Home Alai Arasi Alai Arasi Ch47 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch47 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

102
0
Alai Arasi Ch47 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch47 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch47 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 47 ஒற்றன் கொண்டுவந்த செய்தி

Alai Arasi Ch47 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

தயாராய் நின்றுகொண்டிருந்த படைகளை மன்னர் பார்வையிட்ட நேரத்தில், இளவழுதி அங்கு வந்து சேர்ந்திருந்த அந்த வேளையில், கடகாச்சாரியார் போர்க்கம்பத்தை நட்டு பூஜை போட்டு, வெற்றி தருமாறு வேண்டினார். கம்பத்தின் அருகே மன்னர் வந்தவுடன் பல்வகை வாத்தியங்கள் முழங்கின. கற்பூர ஆரத்தி ஒளி வீசியது. அப்பொழுது உடலெங்கும் சிவப்பு சாந்து பூசி இடையில் சிவப்புத் துண்டு உடுத்திய இளைஞன் அங்கு ஓங்காரமிட்டபடி வந்து சேர்ந்தான். அவன் கையில் சாணைபிடித்த பட்டாக்கத்தி, அவனது ஓங்காரச் சத்தம் கேட்டு மன்னர் அந்தப் பக்கமாகத் திரும்புவதற்குள்ளாகவே, அவனே போர்க்கம்பத்தை மூன்று தடவை சுற்றி முடித்தான்.

இடது கையால் தனது தலைமுடி உச்சியைப்பிடித்துக் கொண்டு வலது கையில் இருந்த பட்டாக்கத்தியை ஓங்கி, இமைக்கும் நேரத்தில் தன் கழுத்தில் இறக்கினான். தலை வேறு உடல் வேறாக ! அவன் வேரற்ற மரம்போல் கீழே வீழ்ந்தான். உடலிலிருந்து அறுபட்ட தலை துடிதுடித்து அடங்கிப் போனது. உடலும் அப்படித்தான் ஆனது. படைவீரர்கள் ஜெயகோஷம் எழுப்ப ரணபேரிகை கொம்பு, தாரை, தப்பட்டை எல்லாமாகச் சேர்ந்து ஓசை எழுப்பி அந்த இடத்தை உணர்ச்சிமயமாக்கிய வேளையில் மன்னர் அந்தப் பக்கமாகப் பார்வையைச் செலுத்தினார். அவர் மனம் துணுக்குற்றது. அவர் தன் வாழ்நாளில் இதுபோன்ற நடைமுறைகளை ஒழித்திருந்தான். போருக்குப் புறப்படும்போது களப்பலியென நரபலி கொடுக்கப்படுவதை அறவே வெறுத்தார். சம்பிரதாயத்துக்காக எந்த உயிரையும் பலி கொடுக்கக் கூடாது என்று ஆணை வேறு இட்டிருந்தார். ஆனால் அரச குடும்பத்திற்காகவும், நாட்டுக்காகவும் சுபிட்சம் வேண்டி பலி கொடுப்பதற்கென்றே ஒரு குடும்பத்தார் இருந்தார்கள். அவர்கள் வேலையே தங்களது உயிரை பலி கொடுப்பது தான். இதையொரு பக்கியமாகவே அவர்கள் கருதினார்கள். அவர்கள் சொல்லி வைத்து தங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதில்லை. யாரும் எதிர்பாராத நேரத்தில் இப்படி திடுமென வந்து தங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதை ஒரு மரபாகக் கொண்டிருந்தார்கள்.

மன்னர் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய போர் எதையும் சாதிக்காத காரணத்தினால் இதுபோன்ற களப்பலிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இப்பொழுது மன்னர் வடபுலயாத்திரை போவது என்பது மிகப்பெரிய போர் என்று கருதியதால் களப்பலி கொடுக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொள்ள நேர்ந்தது.

இதை மன்னர் புரிந்து கொண்டாரானாலும் அவர் துணுக்குற்றதை மந்திரி பிரதானிகள் புரிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்ல முற்பட்டனர்.

