Home Alai Arasi Alai Arasi Ch6 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch6 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

121
0
Alai Arasi Ch6 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch6 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch6 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 6 பழைய கதை

Alai Arasi Ch6 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

புதிய நிலை அரசியை அனைத்துப் படுத்த நிலையில் தன்னை ஒழித்துக்கட்டிவிட திட்டமொன்றை எடுத்து இளவழுதி அரசிக்கு விவரித்ததும், பேரன் மீது பெரும்சினம் கொண்ட முதியல் முகுந்தன் பெருவழுதி. அந்த அரபு நாட்டு மோகினியிடம் ஏற்பட்ட மோகமே அவன் திட்டத்துக்குக் காரணமென்றும் சரச காலத்தில் சாதாரணமாக சொல்லப்படும் பொய்யாகக்கூட இருக்கலா மென்றும் எண்ணி பேரன் சார்பில் காரணங்களைக் கற்ப்பித்து அவன் மீதிருந்த சினத்தைச் சிறிது குறைத்துக் கொண்டான். வாலிபனான அவன் தன்னிடம் வந்து எச்சரிக்கை செய்ததை அரசி புரிந்து கொண்டு விட்டாள் என்பதால் அவளை ஏமாற்றக் கதை கட்டினாலும் கட்டலாமென்றும் பேரனுக்கு சாதகம்.. காரணங்களை சிருஷ்டித்தான் பாட்டனான முகுந்தன். ‘நாளைக் காலையில் ஏதாவது சாக்குச் சொல்லி கிழவனை வடகரையில். இறக்கி சேரவாற்றில் நீராடும் காரணத்தில் தள்ளி விடுகிறேன் கிழவனுக்கும் நல்ல வயதாயிற்று போனால் போகட்டுமே’ என்று இளவழுதி சொன்னதை மீண்டும் நினைத்துப் பார்த்த முகுந்த இரு நாளும் தனது பேரன் எண்ணம் தன்னைக் கொலை செய்வதில் இருக்காது என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான். அந்த நினைப்பு எத்தனை சரியென்பதை அடுத்த நிகழ்ச்சிகள் நிரூபித்தன.

அரசியை முரட்டுத்தனமாக ஒரு கையால் அவள் அரபு ஆடையின் இடைக் கச்சையை நீக்கி தனது இன்னொரு கையால் அவள் உடலின் அழகுகளைத் துழாவ முயன்ற இளவழுதி, “அரசி நீ தேவலோகத்தில் இருக்க வேண்டியவள். தப்பித்தவறி இந்த உலகத்துக்கு வந்துவிட்டாய் என்று கூறிய வண்ணம் அவள் கழுத்திலும் மார்பிலும் உதடுகளைப் பொருத்திப் பொருத்தி மீண்டும் அதரங்களிடம் வந்தான். அந்த அதரங்களின் சுவையை

பருகி அதுதான் அமுதம் என்று மயங்கிக் கிடந்த நிலையில்தான் அஹமத் அந்த மதுக்கின்ணத்தை எடுத்து வந்து அரசியிடம் கொடுத்தான். அரசி அதை வாங்கி, ‘அன்பரே! அருந்துங்கள் என்று கொஞ்சியபோது உடனடியாக அதை அருந்தவில்லை இளவழுதி. “இதென்ன அரசி?” என்று கேட்கவே செய்தான். குரலில் சிறிது அலுப்பைக் காட்டி – “இன்பத்துக்கு சுருதி கூட்டும் பானம்” என்று மயக்கம் தரும் குரலில் பேசினாள் அரசி.

”பொய் பொய்! பொய் சொல்லாதே அரசி” என்றான் இளவழுதி.

“நான் பொய் சொல்வேனா உங்களிடம்?” என்று குழைந்து பேசினாள் அரசி.

“இப்பொழுது சொல்கிறாயே” என்ற இளவழுதி கின்னத்தில் வாய் வைக்காமல் அவள் காதருகில் உதடுகளைக் கொண்டு போனான்.

