Home Alai Arasi Alai Arasi Ch48 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch48 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

105
0
Alai Arasi Ch48 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch48 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch48 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 48 கலிங்க மன்னனுடன் போர்

Alai Arasi Ch48 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

கலிங்க மன்னன் வஜ்ரஹஸ்தனிடமிருந்து வந்த ஓலையில் இருந்த செய்தி இதுதான்: ‘நீங்கள் எங்களுடன் சமாதனமாகப் போவது நன்மை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். யேசித்துப் பார்த்தேன். அதில் நன்மையை விடத் தீமையே எங்களுக்கு அதிகம் ஆதலால் போரிட்டு வெற்றிக் கொள்ளுங்கள்’ என்று அதிகம். ஆதலால் போரிட்டு வெற்றிக் கொள்ளுங்கள்’ என்று கண்டிருந்தது. தான் படித்த அந்த ஓலை நறுக்கை மன்னர் நெடுஞ்சேரலாதன் சிந்தனையினூடே இளவழுதியிடமும் நீட்டினார். அதைப்படித்த இளவழுதி முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

இதைக் கண்ட மன்னர், “என்ன இளவழுதி! உன் விருப்பம் நிறைவேறி விட்டது அல்லவா?” என்றார்.

“மன்னர் மன்னா! இதில் என் விருப்பம் என்பது எதுவுமில்லை அது வஜ்ரஹஸ்தனின் விருப்பமாக அல்லவா இருக்கிறது!” என்ற பதில் கேள்வி எழுப்பினான்.

மேலும், “நாமாக சண்டைக்குப் போவதில்லை. வந்த சண்டையையும் விடுவதில்லை. இது தாங்கள் அறிந்ததுதானே” என்று கேட்கவும் செய்தான்.

“ஆம்! நாமாகப் போரிடுவது கூடாது. வலிய வருகிற சண்டையையும் மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான்” என்றார் மன்னர்.

“அப்படியென்றால் போருக்கு அயத்தமாக வேண்டியது தானே?”

“அப்படித்தான் நினைக்கிறேன்” என்ற மன்னர், “போர் என்று வந்தால் நாம் ரிஷிகுல்யா நதியைத் தாண்டித்தான் மகேந்திர மலையின் மறுபகுதியை அடைய முடியும். அங்குதான் எல்ரஹஸ்தனின் அரண்மனை இருக்கிறது. ஒருபுறம் இயற்கையாகவே அமைந்த மலைகள் அரணாக இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் இந்த நதி வேறு அவனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. சமீபத்திய பருவ மழையால் ரிஷிகுல்யாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை நமது படைகள் தாண்டிச் செல்வது என்பது சுலபமில்லை. மேலும் துணிந்து ஆற்றில் இறங்கினால் நமது படைவீரர்களில் பாதிப்பேரை நாம் இழந்து விடுவோம். இதையெல்லாம் யோசித்துத்தான் வஜ்ரஹஸ்தன் இறுமாப்புடன் இருக்கிறான். அதனால்தான் நாம் இங்கு வந்ததும், நதியைத் தாண்ட முடியுமா? என்று ஆராய்ந்து வர ஆட்களை அனுப்பினேன். அவர்கள் வரட்டும்” என்றார் மன்னர்.

மன்னர் மேலுக்கு போரைத் தவிர்ப்பதுபோலக் காட்டினாலும் பெருத்த திட்டத்துடன்தான் அனைத்து விஷயங்களிலும் இருக்கிறார் என்பதை அறிந்த இளவழுதி பெருமிதம் அடைந்தான். ஆனால் அவனுக்கு சந்தேகம் ஒன்று இருந்தது. தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை மன்னர் முன் வைக்கவும் செய்தான்.

“மன்னா! வெள்ளம் வடிவது இப்போது இல்லையென்றால் நாம் வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருக்குமே. அப்படிக் காத்திருப்பது என்றால் நமது வீரர்கள் உற்சாகம் இழந்து விடுவார்களே!” என்றான்

“நீ சொல்வதிலும் உண்மை இருக்கிறது. எதற்கும் நதியைக் காணச் சென்றவர்கள் வரட்டும்” என்றார் மன்னர்.

நதியைத் தாண்ட முடியுமா என்று ஆராயப் போயிருந்தவர்கள் அங்கே வந்தார்கள்,

“நதி உற்பத்தியாகும் பகுதியில் ஓரிடத்தில் குறுகிய இடைவெளியில் அது ஓடுகிறது. அந்த இடத்தில் பாலம் அமைத்து தாண்ட முடியும். அதற்கப்பால் கிழக்கு நோக்கில் நதியின் போக்கில் போனால் மூன்று ஆறுகளைக் கடப்பது கடினமாகிவிடும்” என்று தெரிவித்தார்கள்.

