Home Alai Arasi Alai Arasi Ch40 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch40 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

54
0
Alai Arasi Ch40 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch40 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch40 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 40 .நான் மூன்றாமவன்

Alai Arasi Ch40 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

குறுவாளை இருமுறை திருப்பிப் பார்த்து, கூரும் பார்த்து “நல்ல எஃகில் வடிக்கப்பட்டிருக்கிறது. பாரதத்தின் வடமேற்கு எல்லையில் செய்யப்பட்டது. அநேகமாக புருஷபுரத்து வில்லவன் சாதாரணமாக தங்கள் அம்புகளுக்குப் பொருந்தும் நுனி அந்த அம்புகளின் எஃகு முனைகள் கிரேக்கர்களின் கேடயங்களையே உடைத்து விட்டதாகக் கேள்வி. இதைக் கொண்டு எதையும் உடைக்கலாம். இந்தா இளவழுதி! இதை நீயே வைத்துக்கொள் என் படைகளின் தலைவனாக நாளைக்கு அஹமதின் சிற்றப்பன் கோட்டைக்குப் போகும்போது இந்தக் கத்தி பயன்படும் அங்குள்ள கோட்டைக் கதவு மிகவும் பலமானது. இந்த எஃகின் முன் அது அநாயசமாக வளையும். அப்புறம் உன் யோசனையின்படி கோட்டைக்குள் புகுந்து அந்த சிற்றப்பனை சிறைசெய். முடிந்தால் கட்டி இங்கு கொண்டு வா” என்று உத்தரவிட்டார்.

“எப்பொழுது கோட்டைக்குப் பயணம்?” என்று இளவழுதி கேட்டான்.

“இப்பொழுது நீ எனது படையைப் பார்க்கப் போகிறாய் அவற்றை அணிவகுக்கும் முறையை நீ நிர்ணயித்துக் கொண்ட பிறகு போகலாம். அநேகமாக நாளைக் காலையில் நீ பயணப்படலாம். வெய்யிலுக்கு முன் போய்விட்டால் கோட்டையைத் தாக்கவும் செய்யலாம். அதெல்லாம் எனக்கெதற்கு? உன் பொறுப்பு” என்ற மதகுரு அவனை அழைத்துக்கொண்டு கீழே சென்றார். மதகுரு வீட்டுக்கும் மலை அடிவாரத் தோப்புக்கும் இடையே இருந்த சதுக்கத்தில் ஏராளமான வீரர்கள் தங்கியிருந்தார்கள். சிலர் ஒட்டகத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டும், சிலர் புரவியின் கழுத்தைக் கட்டிக் கொண்டும், சிலர் பரஸ்பரம் அணைத்துக் கொண்டும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்,

“இதுதான் உங்கள் படையா?”

‘’ஆம் இளவழுதி அரபு நாட்டில் இப்பொழுது குறுநில அவர்கள் அதிகம். இவர்களெல்லாம் நாடோடிக் கும்பல், கால் போரில் புறமுதுகு காட்டாதவர்கள். இந்த ஒட்டகப் சிவையும், புரவிப் பிரிவையும் தனித்தனியாகப் பிரித்துவிடு” என்றார் மதகுரு.

‘’காலாட்படை வேண்டும். வெறும் வாகனப்படை போதாது. ஒவ்வொரு போரிலும் வெற்றி காண்பது காலாட்படைதான்” என்றான் இளவழுதி.

தொடர்ந்து கேட்டான்

‘’இவற்றில் எத்தனை ஒட்டகங்கள், எத்தனை புரவிகள் இருக்கின்றன?”

‘’ஆயிரம் புரவிகள், ஐநூறு ஒட்டகங்கள். ஆனால் புரவிகளை விட ஒட்டகங்கள் பாலைவனப் போருக்கு மிகவும் பயன்படும். கோட்டையைத் தாக்கும்போது நீயே புரிந்து கொள்வாய்” என்றார்.

உடனே சட்டென்று மடியிலிருந்து ஒரு குழலை எடுத்து ஊதினார். அதைக் கேட்ட மாத்திரத்தில் ஐநூறு ஒட்டகங்களும் ஒட்டு மொத்தமாக அணிவகுத்ததுபோல் எழுந்தன.

மதகுரு, “அதோ பார் இளவழுதி! என்ன ஒரே சீராக போகின்றன!” என்றார்.

“இவைகளுக்குத் தலைவன் உண்டா ?” என்று இளவழுதி கேட்டான்.