அதனால் கிண்ணத்தை பக்கத்தில் நின்ற அஹமதிடம் கொடுத்துவிட்டு “என்ன பொய் அன்பரே?” என்று வினவினாள் அரசி மெதுவாக.

“இந்த மது, இன்பத்துக்கு சுருதி கூட்டும் என்று சொன்னாயே, அது பொய் தானே?” என்று கேட்டான் இளவழுதி அவள் காதுக்கருகில்.

“எப்படிப் பொய்யாகும்? நீங்கள் அருந்திப் பார்க்கவில்லையே?” என்றாள் அரசி.

“அருந்திப் பார்க்க என்ன அவசியம்? உன் அதரம் தரும் அமுதத்தை விட இன்பத்துக்கு சுருதி சேர்க்கும் மது எங்கிருக்கிறது? உன் வழவழத்த கன்னத்திற்கு முன்பு இந்த மது நிற்க முடியுமா வசீகரத்தில், இனிப்பில்? மாதுளையைப் பேன்ற உன் மார்பின் முகடு தரும் சித்த பிராந்தியைவிட அதிமயக்கத்தைத் தரவல்லது? உன் உடலின் அழகைவிட சிறந்தது நான் உருகக்கூடியது எதுவுமே இல்லையே” என்ற இளவழுதி அவள் காதுக்கருகிலிருந்து முகத்தை நீக்கி மார்பில் புதைத்தான் அதில் புரளவும் செய்தான் இருமுறை.

அந்தச் சமயத்தில் கோடி பலகையில் சாய்ந்து நின்ற அஹமத் மெதுவாக அரசியை அணுகி அரசியிடம் மதுக்கிண்ணத்தை நீட்டினான், அரசியும் அதை வாங்கி மார்பில் படுத்துக் கிடந்த இளவழுதியின் தலையை சிறிது உயர்த்தி அவன் இதழ்களில் பொருத்தினாள். இப்படி இரண்டாவது முறையாக தன்னிடம் கிண்ணம் நீட்டப்பட்டதும் அதை அவள் கையிலிருந்து அன்புடன் இடது கையால் வாங்கிக் கொண்ட இளவழுதி, அவளைவிட்டு சிறிது விலகி உட்கார்ந்து கிண்ணத்தை வாயில் வைத்து உறிஞ்சுபவன்போல் பாசாங்கு செய்து ”அஹமத்” என்ற அழைத்து அவனிடம் கிண்ணத்தை நீட்டினான். சிறிது உட்கார்ந்த இடத்தில் தள்ளாடவும் செய்தான். அதைக் கண்டு லேசாக நகைத்த அஹமத் மெதுவாக அவனருகில் வந்து குனிந்து கிண்ணத்தை வாங்க முற்பட்டு சற்று திகைத்து, “மது, மது’ என்று பேசத் துவங்கியதும் கிண்ணத்திலிருந்த மதுவை வெகுவேகமாக அஹமதின் முகத்தில் இளவழுதி வீசிக் கொட்டிவிடவே கண்களை மூடிக் கொண்டு சிறிது தள்ளாடி பின்னுக்கு நகர்ந்தான் அராபியன். அதிக தூரம் நடக்கவில்லை அவன். அவன் கண்களில் மது விழுந்து கரித்ததால் கண்களை மூடியதும் திடீரென எழுந்த இளவழுதி அவனை இரண்டே அடி வைத்து நெருங்கி முஷ்டியைப் பிடித்து அவன் முகத்தில் குத்தினான்.

ஏதோ பெரிய சுத்தியல் கொண்டு தாக்கப்பட்டது போல அந்த ஒரு குத்தினால் நிலைகுலைந்த அராபியன் கிடுகிடுவென்று மூக்கிலிருந்து வந்த குருதியைத் துடைக்க தனது தலைப்பாகைத்

துணியை எடுக்கத் தலையைக் குனிந்தான். நிலவில் பளபளத்த அவன் தலையைப் பார்த்த இளவழுதி அதிகக் கோபத்துக்குள்ளாகி அஹமதின் கழுத்தில் கையால் ஓங்கி அடிக்க அஹமத் வெட்டுண்ட மரம் போல் மரக்கலத்தளத்தில் குப்புற விழுந்தான். அப்படி விழுந்த அஹமதை கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்திய இளவழுதி, ”அஹமத் உன்னை நான் அடித்ததற்குக் காரணம் புரிகிறதா?” என்று வினவினான் அவன் முகத்துக்கு அருகில் தனது முகத்தை நெருக்கி, தனது கண்களால் அவன் கண்களை உற்று நோக்கி,