மன்னர் தன் புரவியில் ஏறிக்கொண்டார் ஆட்கள் கண்டு வந்த பகுதி நோக்கி தன் புரவியைச் செலுத்தினார். இளவழுதியும் தனது புரவியில் ஏறிக்கொண்டு மன்னரைப் பின்தொடர்ந்தான். எங்கு நோக்கினாலும் பச்சைப்பசேலென்ற மரங்கள் அளித்த மரகத ஆடையைப் பூண்டிருப்பது போன்ற கவர்ச்சித் தோற்றத்தில் மகேந்திர மலை அவர்கள் மனதை நிறைத்தது. இந்த இயற்கை காட்சிக்கு நீலவாலும் அருமையான வித்தியாசத்தைத் தோற்றுவித்தது,

ரிஷிகல்யா நதியின் அதிவேக நீரோட்டத்தையும் அதன் பயங்கர ஆழத்தையும் பிரவாகத்தில் தெரிந்த சுழல்களாலும் மிதந்து வந்த நுரைகளாலும் கண்டு கொண்டான் இளவழுதி, இரந்த நதியைக் தாண்டுவது என்பது குதிரைக் கொம்புதான் என்பதையும் உணர்ந்து கொண்டான், படகின் துணைகொண்டு மறுகரைக் செல்லலாம். ஒரு சிலருக்குத்தான் சாத்தியம். ஆனால் பெரும் சைன்யத்தை சிறு படகின் மூலம் எப்படி அப்பால் கொண்டு செல்ல முடியும் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

இரண்டு நாழிகைகள் நதிக்கரையோரமாகப் பயணம் செய்த மன்னரும் இளவழுதியும் ஆட்கள் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்,

அந்த குறுகிய இடைவெளியில் நதி வொகு வேகமாகப் பாய்ந்தது. தவறி விழுந்தால் இமைக்கும் நேரத்தில் உடல் எங்கோ சென்றுவிடக்கூடிய வேகம் அந்த இடத்தில் நீரின் ஆழம் இரண்டு விரல்களின் உயரமே இருந்தது. உறுதியாக மரங்களால் பாலம் ஒன்றை அமைத்து அந்தப் பாறை இடைவெளியில் போட்டால் எளி தாக மறுகரைக்குச் சென்றுவிடலாம் என்பதை மன்னர் கண்டு கொண்டார். அவரது யோசனையை மற்றவர்கள் செயல்படுத்தினார்கள்.

அடுத்த இருநாட்களில், முன்யோசனையுடன் கொண்டுவந்திருந்த சாமான்களுடன் அங்கிருந்த மரங்கனை அழித்து ஒரு மரப்பாலம் தயாரானது அதை வெரு பத்திரமாக அந்த நதியின் இடைவெளியில் கச்சிதமாகச் சேர்த்தார்கள். இவையெல்லாம் எதிரிகளுக்குத் தெரியாமல் இரவு நேரங்களிலேயே நடந்தது பாலம் அமைந்த அடுத்த இரண்டு நாட்களில் சேரமன்னரின் சைன்யங்கள் யாவும் சிறிது சிறிதாக மகேந்திர மலையின் அடுத்த பகுதிக்குப் போய்ச் சேர்ந்தது

பாலம் அமைக்கும் கலைஞர்கள் அந்த வேலையைச் செய்யும்போதே படைகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவரவர்களுக்கு இன்னின்ன வேலைகள் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நான்கு பிரிவுப் படைகளும் தகுந்த தளபதிகளுடன் கலிங்கத்தின் அரண்மனையை இடது வலது, முன்புறம் – பின்புறம் என்று வியூகம் அமைத்து தாக்குவதற்குத் தயாரான நிலையில் இருந்தனர்

அரண்மனைக்கு முன்புறம் இளவழுதியும் பக்கவாட்டில் இரண்டு உபதளபதிகளும் படைப் பிரிவிற்குத் தலைமை தாங்கினார்கள். அரன்மனைக்குப் பின் புறம் தின்ற படைக்குத் தலைமை வகித்த தளபதி அழகில் சிறந்த இளம் வாலிபனாகக் காட்சியளித்தான் இதுவரை வீரர்கள் யாரும் கண்டிராத இந்தத் தளபதியைப்பற்றி வீரர்கள் மத்தியில் பெரும் பேச்சாய் இருந்தது. எந்தப் பகுதியிலிருந்து இந்தத் தளபதி வந்தார். எங்கு பயிற்சி பெற்றார் என்பதெல்லாம் இவர்களுக்குப் புரியாத புதிராயிருந்தது. ஒவ்வொரு வீரனும் அவனை நெருங்கிப் பார்த்துப் பேசுவதை பெரிய பேறாகக் கருதத் தலைப்பட்டார்கள். இனவழுதிக்கு மட்டுமன்றி மன்னருக்கும் செய்தி பரவிற்று அவர்களுக்கும் இதே சந்தேகம் உண்டு என்றாலும், போர் குறித்த வேலைகளின் மும்முரத்தில் இருந்ததால் இதற்கான விசாரணைகளில் இறங்காது தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

