Home Alai Arasi Alai Arasi Ch42 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch42 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

128
0
Alai Arasi Ch42 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch42 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch42 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 42 .கண்ணுக்குத் தெரியாமல்

Alai Arasi Ch42 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

மறுநாள் காலை நவாப் சமத் கடற்கரைக்கு வந்தபோது அங்கு மதகுரு தவிர மற்றெல்லோரும் இருந்தார்கள், இளவழுதி, அலை அரசி கதீஜா இவர்களும் இன்னும் பத்து மாலுமிகளும் காத்திருந்தார்கள். அப்பொழுது சமத் கேட்டான் இளவழுதியை நோக்கி.

“மதகுரு எங்கே?” என்று.

“கோட்டைக்குப் போயிருக்கிறார்.”

“எந்தக் கோட்டைக்கு?”

“அதாவது அஹமதின் கோட்டைக்கு.”

“அங்கு எதற்கு?”

“அஹமதுக்கு முடிசூட்ட”

” என்று முடிசூட்டப் போகிறார்கள்?” என்று சமத் வினவினான். “அஹமத் இப்பொழுது எங்கே?” என்றும் கேட்டான்.

அப்பொழுது அவன் பின்னாலிருந்து மதகுருவின் குரல் ஒலித்தது.

“சேர நாட்டில் இருக்கிறான். நாளைக் காலையில் இங்கு வர ஏற்பாடு செய்திருக்கிறேன். நாளை உச்சி வேளையில் அவனுக்குச் சொந்தமான அரியணையில் அவன் அமருவான். நீயும் வந்து சேர். அவன் தலையில் நீயே மகுடத்தைச் சூட்டலாம்” என்று சொன்ன மதகுரு,

“நாங்கள் மரக்கலத்துக்குப் போகிறோம். நீ கோட்டைக்குப் போய்ச்சேர். நாளைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய். நாளை

நான் அஹமதுடன் வந்து சேருகிறேன்” என்று கூறி அங்கிருந்த படகொன்றில் இளவழுதி, அலை அரசி இருவரையும் ஏறச்சொல்லி, தானும் ஏறிக்கொண்டு “இளவழுதி துடுப்புகளைத் துழாவு, நான் போகவேண்டிய மரக்கலம் அதோ நிற்கிறது எட்ட இருந்த ஒரு மரக்கலத்தைக் காட்டினார் மதகுரு.

இளவழுதி துடுப்புகளை வேகமாகத் துழாவி வெகு சீக்கரம் மரக்கலத்தினருகே படகைக் கொண்டு வந்தான். மரக்கலக்திற்குப் பக்கத்தில் தோன்றிய நூலேணியில் முதலில் அரசியை ஏறச் சொல்லிவிட்டு தானும் ஏறி, “மதகுரு. நீங்களும் வாருங்கள்” என்று அழைக்க, மதகுருவும் நூலேணியில் காலை வைத்து ஏறினார்.

அடுத்த ஒரு நாழிகையில் மரக்கலம் பாய்விரித்து தென்மேற்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அப்போது, “இளவழுதி பாய்களை அவிழ்த்துவிடு” என்றார் மதகுரு.

இந்த புது உத்தரவு இளவழுதியைத் தூக்கிப்போடவே, “என்ன மதகுரு, ஒரேயடியாக திட்டத்தை மாற்றுகிறீர்களே! பாய்களை இப்போது அவிழ்த்துவிட்டு அடுத்த இரண்டு பாய்களை அவிழ்த்தால் மரக்கலம் திரும்பவும் பழையபடி கரைக்கல்லவா போய்ச் சேரும்?” என்று ஆட்சேபணை கிளப்பினான்.

“அதுதான் உத்தேசம்.”

“அப்போது சேரநாட்டுக்கு?”

“இன்னும் நான்கு நாட்கள் கழித்து புறப்படுகிறோம். அதற்குள் அங்கும் உன்னை வரவேற்க ஏற்பாடுகள் சித்தமாயிருக்கும்.”

