Home Alai Arasi Alai Arasi Ch44 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch44 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

93
0
Alai Arasi Ch44 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch44 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch44 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 44 சீதனம்

Alai Arasi Ch44 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

படுத்திருந்த அலை . உட்கார்ந்த இளம் வரப்போகிறார் தான் அஞ்சாநெட் சொர்க்கத்தின் பஞ்சனையில் தேவஸ்திரீ போன்று படித்திருந்த அலை அரசியைக் கண்டதும், அவள் பக்கத்தில் உட்கார்ந்த இளவழுதியை, ‘எழுந்திருங்கள், அப்பா வரப்போகிறார்’ என்று அலை அரசி எச்சரித்ததும் இளவழுதி தான் அஞ்சாநெஞ்சன் என்று கூறிக்கொண்ட போதிலும் சிறிதே சிந்தனை வயப்படவும் செய்தான்.

ஆமாம் அரசி! நான் ஒன்று கேட்பேன் பதில் சொல்வாயா?”

“ஓ தாராளமாய்!” உன் தந்தையார்தான் அரேபியாவில் இருக்கிறாரே. அவர் எப்படி இங்கு வரமுடியும்? உன்னை நான் நெருங்காமலிருப்பதற்குக் காரணம் சொல்ல வேறொன்றும் உனக்குக் கிடைக்கவில்லையா?” என்றான் இளவழுதி

‘’நானும் தெரியாமல் கேட்கிறேன். நீங்கள் கடலில் மிதக்கும் மரக்கலத்தில்தானே இருந்தீர்கள். நானும் உங்கள் அருகில் இருந்தேன். அப்படியிருக்க கடலினுள், அதுவும் மூழ்கிக் கிடக்கும் மரக்கலத்துள் நான் எப்படி வந்தேன் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று சொல்லிவிட்டு கலகலவென நகைத்தாள்,

“இரு கைகள் உன்னை உயரே தூக்கிக் கடலினுள் கொண்டு சென்றது. தொடர்ந்து உனக்கு என்னவோ ஆபத்து என்று என் மனம் சொல்லிற்று நானும் கடலினுள் குதித்துவிட்டேன். ஆமாம், உன்னை யார் கடலினுள் கொண்டு சென்றது?” என்று கேட்டான். இளவழுதி.

“வேறு யார், என் தந்தைதான்.”

“அவர்தான் மந்திர தந்திரங்களை தன் சொந்த நலனுக்குப் பயன்படுத்துபவர் இல்லையே.”

-இப்பொழுது மட்டும் சொந்த நலனுக்குப் பயன்படுத்தினார் என்று யார் சொன்னது?”

“நான்தான் சொல்கிறேன்.”

“என்னைக் காப்பாற்றியது அவரின் சொந்த நலன் ஆகாது . என்னைக் கடலினுள் இழுத்ததன் மூலம் உங்களையும் கடலினுள் , குதிக்க வைத்தார். அதில் அவரது நலனை விட நமது நலந்தான் இதில் அடங்கியிருந்தது. நாம் மரக்கலத்தில் இன்னும் சற்றுநேரம் இருந்திருந்தால் கொள்ளைக் கப்பலைச் சேர்ந்தவர்கள் நம்மைச் குழ்ந்து கொண்டிருப்பார்கள். நிராயுதபாணியான நாம் மூவரும் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருப்போம். அதைத் தவிர்க்கவே தந்தை இந்த வேலையைச் செய்தார். அதோடு இந்த மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் புதைந்து கிடக்கும் பொன்னும் மணியும், நவரத்தினமும் நம்மைச் சேர வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டார். அதனால் அவர் அரூபமாக வந்து இந்த ஒத்தாசையை மேற்கொண்டார்” என்று அலை அரசி வினவினாள்.

“அப்படியென்றால் உன் தந்தை எங்கிருந்தாலும் அவரது பார்வை நம்மீது இருந்து கொண்டே இருக்கிறது என்று கொள்ளலாமா?” என்று அவளைக் கட்டிப்பிடித்தான்.