படைகள் வியூகம் அமைக்கப்பட்டபின் அதிகாலை வேளையில் போர்ச்சங்கம் முழங்கப்பட்டபோது வஜ்ரஹஸ்தன் விழித்துக் கொண்டான். ‘இரு கரைகளும் ஒன்றாகப் பெருக்கெடுத்து ஓடும் ரிஷிகுல்யா நதியைத் தாண்டி அவ்வளவு பெரிய சேனை வரமுடியாது’ என்ற தீர்மானத்துடன் கவலையுற்று இருந்தான் அவன். இந்தப் போர்ச் சங்கத்தைக் கேட்டு விழிப்புற்று எழுந்த சமயத்திலும், இது நடக்கக்கூடிய நிகழ்ச்சியா என்று நினைத்தான்? ஏதோ மனப்பிராந்தியால் அப்படித் தோன்றுவதாள் எண்ணி மீண்டும் தனது பஞ்சணையில் படுத்தவனை கோட்டை காவலனின் பதற்றக் குரல் வாரிச் சுருட்டிக்கொண்டு எழவைத்தது.

“மன்னா! சேரநாட்டுப் படை நம்மை நாலாப்பக்கங்களிலும் முற்றுகையிட்டிருக்கிறது” என்றான்.

”ஆ! என்ன? அப்படியா?” என்று குரல் கொடுத்த வஜ்ரஹஸ்தனின் உடல் கண நேரம் ஆடிப் போனது. இந்தப் பெரும் வெள்ளத்தில் நீந்தி எவ்விதச் சேதாரமும் இல்லாமல் நம்மை முற்றுகையிடவும் செய்துவிட்டது என்றால் எதிரி பலம் பொருந்தியவனாகத்தான் இருக்க வேண்டும் என்று அப்போதுதான் நினைத்தான். செய்வதறியாமல் திகைத்தான் அவசரத்தில் ஏதேதோ உத்தரவுகளைப் பிறப்பித்தான். தளபதிகளை அழைத்து கடிந்து கொண்டான். ஒற்றர்களைக் கூப்பிட்டு ஏதோ வசனத்தில் பேசினான். கடைசியாக போர் உடைகளை அணிந்து கொண்டு தனது அறையை விட்டு உருவிய வாளுடன் வெளியேறினான். கோட்டையின் மதில்கள் மீதேறி நாலா பக்கமும் சுற்றிச் சுற்றி வந்து படைகளின் பலத்தைக் கண்டு திகைப்புற்றான். எதிரியை எளிதாக எண்ணி இறுமாந்திருந்த தனது நிலையை எண்ணி வெட்கப்பட்டான்.

வாயிலின் முன்னே நின்ற பெரும் படைக்கு பெரு மரப்பலகைகளை முகப்பாகவும், கேடயமாகவும் கொண்டு நின்ற யானைகளின் வரிசையைப் பார்த்தபோது கிலியால் அவன் வயி கலங்கியது. மேலிருந்து எவ்வளவுதான் அம்புகள் பொழிந்தாலும் அனைத்து அம்புகளும் யானையின் தந்தங்களில் பிணைக்கப்பட்டிருந்த பலகைகளில் பட்டுத் தெறிக்குமேயொழிய எதிரிகளின் நெஞ்சங்களைப் பிளக்காது என்பதைக் கண்டு விக்கித்தான்.

கடைசியாக ஒலித்த போர்ச் சங்க ஓசை கேட்டு அதையே உத்தரவாகக் கொண்டு சேரநாட்டுப் படைகள் உயிரின் மீதுள்ள ஆசையை விட்டு அசுர வேகத்துடன் அரண்மனையைத் தாக்கின இரு பக்கங்களிலும் கணக்கற்ற நஷ்டம், வஜ்ரஹஸ்தனது படைகள் போதிய திட்டங்கள் எதுவும் இல்லாததால், எப்படிப் போரிடுவது? எந்தப் பக்கம் தாக்குவது? என்று ஆணையிடவும் எவரும் இன்றி தத்தளித்தது. மூன்று பக்கங்களிலிருந்தும் எழுந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாது சிக்கி நசுங்கியது.

Previous articleAlai Arasi Ch47 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch49 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here