“மதகுரு சில வினாடிகள் கண்களை மூடி மவுனமாய் இருந்தார். பிறகு, “சேரநாட்டு மன்னன் வடபுல பயணத்துக்கு ஏற்பாடு செய்து படைகளை அடுத்த பவுர்ணமியன்று வடக்கை நோக்கி நகர்த்தத் திட்டமிட்டிருக்கிறான். இதற்குக் கேரளத்து பெரிய மந்திரவாதியே நாளும் நேரமும் நிச்சயித்திருக்கிறார். ஆகையால்

நீ சீக்கிரம் அங்கு போகாவிட்டால் வடபுல யாத்திரை பயனளிக்காது. கவலைப்படாதே சமயத்தில் உன்னை அங்கே சேர்த்து விடுகிறேன். நாளை அஹமத் வந்ததும் அவனுக்கு முடிசூவிட்டு நாலுநாள் கழித்து பஞ்சமி திதியன்று நீயும் அவனும் சேரநாடு சென்றால் படையெடுப்பு முறைகளை நீ நிர்னயிக்க அவகாசமிருக்கும். ஆனால் இந்தப் படையெடுப்பில் உங்களுக்கு அதிக கஷ்டங்கள் கிடையாது. ஏனென்றால் சேரநாட்டிலிருந்து வலபுலப் பாதையில் இடையே உள்ள பலமான நாடு கலிங்கம் ஒன்றுதான். அங்கு அரசாளும் வஜ்ரஹஸ்தன் ஒருவனிடம் போரிடுவது தான் சிறிது கஷ்டம். அவனைக் தாண்டிவிட்டால் உங்களை எதிர்ப்பவர் யாரும் கிடையாது. அப்படியே இருந்தாலும் ஓரிரு சிற்றரசர்கள் சிறு படையுடன் இருப்பார்கள். அவர்களை முறியடித்துச் செல்வது உனக்கு ஒரு பெரிய காரியமல்ல. இமயவெற்றி சுலபத்தில் முடியும். ஏதாவது உங்களுக்கு எதிர்பாராத தடை ஏற்பட்டால் நான் அதை நிவர்த்திக்கிறேன். இங்கிருந்தே உங்கள் முன்னேற்றத்தில் ஒவ்வொரு அசைவையும் கவனிப்பேன்” என்றார் மதகுரு.

“அது எப்படி முடியும்?” என்று சந்தேகக் குரலில் இளவழுதி கேட்டான்.

“இப்படி வா” என்று அவனை பக்கத்திலிருந்த அறைக்குள் அழைத்துச் சென்று அந்த அறையின் பக்கப் பலகையொன்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியைக் காட்டி, “இதைப் பார்” என்று கூறி, ஏதோ வாயால் விடுவிடுவென்று சிறிதும் அர்த்தம் புரியாத சொற்களை முணுமுணுத்தார். அடுத்த விநாடி அந்தக் கண்ணாடிக்குள் ஒரு பெரும் பாதையொன்று தெரிந்தது. அதில் ரதங்கள் பலவும், ஒரு சிறு புரவிப்படையும் விரைந்து கொண்டிருந்தன. அடுத்து அலங்கரிக்கப்பட்ட இரு பட்டத்து யானைகள் சென்றன. கடைசியாக யானை ஒன்றின்மேல் அமர்ந்து பெரும் சங்கை ஊதிக்கொண்டு குட்டுவன் சென்றான். இந்த

ஊர்வலம் நேராக ஒரு பந்தலின் முகப்பை அடைந்தது. அடுத்த பந்தல் உள்ளும் ஒரு காட்சி விரிந்தது.

“ஆச்சரியம்! ஆச்சரியம்! இது தொண்டியின் அரண்மனை முகப்பல்லவா?” என்று கூறி திடீரென்று தலை வங்கினான். அந்தப் பந்தலின் உட்புறத்தில் ஒரு கோடியில் நெடுஞ்சேரலாதன் பூரண போருடை அணிந்து உலாவுவது மதகுருவின் கண்களுக்கு தெரிய, இளவழுதி தலை வணங்கிய காரணத்தை அவர் புரிந்து கொண்டார்.

