Home Alai Arasi Alai Arasi Ch45 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch45 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

99
0
Alai Arasi Ch45 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch45 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch45 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 45 தொண்டித் துறைமுகம் நோக்கி….

Alai Arasi Ch45 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

மனித வாழ்வில் நொடிப்பொழுது என்பது அற்ப காலம். ஆனால் அந்த அற்பகாலம் விளைவிக்கிற மாற்றங்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். இந்த மாற்றங்கள் எண்ண ங்களிலும் ஏற்படலாம், சரீரத்திலும் ஏற்படலாம். ஏன் உணர்ச்சிகளிலும்கூட ஏற்படும். ஆகையால் நொடிப் பொழுதுதானே என்று அந்த அற்ப காலத்தை ஒதுக்குவதற்கில்லை. அதன் வேகம் இணையற்றது என்று உணருவதுதான் விவேகம். அந்த விவேகம் மறையும் காலமும் உண்டு. அதை மயக்க வைக்கும் காலம் என்று வேதாந்தம் சொல்லும், மயக்கம் தரும் காலங்களில் மன்மதனின் ஆளுகைக்கு உட்படும் நேரமும் ஒன்று.

அப்படிக் காதல் வயப்பட்டு அவள் உதடுகள் துடித்ததும், அந்தத் துடிப்பினை உள்ளுணர்வுகளால் அறிந்து கொண்ட இளவழுதி அவளை மேலும் தன் உடலோடு இறுக அணைத்து, துடிக்கும் அவளது இதழ்களைத் தன் இதழ்களால் பொருத்தி இன்பம் துய்த்ததும் கூட ஒரு விநாடி நிகழ்ச்சியே! அந்த ஒரு விநாடி கால இன்பம் அவளுக்கு என்னென்னவோ இன்பத்தை வாரி வழங்கியது. அலை அரசி தன் உதடுகளை அவனது உதடுகளிலிருந்து பிரித்து அவனையே கூர்ந்து நோக்கினாள். அந்த அற்ப காலத்தில் ஏற்பட்ட உணர்ச்சி வெள்ளத்தில் அவளது இதயம் படபடத்ததை, அணைப்பில் இருந்த மார்பகத்தின் மூலம் இளவழுதியால் உணர முடிந்தது. அவன் முன் எப்போதையும் விட இப்பொழுது அழகாகத் தோன்றியதாக உணர்ந்தாள் அலை அரசி.

ஆசை ஆசையாய் அவனது புருவங்களை. அதரங்களை, மீசையை, கன்னச் செழுமையை, உறுதியான காதுகளை, நீண்ட அழுத்தமான கழுத்துப் பகுதியை அவள் பார்த்துக் கொண்டும், சிற்சில சமயங்களில் தனது வலது கையால் அவைகளைத்

தடவியவாறும் இருந்தாள் அரசி. இவளின் நிலை இப்படியிருக். இளவழுதியோ தன் மனதுக்குள் ‘பெண் ஜென்மம் சிறந்த ஜென்மம். அதற்கு இணை ஏதுமில்லை. அதற்கு உவகை இந்த அலை அரசிதான்’ என்று எண்ணிக் கொண்டான். திடீரென சிரிப்பொன்றை உதிர்த்தான்.

“எதற்கு இந்த நேரத்தில் சிரிப்பு?” என்றாள் சிறிது அதிர்ச்சியைக் குரலில் காட்டி

“உன் நிலை குறித்து சிரித்தேன்.”

“ஏன்? என் நிலைமைக்கு என்ன?”

“கவலையடையக்கூடிய நிலைமை இல்லை. இருந்தாலும் சிரிப்பு வந்தது. சிரித்தேன். “

“ஏன் சிரிப்பு வரவேண்டும்?” என்று சிணுங்கினாள் அரசி.

உன்னை என்னுடன் சேர்த்த விதியை நினைத்தேன். உனக்கு நினைவிருக்கிறதா? தொண்டி கடற்கரைக்கு வந்தாய். மதகுருவின் சக்தி மூலம் என்னை மயக்கத்தில் ஆழ்த்தினாய். பிறகு என் இதயத்தைத் திருடிக் கொண்டாய். பிறகு மஸ்தானா வந்தாள். அவளுடன் நெருங்கிப் பழகினேன். இதை நீ அறிந்தும் அறியாமலும் இருந்தாய். இப்பொழுது மதகுரு நீ என் மனைவி ஆவாய் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். சீதனம் கொடுக்கவில்லையே என்று திரும்பவும் வந்து சீதனமாக இந்த மரக்கலம் நிறைய செல்வத்தையும் நிரப்பிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் இனிமேல்தான் நான் உன்னை என் மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன், சிரிப்பு வந்தது. மனைவி ஆனபிறகு சீதனம் வந்து சேருவது எங்கள் நாட்டுப் பழக்கம். உன் விஷயத்திலோ நீ இன்னும் மனைவியாகவில்லை. சீதனம் முன்கூட்டியே வந்திருக்கிறது.”