“நீங்கள் ஆயிரம் சொன்னாலும் இது அருவருக்கத் தக்க செயலே. இந்த மடமைகள் நம்மை விட்டுப்போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இது எப்படியோ எதிர்பாராமல் நடந்து விடுகிறது” என்று சொல்லி உயிரைப் போக்கிக்கொண்ட இளைஞனின் உடலையும் தலையையும் ஒரு சேரவைத்து தனது வீர வணக்கத்தைச் செலுத்தினார். வழக்கப்படி உயிர்ப்பலி கொடுத்த இளைஞனின் குடும்பத்துக்கு இருபத்தைந்து கிராமங்களை மானியமாக அளித்தார். சகலவிதமான மரியாதைகளையும் அவனுக்குச் செலுத்தினார். அவன் பெயரில் நடுகல் ஒன்றும் நடப்பட்டது. அவன் வீர கவர்க்கம் எய்தியதாக வீரர்கள் கோஷமிட்டனர்.

பின்னர் மன்னர் அமர்ந்திருந்த யானை தன் துதிக்கையை உயர்த்தி போர் வெறியுடன் எக்காளமிட்டது. மன்னரும் அதன் சைகையைப் புரிந்து அதைத் தட்டிக் கொடுக்க, யானை எட்டி எட்டி

நடையைப் போட்டது. இனவழுதியும் தனது புரவிமீது மன்னரைத் தொடர்ந்து செல்ல, வீரர்களும் ஜெயகோஷமிட்டு ஊழிக்காலத்துப் பெருவெள்ளம்போல எதிரியை வீழ்த்தக் கிளம்பினர்,

மூன்னே யாகப் புரவி அதன் பின்னே அவர்கள் செல்ல நாட்கள், மாதங்கள் எனப் பல கடந்து அவர்கள் தமிழ் நாட்டு எல்லையைக் கடத்தனர். எங்கும் எதிர்ப்பில்லை போரும் இல்லை. எதிர்ப்பட்ட நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் மன்னரை அன்புடன் வரவேற்றனர்.

அவர்கள் பலமாத பயணத்திற்குப் பிறகு கலிங்கத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். இரண்டு நாழிகைகள் பயனத்துக்குப் பிறகு நெடுஞ்சாலை மறைந்து விட்டதையும், சாலையின் ஒரு பக்கத்தில் காடு தோன்றுவதையும் கண்டனர்

“மன்னர் பெருமானே இந்தக் காடு எதைச் சேர்ந்தது? என்று இளவழுதி வினவினான்,

“மகேந்திர மலையாக இருக்கக்கூடும். லாங்குனி நதிகுறுகி வருவது இங்கேதான். இந்த மலையிலிருந்து உற்பத்தியாகும் மூன்று நதிகளுக்கு சிவிருல்யா, வம்சதாரா, லாங்குனியா என்று பெயர். இதில் லாங்குனி நதி தான் பெரியது. இந்த நதிகளைப் பார்க்கையில் இது மகேந்திர மலையாகத்தான் இருக்க வேண்டும் என்று பூகிக்கிறேன் என்றார் மன்னர்,

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே யாகப் புரவியைத் தொடர்ந்து சென்றவர்கள் ஓடிவந்து, புரவியை மடக்கி விட்டார்கள் என்றும், தாங்கள் கலிங்க மன்னன் முதலாம் வஜ்ரஹஸ்தனுடைய ஆட்கள் என்று அவர்கள் குறிப்பிட்டதாகவும், மன்னர் உத்தரவிட்டால் சண்டையிட்டுத்தான் புரவியை மீட்க முடியும் என்று தோன்றுகிறதென்றும் கூறினார்கள்

‘’வீரர்களே! இதில் சண்டை என்பது போரில்தான் முடியும் வஜ்ரஹஸ்தன் நம்மை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தனது வீரர்களுக்கு புரவியை மடக்க சொல்லி உத்தரவிட்டிருப்பான் அவர்களை சில வீரர்கள் என்று எண்ணி விடாதிர்கள் அவர்களை பலநூறு வீரர்கள் கண்காணித்து மறைவில் இருப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார் மன்னர்

“போர் வந்தால் என்ன? தமது வீரர்கள் ஒரு நல்ல போரைச் சந்தித்து வெகு நாட்களாகி விட்டது. அதைச் சந்தித்துவிட வேண்டியதுதான். வெற்றி நம் பக்கம்தான் என்றான் இவைழுதி அவன் குரலில் உஷ்ணமும் உறுதியுமிருந்தது.