இளவழுதி வணங்கிய தலையை திடீரென்று தூக்கி ‘’மதகுரு, ‘’மதகுரு” என்று கூவினான்.

தூரத்தில் ஒரு படகு. அதில் அஹமத், மஸ்தானா இவர்களைத் தவிர கடலரசியும் இருந்தாள்.

“அவர்கள் இங்கே வரட்டும். உன் சந்தேகத்தைத் தெளிய வைக்கிறேன்” என்றார் மதகுரு.

படகும் விரைவில் வந்து அஹமதும் பெண்களும் மரக்கலத்துக்குள் வந்து சேர்ந்ததும் மதகுரு அவர்களைத் தனது கன்னாடியிருந்த அறையில் தங்கச் சொன்னார். இளவழுதியம் அதிலே தங்கும்படி உத்தரவிட்டார்.

இளவழுதி பதிலேதும் சொல்லாமல் சென்று அங்கே தங்கினான். அன்றிரவு விசித்திர நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

அன்று நள்ளிரவில் ஏதேதோ விபரீதமான ஒலிகள் பல கேட்டன. அஹமத் மெய்சிலிர்த்து சிறு அச்சமும் அடைந்து, “மஸ்தானா இது என்ன மனித ஒலிகளாகத் தெரியவில்லையே?” என்றான்.

அப்பொழுது கூரைப் பக்கத்திலிருந்து மதகுருவின் சொற்கள் காதில் விழுந்தன. அஹமத் இவர்கள் நமது ஊழியர்கள், உனது ஆணை என்னவென்று கேட்கிறார்கள்? என்ன வேண்டுமானாலும் சொல்; நடக்கும்” என்றார்.

‘’ஊழியர்களா? யாரையும் காணோமே!” என்று அஹமத் கேட்டான்.

‘’கண்ணுக்குத் தெரியமாட்டார்கள். ஆனைக்குக் கட்டுப்படுவார்கள். உத்தரவிடு அவர்களிடம் பழகிக் கொள்ள உனக்கு இது ஒரு சந்தர்ப்பம். உனது கைகளில் ஒன்றை மேற்புறமாக நீட்டு” என்றார்.

அஹமத் அப்படியே நீட்ட அந்தக் கையை யாரோ இறுகப் பற்றினார்கள். அஹமதின் எலும்புகள் முறிந்து விடும்போல் இருந்தன.

அய்யோ !” என்று கூவினான் அஹமத்.

அப்போது மதகுரு நகைத்தார் எங்கிருந்தோ, “ஊழியர்களிடம் அச்சப்படுவது நமது பலவீனத்தைக் குறிக்கும். ஆகவே தைரியமாகக் கட்டளையிடு.”

அஹமத் சிறிது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “இந்தக் கட்டிலோடு என்னையும் மஸ்தானாவையும் காக்கிக்கொண்டு நமது கோட்டையில் வைத்து விடுங்கள். பிறகு மாமாவையும் கொண்டு வந்து எங்களிடம் சேர்ப்பித்து விடுங்கள்” என்றான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் கட்டில் மேலே உயர ஆரம்பித்தது. பிறகு அது சென்றவிடமெல்லாம் கதவுகள் திறந்தன. கதவுகளுக்கும் வெளியே வந்து, ஆகாயத்தில் பறக்கத் தொடங்கி வெகு வேகமாக கோட்டைக்கு வந்து தளத்தில் இறங்கியது.

அடுத்த வினாடி மதகுரு கட்டிலுக்குப் பக்கத்தில் நின்று அஹமதை தன் கையால் தட்டிக் கொடுத்தார்.

“அஞ்சாதே! இன்று காலை உனக்கு மகுடாபிஷேகம் என்பதை நினைவில் வைத்துக்கொள். இங்கு நான் சீக்கிரம் இளவழுதியை எதிர்பார்க்கிறேன்” என்றார்.

