Home Alai Arasi Alai Arasi Ch38 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch38 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

74
0
Alai Arasi Ch38 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch38 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch38 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 38 கண்களைக் கொத்திய யமப்புறா!

Alai Arasi Ch38 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசியைப் பிடித்துக் கட்டியதன்றி, அவளது ஆடையை கிழிக்க முற்படுவதை கண்டதும் தான் அமர்ந்திருந்த புரவியை தோப்பு முகப்பில் நிறுத்தி, அதன்மீது சற்றே விறைத்து உட்கார்ந்தான்,

அரசியை பிடித்து கட்டியவர்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாய் இருந்ததைக்கண்டாலும், யாரென்று தெரியாததால் சிறிதே சிந்தனையில் இறங்கினான். இப்படியொரு காட்டுமிராண்டி ஜாதியார் ஆசியா மைனரிலிருந்து கிளம்பி, முதலில் யவனத்திலும் பிறகு பாரதத்திலும் நுழைந்து, கிராமங்களைக் கொளுத்தியும் பயிர்களை நாசம் செய்தும். மக்களை வெட்டி வீழ்த்தியும், தாங்கள் சென்ற இடமெல்லாம் பெரும் நாசத்தை ஈவு இரக்கமின்றி விளைவித்தார்கள் என்பதையும் கேட்டிருந்தானாகையால், இதுவும் அந்தக் கும்பலில் ஒரு பகுதியே என்று நினைத்தான்,

ஆணால், சிறிது நேரத்தில் அப்படியிருக்காது என்ற முடிவுக்கு வந்தான். அதற்குக் காரணம் அங்கு வந்த காட்டுமிராண்டிகளின் தோற்றமே! மேற்படி நாடுகளில் நுழைந்த நாடோடிகளுக்கு ஹீணர்கள் என்று பெயர் என்றும், அவர்களில் கருப்பு ஹீணர்கள், வெள்ளை ஹுணர்கள் என்று இரண்டு பிரிவு இருந்ததையும் அவன் கேள்விப்பட்டிருந்தான். இங்கு வந்தவர்களோ மாநிறமாகவும், அதிகமாக சடைபோட்ட குழல்களுடனும் இருந்ததைக் கவனித்தான். இப்படி அவன் ஆராய்ச்சியில் இருக்கையில், அரசியின் மேலாடை அடியோடு கிழிக்கப்பட்டு விட்டபடியால், அவள் மேலழகுகள் பகிரங்கமாகத் தெரிந்தன. அத்துடன் திருப்தி அடையாத அந்தக் காட்டுமிராண்டிகள் வெறியுடன் கூச்சலிட்டுக் கொண்டு அவளது ஆடையின் மிகுதியையும் கிழிக்க முற்பட்டனர். அவர்களில் நால்வர் முக்கால் நிர்வாணத்தில் இருந்த அவளைத் தூக்கவும் முற்பட்டனர் அதுவரை காத்திருந்த இளவழுதி நிதானத்தை அடியோடு இழந்து தனது வாளை உருவிக்கொண்டு, புரவியின் விலால் இடது காலால் பலமாக உதைத்தான். சாதாரணமாகத் தட்டினாலே பறக்கக்கூடிய அந்த ஜாதிப்புரவி, அவன் காலால் உதைக்கப்பட்டதும் அம்பு போல் கிளம்பி அந்தப் புரவிகளின் நடுவில் பாய்ந்து விட்டது. அந்தப் பாய்ச்சலினாலும் அது முட்டியதாலும் இரு கொடியவர்கள், இரு பக்கங்களிலும் மல்லாந்து விழுந்துவிட்ட அதே சமயத்தில் இளவழுதியின் பம்பரம்போல் சுழன்று இரண்டு மூன்று தலைகளையும் மணலில் உருளச் செய்து விட்டதால், மணலும் ஆசையுடன் அவர்கள் குருதியை உறிஞ்சிக்கொண்டு, பயங்கரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியது.