“நல்லது இளவழுதி நீ பக்கத்தில் இருக்கையில் வெற்றி கூடவே இருப்பது போலத்தான் ஆனாலும் இந்த இயற்கைச் சூழல் நமக்குப் புதிது. நாம் முற்றிலுமாக வேறு நா படம் இருக்கிறோ ஆதலால் எதிரியின் பலம், பலவீனம் இரன் போரில் இறங்குவதுதான் புத்தி சாதுரியம் இதனால் நாம் நமது படைகளின் சேதாரத்தைக் குறைக்க முடியும் நாம் இங்கே முகாமிடுவோம் நமது ஒற்றர் படையின் தலைவனை வரச்சொல் அவனுக்கு வேலை வந்து விட்டது.”

அப்படியே ஒற்றர் தலைவன் வரவழைக்கப்பட்டான் அவன் வந்ததும் மன்னர் அவள் தோளில் கைபோட்டு அவனைத் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று அவன் காதில் ஏதோ ரகசியம் பேசினார். ஒற்றர் தலைவனும் தலைவணங்கி எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அகன்றாள்,

தனக்காக அமைக்கப்பட்ட கூடாரத்தை நோக்கிச் சென்றார் மன்னர். உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்ததும் வெகு நேரம் சிந்தனை வயப்பட்டிருந்தார். பிறகு நறுக்கு ஓலையை எடுத்து எழுதினார். அதை வீரன் ஒருவனை அழைத்து. இதை வஜ்ரஹஸ்தனிடம் சேர்ப்பித்துவிட்டு பதில் வாங்கி வா” என்றார்.

வீரன் அகன்றதும், “மன்னர் சிந்தனைவயப்பட்டிருப்பதப் பார்த்தால், போருக்கு பயப்படுவதுபோலத் தோன்றுகிறது என்றான் அருகிலிருந்த இளவழுதி.

“ம்ம் அப்படியா! போருக்குப் பயப்படவில்லை இளவழுதி மனித உயிர்கள் தேவையில்லாமல் மண்ணில் சவமாக விழ வேண்டாமே என்ற கவலை வந்துவிட்டது. இதைத் தடுக்க சில யுக்திகளைக் கையாளுவது நம் கடமை. அதற்கான யோசனைகள் தான் என்னை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. இதை பயம் என்று கேலி செய்கிறாய். இள ரத்தமில்லையா உனக்கு. அதனால் தான் இப்படிப் பேசுகிறாய்!” என்ற மன்னரின் குரலில் ஆழ்ந்த வேதனை தென்பட்டது.

“போரை நாமா வரவழைக்கிறோம்? தானே வலிய வந்தால் அதை வரவேற்க வேண்டியதுதானே!”

“ஆம், உண்மைதான். வஜ்ரஹஸ்தன் எப்படி நடந்து கொள்ளப் போகிறான் என்பதைப் பொறுத்தது அது. அவன் உனக்கு நிறைய வேலை கொடுப்பான் என்றுதான்படுகிறது. நாம் வடபுல யாத்திரை செல்வதும் வெற்றி பெறுவதும் உறுதி. அப்படியிருக்கும்போது வஜ்ரஹஸ்தன் போன்றவர்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படத்தானே செய்யும். நம்மை எதிர்கொண்டழைத்தால் அவன் வீரம் விலைபோய் விட்டதாக ஆகிவிடாதா? அவனது போதகர்கள் அப்படித்தானே சொல்கிறார்கள்” என்றார் மன்னர்.

“நமக்கு நாடு பிடிக்கும் ஆசை ஏதுமில்லை என்று விளக்கிவிட்டால் எல்லாம் சுலபமாகிவிடுகிறது?”

“சுலபந்தான். அவன் அதை ஒத்துக்கொள்ள வேண்டுமே.”

“அதில் என்ன இடைஞ்சல்?”

”இடைஞ்சல் இருக்கிறது. தமிழர்கள் மீது அவன் விதைத்து வைத்திருக்கும் எதிர்ப்புணர்வில்தான் அவனது பலமே இருக்கிறது. அப்படியிருக்கையில் நம்முடன் சமரசமாகிப் போனால் அவன் நீடிக்க முடியாத வகையில் தாயாதிக் காய்ச்சல் அங்கே உண்டு அதனால் வஜ்ரஹஸ்தன் ஒருநாளும் நம்மிடம் சமரசமாகப் போக மாட்டான்” என்று மன்னர் விளக்கினார்.

அப்போது ஒற்றன் கொண்டு வந்து கொடுத்த ஓலையில் இருந்த செய்தி இளவழுதிக்கு மகிழ்ச்சியையும் அரசருக்கு அசூயையையும் அளித்தது.

Previous articleAlai Arasi Ch46 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch48 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here