“குல்சமத் என்று ஒருவன் இருக்கிறான். அவன் பாபிலோனியா விலிருந்து வந்தவன். மகா வீரன். பல போர்களில் வெற்றிவாகை சூடியிருக்கிறான். உன்னைப் போலவே சூட்சும புத்தியுள்ளவன்” என்றார் மதகுரு

“அப்படியானால் நான் எதற்கு? அவனை வைத்துக் கொண்டே இந்தப் போரை நடத்திவிடலாமே!” என்று இளவழுதி கேட்டான்.

“சூட்சும புத்தி உள்ளவன்தான். சமயத்துக்குமத் தக்கபடி அணிவகுப்பை மாற்றிப் போரிட அவனால் முடியாத தவிர அதோ பார்” என்று எட்ட ஓடிக் கொண்டிருந்த ஓர் உருவத்தைக் காட்டினார்.

அதோ போகிறாள் சமதின் ஆசை நாயகி” என வேகமாக ஓடிக் கொணிடிருந்த நாடோடிகள் தலைவியைக் காட்டினார் “இவளும் சமதுமாகச் சேர்ந்தால் என்னைக் கொல்வதர்கு வழி தேடுவார்களே தவிர, எனக்கு நலன் தேடுவதற்கான எதையும் செய்ய மாட்டார்கள். அநேகமாக கோட்டையைப் பிடித்த உடன் சமதே முடிசூடிக் கொண்டாலும் நாம் வியப்படைய வேண்டியதில்லை. அநேகமாக அவன் ராஜாவாகவும், இவள் ராணியாகவும் கோட்டையில் இருந்து கொண்டு என்னைப் பிடிக்க ஆட்களை அனுப்புவார்கள். அப்படி நான் அகப்பட்டுக் கொண்டால் நீதான் என்னைக் காக்க வேண்டும். நீ நல்ல உள்ளம் உள்ளவன். தவிர என் மகளுக்குக் கணவன். உன்னைக் கொண்டு நிலையான, உறுதியான ஒரு அரசை நானே இந்தத் தெற்கு அரேபியாவில் ஏற்படுத்துகிறேன்” என்றார் மதகுரு.

“சரி நீ போய் வா” என்றும் சொன்னார்.

தனது புரவியைத் தட்டிவிட்ட இளவழுதி முன்னே சென்ற இரு படைப் பிரிவுகளுடன் சேர்ந்து கொண்டான். சிறிது நேரம் அதை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்ற இடத்திலேயே நின்ற மதகுரு. தானும் ஒரு புரவியை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார். அவர் கோட்டையை அடைந்தபோது கோட்டையின் பிரதான வாயிலில் பெரும் பூட்டை தனது கத்தி கொண்டு உடைத்துக் கொண்டிருந்தான் இளவழுதி.

கொடுத்ததும் …. இவர்கள் குதித்து உள்ளே குதிக் கதவின் மூலம் 2 தூண்டுவேன் உதை உதைக்க, பூட்
ஒட்டகங்கள் ஒருபுறமாகவும், புரவிகள் இன்னொரு புறமாகவும் படுத்திருந்தன. வீரர்கள் யாரையும் கானோம். அனைவரும் கோட்டையை அணைத்து பெரிதாக வளர்ந்திருந்த மரங்களின் கிளைகளில் உட்கார்ந்திருந்தார்கள்,

“இதென்ன இளவழுதி?” என்று மதகுரு கேட்டார்.

கோட்டையின் உள்ளே போக ஒரு வழி, நான் ஒரு சமிக்ஞை கொடுத்ததும் …. இவர்கள் எல்லோரும் கோட்டை மதில்மேல் உள்ளே குதித்து விடுவார்கள்! அதற்குள் நானும் இந்தக் 4 மூலம் உள்ளே சென்று அவர்களைப் போருக்குத் நவேன்” என்று கூறி, கதவைப் பலமாகத் தன் காலால் ஓர் உதை உதைக்க, பூட்டு படிரெனப் பிளந்து, உடைந்து கதவுகளும் மடாரென்று திறந்தன.

