Home Alai Arasi Alai Arasi Ch41 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch41 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

109
0
Alai Arasi Ch41Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch41 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch41 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 41 .தந்திரமும் மந்திரமும்

Alai Arasi Ch41 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

மதகுரு சொன்னது சரியாகத்தானிருந்தது. அந்தக் கொடியவன் காட்டிய பஞ்சணையில் படுத்திருந்த இளவழுதியை நள்ளிரவில் யாரோ நாலைந்து பேர் தூக்கினார்கள். துக்கிக் கொன்டு வெளியே ஓடினார்கள். எத்தனை திமிறியும் இளவழுதியால் அவர்களது பிடியிலிருந்து விடுபட முடியவில்லை, அந்த சமயத்தில் அறைக்குள் வந்த சமத் இளவழுதியின் பஞ்சணையில் படுத்திருந்த நாடோடிகளின் தலைவியை நோக்கி, “ஏனடி. நீ இங்கு எப்படி வந்தாய்?” என்று கேட்டான்,

அவள் சமதின் அறையில் திறந்திருந்த கதவைக் காட்டி, “அந்தக் கதவின் மூலம் வந்து, இந்தக் கதவைத் திறந்து கொண்டு வந்தேன்’ என்று சர்வசாதாரணமாகச் சொன்னாள்,

“அவனை எங்கு கொண்டு போகிறாய்?” என்று கேட்டாள்,

‘’அஞ்சாதே! அவனைக் கொன்றாலும் சடலத்தைப் புதைக்க, உன்னிடம் கொடுக்கிறேன்” என்று சமத் ஆறுதலாகப் பதில் சொன்னான்.

அப்பொழுது மதகுரு உள்ளே வந்து, “எனது படைத்தலைவன் மீது யார் கையை வைத்தாலும் அவனை வெட்டி கழுகுகளுக்குப் போட்டு, இந்தக் கோட்டையைப் பொசுக்கி விடுவேன்’ என்று கூறித் திரும்பிச் சென்று விட்டார்.

இளவழுதியும் தலைவியும் சமதும் ஒருவர்மீது ஒருவர் விவரம் புரியாத பார்வையைச் செலுத்திக் கொண்டு நின்றார்கள், அப்போது மதகுருவின் குரல் வெளியிலிருந்து கேட்டது. “சமத், உனது முடிசூட்டு விழா நாளையே நடக்கும். நானே இருந்து நடத்தி வைக்கிறேன். அது நட்ந்தபின் உன் மகுடம் மட்டுமே எனக்குத் தேவை” என்றார்.

“எதற்கு?” என்றான் சமத்

‘’இளவழுதிக்குக் கொடுக்க” என்றார் மதகுரு

‘’இளவழுதிக்கு எதற்கு மகுடம், ஆள்வதற்கு நாடு இருக்கிறதா?” என்று சமத் கேட்டான்.

‘’அது அவனுக்கல்ல சேர மன்னன் அதிராஜனாக ஒரு மகுடம் குறைகிறது. அதற்கு இதை அனுப்பி வைக்கிறேன்”

‘’அப்படியானால் என்னுடைய மகுடாபிஷேகத்தை சிறிது கள்ளி வைத்துக் கொள்ளலாமே” என்றான் சமத்,

“ஒருநாள் கூடத் தள்ள முடியாது. இளவழுதி நாளை சேர நாட்டுக்குப் பயணமாகிறான் என்றார் மதகுரு.

சமத் உள்ளே சென்று ஒரு மகுடத்தை எடுத்து வந்து, “இதோ என் மகுடம் இதை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்று எரிச்சலுடன் கூறினான்.

இதை யாருக்குச் சேர வேண்டுமோ அவனுக்குக் கொடுத்து விடுகிறேன். அதாவது, உமது அண்ணன் மகன் அஹமத் இதைக் தரித்து, உனக்கு பதில் இங்கு முடிசூடுவான். அவனுக்கு உரிய ஸ்தானத்தில் அமருவான்” என்றார்.

“ஓஹோ! இதெல்லாம் உங்கள் சூழ்ச்சியா?” என்று கேட்ட சமத் மதகுரு மேல் பாய்ந்து, இரண்டு வீரர்களை அழைத்து, “இளவழுதி போகுமிடத்திற்கு இவரையும் இழுத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு, பல வீரர்கள் பல்லக்குத் தூக்க, அதில் சவாரி செய்தபடியே போனான் சர்வ அலட்சியமாக

இளவழுதி நள்ளிரவில் கண்விழித்தபோது அவனைச் சுற்றி இருபது வீரர்கள் நின்றிருந்தார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் கொலைக் குறி இருந்தது. மதகுரு அவன் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தார். நாடோடிகளின் தலைலி கத்ஜா அவன் காலை வருடிக் கொண்டிருந்தாள்.