தலை இழந்த முண்டங்கள் தள்ளாடித் தள்ளாடி அங்குமிங்கம் போய்க்கொண்டிருக்கவே தலைகள் மட்டும் தண்ணீருக்க உருண்டோடி சுனைநீரைப் பருகலாயின. கோரக்காட்சிகளிடையே அரசிக்கு அருகில் வந்து விட் இளவழுதி, தனது இடது கையை கீழே கொடுத்து அவள் இடையைப் பிடித்து, மேலே தூக்கிப் புரவியில் தனக்கு முன்பாக உட்கார வைத்துக் கொண்டான். அந்தக் காட்சியைக் கண்ட மற்றும் சில கொடியவர்கள் அவனை நோக்கி ஓடி வரவே, அவன் தனது இடையிலிருந்த குறுவாள்களை எடுத்து ஒவ்வொன்றாகக் குறிபார்த்து வீச, ஒவ்வொரு வாளுக்கும் ஒருவன் பலியாகி, பலர் மல்லாந்து மலைப்பாறையில் விழுந்தார்கள். குறுவாள் மார்பினில் தைத்து செங்குத்தாய் நிற்க, குருதி இருபுறமும் வழிந்தோட, அதைக் கண்டுவிட்ட தோப்பிலிருந்த சில கழுகுகள் ஜிவ்வென்று பறந்து வந்து அந்த சடலங்களின் மேல் உட்கார்ந்து, காயம்பட்ட இடத்தில் அலகுகளால் குத்தி குத்தி அவர்களை ருசி பார்த்தன.

அப்போது அங்கு வந்த மதகுரு தன்னுடன் வந்த நாலைந்து புரவி வீரர்களிடம் மற்ற கொடியவர்களை இழுத்து வருமாறு ஏவினார்.

அன்றிரவு தனது குடியிருப்பைச் சுற்றிலும் பெரிய காவலையும் ஏற்படுத்தினார். சுமார் இருபது வீரர்கள் அவர்கள் குடியிருப்பைச் சுற்றிக் காவல் செய்தார்கள். முதலில் அனுப்பப்பட்ட வீரர்கள் கூட்டமாகச் சில கொடியவர்களைப் பிடித்துக் கொண்டுவர மதகுரு விசாரணை நடத்தினார். சிலரை கழுகுகளுக்கு இரையாகப் போட உத்தரவிட்டார். இன்னும் சிலரை பாலைவன மணலில் கழுத்து வரை புதைத்து சாகும்வரை அங்கேயே விட்டு விடும்படி தீர்ப்பும் அளித்தார்.

அதைப் பார்த்து அரசி, “அப்பா! இது கொடுமையல்லவா?” என்று வினவினாள்.

உன்னைப் பாறையில் கட்டி ஆடைகளைக் கிழித்த போது இவர்கள் யோசித்தார்களா? சில தண்டனைகள் எல்லாம் சிலருக்குப் புரியும்” என்று தமது தண்டனைகளுக்குச் சமாதானம் சொன்னார்.

மற்றவர் யாரும் அந்த சமாதானத்தை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இளவழுதி மட்டும், “மதகுரு சொல்வதில் தவறில்லை ” என்றான்.

மதகுரு மகிழ்ச்சிப் புன்முறுவல் காட்டினார். “இளவழுதி! உன்னுடைய மனையாட்டியை அவமானம் செய்தவர்களை நீயே கொன்று விட்டாய். அவர்களுக்கு அத்தகைய வீரமரணம் சரியில்லை. எதற்கும் நீ அவர்கள் தோப்புக்குள் சென்று அங்கு யாராவது பெண்கள் இருந்தால் பிடித்துவா பழி வாங்குவோம்” என்று மதகுரு கொடிய குரலில் சொற்களை உதிர்த்தார்.

