Home Alai Arasi Alai Arasi Ch4 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch4 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

71
0
Alai Arasi Ch4 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch4 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch4 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 4 எச்சரிக்கை

Alai Arasi Ch4 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

இளவழுதியின் கேள்விகளைக் காதில் வாங்கியதும், ‘திகைப்பு’ என்ற சொல்லுக்குப் பொருள் ஏதாவது உண்டானால் அந்தப் பொருளுக்கு இலக்கணமாக விளங்கிய பெருவழுதி, பேரனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து பல விநாடிகள் சிந்தனை வசப்பட்டு நின்றான். தனக்கு முன்பு தனது பேரன் மட்டு மரியாதையோ வெட்கமோ இல்லாமல் அந்த அரபு நாட்டுப் பெண்ணின் இடையை அணைத்தது அணைத்தபடியே நின்றதையும், தான் பார்த்த பிறகும் அவளை விட்டு விலகுவதற்குப் பதிலாக அவள் இடையை நன்றாக இழுத்து இணைய வைத்துக் கொண்டதையும் கவனித்த பெருவழுதி, இதில் ஏதோ தனக்குப் புரியாத மர்மமிருப்பதை உணர்ந்து கொண்டதால் அதை உடைக்கத் தீர்மானித்து, “இளவழுதி, என்னை நன்றாக உற்றுப்பார். நான் யாரென்று உனக்குத் தெரியவில்லை?” என்று சொற்களைத் தழுதழுத்த குரலில் உதிர்த்தான்.

இதற்கு உடனே பதில் சொல்லாத இளவழுதி முதியவனைக் கூர்ந்து கவனித்துவிட்டு உதடுகளைத் தானாகவே அசைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த பெண்ணை நோக்கித் திரும்பி, ”அரசி! இவரை நீ ஏற்கனவே பார்த்திருக்கிறாயா?” என்று வினவினான்.
பேரன் தனக்கு பதில் சொல்லாமல் தன்னைப் பற்றி அந்தப் பெண்ணிடம் விசாரித்ததால் சற்று சினத்தின் வசப்பட்டு, “டேய் இளவழுதி! என்னை யாரென்று அவளைக் கேட்டுத்தான் நீ தெரிந்து கொள்ள வேண்டுமா?” என்று குரலிலும் சீற்றத்தைக் காட்டிக் கேட்டான்.

அந்தச் சீற்றத்தைக் கண்ட இளவழுதி பதிலுக்கு சீற்றத்தைக் காட்டவும் இல்லை. நேரிடையாகப் பதில் சொல்லவும் இல்லை. அனுதாபம் நிறைந்த விழிகளை முதியவன் மீது சில விநாடிகள் நிலைக்கவிட்டு பிறகு அரசியை நோக்கி, ”பாவம் இவரும் ஏதோ பெரிய அதிர்ச்சியால் மூளை கலங்கியிருக்கிறது. இல் ஜாக்கிரதையாகப் பார்த்து இன்றிரவு வடகரையில் இற. விடுவோம்” என்று கூறினான். அதை ஒப்புக் கொண்டது அறிகுறியாக அரசியும் தலையை அசைத்தாள்.

இளவழுதியின் இத்தகைய மாற்றத்தினாலும் பெருவார் அசைந்தானில்லை. தனது பேரன் கண்களில் ஏதோ விவா புரியாத சலனமிருப்பதையும் அவன் எதற்கு எடுத்தாலும் அரசியை விளக்கம் கேட்பதையும் கண்டு ஏதோ பெரி. வசியமருந்து பேரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டதாலும், தான் எதிர்ப்பையோ, உண்மை உணர்ந்து கொண்டதையோ வெளிப்படுத்தினால் இளவழுதியின் நிலைமையும், தனது நிலைமையும் மிகக் கேவலமாக விடுமென்பதையும் புரிந்து கொண்டதால் பெருவழுதியம் நாடகமாடத் துவங்கி, “அப்பா! நீ என் பேரனைப் போல இருக்கிறாய். அதனால்தான் ஏமாந்து போனேன்” என்று கனா குற்றத்தை ஒப்புக் கொண்டு, ”ஆமாம் அரசி! நான் எப்படி இங்க மரக்கலத்துக்கு வந்தேன்? எப்பொழுது வந்தேன்? வந்தபோது எப்படி இருந்தேன்?” என்று அரசியை நோக்கி மிகுந்த பணிவுடனும் ஏதும் அறியாதவன் போலும் கேட்டான்,