“ஆமாம்! அப்படித்தான். இந்தச் செயலை விடுங்கள். அப்பா வந்துவிடுவார்” என்று அவன் அணைப்பிலிருந்து சற்றே விலகினாள் அரசி.

“எங்கே பார்ப்போம்” என்ற இளவழுதி அவளது இடையைப் பற்றி மார்புறத் தழுவ முயன்றபோது முரட்டுக் கரம் ஒன்று பற்றி, அவனை மூலையில் தூக்கி வீசியது. தொடர்ந்து ‘ஹாஹ்ஹா’ என்று சிரிக்கவும் செய்தது. சந்தேகமில்லை . அது மதகுருவின் சிரிப்பொலி தான் என்பதைப் புரிந்து கொண்ட இளவழுதி, அதிர்ச்சியுற்று சிரிப்பு எழுந்த திசை நோக்கிப் பார்த்தான். அவன் பார்வைக்கு அங்கொன்றும் புலப்படவில்லை.

‘’இளவழுதி, உன் அகக்கண்னுக்கு நான் புலப்படமாட்டேன் அதற்கு சில வித்தைகளை கற்றிருக்க வேண்டும். நீ கேரளத்து பெரிய மந்திரவாதியுடன் பழகினாய்; என்னிடம் தொடர்பு கொண்டிருந்தாய் இருந்தும் இந்த வித்தையைக் கற்றுக்கொள்ளும் எண்ணம் உனக்கு இல்லை . ஆதலால் வீனான இந்த முயற்சியை விட்டு விடு” என்றார் மதகுரு,

அலை அரசி, இளவழுதியின் தர்ம சங்கடத்தைப் பார்த்து மனதுகுள் சிரித்துக் கொண்டான். இளவழுதியோ தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கும் திராணி இன்றி தளத்தையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தான். இந்தச் குழ்நிலையை மாற்றும் நோக்கத்துடன் அலை அரசி, “அப்பா! அக்காவை என்ன செய்திருக்கிறீர்கள்?” என்று கடல் அரசியின் நிலை குறித்து வினவினாள்.

அவள் மரக்கலத்துக்குக் காவலாக இருப்பாள். எனது மந்திர சக்தியினால் அவளையும் மரக்கலத்தையும் கொள்ளையர் கண்களுக்குப் புலப்படாமல் செய்ய புகை மூட்டம் எழுப்பியிருக்கிறேன். கொள்ளையர்களின் கப்பல் அந்த இடத்தைத் தாண்டிச் சென்ற பிறகு புகைமூட்டமும் விலகிவிடும்” என்றார் மதகுரு.

“இது கோழைத்தனம். அந்தக் கடற்கொள்ளைக்காரர்களைக் கொன்று குவித்து இந்தப் பகுதியைச் சுதந்திரமாக்கினால் பலருக்கும் நன்மையுண்டாகும். அதை விட்டுவிட்டு…” என்று முனகினான் இளவழுதி.

“இது கோழைத்தனமல்ல இளவழுதி, விவேகமான செயல் என்று சொல். நீயோ தன்னந்தனியன். ஒரேயொரு உடைவாள் மட்டுமே உன்னிடம் இருக்கிறது. உன்னோடு வந்திருப்பவரோ இரு கன்னியர்கள். அவர்களிடமும் ஆளுக்கொரு குறுவாள் மட்டுமே உண்டு. இந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு உன்னால் என்ன

செய்து விடமுடியும்? கொள்ளைக் கப்பலில் இருப்பவர்களோ நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்’ என்று நகைத்தார் மதகுரு.

“உங்கள் போக்கு புதுவிதமாய் இருக்கிறது. அன்று அனுமதின் சித்தப்பனிடம் சிறைப்பட்டபோது உங்கள் மந்திர தந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருந்தீர்கள். இன்று மட்டும் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுகிறீர்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை?’’ என்றான் இளவழுதி, அவன் குரலில் சலிப்பு இருந்தது.

