையலுக்குச் சரியாக ஏதுமில்லாதபோது படகுக்குக் குறுக்கே தனது கையை வெளியே நீட்டுவாள். அலை ஒன்று அப்போது எழுந்து அதிலிருந்து ஒரு வழவழத்த மீன் முதல் நாள் போலவே அவள் கையில்வந்து விழும். அதைப் பிடித்து விளக்கில் வாட்டி பதம் செய்து படைத் தலைவனுக்குக் கொடுப்பாள். அவனும் அதை உண்டு முகத்தில் மகிழ்ச்சிக்குறி காட்டுவான்-தான் உண்டது போக மீதியுள்ள மீனை அவளிடம் நீட்டுவான். அவள் அதை வாங்கி உண்பாள். அப்படி உண்ட ஒரு சமயத்தில்,

“நீ என் மனைவியின் ஸ்தானத்துக்கு வந்துவிட்டாய். “

“என்ன? எப்படி?” என்று கேட்டாள் அவள்.

“நான் உண்ட உணவில் மீதியை நீ சாப்பிடுகிறாய் அல்லவா?” என்றான் அவன்.

“அதனால்?” ஏதும் புரியாமல் வினவினாள் அவள்.

”கணவன் உண்டது போக மீதியை மனைவிமார் உண்பது எங்கள் நாட்டுப் பழக்கம்” என்று இளவழுதி சுட்டிக்காட்டினான்.

“எங்கள் நாட்டில் அது பழக்கமில்லை ” என்றாள் அவள்.

“பழக்கப்படுத்திக் கொள் மீனாட்சி” என்றான் இளவழுதி.

‘’மீனாட்சியா, அது என்ன?” அலை அரசி கேட்டால்.

“உன் பெயர் நான் வைத்தது” என்றான் இளவழுதி புன்சிரிப்புடன்.

“உங்கள் நாட்டில் கணவர்கள் மனைவிமார்களுக்கு பெயர் வைப்பது ஒரு பழக்கமா?” என்று வினவினாள்.

‘’இல்லை அது உனக்குப் பொருத்தமாயிருக்கிறது என்று பெயர் வைத்தேன். மீனை நீ ஆட்சி செய்கிறாய். கையை நீட்டினால் அது வந்து விழுகிறது. கையை நீட்டாவிட்டாலும் மேலே வந்து வயிற்றைத் தழுவுகிறது” என்று கூறி வயிற்றைத் தடவி மீனை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

இந்தா, இதை வைத்துக்கொள்” என்றான்.

அவள் அதை கையில் வாங்கிக் கடலில் எறிந்தாள், ‘’வேண்டும்போது கூப்பிட்டுக் கொள்ளலாம் சொன்னாள்.

‘’சரி மீனாட்சி’’ என்ற இளவழுதி அவள் கண்களின் இமைகளை சிறிது பார்த்து, ”இவையும் மீன்களைப் போலத்தான் இருக்கின்றன. ஏன், நீயே ஒரு வாளை மீன்போல்தான் இருக்கிறாய்!” என்று கூறி அவள் உடலைத் தடவி, “என்ன வழவழப்பு! என்ன மென்மை!” என்று உற்சாகத்துடன் சொன்னான்.

“அப்படியானால் என்னையும் சாப்பிட்டு விடுவீர்களா?” என்று அவள் கேட்டு நகைத்தாள்.

“சாப்பிடுவேன், உரிமையைப் பெற்ற பிறகு, அதுவும் அங்கம் அங்கமாக சுவைத்துச் சாப்பிடுவேன். பஸ்ரா வரட்டும், உன் தந்தையிடம் கேட்டு உரிமை பெறுகிறேன்” என்றான்.

“என் தந்தை உங்களைக் கொன்று விடுவார். என்னை எந்த ஆண்மகனும் தொடுவதையோ, என்னிடம் உரிமை கொண்டாடுவதையோ அவர் விரும்புவதில்லை” என்று சொன்ன அவளது குரலில் துன்பம் தோய்ந்து கிடந்தது.