அப்பொழுது காலைக் கதிரவின் மேற்கு மலைத்தொடரின் உச்சியில் காணப்பட்டு கிரணங்களை மெதுவாகக் கடல் மீதும் பாய்ச்சியதால், அரசியின் நெற்றியில் தவழ்ந்திருந்த வைரம் பெரிதாக ஒளிவீசி அவள் நெற்றியிலும் ஒரு சிறிய சூரியன் உதயமானது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அவன் கண்களும் அந்த வைரம் போலவே ஒளிவிட்டதாலும், அந்த ஒளிகூட கருமை விழிகளிலிருந்து வருவது போலவும், ஆழ்ந்த கருங்கடலையும் துளைத்துக் கொண்டு வரும் தெய்வீக ஒளி போலவும் காணப்பட்டதால் அந்தக் கண்கள் யாரையும் அடிமைகொள்ளும் சக்தி வாய்ந்ததாக இருந்ததைப் பெருவழுதி கண்டான். அந்தக் கண்கள் தன் கண்களில் ஊடுருவி தனது ஆத்மாவைத் துருவிப் பார்ப்பது போலும், தனக்கு மயக்கம் தருவது போலும் இருந்ததை உணர்ந்த பெருவழுதி அவற்றைச் சந்திக்கமாட்டாமல் தனது கண்களை மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கித் திருப்பினான். ஆனால் மீண்டும் மீண்டும் அவள் கண்கள் தனது கண்களை இழுப்பது போன்ற பிரமை ஏற்படவே மறுபடியும் அரசியைக் கவனித்த முதியவன் பெருவழுதி காலை வெயிலில் அவள் உடலும் வெண்ணிற உடையும் ஒளிபெற்று விளங்குவதைக் கண்டு, ‘இந்தப் பெண் மானிடப் பிறவியல்ல’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

இத்தனைக்கும் அவள் சிறிதும் சலனமில்லாமல் இரு கால்களையும் குவித்து ஏதோ வெள்ளிப் பதுமை நிற்பது போலவே நின்றிருந்தாள். அவள் தேகத்தின் வெளுப்பை கன்னங்களில் தெரிந்த சிவப்புத் திட்டுகளும், உதடுகளின் குங்குமச் சிவப்பும் மிகைப்படுத்தினாலும், அனைத்தும் சேர்ந்து கரிய அவள் குழலுக்கு ஈடுகொடுத்து அவளை ஒரு தெய்வ மங்கையாகச் செய்திருந்தன. அவள் குழலும் மேற்கு மலைக் காற்றில் பெரிதாக விரிந்து பரந்து அவள் அழகிய முகத்துக்கு மயக்கமான கருத்த பின்னணியொன்றைச் சிருஷ்டித்ததையும் அந்தக் கரிய குழல்களை ஊடுருவிச்சென்ற கதிரவன் கிரணங்கள் அவற்றுக்கு மிகுந்த பளபளப்பை அளித்ததையும், அந்தப் பளபளப்பு கண்ணைப் பறிக்கும்படியாக அவள் பின்னால் சக்கர வட்டமாகப் பரந்த பிரமையை ஏற்படுத்தியதையும் கண்ட பெருவழுதி அவளை உற்று நோக்கியவண்ணம் தன் கேள்விகளுக்குப் பதிலை எதிர்பார்த்து மௌனமாக நின்றான்.

அவன் கேள்விகளுக்கு அவள் நீண்ட நேரம் பதிலேதும் சொல்லாமலே நின்றுவிட்டு பிறகு பக்கத்தில் நின்ற இளவழுதியை நோக்கி, ”இவர் கேள்விகளுக்கு ஏதாவது பதில் சொல்ல

முடியுமா?” என்று வினவினாள்.

இளவழுதி பிரமை பிடித்த விழிகளை அவள் மீது திருட் “உனக்குத் தெரியாதது எனக்கெப்படித் தெரியும்?” என்று கேள்வி கேட்டான்.