அடுத்த வினாடி அஹமத் நாலைந்து முரட்டுக் காரனங்களால் தாக்கப்பட்டு கீழே நீராட்ட அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு நீராட்டமும் பலமாக நடந்தது. பிறகு அலங்கார உடையணிவித்து அவனை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். இத்தனைக்கும் நீராட்டியது யார்? ஆடையணிவித்தது யார்? – என்று யாருமே கண்ணுக்குப் புலப்படவில்லை . ஏதோ பிசாசுகள் மதகுருவின் கைவசத்தில் இருப்பதாக அஹமத் தீர்மானித்துக் கொண்டான். மேற்கொண்டு எதுவும் பேசவில்லை .

மதகுரு உத்தரவின்படி மஸ்தானாவையும் அவனையும் மஞ்சத்தில் உட்கார வைத்தபோதும் மகுடங்களை அணிவித்தபோதும் அவன் அசையாமலே உட்கார்ந்திருந்தான். மஸ்தானா மெள்ள அசைந்து, ”இதெல்லாம் அப்பாவின் உத்தரவுப்படி நடக்கின்றன. நீங்கள் எதையும் கண்டு கொள்ளாதீர்கள்” என்றாள்,

“அப்படியானால் உன் அப்பாவுக்கு நான் அடிமையா? அவர் தன் இஷ்டப்படி என்னை ஆட்டுவிக்க?” என்று உஷ்ணத்துடன் கேட்டான்.

அடிமையென்பதில்லை. தற்சமயம் அவர் இஷ்டப்படி! நடப்பது நமக்கு எல்லாவிதத்திலும் லாபம்” என்றாள் மஸ்தானா

“எந்த விதத்தில்?” என்று அஹமத் கேட்டான்.

“உங்களுக்கு உங்களின் அரசு கிடைத்துவிட்டது” என்று அவள் வாசகத்தை முடிக்குமுன்,

“உனக்கும் காதலன் கிடைத்துவிட்டான்” என்றான் அஹமத்,

“என்ன உளறுகிறீர்கள்? நீங்கள் கணவன் இருக்க எனக்கு காதலன் எதற்கு?” என்று அவள் கேட்டாள் சலிப்புடன்.

‘’அவரவர் தேவையைப் பொருத்தது” என்று நகைத்தான் அஹமத்

‘’தேவையா?” என்று அவள் வியப்புடன் வினவினான்.

‘’ஆம் ஒரு கணவன் போதுமென்ற திருப்தி கொள்பவர்கள் இருக்கிறார்கள். போதாது என்றிருப்பவர்களும் இருக்கிறார் களல்லவா?” என்று அவன் கேட்டான்

‘’என் தந்தை வீட்டிலிருக்கும்போது என்னைப் பார்த்து இப்படிக் கேட்க உங்களுக்கு என்ன துணிச்சல்?” என்று கேட்டாள் கோபத்துடன்.

‘’உன் தந்தை என்னை என்ன செய்து விடுவார்?’ என்று அவனும் கோபத்துடன் வினவினான்.

‘’சமயத்தில் புரிந்து கொள்வாய்?” என்று மதகுருவின் குரல் அந்தரத்தில் ஒலித்தது.

இதைக் கேட்டதும் அஹமத் சிறிது ஆத்திரமடைந்து ”வா மஸ்தானா, போவோம்” என்றான்.

“எங்கே ?”

”நாம் மௌலி புனைந்த இடிடத்திற்குத்தான். நமது கோட்டையை – சிற்றரசை இத்தனை நாள் பிறர் ஆண்டது போதும். இனி நாமே ஆள்வோம்; கிளம்பு” என்றான்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டே மதகுரு ஒரு மூலையில் நின்றிருந்தார்.

‘’பெண்ணே, உன் புருஷனுக்கு இவ்வளவு சாமர்த்தியம் இருக்குமானால் உங்கள் இஷ்டத்தை நான் தடை செய்யவில்லை. உதவி வேண்டுமானால் கேளுங்கள். முடிந்ததை செய்கிறேன்” என்று மதகுரு சற்று இளக்காரமாகப் பேசினார்.