ஆனால் இளவழுதி கிளம்பும் முன்னமே தோப்பிலிருந்து பல நாடோடிப் பெண்கள் ஓடிவந்து மதகுருவின் காலில் விழுந்தனர்

“ஐயா சரணம்! சரணம்!” என்று அபயக்குரல் எழுப்பினார்கள்.

மதகுரு, “தலைவி! ஒருத்தி அவயவங்களால் மட்டும் பெண்ணாவதில்லை. வேறு குணங்களும் தேவை சொன்னால் உனக்குப் புரியாது. இருப்பினும் உங்களை இங்கு யாரும் எந்தவித அவமானத்திற்கும், கொடுமைக்கும் உள்ளாக்கமாட்டார்கள் என்று அபயம் கொடுத்தார்.

“இன்றிரவு நீ என் வீட்டிலேயே தங்கலாம். இளவழுதி உனக்கு காவலிருப்பான், அஞ்சாதே” என்றும் சொன்னார் மதகுரு

இரவும் வந்தது. தோப்பின் முகப்பிலிருந்த மூன்றடுக்கு மாளிகையின் மேலறையில் அவள் தங்க வைக்கப்பட்டாள் இரவு நன்றாக மூண்டதும் மதகுரு, இளவழுதியை நோக்கி, “மஸ்தானா முதல் நாள் இருந்தாளே அதே அறைதான், நீ போகலாம்” என்றார்.

ஆழ்ந்த சிந்தனையுடன் இளவழுதி படிகளில் ஏறிச் சென்றான் அவன் அந்த அறைவாயிலை நெருங்கும் முன்பாக கிரீச் என்று ஓர் அலறல் கேட்டது. அது அரசியின் குரல் என்பதை அறிந்ததும் வேகமாக ஓடினான் இளவழுதி. அவன் அறைவாயிலை அடைந்த அதே சமயத்தில் உள்ளே அந்த காட்டுமிராண்டித் தலைவியின் கைகள் அரசியின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தன.

இளவழுதியைக் கண்டதும் அந்தத் தலைவி, ”அதோ உன் காதலன் வந்துவிட்டான் போ” என்று அரசியைப் பிடித்துத் தள்ள அரசி இளவழுதியின் கைகளில் வந்து விழுந்தாள். இளவழுதியும் தன் இருகைகளால் அவளை நன்றாகத் தழுவி, ஆசுவாசமாக அவள் முதுகையும் தடவிக்கொடுத்தான். பிறகு அவன் உள்ளே சென்றதும் கீழே தரையில் கோரைப்பாய் ஒன்றில் படுத்திருந்த காட்டுமிராண்டித் தலைவி, “வீரனே, வா என்னிடம்” என்று தனது இரு கைகளையும் உயரத் தூக்கி அழைத்தாள்.

இளவழுதி சிறிது தயங்கித் தயங்கிச் சென்றான். அவள், அவன் சென்றதும் அவன் இரு கால்களையும் தனது இரு கைகளால் பிடித்து வளைத்து அவனைத் தன் மீது தள்ளிக் கொண்டாள் இளவழுதி அவளிடமிருந்து தப்ப முயன்றும் முடியவில்லை . இரண்டு முரட்டுக் கைகளும் அவன் கழுத்தை வளைத்து இறுக்கின. இளவழுதியின் மூச்சுத் திணறலாயிற்று.

அவன் மெள்ள எழுந்து வெளியே ஓட முயன்றான் எதிரே வந்த மதகுரு அவன் மார்பைப் பிடித்து, மீண்டும் அந்த காட்டுமிராண் தலைவியின் மீது தள்ளினார். அவள் கரங்குவித்து மதகுருவுக்கு நன்றி தெரிவித்தாள்.

மதகுருவும் “அவனைக் கொன்றுவிடாதே” என்று கெஞ்சினார்.