இப்படி அந்த இருவரும் தன்னை அடியோடு தெரியா போலவும், புதிதாக அப்பொழுதுதான் பார்ப்பதுபோலவும் நம் கொண்ட விசித்திரத்தைத் தாங்கமுடியாததால் பெருவால் கேட்டான். “அரசி| என்னை இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கிறாயா?” என்று.

அரசி பெருவழுதியை வியப்புடன் நோக்கினாள். ”ே எப்பொழுது பார்த்திருக்கிறேன்?” என்று வினவினாள்.

பெருவழுதி அந்த முழுப் பொய்யைக் கேட்டு ருத்திராகாரம் கோபம் கொண்டாலும், கோபத்தைக் காட்ட அது சமயமல்ல என் எண்ணத்தால் தனது சினத்தை அடக்கிக் கொண்டு பல நேற்றிரவு நாடகம் மறந்து விட்டதா உனக்கு?” என்று வினவினான்.

அதுவரை பேசாமலிருந்த இளவழுதி குறுக்கிட்ட “பெரியவரே! அரசியை மரியாதைக் குறைவாகப் பே வேண்டாம். அவள் உயர்ந்த நிலை உங்களுக்குத் தெரியாத என்று எச்சரிக்கை தொனித்த குரலில் கூறினான்.

“உனக்கு அவள் உயர்வு தெரியும்?” முதியவன் குரலில் வெறுப்பு இருந்தது.

“நன்றாகத் தெரியும்,”

“அவள்”

“அரசகுலத்தவள்..”

“எந்த நாட்டுக்கு?”

“நாட்டுக்கல்ல”

“என்ன ?”

“அலைகளுக்கு அரசி”

“அலைகளுக்கு அரசியா?”

“ஆம்” – இதைத் திட்டமாகச் சொன்னான் இளவழுதி,

பைத்தியம் தனக்குப் பிடித்திருக்கிறதா? இல்லை இளவழுதிக்குப் பிடித்திருக்கிறதா? என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான் பெருவழுதி, எதற்கும் முந்திய இரவு விவகாரங்களைப் பற்றிப் பேச்சைத் துவங்கி, “இளவழுதி! நேற்றிரவு நீ மயங்கிக் கிடந்தாய் கட்டிலில், அரசியும் அந்த அராபியனும் உனக்கு ஏதோ மருந்து புகட்டத் தொடங்கினார்கள். தான் தலையிட்டிராவிட்டால் உன் வாயைக் கிழித்திருப்பார்கள்” என்று கூறி “சந்தேகமிருந்தால் அராபியனைக் கூப்பிடு” என்றும் தெரிவித்தான்.

அரசி பதிலேதும் பேசாமல் மரக்கலத்தின் சுக்கானுக்கு அருகில் நின்றிருந்த அராபியனைக் கையால் சைகை காட்டி அழைத்தாள். நல்ல உயரத்துடனும் தலையில் பொருத்தப்பட்டு உடலில் இரு பக்கங்களிலும் காற்றில் அலைந்த படுதாவுடனும் நின்றிருந்த அராபியனும் அவள் அழைப்பை ஏற்று அருகில் வந்தவன் பெருவழுதியைச் சந்தேகத்துடன் பார்த்தான். பிறகு அரசி பக்கம் திரும்பி, “அரசி! ஏன் அழைத்தீர்கள்? இவர் யார்?” என்று வினவினான்.

“யாரோ தெரியவில்லை? உன்னைக் கூப்பிடச் சொன்னார்” என்று ஏதுமறியாதவள்போல் பேசினாள்.

அராபியனும் பெருவழுதியை வியப்பு நிரம்பிய விழிகளுடன் பார்த்தான். “இவரை எங்கோ பார்த்திருக்கிறேன்?” என்று பழைய தினைப்பை வரவழைக்க இஷ்டப்படுபவன் போல் புருவத்தைச் சளித்தான்.

‘’எங்கோ பார்த்திருக்கிறாயா? என் வீட்டுக்கு நீ வரவில்லை; என் பேரனை அழைத்துப் போகவில்லை? அவைதான் நினைவில்லை. நேற்று என் பேரன் வாயைக் கிழிப்பதாகச் சொன்னாயே, அதுவும் நினைப்பில்லையா? நிறுத்தும்படி கவினேனே அதுவும் நினைப்பில்லையா?” என்று .. கணைகளைத் தொடுத்தான் கிழவன்.