மதகுரு சட்டென்று எழுந்து, “இளவழுதி, என்னுடன் வா, கதீஜா நீயும் வா” என்று இருவரையும் அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றார்.

“நீங்கள் இருவரும் இங்கே உறங்குங்கள்” என்று ஒரு பஞ்சணையைக் காட்டிவிட்டு, “நான் அவர்களை அனுப்பிவிட்டு வருகிறேன்” என்று வெளியே சென்றார்.

அவர் திரும்பியதுமே கதீஜா இளவழுதியை முரட்டுத் தனமாகக் கட்டிக் கொண்டு பஞ்சணையில் விழுந்தாள்.

வெளியே சென்ற மதகுரு அங்கிருந்த வீரர்களை நோக்கி, “நீங்கள் கோட்டைக்குச் செல்லுங்கள். நான் பின்னால் வருகிறேன், சமதிடம் எந்தவித கவலையும் வேண்டாமென்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள்” என்று உத்தரவிடும் தோரணையில் வெளியே கையை நீட்டினார்.

இருபது வீரர்களும் வாயிலை நோக்கிப் பறந்தனர். சிறிது நேரத்திற்கெல்லாம் புரவிகள் வேகமாகச் செல்லும் குளம்புகளின் ஒலி கேட்டு திருப்தி அடைந்த முகத்துடன் மதகுரு உள்ளே வந்தார் அவர் வந்தபோது பஞ்சணையில் விகார நிலையிலிருத்த இருவரும் பிரிய முற்பட்டார்கள்.

“வேண்டாம். வேண்டாம். இதோ நான் போகிறேன். சமதுக்கு சமாதானம் சொல்ல வேண்டும்” என்றார்.

“நீங்கள் இருந்தால் பாதகமில்லை. சும்மா இருங்கள்” என்றாள் கதீஜா

இளவழுதி சினத்துடன், ”ஏனடி! உனக்கு வெட்கமில்லை?” என்று கேட்டான்.

“தமிழா, என் வெட்கத்தையெல்லாம் உன்னிடம் ஒப்படைத்து விட்டேனே. இல்லாவிட்டால் நாம் இப்படி இணைந்திருக்க முடியுமா?” என்று கூறி நகைத்தாள்,

பொழுது விடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கோட்டையில் சமத் தன்னுடைய வீரர்கள் மீது எரிந்து விழுந்து கொண்டிருந்தான். ”என்னடா செய்தீர்கள் அவர்களை? நமது சிறையில் அடைத்தீர்களா?” என்று உக்கிரத்துடன் வினவினான்.

“இல்லை. மதகுரு தனது மாளிகைக்கு எங்களை அழைத்துப் போய்விட்டார்.”

“அவர் அழைத்தால் உங்களை யார் போகச் சொன்னது?” என்று எரிந்து விழுந்தான்.

“நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை. நமது சிறையை அணுகிக் கொண்டிருக்கையில் இளவழுதி திடீரெனத் திரும்பி எகளில் இருவரை வெட்டிவிட்டான். அடுத்து மதகுருவும் அவனும் பாவியில் வேகமாக விரைந்தார்கள். நாங்கள் அவர்கள் இருவரையும் வெட்டிவிட வாட்களை ஓங்கினோம். மதகுரு ஏதோ கையை அசைத்தார். வாட்கள் இறங்கவே மறுத்தன. கைகளும் செயலற்றுவிட்டன. எங்களுக்கு நேர்முகமான சாதாரண போர் தெரியும். மந்திரப்போர் தெரியாது. போர்த் தந்திரம் என்பது உண்டு; போர் மந்திரம் என்பது இது வரையில் வரலாற்றில் இல்லாத புதுமை” என்றான் அந்த வீரர்களின் தலைவன்,

“அப்புறம் எங்கே போனார் மதகுரு?” என்று சமத் கேட்டான்.

“எங்கும் போகவில்லை, மதகுருவும் இளவழுதியும் கதீஜாவும் எல்லாரும் மதகுரு மாளிகையில்தான் இருக்கிறார்கள்” என்று வீரன் சொன்னான்.

“அப்படியானால் போய் அவர்களைப் பிடித்து இழுத்து வாருங்கள். இல்லையேல் அவர்களை சிறையில் அடைத்துவிட்டு வந்து நல்ல செய்தி சொல்லுங்கள்!” சமத் உத்தரவிட்டான்.

வீரர்களின் தலைவன் மற்ற வீரர்களை அழைத்து மதகுருவின் மாளிகையை நோக்கி மற்ற வீர்களுடன் பறந்தான்.

மாளிகையின் வாயிலிலேயே அவனைச் சந்தித்து மதகுரு அவனையும் பார்த்தார்; அவனுக்குப் பின்னால் நின்றிருந்த வீரர்களையும் மிக இகழ்ச்சியுடன் பார்த்தார்.

“உங்களை சிறையில் அடைத்து வர எஜமான் உத்தரவு’’

”எப்படி அடைப்பாய்?” என்று மதகுரு கேட்டார்.