“ஆம்! இதோ பார் இளவழுதி” என்று சிலவிநாடிகள் கழித்து அவரிடமிருந்து வந்த பதிலில், இதுவரை கேட்காத புதுத்தொனி இருந்தது. அலை அரசி தன் அழகிய விழிகளை ஏறெடுத்து மதகுருவின் குரல் வந்த திக்கை நோக்கினாள். இளவழுதியும் அந்தத் திசையிலேயே பார்வையைச் செலுத்தினான்.

“உள்ளதைச் சொல்கிறேன் இளவழுதி! உனக்கு பல விஷயங்கள் புரியவில்லை. உதாரணமாக என் பேச்சும் போக்கும் உனக்குப் புரியவில்லை . அது புரியாமல் இருப்பதே நல்லது. நான் அழைத்து அரேபியாவுக்கு வந்தாய். நீயாக வரமாட்டாய் என்ற எண்ணத்தில் என் ஆசை மகள் மஸ்தானாவை அனுப்பினேன். அவள் அழகில் மயங்கினாய். நீ மயங்குவாய் என்று எதிர்பார்த்துதான் அவளை உன் மண்ணிற்கு அனுப்பினேன். அவள் ஏற்கெனவே மணமானவள் என்ற நிலையிலும் உன்னோடு பழகினாள். அது தவறுதான். இருப்பினும் அவள் விதி அப்படி, இது இயற்கையின் விருப்பம். அதனால் அந்தப் போக்கிலேயே அவளை விட்டேன். அவளது கணவனுக்கு ராஜ்ஜியம் கிடைத்ததும் அவள் உன்னைவிட்டு விலகும்படி ஆயிற்று.

“உன்னை வழியனுப்பும் போதுகூட அவள் வாய் திறக்கவில்லை. இதெல்லாம் உனக்குப் புதிராக இருக்கலாம்.

நான்தான் அவளை ஏதும் பேசாமலிருக்கும்படிச் செய்தேன். அவள் பேசினால் உன் மனம் பேதலித்து விடும் என்று கருதினேன். காரணமென்ன? அலை அரசியும் என் மகளைப் போன்றவள். அவளுக்கும் ஒரு வாழ்க்கையை நான் அமைத்துத் தரவெண்டுமல்லவா, அதனால் தான் இப்போது அலை அரசியை உன் பின்னால் அனுப்பியிருக்கிறேன். அவள் இனி அரேபியாவுக்கு வருவதென்பது இயலாது. இனி அவன் உன் மனைவியாகிவிடுவாள். அவளுடன் சீதனமாக ஒன்றும் கொடுக்க முடியவில்லையே என்ற உறுத்தல் என்னுள் இருந்தது.

அதனால்தான் இந்தப் பகுதிக்கு உங்கள் மரக்கலம் வருமாறு செய்தேன். இந்தப் புதையுண்ட மரக்கலத்தில் ஏராளமான செல்வங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். இதை எடுக்க பல ராஜ்ஜியங்களைச் சேர்ந்தவர்கள் முயன்று பெற்றிருக்கிறார்கள். இவையனைத்தையும் உன் மரக்கலத்திற்குள் கொண்டு சேர்த்து விடு. நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் நீங்கள் தொண்டியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மறுநாள் உனது மன்னன் வடபுல யாத்திரைக்கு நாள் குறித்திருக்கிறான். அந்த யாத்திரையில் பங்கு கொள்ள நீ வருவாய் என்று உன் மன்னனுக்குச் செய்தி அனுப்பியாகிவிட்டது. வீரத்தைக் காட்டுகிறேன் என்று வீணாக நேரத்தைச் செலவழிப்பது நல்லதல்ல அதனால்தான் உங்களை கடலுக்குள் கொண்டு சென்றேன்” என்று விளக்கினார் மதகுரு.