ஆனால் பஸ்ராவை அவர்கள் அடைந்தபோது அப்படி ஏதுவும் நடக்கவில்லை . முதல் தடவை போலவே மதகுரு துறைமுகப் பாறையில் நின்றிருந்தார். எதையோ இழுப்பதுபோல கையை அடுத்தடுத்து நீட்டி இழுத்துக் கொண்டிருந்தார். படகு அவர் இழுத்த திசையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

“தந்தை நமது படகை இழுக்கிறார்” என்றாள் அலை அரசி

“எதைக்கொண்டு? எப்படி?” என்று இளவழுதி கேட்டான்

“நேற்று வந்து விழுந்த அந்த கயிற்றுச் சுருளைப் பாருங்கள் என்று சுட்டிக்காட்டினாள். அந்த கயிற்றுச் சுருளின் ஒரு நுனி படகின் ஒரு வளையத்தில் சுருக்கிட்டிருந்தது. மீதிச் சுருளையும் இன்னொரு நுனியையும் காணோம். அதைப் பார்த்து மலைக் இளவழுதியை நோக்கி, “இன்னொரு நுனியைப் பிடித்துத் தான் அப்பா படகை இழுக்கிறார்” என்று அலை அரசி அறிவித்தாள்

“இதை முடிச்சுப்போட்டது யார்?” என்று இளவழுதி கேட்டான்

“தானாகவே போட்டிருக்கும், அப்பா ஆணையால்” என்று அவள் விளக்கிய சமயத்தில், அந்தச் சுருக்கும் தானாகவே திடீரென்று அவிழ்ந்து நீரில் விழுந்துவிட்டது. அப்படியும் படகு துறையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

படகு துறையை அடைந்ததும் மதகுருவே இறங்கி அதை இழுத்து, தளையில் பிணைத்தார். படகிலிருந்தவரையும் இறங்கச் சொல்லி, பக்கத்திலிருந்த வண்டியில் ஏறும்படி கூறினார். அலை அரசி சிறிது தாமதிக்கவே, “சீக்கிரம் ஏறு அம்மா! இல்லத்துக்குப் போவோம்” என்று மதகுரு துரிதப்படுத்தினார்.

அவர்கள் அந்தப் பழைய மூன்று மாடிக் கட்டிடத்துக்குப் போனபோது மாலை நெருங்கிவிட்டது.

‘’சரி உள்ளே வா” என்று மதகுரு அழைத்தார்.

‘’அப்பா! நாங்கள் இன்னும் நீராடவில்லை. ஊணவருந்தவில்லை” என்று சொன்னாள் அலை அரசி.

‘’அதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்ற மதகுரு. “இளவழுதி! இவளை அழைத்துப்போய் சுனையில் நீராட்டி நீயும் நீராடி வா” என்றார்.

‘’இவர் எதற்கு அப்பா?” என்று அலை அரசி கேட்டாள்,

‘’நன்றாக நீராட்டுவான். மஸ்தானாவையே நீராட்யிருக்கிறான், அதில் வல்லவன். நீ போய் வா” என்றார்.

இளவழுதி முன்னே நடந்தான். அலை அரசி நாணத்தினால் உடல் நெலிய கால்கள் பின்ன அவனைத் தொடர்ந்தாள். அடுத்து நடந்த சுனையாடலில் பேரின்பத்தைப் பெற்றாள்.

இளாவழுதி அலை அரசியை சுனையில் நீராட்ட அழைத்துச் செல்லும் சமயத்தில் மதகுருவே வந்து. ”அப்பா இவள் உன் மனைவி என்பதை நினைவில் வைத்துக்கொள். அவளை ஜாக்கிரதையாகக் குளிப்பாட்டு, அவள் கோபித்துக் கொண்டு எங்கேயாவது ஓடிவிடப் போகிறாள்” என்று எச்சரித்தார்.