‘உண்மைதான், உங்களது சம்பிரதாயங்களின்படி. ஆனால் நீங்கள் என்றோ என் கணவராகி விட்டீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. ஆமாம், உங்களைப் பார்த்த அன்றே என் கணவர் இவர் தான் என்று என் மனம் சொல்லிற்ற மஸ்தானாவுடன் நீங்கள் – நெருங்கிப் பழகுவதை நான் கண்டுகொள்ளவில்லை என்று தானே சொன்னீர்கள். அது உண்மையில்லை. என் மனம் புழுங்கியது எனக்குத் தான் தெரியும். நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் எனக்குச் சொந்தமானவர் என்று என் உள்ளத்தில் ஓர் உறுதி இருந்ததால் அதைச் சமாளித்தேன். சுதந்திரம் ஒருத்தியின் அழகைக் கெடுக்கிறது; அடக்கம் ஒருத்தியன் அழகைக் கூட்டுகிறது என்பது எங்கள் நாட்டில் ஒரு பழமொழி. அடக்கமுள்ள பெண்களுக்குள்ள அழகு அடக்கமில்லாத பெண்களுக்கு இருப்பதில்லை. தலைகுனிந்த பெண்ணிடமிருக்கும் எழில் தலைகுனியாமல் நிமிர்ந்து நடக்கும் பெண்களிடம் கிடையாது.

சுதந்திரத்தை ஓர் ஆணிடம் கொடுத்துவிட்டு அவனுக்கு அடங்கி நடக்கும் பெண்ணின் அழகே உன்னதமானது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் அழகை உங்களிடம் ! மானசீகமாகச் சேர்த்தேன், அவ்வளவு தான், இதற்கு உங்கள் – அனுமதி வேண்டாமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் என் ஆசையைத் தடை செய்ய யாரால் முடியும்? என்னால்கூட அது முடியாதே. இதனால் மஸ்தானாவைப் பழிக்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். இயற்கை அவளை வஞ்சித்து விட்டது ஆதலால் அவளது நடவடிக்கை இப்படியாகிவிட்டது. ஒரு ” முறையில் நான் அவளுக்குத் தமக்கையானதால் இருந்து அனுமதித்தேன். எங்கள் பகுதியில் இது பெரிய குற்றமுமில்லவ ஒருவன் அக்கா, தங்கையரை மணந்து கொண்டோ விரும்பியோ வாழ்வது உண்டுதான். மஸ்கானாவிடம் நெருங்கிப் பழகியது பசியைப் போக்க உன மனம் – போன்றது” என்று ஏதோ பெரிய தத்துவத்தைத்யத்தின் மிக ரகசியமாக அவன் காதில் முணுமுணுத்தாள்.

பேசுவதை நிறுத்தி, சற்றே சரிந்து அவனது மார்பில் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

மெய்மறந்து அவளது வாய்வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த இளவழுதி அவளது மன அடக்கத்தை வியந்தான். அவள் கூற்றில் யாதொரு குற்றமுமில்லை என்பதை உணர்ந்தான்,

அதே நேரத்தில் அலை அரசி கேட்டாள்:

“நீங்கள் வடபுல யாத்திரை சென்று எவ்வளவு நாளில் திரும்புவீர்கள்?”

“ஏன் அரசி! நீ என்கூட வரப்போவதில்லையா?”

“உங்கள் நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் போர்க்களத்துக்கு வருவதுண்டா?”

இல்லை , அவர்களது வேலையெல்லாம் அந்தப்புரத்தில் தானே என்று வினவினான்.

நீங்கள்யிருக்க நான் மட்டும் வருவது எப்படி நியாயமாகும்? போர்க்கு சென்று திரும்புகிறவரை உங்களுக்காகப் காத்திருக்க செய்வதோடு, உங்கள் வருகைக்காகக் ஏற்படும் சுகத்தை அனுபவிக்கப் போகிறேன். நம் என்னைச் சந்திக்க விரைந்து வந்துவிட வேண்டும்.

மரக்கல அறையை விட்டு வெளியே வந்த கடல் அரசி அவர்களை நோக்கி, “எவ்வளவு நேரம்தான் இந்த குளிரெடுக்கும் கடற்காற்றில் வெளியே நிற்பீர்கள்! அறைக்குள் வாருங்கள்” என்று அழைத்தாள்,

சுய நினைவு பெற்ற இருவரும் அவளைப் பின் தொடர்ந்து மரக்கல அறைக்குச் சென்று தங்களது பஞ்சணைக்குச் சென்றனர்.