“சரி மாமா, உதவி தேவையானால் கேட்கிறோம். கை கால்கள் சரியாக இருக்கும் வரை யார் உதவியும் வேண்டாம். என்ற அஹமத், “வா மஸ்தானா” என்று அவளையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

மதகுரு பூனைபோல் மெதுவாகப் பின்தொடர்ந்தார். அஹமத் வாயிலில் வந்ததும் இரு புரவிகளை அழைத்து வரச்சொல்லி மஸ்தானாவை ஒரு புரவியில் ஏறச்சொல்லி இன்னொரு புரவியல் தான் ஏறி, புரவியை வெகுவேகமாக மாமாவின் பழைய மூன்றடுக்கு வீட்டுக்கு விரட்டினான். அங்கு போனதும் பயணத்தால் பெருமூச்சு வாங்க ஒரு மரத்தடியில் படுத்தான். சிறிது நேரத்திற்குள் மஸ்தானா வந்து பாலைவனச்சுனையில் ஒரு சிறு துணியை நனைத்துப் பிழிந்து அவன் முகத்தில் ஒற்றினாள்.

பிறகு எழுந்திருந்து, “நான் போகிறேன். நீங்கள் கோட்டைக்க வந்து சேருங்கள். இருவரும் ஆகாரம் உண்டு. இன்றே ராஜ்யபாரம் துவங்குவோம்” என்று கூறிவிட்டு தனது புரவியின் மீது வேகமாகக் சென்று விட்டாள்.

அன்று பகல் கோட்டையில் அஹமதின் ராஜ்யபாரம் துவங்கியது. மதகுருவே முன்னின்று மகுடாபிஷேகத்தை நடத்தி ஆட்சியையும் துவக்கி வைத்தார்.

அப்போது உள்ளே வந்த இளவழுதியை நோக்கி “அஹமத், இதோ உன்னுடைய கடல், நிலப்படைகளுக்கான தளபதி வருகிறார்” என்று கூற, இளவழுதி மண்டியிட்டு அஹமதை வணங்கி எழுந்து, “மன்னவர் வாழ்க” என்றான். அப்பொழுது அஹமத் மஸ்தானாவைப் பார்த்து நகைத்தான்.

இளவழுதி தனது தலையை ஒருபுறம் சாய்த்து மஸ்தானாவுக்கும் தனது வணக்கத்தை தெரிவித்தான்.

“இப்பொழுது எல்லாம் சரியாகிவிட்டது” என்றார் மதகுரு. அப்போது அஹமதை நோக்கி, “நீ நல்ல அரசனாக அரசாள

வேண்டுமென்றால் அல்ப சந்தோஷங்களை விட்டுவிடு என்றார்.

“சந்தேகத்துக்கு இடமில்லை” என்றான் இளவழுதி
“சந்தோஷம்” என்றான் அஹமத்,

எல்லாம் ஓர் அமைதிக்கு வந்துவிட்டதை உணர்ந்த மதகுரு. ‘’அப்பாடா” என்று பெருமூச்சு விட்டார்.

‘’இளவழுதி, இனி சேரநாடு திரும்ப வேண்டாம். இங்கேயே அவருக்கு ராஜ்யம் தருகிறேன். ஆகையால் அரேபியாவை விட்டுப்போக அவசியமில்லை” என்றார்

‘’உழைக்கிறபடி உழைத்தால் பாலைவனத்தையும் பசுஞ் சோலையாக்கலாம். இல்லாவிட்டால் பசுஞ் சோலையையும் பாலைவனமாக்கலாம்” என்று தனது அபிப்பிராயத்தையும் கூறினார்.

“இந்த மாதத்திற்குள் சகலமும் சரியாகிவிடும்” என்றும் உறுதி கூறினார்.

அப்பொழுது இளவழுதி, “மதகுரு. என்னால் சேர நாட்டைவிட்டு இருக்க முடியாது. ஆகையால் அங்கு என்னைக் கொண்டுபோய்ச் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.

Previous articleAlai Arasi Ch41 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch43 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here