மெள்ள மதகுருவின் கை ஒன்று அவன் தோள்மீது படுவதை உணர்ந்து இளவழுதி திரும்பினான்.

”ஆமாம் இளவழுதி, நீ உன் மன்னனது வெற்றிக்கு உதவவேண்டுமல்லவா! விரைவில் போய்ச் சேர்” என்றும் சொன்னார்.

அந்தச் சில நிமிடங்களில் இளவழுதி, உலகத்திலுள்ள வஞ்சகம், சுயநலம், போட்டி, பொறாமை எல்லாமும் மறைந்து அன்பும் பாசமும் மட்டுமே மேலெழுந்து நின்றதை உண்ர்ந்து மதகுருவுக்குத் தலைவணங்கினான். அவன் காதில் ‘விரைவாகப் போய்ச் சேர்’ என்ற மதகுருவின் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அதனால் ஏற்பட்ட பெருங்கவலையில் என்ன செய்வது என்று திகைத்து நின்றான். இதை உணர்ந்த அலை அரசி அருகே வந்து ஆதரவாக அவன் தோளைப்பற்றி, ”உம், சீக்கிரம் இந்தப் பெட்டிகளைத் திறவுங்கள்” என்றாள்.

இளவழுதி தன் உடைவாளை எடுத்து அந்தப் பெட்டிகளில் பூட்டியிருந்த கனமான பூட்டுகளை உடைத்து எறிந்தான், மூடிகள் திறக்கப்பட்ட பெட்டிக்குள்ளிருந்து மேல்நோக்கி விழித்த பெரும் செல்வத்தைக்கண்ட இளவழுதியும் அலை அரசியும் திகைத்து நின்றனர். அவர்கள் ஆயுளில் கண்டிராத செல்வம், பலவகை நகைகள், பலவகை நவமணிகள், பலவகை நாணயங்கள் விதவிதமான பண்டங்கள், பாத்திரங்கள், துணிகள் என்று குவிந்து கிடந்தன. விழித்த கண்கள் விழித்தபடி, திறந்தவாய் திறந்தபடி இருவரும் நின்றனர். அவர்களது கைகால்கள் கூட சில வினாடிகள் அசைவற்று ஸ்தம்பித்து நின்றன. அணுகத் தகாத புதையலைக் கண்டு பயப்படுபவர்களைப் போல் அவர்கள் நின்றிருந்தனர் அங்கிருந்த கணக்கற்ற பெட்டிகளில் இரண்டில் தங்க நாணயங்களும் வெள்ளி நாணங்களுமாகக் கலந்து வழிந்தன. இன்னொன்றில் வைர, கோமேதக, நீல வைடுரிய மாணிக்கங்களும் அவைகளால் பதிக்கப்பட்ட பற்பல ஆபரணங்களும் நிரம்பியிருந்தன. இன்னொரு பெட்டியில் மன்னர்களது மாளிகைகளிலிருந்து கவர்ந்து வரப்பட்ட நானாவித பாத்திரங்களும், கடைசி இரு பெட்டிகளில் வாள்கள், குறுவாட்கள், கேடயங்களும் இருந்தன. ஒவ்வொரு வாளிலும், குறுவாளிலுமுள்ள கைப்பிடிகள் நவரத்தினக் கற்களால் பதிக்கப்பட்டு ஜொலித்தன.

எதிரே வாயைப் பிளந்து கொண்டு நின்ற இளவழுதியை நோக்கி மதகுருவின் குரல் மீண்டும் எழுந்தது.

இளவழுதி எடுத்துக்கொள்! இவ்வளவு செல்வங்களும் உனக்குதான், அலை அரசியுடன் இவ்வளவு சீதனத்தையும் உனக்கு தருகிறேன், உனக்கென்று ராஜ்ஜியம் கொடுத்தால் உன் மன்னன் நெடுஞ்சேரலாதனை விட்டுவிட்டு வரமாட்டாய். இந்தச் செல்வங்களை கொடுத்தால் அதை அட்டியின்றி பெற்றுக் கொள்வாய். உன் மன்னனும் உன்னைப் பொன்போல் போற்ற இந்தப் பெருஞ்செல்வம் உனக்குத் தேவைதான். நான் எனது மந்திர சக்தியால் இவ்வளவு செல்வங்களையும் உன் மரக்கலத்தில் சேர்ப்பிக்கின்றேன்’’ என்று சொல்லி, அவ்வாறே செய்யவும் செய்தார்.