அராபியன் முகத்தில் இந்தக் கேள்விகள் எந்த மாற்றத்தையும் விளைவிக்கவில்லை. அரசியை நோக்கிய அராபியன், “இவருக்கு ஏதோ சித்தபிரமை போலிருக்கிறது ஏதேதோ சொல்கிறார். எனக்கு ஏதும் புரியவில்லை ?” என்று பதில் சொன்னான்.

“இவரை என்ன செய்யலாம்?” என்று அரசி கேட்டாள்.

“வடகரைத் துறைமுகத்தில் இறக்கி விடலாம்’ என்று யோசனை சொன்னான் அராபியன்,

பெருவழுதி சினத்தின் வசப்பட்டாலும் தனது சினத்தார் பயனேதுமில்லை என்பதை உணர்ந்தான். அவர்கள் நாடகத்தில் பங்குகொண்டே அவர்களைச் சமாளிக்க வேண்டுமென்ற உறுதியால், “வடகரையா! அது எங்கிருக்கிறது?” என்ற வினவினான்.

அராபியன் முகம் சுளித்தான். ”சேரநாட்டின் வட பகுதியில் அதாவது குட நாட்டில் இருக்கிறது” என்று சொன்னான் அராபியல் எரிச்சலுடன்

“குடநாடா!” என்றான் பெருவழுதி,

“ஆம். சேரநாடு குட்டநாடு என்றும் குடநாடு என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வடக்குப் பிரிவு குட நாடு குடநாட்டு ஆறான சேரலாறு கடலுடன் இணையும் இடத்திலிருக்கிறது வடகரைத் துறைமுகம்” என்று விளக்கினான் அராபியன்.

சேர நாட்டைப் பற்றி அவன் அவ்வளவு தெளிவாக அறிந்திருப்பதைக் கண்ட பெருவழுதி, “அங்கு இந்த மரக்கலம் தங்குமா?” என்று வினவினான்.

“ஒரு நாள் தங்கும்” என்றான் அராபியன்,

“அங்கு தங்கிவிட்டு ?”

”அடுத்த இரவில் மரக்கலம் செல்லும்.”

“இரவில்தான் போகுமா?”

“ஆம்”

“ஏன்?’’

”இரவில் அமைதியிருக்கும். நாம் இயற்கையோடு உறவாடலாம். இதெல்லாம் எனக்குத் தெரியாது. அரசியைத் தான் கேட்க வேண்டும். நீர் ஒழுங்காக நடந்து கொண்டால் அரசி இயற்கையின் சூட்சுமங்களைப் போதிப்பாள்” என்ற அராபியன் அரசிக்குத் தலைவணங்கிவிட்டு மீண்டும் தான் இருந்த மரக்கல . முகப்புக்குப் போகத் திரும்பினான்.

அப்பொழுது அரசி குறுக்கிட்டு “அஹமத்!” என்று அதிகாரக் குரலில் அழைத்தாள்.

”அரசி” – தலைவணங்கினான் அஹமத்,

“இந்தப் பெரியவரையும் உன்னுடன் அழைத்துப் போ. இவருக்கு எந்தவிதக் குறைவுமில்லாமல் பார்த்துக் கொள்” என்றும் உத்தரவிட்டாள்.

அராபியனும் தன்னைத் தொடர்ந்து வருமாறு பெருவழுதிக்குச் சைகை செய்து முன்னால் நடந்தான். பெருவழுதி, இளவழுதியைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவண்ணம் அராபியனைப் பின்தொடர்ந்தான். அராபியன் பெருவழுதியை மரக்கலத்தின்