‘சே! நான் எத்தனை வெட்கமற்றவள்!” என்று தன்னைத்தானே கண்டித்துக் கொண்டாள். உண்மையிலேயே அது கண்டனமா அல்லவா என்பது அவளது பருவ விழிப்புகளுக்குத்தான் தெரியும். அப்படி அந்த உணர்வுகள் ஏற்பட்டதால்தானோ என்னவோ இந்த சமயத்தில் தன் மனத்தை இளவழுதியிடம் திறந்து காட்டினாள். அப்படி நடந்து கொள்ளாது போனால் தானும் இளவழுதியும் பரஸ்பரம் நெருங்கி வரமுடியாது என்று இயற்கைதான் உந்தியிருக்க வேண்டும் என்றும் நினைத்துத் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள் அலை அரசி. காதல் பொய்யாகி விடக்கூடாது என்பதில் அவள் குறியாய் இருந்தாள், இல்லையென்றால் அவன் மஸ்தானாவுடன் பழகியதை ஒரு குற்றவுணர்வாகக் கொண்டு தன்னை விட்டு ஒதுங்கிவிடக் கூடுமோ என்றும் பயந்து அதனால் தான் வெட்கம் கெட்டு எல்லாவற்றையும் சொன்னதாகவும் ஒரு பக்கத்தில் குற்றச்சாட்டு எழத்தான் செய்தது. ஆம், அதிலென்ன தவறு இருக்கிறது: காதலைப் பற்றி பொய் சொல்லி கருத்தை ஏமாற்றலாம்; இதயத்தை எப்படி ஏமாற்ற முடியும்? அப்படி என் மனதை இப்போது திறக்காவிட்டால் நான் மோசம் போய்விடுவேனோ என்றும் என் உணர்வுகள் உந்தியது. அதனால் தான் இவ்வளவு தூரம் மனம் திறந்து இளவழுதியிடம் பேசியதாகவும் பதில் குரல் இதயத்தின் இன்னொரு மூலையில் சமாதானமாக எழுந்தது. ஒருவாழியாக சமாதானமடைந்த அரசி அப்படியே தூங்கிப் போனாள்.

பலகணி வழியே பறவைகளின் நானாவித கூக்குரல் வென்று அருகில் நிலம் இருப்பதற்கான அறிகுறி என்று உணர்ந்து பஞ்சணையிலிருந்து எழ விரும்பினாள். அவள் மார்பின்க குருக்காக இளவழுதியின் கை கிடக்கவே, ஓசைப்படாமல் அந்த கைகளை மெள்ள எடுத்துவிட்டு எழுந்தாள். கடல் அரசி இன்னொரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்தாள். யாரையும் எழுப்பாத அலை அரசி மட்டும் மரக்கலத்தின் தளத்துக்கு வந்து சேர்ந்தால் மரக்கலம் சீராக தொண்டித் துறைமுகம் நோக்கி வழியில் ஒரு தீவை இடப்புறமாக ஒதுக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது அந்தத் தீவுக் கூட்டங்களில் வசிக்கும் பறவையினங்களின் ஒலிதான் அது என்று கண்டு கொண்டாள். பாரதத்தின் மேற்கு தொடர்ச்சிமலை கருமையாய் கடலுக்குள் நிற்கும் அரணாக காட்சி அளித்ததால் சேரநாட்டை நெருங்கிவிட்டோம் என்று குதூகலம் அவள் நெஞ்சில் எழுந்தது.

முகம் கழுவி பல் துலக்கியவள் திரும்பவும் பஞ்சணையிருந்து அறைக்கே திரும்பினாள். அப்போதும் அவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். மெள்ள இளவழுதியை நெருங்க அவனது நெற்றியில் விழுந்திருந்த சுருள் கேசங்களை ஒதுக்கிவிட்டு தனது இதழ்களை மெள்ளப் பதித்தாள் இளவழுதியும் முனகிக்கொண்டே அவளது கழுத்தைப்பற்றி தன்னருகே நெருக்கினான்.

“எழுந்திருங்கள், இன்று காலை என்ன சாப்பிட போகிறீர்கள்?” என்று முணுமுணுத்தாள்,

“காலை உணவுதானே. இங்கே வா” என்று அவளது கன்னத்தில் பதித்த உதடுகளை அவளது இதழிலும் பொருத்தினான். “இதைவிட வேறென்ன உணவு வேண்டும் என்று கேட்கவும் செய்தான்.

இளவழுதியின் கை அவள் முதுகுப்புறத்திலிருந்து நழுவி இடைக்குக் கீழே பருத்துக் கிடந்த அழகு மேட்டில் தவழ முற்பட்டபோது அவள் அவன் கையைத் தட்டிவிட்டு ‘உம்’ என்றாள்,

அவர்களிருவரும் அந்தக் காலை நேரத்தை மறந்தார்கள் உலகை மறந்தார்கள்,

Previous articleAlai Arasi Ch44 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch46 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here