Home Alai Arasi Alai Arasi Ch50 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch50 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

95
0
Alai Arasi Ch50 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch50 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch50 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 50 மன்னன் அதிராஜனாதலும் இளவழுதி-அலை அரசி திருமணமும்

Alai Arasi Ch50 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

மடியில் கிடந்த அலை அரசியின் உடலை இரு கைகளாலும் வாரி எடுத்து மார்பில் சாத்திக் கொண்டு, அவள் கண்களுடன் தனது கண்களைக் கலந்தான் இளவழுதி, அந்த அழகியின் சமீபத்தால், அவள் எழில்கள் அசைந்த அழகால், அவள் உடல் காட்டிய உணர்ச்சித் துடிப்பால் வீரனான அவன் துன்பமும் ஓரளவு அகலவே. “அலை அரசி, உன் அழகு எந்தக் கவலையையும் அழித்துவிடும். எந்த இரும்பு மனத்தையும் உருக்கிவிடும்” என்று கூறிக் கொண்டு அவள் மார்பில் தன் முகத்தைப் பதித்தான்,

“ஆ! ஆ! பார்த்து, வஜ்ரஹஸ்தனது வாள் பாய்ந்த இடம் சற்றுக் கீழே இருக்கிறது” என்று விலாவைச் சுட்டிக் காட்டினாள். தொடர்ந்து இளவழுதி எழுந்து விடாமல் கைகளை உயரே தூக்கி அவனது கழுத்தைக் கட்டிக் கொள்ளவும் செய்தாள். உணர்ச்சி மிகுதியால் நெளிந்தாள். தன்னைத் தாங்கி நின்ற அவன் கைகளில் இடது கை மட்டும் தன் உடலைத் தாங்கியிருந்ததையும், வலது கை ஆராய்ச்சியில் ஈடுபடுவதையும் நினைத்து, அந்தக் கையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அவனது மடியில் புரண்டாள். அப்படிப் புரண்டதால் அவனது கை அவள் உடலுக்கு அடியில் சிக்கிக்கொண்டது. சிக்கிய கை சிக்காத கையைவிட இம்சை விளைவிக்கவல்லதென்பதைப் புரிந்து கொண்டாள் அலை அரசி.

சரேலென எழுந்தவள் வைத்த கண் எடுக்காமல் அவனைப் பார்த்தாள்.

“அலை அரசி” என்று மெதுவாக அழைத்தான் இளவழுதி

‘உம்’. ஒரு ஒலிதான் அவளிடமிருந்து பதிலாக வந்தது.

அந்த ஒலியில் ஓராயிரம் அர்த்தங்கள் இருப்பினும் அவர் கவனிக்கவில்லை இளவழுதி

“நீ செய்தது நியாயமா?”

‘’எது?’’

‘’சொல்லிக்கொள்ளாமல் ஆண் வேடமிட்டு எங்களுடன் படையில் கலந்தது.”

உங்களைவிட்டுப் பிரிந்திருக்க மனமில்லை. உங்களிடம் கேட்டால் மன்னர் மீது பழி போடுவீர்கள். அவ போர்க்கலத்திற்குப் பெண்கள் தேவையில்லையென்பார். அதனால் அரசியிடம் சொன்னேன். அவரும் மறுத்தார். எனது கண்ணீர் அவரைச் சம்மதிக்க வைத்தது. நீங்கள் புறப்பட்ட மூன்றாம் நாள் உங்கள் படையுடன் நானும் ஒரு தளபதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். இதற்கு மந்திரி அநிருத்தர் உதவினார்.”

“கடைசியில் உன் பயமே நிரூபணமாயிற்று இல்லையா?”

“எப்படி?

“வாள் தாக்கியதும் கீழே விழும்படியான பூஞ்சை உடம்புக்காரியான நீ மயங்கி விழுந்து உன்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயே?”

‘’இல்லை, என் வாள் வீச்சை அரேபியாவில் கண்ட நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள். எனது கை லாகவம் நீங்கள் அறியாதாத இதற்கு மேலும் நான் ஆண் உடையில் இருக்க விரும்பவில்லை மேலும் ஆன் உடையில் இருப்பதே ஒரு அசௌகரியமாக பட்டது. ஒரு பென் பெண்ணாக இருப்பது சுலபம் போன்று அதனால் வாள் வீச்சினால் அதிர்ச்சி ஏற்பட்ட போதிலும் பெரிது மயங்கியதுபோல் நடித்து விழுந்தேன்” என்று விளக்கினாள் அலை அரசி.