அந்தக் கண்களைக் கண்ட அஹமத் குலைநடுக்கம் கொண்டான். அதில் தெரிந்த மிதமிஞ்சிய வெறியைப் பார்த்த அஹமத் ஏதோ விபரீத நிலைக்கு இளவழுதியின் புத்தி திரும்பி விட்டதை உணர்ந்தான். அதனால் அவன் பிடியிலிருந்து தப்ப முயன்று அவன் கையை உதறவும் திமிறவும் முற்பட்டாலும் அவ்வளவு எளிதில் அது நடப்பதாகத் தெரியவில்லை . இரும்புப் பிடியாக அஹமதைப் பிடித்துக் கொண்ட இளவழுதி அவனை இழுத்துக் கொண்டே மரக்கலத்தின் பக்கப் பலகைக்குச் சென்று அதன்மீது அவனைச் சார்த்தி வயிற்றில் பலமுறை குத்தினான். அந்தக் குத்துகளிலிருந்து தப்ப அஹமத் தனது கைகளை நீட்டியும் மடக்கியும் தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. அஹமதை தளத்துப் பலகையில் கிடத்திவிட்ட இளவழுதி அவனது மார்பின் மீது காலை வைக்க வலது காலைத் தூக்கிய சமயத்தில் “நில்லுங்கள்! காலை அவன் மீது வைத்தால் நீங்கள் உயிருடன் இருக்க முடியாது” என்று நிதானமான குரலில் எச்சரித்தாள் அரசி.

அரசியின் குரலைக் கேட்டதும் அஹமதின் மார்புமீது காலை வைக்காமல் அஹமதைத் தூக்கி நிற்க வைத்து, அவனைப் பிடித்த வண்ணமே அரசியைத் திரும்பி நோக்கினான் இளவழுதி. நிலவில் அவள் இந்திர லோகத்திலிருந்து அப்பொழுதுதான் இறங்கிய அப்ஸரஸ் போல இருந்தாள். அவள் நெற்றியிலிருந்த வைரம் பல மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. அதற்கு ஈடாகப் பிரகாசித்த

கண்களின் அதிகார தோரணையும் ஆட்சி செய்யும் சக்தியும் வீசியது. அவள் குரலில் இனிமையுடன் கடுமையும் கலந்திய சற்று முன்பு இளவழுதியின் கைகளால் விலக்கப்பட்டு நீண்ட அரபுக் கச்சையின் மார்புப் பகுதி லேசாக விலகியிரு மார்பின் விளிம்புகள் மட்டும் இரண்டு பிறைச்சந்திரன்கள் உடலில் தஞ்சமடைந்திருக்கும் பிரமையை சிருஷ்டித்தன.

அவள் எச்சரிக்கைக் குரலாலும், நின்ற தோரணையம் சீற்றத்தைச் சற்றுக் குறைத்துக்கொண்ட இளவழுதி அர நோக்கி மெதுவாக நடந்தான். அவளை அணுகியதும், ‘. தடுத்தாய்?” என்று சற்று கோபத்துடனேயே கேட்டான்.

”உங்கள் நன்மைக்காகத்தான்” என்றாள் அரசி. . ததும்பிய கண்களால் அவனைப் பார்க்கவும் செய்தாள்,

“அரசி, ஒன்றும் எனக்குப் புரியவில்லை …?” என்றான்.

“என்ன புரியவில்லை ?” என்று கேட்டாள் அரசி.

“இந்த அஹமத் உனக்கு உறவினனா, அடிமையா?”

“இரண்டும் இல்லை “

“வேறு என்ன தொடர்பு இந்த மரக்கலத்துக்கும் அவனுக்கும்?