மந்திரத்தால் கட்டுண்டவன் போல் இளவழுதி அந்த மூழ்கடிக்கப்பட்ட கப்பலை விட்டு கடலுக்குள் பாய்ந்தான். அவனைத் தொடர்ந்து அலை அரசியும் வந்தாள். கடல் மட்டத்தில் இவர்களது மரக்கலத்தில் கடலரசி நின்று கொண்டு இவர்களை நோக்கிக் கையசைத்தாள். அவளது முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள். இவர்கள் மரக்கலத்தை அடைந்ததும் கைலாகு கொடுத்து தூக்கி அவர்களை மரக்கலத்தில் சேர்த்தாள். உடலில் வழியும் நீரைத் துடைத்துக்கொண்டே மதகுருவின் அடுத்த உத்தரவுக்குக் காத்து நின்றான் இளவழுதி.

இவனது விருப்பத்திற்கிணங்க மதகுருவும், ‘போய் வா இளவழுதி, அலை அரசி பத்திரம். கடல் அரசியும் அப்படியே உங்களது வடபுல யாத்திரை சிறப்பாக அமையும்!” என்று அரூபமாக நின்று ஆசீர்வதித்தார்.

அவரது ஆசியைத் தலைவணங்கி ஏற்றுக் கொண்டான் இளவழுதி.

“அப்பா, இப்பயணத்தில் எங்களுக்கு இடைஞ்சல் ஏதுமின்றி நீங்களே மரக்கலத்துக்கு கவசமாக இருந்து வழி நடத்திச் செல்லவேண்டும்” என்றாள் அலை அரசி, மதகுருவின் குரல் ஒலித்த திசை நோக்கி.

“அப்படியே மகளே!” என்றார் அவர், அவளது க கைவைத்து அலை அரசியும் அவரிடமிருந்து பிரிய பெற்றாள்.

இரவு ஏறியிருந்தது. பௌர்ணமி கழித்து ஏழு நாட்கள் ஆகிவிட்டதால் பதினான்கு நாழிகைகளுக்குப் பிறகே கிருஷ்ணபட்சத்துச் சந்திரன் தலைகாட்ட முடியும் என்று யூகித்த இளவழுதி வானத்தை அண்ணாந்து பார்த்தான். அப்போது அவை அரசி மெள்ள அவன் அருகில் வந்து தோளைப் பற்றிக் கழுத்துப் பகுதியில் அலையாடிக் கொண்டிருந்த கேசங்களை ஒதுக்கி மெதுவாகத் தன் அதரங்களை அங்கே பதித்தாள். இளவழுதிக்கு இது சுகமாக இருந்திருக்க வேண்டும். அவனும் அவளுக்கு நேராகத் திரும்பி, அவளது முகத்தைக் கைகளில் ஏந்தி அந்த இருளிலும் அவளது விழிகளில் புகுந்து எதையோ தேடினான். அவன் தேடிய புதையல் கிடைத்ததா என்பது தெரியவில்லை? அவனது உடலோ அலை அரசியின் உடலோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டது. அலை அரசி தடையேதும் சொல்லவில்லை. அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கை குறுக்காக அவனது முதுகுப் பகுதியை வளைத்துக் கொண்டிருந்தது. அவளது அதரங்கள் துடிப்பதை உணர்ந்த இளவழுதி தனது உதடுகளை அதில் அழுத்தி அந்தத் துடிப்பை நிறுத்தினான்.

Previous articleAlai Arasi Ch43 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch45 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here