“நீங்களாக வந்தால் நல்லது. இல்லையேல்… நாங்கள் இழத்துப் போவோம்” என்ற வீரன், “மற்ற இருவரும் எங்கே? என்று வினவினான்.

“உள்ளே இருக்கிறார்கள்” என்றார் மதகுரு

இரண்டு மூன்று வீரர்களுடன் உள்ளே நுழைந்த வீரர்களின் தலைவன் கதீஜாவையும், இளவழுதியையும் இழுத்துக் கொன் வெளியே வந்தான்.

மதகுரு அவர்கள் இருவர் தலைமீதும் கையை வைத்து “சிறைக்குச் செல்லுங்கள்” என்று கூற இருவரும் அங்கேயே மறைந்துவிட்டனர்.

“அவர்கள் எங்கே?” என்று வீரர்களின் தலைவன் மறுபடியும் வினா தொடுத்தான்.

“உங்களது சிறையில் இருக்கிறார்கள். இதோ நானும் போகிறேன். இந்த நல்ல செய்தியை சமதிடம் சொல்லுங்கள் என்று கூறி, கைகளை உயரே தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

வீரர்களின் தலைவன் அவர் வெகு தூரத்தில் ஓடுவதைக் கண்டு, தனது வீரர்களை தன்னைப் பின்பற்றச் சொல்லிவிட்டு அவரைப் பின்தொடர்ந்தான். ஆனால் மதகுருவை அவனால் பிடிக்க முடியவில்லை. மதகுரு ஒடிக்கொண்டிருக்கையில் திடீரென தரை பிளந்து அவரை உள்ளே இழுத்துக் கொண்டது.

அப்புறம் வீரர்களின் தலைவன் அந்த இடத்தைச் சேர்ந்து எட்டிப்பார்த்து, “நமது பாதாளச் சிறையில் மூவருமே இருக்கிறார்கள். வாருங்கள் போகலாம்” என்று கோட்டையை நோக்கிப் பறந்தான்.

அவன் சொன்ன செய்தியைக் கேட்ட சமத், “அவர் ஓடிய வேகத்தில் பாதாளச் சிறையின் பொறி நழுவி இருக்க வேண்டும். எதற்கும் நீ போய் அதை மீண்டும் நல்ல பூட்டு போட்டு பூட்டி வா” என்று கூற, வீரன் அந்த இடத்துக்கு விரைந்தான்.

போகும்போது கோட்டை கதலின் பெரிய பூட்டையும் எடுத்துச் சென்றான். ‘பொறி’ விலகிய இடத்துக்கு வந்ததும் பொறிக்கு பூட்டைப்போட்டு, “மதகுரு!” என்று குரல் கொடுத்தான்.

”யாரடா அது?” என்று மதகுரு குரல் கொடுத்தார்.

“நான் தான் உங்களை சிறை செய்ய வந்தவன் நவாபின் உத்தரவின் பேரில்” என்று சொன்னான்.

மதகுரு சிறைக்குள்ளிருந்தே இகழ்ச்சியாக நகைத்தார்.

“ஓஹோ! சமத் நவாபாகி விட்டாரோ!” என்று இகழ்ச்சி குரலில் தெரிய கேட்டார் மதகுரு

அப்போது பொறியின் மூலம் மேலே பார்க்க, சமத் மகுடம் தரித்து நின்றிருந்தான். அந்தக் காட்சி அவருக்கு வெறுப்பைத் தந்திருக்க வேண்டும்.

“பூட்டைத் திற” என்று சமதைப் பார்த்து உத்தரவிட்டார்.

“திறக்காவிட்டால்…..” என்று சமத் கேட்டான். “இன்னும் இருபது நாளைக்கு நீங்கள் இந்தச் சிறையிலிருந்து அகல முடியாது” என்றும் கூறினான்.

மதகுரு பதிலுக்கு சிறைக்கம்பியின் மூலம் தன் கையை நீட்டி பூட்டின் மேல் கைவைக்க பூட்டு பெருத்த சப்தத்துடன் படாரென்று

வெடித்தது. சமதின் தலையிலிருந்த மகுடம் இறங்க மதகுருவின் கையில் உட்கார்ந்து கொண்டது.

அடுத்து அந்தப் பொறியும் நகர்ந்தது. மகுடத்துடன் கூடிய கையை உள்ளே இழுத்துக் கொண்டார் மதகுரு. பின் சமதை நோக்கி,

“நவாப், நாளை காலை இந்த மகுடம் சேர நாடு போகிறது, நீ கடற்கரைக்கு வந்து சேர்” என்று கூறி விட்டு கதவை மூடிவிட்டார்,

ஆனால் மறுநாள் காலை பெரும் ஏமாற்றம் காத்திருந்தது நவாப்புக்கு.

Previous articleAlai Arasi Ch40 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch42 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here