இளவழுதி மிகுந்த வியப்பை முகத்தில் காட்டி, ”இவள் என் மனைவியா?” என்று வினவினான் வியப்பு குரலிலும் ஒலிக்க

“ஆமாம்!” என்றார் மதகுரு அலட்சியக் குரலில்

இதற்கு என் சம்மதம் தேவையில்லையா?” என்று சற்று எதிர்ப்பைக் காட்டினான் இளவழுதி.

“யார் சம்மதமும் தேவையில்லை. என் தீர்ப்புதான் இந்த விஷயங்களில் முடிவானது. மஸ்தானாவை உனக்குக் கொடுத்தேனே யாரைக் கேட்டுக் கொடுத்தேன். உன்னைக் கேட்டா, அவளைக் கேட்டா?” என்றார்.

“ஏன் கொடுத்தீர்கள்?” என்று இளவழுதி வினவினான்

‘’நிகழ்ச்சிகள் நான் எதிர்பார்த்ததைவிட துரிதமாக முன்னேறிவிட்டன. நீ இங்கு வந்த மறுநாள் விடியற்காலையில் மஸ்தானாவைத் தழுவி நிற்பதைக் கண்டேன் அவளும் வியப்பைக் காட்டவில்லை. அப்பொழுது அவளும் தூய்மைப்படுத்த இருந்த ஒரே வழி அவளை உனக்குக் கொடுப்பதுதான் என்று தீர்மானித்தேன்” என்றார்,

“எனக்கு இரண்டு மனைவிகள் எதற்கு?” என்று வினவினான் இளவழுதி,

மதகுருவின் பதில் அவனைத் தூக்கிவாரிப் போட்டது “இன்னொருத்தியும் இருக்கிறாளே அவளை என்ன செய்வது கடலரசியை யாரிடம் தள்ளச் சொல்கிறாய்?” என்று எரிந்து விழுந்தார் மதகுரு.

“அவளும் எனக்குத்தானா?” என்று சற்று தழுதழுத்த குரலில் இளவழுதி கேட்டான்,

“இங்கு வேறு யார் இருக்கிறார்கள்?” என்று கேள்வியைத் தொடுத்தார்.

“ஏன் அஹமது இல்லையா? மஸ்தானாவுக்கு மாமன் முறை என்று மறுபடியும் கேட்டான் இளவழுதி,

“மஸ்தானாவுக்கு ஐந்து பேர் மாமன்மார்கள் இருக்கிறார்கள் அத்தனை பேருக்கும் அவளைக் கட்டிக் கொடுக்க முடியுமா? என்று மதகுரு விசாரித்தார்.

“உங்கள் தீர்ப்பை யார் எதிர்க்க முடியும். முடியாது என்று நீங்களே சொல்வதில்லையா? ஆகையால் அந்த ஐந்து மாமன்களுக்கும் மஸ்தானாவைக் கொடுப்பதை யார் தடுக்க முடியும்?” என்றான் இளவழுதி,

அப்படியானால் ஒன்று செய்வோம் மஸ்தானாவை மட்டும் நீ கட்டிக்கொள். மற்றவர்களை அவர்கள் இஷ்டப்படி விட்டுவிடுகிறேன்” என்றார் மதகுரு.

அதுவரை மவுனமாயிருந்த அலை அரசி, “நீங்கள் யாரை எப்படி விட்டாலும் இவர்தான் எனக்கு மனாளர்’ என்று இளவழுதியைச் சுட்டிக் காட்டினாள்.

மதகுரு மெள்ள நகைத்தார். “அந்தப் பைத்தியம் மஸ்தானாவும் இதையே சொல்கிறாள். தமிழா, உன்னிடம் ஏதோ தனிக்கவர்ச்சி இருக்கிறது பெண்களுக்கு நீ விளக்கு அவர்கள் விட்டில்கள்” என்று சிலாகிக்கும் முறையில் பேசினார்.

”மதகுரு, அப்படியேதுமில்லை, இது உங்கள் கற்பனை என் திருமண விஷயத்தை நான் எனது நாடு திரும்பியதும் தீர்மானிக்கிறேன்” என்று கூறினான்.