கைது செய்யப்பட்ட முதலாம் வஜ்ரஹஸ்தன், மன்னர் நெடுஞ்சேரலாதன் முன் தலை குனிந்து நிற்க, விசாரனை எளிதில் முடிந்தது. யாரையும் அடிமைப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லையென்றும், தமது நோக்கத்திற்குக் குறுக்கே நிற்பவர்களைத் கண்டிக்காமல் விடுவதில்லையென்றும் கூறி, நட்பு முறையில் இருக்கச் சம்மதித்தால் அவனையே மன்னனாக்குவதாக விருப்பம் தெரிவித்தார் மன்னர் நெடுஞ்சேரலாதன், வஜ்ரஹஸ்தனும் இதற்குச் சம்மதித்து ஓலை எழுதித் தரவே அவனிடமே அரசு ஒப்படைக்கப்பட்டது.

இளவழுதியும், பூழித்தேவனும் இந்த உடன்பாட்டுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இருப்பினும் மன்னர் சொல்லிவிட்டால் அதை சிரமேற்கொள்வது அவர்களது பண்பானதால் வாய் பேசவில்லை,

இமயம் சென்று திரும்பும் வரை அலை அரசி அங்கு தங்கியிருப்பது என்று முடிவாயிற்று. அடுத்த இரு தினங்களில் நெடுஞ்சேரலாதனின் படைகள் வடக்கு நோக்கிப் புறப்பட்டன வழியில் எந்த எதிர்ப்புமில்லை. மாறாக, வரவேற்பே இருந்ததால் அவர்களது பயணம் சுளுவாயிற்று கலிங்கத்திலிருந்து பயணம் தொடங்கி அடுத்த இரு மாதங்களில் இமயத்தை அடைந்தார்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெள்ளிமலைச் சிகரம் உலகத்தின் அழகெல்லாம் இங்கே வந்து குவிந்து கிடப்பதாகத் தோன்றியது மன்னருக்கு எங்கோ கங்கோத்ரி மலையில் சிறு ஊற்றாகக் கச்சலும், சகங்கலுமாகத் தோன்றியவனா இந்த கங்கைப் பெண்ணாள்? அவளா வரும் வழியெல்லாம் வனத்தைத் தந்து இங்கே இவ்வளவு பெரிய நதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள் என்று மலைத்தான் இளவழுதி, எதிர்க்கரையைப் பார்ப்பதற்கே கண்ணில் வலி எடுக்கிறதே அப்படியென்றால் நதி எவ்வளவு அகலம் என்று வியந்தான். அகன்ற படகுகளில் ஏறிக்கொண்டு கங்கை கடந்தார்கள்,

அடுத்த இருவாரப் பயணத்திற்குப் பிறகு, உச்சிக்குச் சென்று சேரநாட்டு விற்கொடியைப் பறக்க வி. சுற்றி நின்ற வீரர்கள், ‘இமயத்தில் கொடி கா நெடுஞ்சேரலாதன் வாழ்க, வாழ்க!’ என்று வாம் எழுப்பினார்கள். இளவழுதி தாள் பணிந்து ம் வணங்கினான். அவனது வணக்கத்தை ஏற்றுக்கொண்டு மார்புறத் தழுவிக் கொள்ளவும் செய்தார். உடன் பூழித்தேவனையும் மன்னர் அணைத்துக் கொண்டார். வீரர்கள் மீண்டும் வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

“இளவழுதி! இப்பொழுது நமது காலத்தில் இமயத்திற்கு வந்து கொடி நாட்டியிருக்கிறோம். இனி எதிர்காலத்தில் நமது சந்ததியினர் தொடர்ந்து தங்களது வீரத்தை நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இப்பொழுது போலவே எதிர்காலத்திலும் உன்னைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள் இல்லையா?” என்று வினா எழுப்பினார்.

“நிச்சயமாக மன்னவா, நிச்சயமாக” என்று இளவழுதி உறுதியளித்தான்.

பின்னர் மன்னரும் இளவழுதியும், பூழித்தேவனும் சமவெளிக்கு இறங்கி வந்தார்கள்.

மகத நாட்டைக் கடந்தபோது கணக்கற்ற மாந்தோப்புகளைச் கண்டு மகிழ்ச்சி எய்தினார் மன்னர். ஒரு கணம் இது காவிரிக்கரையா, இல்லை கங்கைக் கரையா என்றுகூட ஐயம் எழுந்தது மன்னருக்கு? மக்த மன்னன் அபிநந்தன் மன்னருக்குப் பெரும் வரவேற்பையே ஏற்பாடு செய்திருந்தான். பாஞ்சால நாட்டரசன், அவன் கீழிருந்த நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்கள் தங்கள் குடிபடைகளோடு மன்னரை வரவேற்ற காட்சி… இப்படி கலிங்கத்தை அடையும் வரையிலும் – வழியில் திரும்பிய பக்கமெல்லாம் எங்கு பார்த்தாலும் மன்னர் நெடுஞ்சேரலாதனுக்கு வெற்றி முழக்கங்கள் முழங்கப்பட்டன. ஏராளமான பரிசுகள் அந்தந்த நாட்டு மன்னர்களாலும் வழங்கப்பட்டன.