கீழ்த்தளத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த ஒரு அரையில் தங்க வைத்தான். அவருடைய தேவைகளைக் கவனிக்க இரண்டு மாலுமிகளையும் நியமித்தான். அன்று பெருவழுதிக்கு ராஜோபசாரம் நடந்தது. பகல் உணவு ராஜபோகமாயிருந்து பெருவழுதி உடைகளை மாற்றிக் கொள்ள வேறு உடைகளும் கொடுக்கப்பட்டன. இத்தனை உபசாரத்திலும் அந்த மரக்கலத்தில் தான் சிறைவைக்கப்பட்டிருப்பதைக் கிழவன் புரிந்து கொண்டான் அவன் அறை வாயிலில் இரு மாலுமிகளும் சதா நின்று கொண்டிருந்தார்கள். அவன் எங்கு போனாலும் அவர்களும் தொடர்ந்தார்கள். ஆனால் பெருவழுதியை அவர்கள் எதிலும் தடை செய்யவில்லை. அன்றைய பொழுது நிதானமாகப் போவதுபோல் தோன்றியது. மெள்ள மெள்ள மாலையும் வந்த்து. வேகமாகப் போய்க்கொண்டிருந்த மரக்கலம் ஆமைபோல் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. விளக்கு வைக்கும் நேரத்தில் தூரத்தில் வடகரைத் துறைமுகத்தின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அரசியின் மரக்கலத்தில் ஒரே ஒரு பந்தம் மட்டும் கொளுத்தப்பட்டது. மரக்கலம் துறைமுகத்தை அணுகுமுன் சட்டென்று நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டது. அந்த மரக்கலத்தை நோக்கி வடகரையின் வணிகப் படகுகள் பல விரைந்து வந்த மரக்கலத்தைச் சுற்றி நின்ற படகுகளிலிருந்தவர்கள் மிளகு, லவங்கம், ஏலக்காய் முதலியவைகளை விலை கூவி விற்கத் துவங்கினார்கள். அராபியனே மரக்கலத்தின் பக்கப் பலகையில் சாய்ந்து குனிந்து விலைபேசி பல கூடைகளை வாங்கி மரக்கல மாலுமிகளிடம் கொடுத்தான். தனது சராயின் நீளப் பைகளிலிருந்த இரு கைகளாலும் தங்க நாணயங்களை வணிகருக்கு எடுத்துக் கொடுத்து அவர்களைத் திரும்பிச் செல்ல உத்தரவிட்டான்.

இரவு மெள்ள மெள்ள ஏறிக் கொண்டிருந்தது. வடகரையின் துறைமுகத்திலும் கரையை அடுத்த மலைப்பகுதிகளிலும் பந்தங்களின் நடமாட்டம் பலமாகத் தெரிந்தது. அவற்றை யெல்லாம் கண்டு தனக்கு உதவி ஏதாவது வராதா? என்று

பெருவழுதி ஏங்கிய வண்ணம் மரக்கலத்தின் பக்கப்பலகையில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். வணிகப் படகுகள் திரும்பியதும் மரக்கலத்தில் பழைய அமைதி குடி கொண்டது. நேரம்போவது தெரியாமல் மரக்கலத்தில் தளத்தின் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தான் பெருவழுதி. நடுநிசி வந்து எங்கும் நிசப்தம் குடி கொண்டது. அப்பொழுது தன்னை நோக்கி யாரோ நடந்து வரும் சப்தம் கேட்கவே சற்று கண்களை விழித்துப் பார்த்த பெருவழுதி, வந்த உருவம் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டிருந்ததைக் கண்டான். அந்த உருவம் பெருவழுதியை சில விநாடிகள் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்துவிட்டு அக்கம் பக்கம் பார்த்து மெதுவாக முதியவன் பக்கத்திலேயே படுத்துக் கொண்டது. பிறகு மெதுவாக ஒருக்களித்து கிழவன் காதருகில் உதடுகளைக் கொண்டு வந்து “தாத்தா!” என்று மெதுவாக அழைத்தது.

“இளவழுதி!” என்றான் கிழவன்.

“தாத்தா! நீங்கள் எதுவும் பேசவேண்டாம். நாம் இருவரும் பெருத்த அபாயத்திலிருக்கிறோம். இங்கிருக்கும் யாரிடமும் பேச்சுக் கொடுக்காதீர்கள்” என்றான் இளவழுதி

மேற்கொண்டு பேசமுயன்ற பெருவழுதியின் வாயைப் பொத்திய இளவழுதி, “ஏதும் தெரியாதது போல் நடந்து கொள்ளுங்கள். நான் நடவடிக்கை ஏதாவது எடுக்கும் வரையில் ஏதும் செய்ய முயலாதீர்கள்” என்று கூறிவிட்டு மெதுவாக எழுந்து தான் வந்த திசைக்கு நேர் எதிர்முகமாக நடந்தான்.

இந்த நாடகத்தைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்ட அஹமத் மெள்ளப் புன்முறுவல் கொண்டான்.

Previous articleAlai Arasi Ch3 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch5 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here