முடியாது தமிழா! முடியாது. உன் விஷயம் ஏற்கனவே தீர்மானமாகிவிட்டது. அதிலிருந்து நீ தப்ப முடியாது. நான் சம்பத்தபட்டவரை மூன்று மனைவிமார்கள் உனக்கு நிச்சயம். இவளை சீச்சிரம் குளிப்பாட்டி அழைத்து வா. மற்றவற்றைப் பிறகு பேசிக் கொள்வோம்” என்றார்.

இளவழுதி, ”வா அரசி!” என்று அவளை உரிமையுடன் கையைப் பிடித்து அழைத்து சுனையை நோக்கி நடக்கலானான்.

ஆனால் சுனையில் அன்று நீராடுவது அத்தனை சுலபமாயில்லை . புரவிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் சுனைக்குள் நுழைவதே கஷ்டமாயிருந்தது. இளவழுதி அரசியைத் தூக்கித் தோள்மீது போட்டுக் கொண்டு, புரவிகளினூடே மெதுவாக நடந்து சென்றான். கொஞ்சம் இடம் அகப்பட்டபோது அவளைக் கீழே இறக்கி சுனை நீரை அவள் மீது வாரி இறைத்தான். அவள் மெல்லிய உடலைத் தனது வலது கையால் துழாவித் துழாவி தேய்த்தான். சில இடங்களில் அவன் கை பட்டபோது அவள் ஒதுங்கினாள்,

அந்த சமயத்தில் அவன் முற்றும் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. மதகுருவின் செல்லப்புரவி பக்கத்திலிருந்த பெரு மலையிலிருந்து வேகமாக ஓடிவந்து சுனையில் நுழைந்த, அரசி மீது இடித்துக்கொண்டு நின்றது. பல்லால் அவள் சேலையையும் பற்றியது. அரசி அதன் மீது அநாயசமாகத் தாவி ஏறி உட்கார்ந்து கடிவாளக் கயிறுகளைப் பிடித்துக்கொண்டாள். அடுத்த சில விநாடிகளில் அது திரும்பி மலையை நோக்கிப் பாய்ந்து, சில விநாடிகளுக்குள் புரவி, அரசி இருவருமே கண்ணுக்குத் தெரியவில்லை. அவள் போன திக்கை ஏறெடுத்து நோக்கினாள் இளவழுதி.

மலையடிவாரத்தில் ஒரு பெரிய அடர்த்தியான தோப்பு ஒன்றிருந்தது. அடுத்த சில விநாடிகளில் அந்தத் தோப்பினூடே அலை அரசி வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். இளவழுதியும் இன்னொரு புரவிமீது தாவி ஏறி, எப்படியும் அவளை அழைத்து வரவேண்டும் என்ற தீர்மானத்துடன் மலையை நோக்கி புரவியைத் தட்டி விட்டான். புரவியும் அவன் கருத்தை அறிந்து கொண்டது ‘போல் மலையை நோக்கிப் பறந்தது.

ஆரம்பத்தில் அடர்த்தியாய் இருந்த தோப்பு போகப் போக மரங்கள் குறைந்து, மரங்கள் அடியோடு இல்லாத ஒரு சதுக்கம் தெரிந்தது. அந்தச் சதுக்கத்தில் அவன் கண்ட காட்சி கோரம் . கோரம்.

அங்கிருந்த ஒரு நடுப்பாறையில் அலை அரசி? கயிறுகள் கொண்டு பிணைக்கப்பட்டிருந்தாள். இரண்டு காட்டு மிராண்டிகள் இரண்டு பக்கங்களிலும் நின்று அவள் ஆடையை நீக்கிக் கொண்டி ருந்தார்கள். அதற்கு மேல் பொறுக்க முடியாத இளவழுதி,

“யாராட! நில் நில்” என்று கூவிக்கொண்டு அரசியிருந்த இடத்தை நோக்கித் தனது புரவியை ஒட்டினான்.

அடுத்து மின்னல் வேக நிழ்ச்சிகள் துவங்கின.

Previous articleAlai Arasi Ch36 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch38 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here