இளவழுதி தன் புரவியை ஒரு தட்டு தட்டி கோட்டைக்குள் நுழைந்து விட்டான். உள்ளே கோட்டை வீரர்களுக்கும், இளவழுதியின் வீரர்களுக்கும் போர் மும்முரமாக மூண்டது. அப்பொழுது கோட்டைக்குள் நுழைந்த மதகுரு போர் முடியும் தருவாயிலிருப்பதை உணர்ந்தார். அந்த சமயத்தில் ஒரு பெரிய புரவியிலிருந்த ஒரு வீரனை இளவழுதி கீழே இழுத்து வீழ்த்த முயன்றான். அவன் வீழ்ந்ததும் தன் காலைத் தூக்கி அவன் மேல் வைக்கவும் முயன்றான்.

இளவழுதி, விட்டுவிடு அவனை” என்று மதகுரு கூறினார்.

அக்கம் பக்கத்திலிருந்த வீரர்களும் படைத்தலைவன் கைகால்களைப் பிடித்து இழுத்தார்கள்,

“என்ன இது?” என்று சீறினான் இளவழுதி.

மதகுரு அருகில் வந்து, “இவன்தான் சமத். இவன் தயவில்லாமல் இந்தப் பாலைவனத்தில் நாம் எதுவும் செய்ய முடியாது” என்று கூறவே,

சமத் மீது வைக்க முயன்ற காலை எடுத்துக் கொண்டு, ‘’நாம் பிறகு சந்திப்போம். இப்பொழுது போய்வாரும்” என்றான்.

சமத் திரும்பி கோட்டையை ஒட்டியிருந்த வேறு விடுதிக்குள் நுழைந்தான்.

இளவழுதியும் அவன் ஒட்டகவீரர்களில் சிலரும் அந்த விடுதிக்குள் நுழைந்தனர். உள்ளே விடுதி அரண்மனை போல் இருந்தது. அழகுமிக்க பல நாட்டுப் பெண்கள் பலபல அலங்காரங்களுடன் காணப்பட்டார்கள்,

அவர்கள் நடுவில் நாடோடித் தலைவியும் காணப்பட்டாள்,

“நீ எங்கு வந்தாய் இங்கே?” என்று இளவழுதி கேட்டான்,

“நான் சமதின் ராணி. வேறு எங்கே போவேன்?” என்றாள்,

வியப்பு என்பதற்கு ஒரு பொருள் உண்டானால் அதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தான் இளவழுதி.

”அங்கு ஒரு புருஷன் வந்தானே அவன் யார்?’ என்றும் கேட்டான் இளவழுதி.

“அவன் என் முதல் புருஷன். இவன் இரண்டாவது புருஷன்’ என்று அவள் கூறினாள்.

“அப்பொழுது நான்…?” என்று கிண்டலாகக் கேட்டான்.

மூன்றாவதாக நீங்கள் இருப்பதானால் எனக்கு ஆட்சேபணையில்லை” என்றவள் மேலும் அவனை நோக்கி “வாருங்கள் உணவுச் சாலைக்குப் போவோம்” என்று உட்புறம் அழைத்துச் சென்றாள்.

உணவுச்சாலை மிகவும் பெரிதாக இருந்தது. ஏராளமான சமையல்காரர்கள் உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.

சமதின் மனைவி, இளவழுதியை உட்கார வைத்து முதலில் உணவு பரிமாறினாள். பிறகு சமதை அழைத்து வந்தாள். சமது உணவை ஒரு பெரிய ராட்சதன் போல் தன்னிரு கைகளாலும் எடுத்து எடுத்து அருந்தினான். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் பக்கத்திலிருந்த நாடோடித் தலைவியையே சாப்பிட்டு விடுவான் போலிருந்ததால் அவளைக் கையைப் பிடித்து அழைத்து வந்து தன்னிடம் உட்கார வைத்துக் கொண்டான் இளவழுதி

என் மனைவியை நீ எப்படித் தொடலாம்?” என்று சமத் வினவினான்.

“நான் மூன்றாமவன். சற்று முன்பு அவளே சொன்னாளே, நீ கேட்கவில்லையா?” என்று நகைத்தான்.

அன்று பகல் முழுவதும் கோட்டைக்கு வெளியே தங்கள் படைகளை அணிவகுப்பதில் காலத்தைச் செலவிட்டான். அன்றிரவு படுக்கப் போகும்போது மதகுரு அவனை அழைத்து, இளவழுதி! இன்று அந்தக் கொடியவள் உன்னை அழிக்கப் பார்த்தாலும் பார்ப்பாள். எச்சரிக்கையாயிரு” என்று சொன்னார்.

Previous articleAlai Arasi Ch39 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch41 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here