கலிங்க எல்லையில் வஜ்ரஹஸ்தனும் அவனது பரிவாரங்களும் எதிர்கொண்டழைத்துச் சென்றன. அங்கு சில நாட்கள் தங்கியிருந்தபின் அவர்கள் சேரநாட்டை நோச்சிக் கிளம்பினார்கள்,

ஆங்காங்கே அரண்மனைப் பெண்டிர், மந்திரிமார், அண்டை நாட்டு மன்னர்கள், குறுநில மன்னர்கள், வியாபாரிகள், சமூகப் பெரியவர்கள் எல்லோரும் எதிர்கொண்டழைத்தனர். விழா மண்டபத்தில் நடுநாயகமாக அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் மன்னரை உட்கார வைத்தார்கள், நல்ல நேரத்தில் அரண்மனைப் பண்டிதர் அதிராஜனுக்கு உரிய எட்டு கிரீடங்களைச் சுற்றிலுமாக நவரத்தினங்களாலும், முத்துக்களாலும், வைர வைடூரியங்களாலும் இழைக்கப்பட்ட பொற்கிரீடத்தை சூட்டினார். கூடியிருந்தவர்கள் கையொலியுடன் வாழ்த்தொலியும் எழுப்ப சத்தம் விண்னை எட்டியது.

மன்னர் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து எல்லாருக்கும் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார். அதே சுபவேளையில் இளவழுதிக்கும் அலை அரசிக்கும் திருமணத்தையும் நடத்தி வைத்தார். அலை அரசியின் கையைப் பிடித்து அழுத்தினான் இளவழுதி. அவளும் அவனை ஏறிட்டு நோக்கிய அதே சமயம் முதியவன் பெருவழுதி அங்கே வந்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டான். கடல் அரசிகூட அலை அரசியின் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். அவர்கள் மூவரும் ஆனந்த வெள்ளத்தில் நீந்தினார்கள்.

முறைப்படி அவர்களை முதலிரவுப் பஞ்சணையுள்ள அறையில் தள்ளினார்கள். இளவழுதி அர்த்த புஷ்டியுடன் அலை அரசியைப் பார்க்க, அவளோ கட்டிலைச்சுற்றி மெள்ளச் சுழன்று சுழன்று வந்தாள் மயங்கி விழப்பார்த்த அந்த புஷ்பத்தை அள்ளி எடுத்துக் கொண்டான் இளவழுதி,

அப்படியே அவளைக் கட்டிலில் கிடத்தினான். அவளது முகத்தை நோக்கிக் குனிந்தான். தன் இதழ்களால் அவளது இதழ்களைப் பொத்தினான்.

“என்ன முணுமுணுக்கிறாய் அலை அரசி?” என்று இளவழுதி அவள் காதுகளில் கிசுகிசுத்தான்.

“ம்ம்” என்று விரகத்தில் முனகிய அவள் தன் கைகளை அவன் கழுத்துக்காகக் கொடுத்து மார்பில் அழுத்தியபடி, ”இதெல்லாம் உண்மைதானா?” என்று தழுதழுத்தாள்.

அந்த நிலையிலும் கலகலவென்று நகைப்பொலி எழுப்பிய இளவழுதி, ”எது? எது உண்மைதானா என்று கேட்கிறாய்? என்னைப் பொறுத்தமட்டில் இதோ… இது உண்மை ” என்று தன் ஆட்காட்டி விரலால் அவள் ஈரம் கசிந்த உதடுகளை வருடினான். “இது உண்மை …” என்று அவன் விரல் அடுத்த மழமழவென்றிருந்த அவள் மோவாயில் நெருடியது. ”இது உண்மை ” என்று அவள் சங்குக் கழுத்தை வருடியது. “இது உண்மை ” என்று அடுத்து அவன் விரல் நுனி சடேலென்று கீழே இறங்கி அவள் இளமைக் கொழுப்புகளின் நுனியில் வட்டம்போட்டபோது அதற்குமேல் தாளாத அலை அரசி ஆவேசத்தோடு இளவழுதியின் முகத்தை அழுத்திக்கொண்டாள். அவளது அழகிய மென்மைகள் அவனை ஆசையோடு அணைத்தன. தன் மார்பில் புதைந்த அவன் முகத்தோடு ஏதோ பேசி அவனைப் பஞ்சணையில் சாய்த்தாள் அலை அரசி. அப்புறம் அங்கே பேச்சுக்குத் தடை விழுகிறது. அந்த நிலையில் அவர்களைக் காண மென்சுகந்தம் மெல்லத் திருடன் போல் உள்ளே நுழைந்து அவர்களை வருடியது. சாளரத்தின் வெளியே பூர்ண சந்திரன் தானும் அவர்களது அந்த நிலையைக் காணும் ஆவலுடன் எம்பி எம்பி மேலே வந்து கொண்டிருந்தான்.

Previous articleAlai Arasi Ch49 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch1 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here