‘’அஞ்ச வேண்டாம். உயிருடனே அனுப்பி வைக்கிறேன்”என்றாள் மதகுரு போக அனுமதி தந்தாள். மதகுரு இகழ்ச்சியுடன் அவளைப்பார்த்து நகைத்துவிட்டு வெளியேறினார்.

வெளியே நின்று இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்றிருந்த அரசி, ”மதகுரு. தாங்கள் இப்படியா?” என்று வருத்தத்துடன் கேட்டாள்,

“இப்போது என்ன வந்துவிட்டது?” என்று மதகுரு கேட்டார்.

“அவமானம்” என்று வார்த்தையை முடித்த அரசி, “இந்தக் கொடிய செயலுக்கு நீங்கள் அனுமதியளிக்கும் நிலை ஒப்புக்கொள்ளக் கூடியதா?” என்று வினவினாள்,

“நாளை தெரியும் பதில்” என்ற மதகுருவின் குரலில் இளவழுதி அன்றுவரை கேட்டிராத கடுமை இருந்தது.

மறுநாள் அவர் பதில் கொடுத்தபோது அந்த குடில் முழுவதுமே கலங்கிவிட்டது. அத்தகைய கொடுமையை மதகுரு விளைவித்தார் அந்தக் கொடியவளுக்கு. அவளை கழுகுப் பாறை மீது கிடத்திவிட கட்டளையிட்டார். அவருடைய பணிமக்கள் அவளைத் தூக்கிக் கொண்டு போய் கை கால்களையும் பிணைத்துவிட்டார்கள். ஒரு சமயத்தில் பல கழுகுகள் அவள் மீது பாய்ந்து, அவள் உடலில் பல இடங்களையும் கொத்தலாயின. போதாக்குறைக்க அவருடைய யமப்புறாவும் எங்கிருந்தோ தோன்றி அவள் கண்களை குத்திக் கிளறி, விழியை அலகில் எடுத்துக் கொண்டு பறந்தது. மதகுரு தனது வாயிலில் இருந்தபடியே கையை நீட்டினார் அந்தப் புறா விழியை அவர் கையில் போட்டுவிட்டு மீண்டும் பாறையை நோக்கிப் பறந்தது. அடுத்த சில விநாடிகளில் இன்னொரு விழியும் மதகுருவிடம் வந்து சேர்ந்தது.

அந்த இரண்டு விழிகளையும் இரு கைகளிலும் மாறி மாறித் தாக்கிப்போட்டு சோழி விளையாடுவதுபோல் வேடிக்கைக் காட்டினார். இளவழுதி அந்த விழிகளை தான் வாங்க்கிக் கொண்டான். காட்டுமிராண்டித் தலைவி குற்றுயிராய்க் கிடந்தாள்.

“இளவழுதி, அவற்றை ஜாக்கிரதையாய் வைத்திரு சமயத்தில் உபயோகப்படும்” என்றார் மதகுரு.

அந்த சவவிழிகள் எந்த சமயத்தில் எப்படிப் பயன்படும் என்று புரியாததால் சிரித்தான்.

மதகுரு அந்த இரு விழிகளை தனது கையில் வாங்கிக் கொண்டு, தனது வாயால், ‘ப்பூ… ப்பூ’ என்று ஊதினார்.

“இதை உன் வேந்தனிடம் கொடு, அவனுக்குப் பயன்படும்’’ என்று சொன்னார்.

இளவழுதி கண்களைத் தனது கச்சையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

“கண்பார்வை இழந்த யாரிடமும் இதைக் கொடு. பார்வை இழந்த கண்களைத் தோண்டிவிட்டு இவற்றை அந்த இடத்தில் வைத்தால் பார்வை கிடைக்கும்” என்றார் மதகுரு.

அவர் சொன்னதை நம்பவில்லை என்றாலும் தலை தாழ்த்தி அவரை வணங்கி கண்களை ஏற்றுக் கொண்டான்.

Previous articleAlai Arasi Ch37 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch39 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here