‘இந்த மரக்கலம் அவனுக்குச் சொந்தம். அவனாலேயே நிர்மாணிக்கப்பட்டது. இதிலுள்ள அத்தனை யந்திர சூட்சுமங்களுக்கும் அவன்தான் பொறுப்பாளி, இந்த மரக்கலத்தை ஒரு விநாடியில் கடலில் மூழ்கும்படிச் செய்ய அவனால் முடியும்.’’

அடுத்து இளவழுதி கேள்விகளைத் தொடரவில்லை. சிறிது நேரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவளே பேசத் தொடங்கி, “ஏதோ சிந்திக்கிறீர்கள்?” என்றாள்.

“ஆம்” – ஒற்றைச் சொல் பதிலையே விடுத்தான் இளவழுதி

“எதைப் பற்றி என்று நான் அறியலாமா?” என்று கேட்டாள் அரசி.

“உன்னைப் பற்றித்தான்” என்றான் இளவழுதி,

“என்னைப் பற்றியா? என்னைப் பற்றிச் சிந்திக்க என்ன இருக்கிறது?” என்று அரசி வினவினாள்.

“வா சொல்கிறேன்” என்று அவளை அழைத்துக் கொண்டு ஒரு மூலைக்குச் சென்ற இளவழுதி, ”அரசி சிந்தித்துப் பார். நீயும் நானும் சற்று முன்பு இருந்த நிலை என்ன?” என்று வினவினான்.

‘அதைச் சிந்திப்பதற்கே வெட்கமாயிருக்கிறது. அப்படி இருக்கச் சொல்வது எப்படி?” என்று கூறிய அரசி வெட்க நகை காட்டினாள்.

“அரசி…” என்று துவங்கிய இளவழுதி அவள் இடையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்து தனது உடலுடன் இணைத்துக் கொண்டான். “நீயும் நானும் இப்பொழுதிருப்பதைவிட அதிக நெருக்கத்திலிருந்தோம்…” என்றவன் வாசகத்தை முடிக்கவில்லை.

“உம்!” உணர்ச்சி ஒலி எழுப்பினாள் அரசி.

“அந்தரங்க நிலை”

“ஆம்”

“மற்றவர்கள் பார்க்கக் கூடாதது”

“ஆம்”

“அப்படியிருக்க அந்த சமயத்தில் அஹமத் எப்படி வந்தான்? எந்த தைரியத்தில் கிண்ணத்தை உன்னிடம் கொடுத்தான்…?” என்று கேட்ட இளவழுதி அவளை பதில் சொல்லவிடாமல் தானே பேசினான். ”அரசி! காதலர்களுடைய சல்லாபத்தின்போது நெருங்குவதே பிசகு, நெருங்கிப் பேசுவதும் குறுக்கிட்டுக்கிண்ணத்தைக் கொடுப்பதும் பெரும் குற்றம். அடுத்த அவன் நாம் தனித்திருக்கும்போது குறுக்கிட்டால் எனது கைகளால் அவன் கழுத்தை முறித்துப் போடுவேன். அவனை எச்சரித்து வை” என்று சொல்லிவிட்டு மரக்கலத்திலிருந்த அரசியின் அறைக்கு நடந்து சென்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் கதவு சாத்தப்பட்டு வெளியில் தாளிடப்பட்டது. “அரசி தொலைத்து விடட்டுமா?” என்று அஹமத் கேட்டது இளவழுதியின் காதில் தெளிவாக விழுந்தது.

“இவனை அழிக்கக் கூடாது. இவன் உயிருடனிருப்பதால் பலன் இருக்கிறது. இல்லாவிட்டால் இவனை நானே கொன்றிருப்பேன், சென்ற ஆண்டு இங்கு வந்த போது” என்றள் அரசி.

இந்த உரையாடலை உள்ளிருந்து கேட்டுக் கொண்டு இளவழுதி பழைய கதை என்றே நினைத்தான். பல உண்மைகள் அவன் புத்தியில் மெதுவாக உதயமாகத் துவங்கின. அவற்றில் பழைய கதையும் புதிய நிலையும் கலந்திருந்தன.

Previous articleAlai Arasi Ch5 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch7 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here