Home Alai Arasi Alai Arasi Ch7 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch7 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

141
0
Alai Arasi Ch7 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch7 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch7 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 7 கண்களைத் தாக்கிய கதிர்கள்

Alai Arasi Ch7 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

மரக்கலத் தளத்தின் கோடியிலிருந்த அரசியின் அறைக்குச் சென்று கதவை மூடிவிட்டு கட்டிலில் படுத்து விட்ட இளவழுதியின் காதில் அரசியும் அஹமதும் பேசியதெல்லாம் தெளிவாக விழுந்ததால் அவன் பழைய சிந்தனைகளில் இறங்கினான். முதியவன் பெருவழுதி வந்த முதல் இரவில் போலவே அன்றும் அந்த அறையின் மேல் மூடி திறந்ததன் விளைவாக விண்மீன்கள் விளக்கமாகத் தெரிந்திருந்தும் அவற்றை நோக்கிய அவன் கண்களில் பழைய பிரமை ஏதுமில்லை. அவற்றை ரசிக்கும் நிலையில் கூட அவன் சித்தம் இறங்கவில்லை. சித்தமெல்லாம் அறைக்கு வெளியே நடந்த உரையாடலையே வாங்கிக் கொண்டிருந்ததாலும், அதன் விளைவாக பழைய கதைக்கு ஓடிவிட்டதாலும் அவன் நக்ஷத்திரக் கூட்டங்களைக் கவனிக்கச் சக்தியற்றவனானான். அவன் நினைப்பு மூன்று ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சிகளில் திளைத்து நிகழ்காலத்தை மறைத்து விட்டது.

கடலோடுவதில் இணையற்றவனென்று தொண்டியின் பரதவர் பலராலும் பாராட்டப்பெற்ற இளவழுதி எத்தனையோ புயல்களையும், கடலில் பல அபாயங்களையும் சந்தித்திருந்தான். அவன் வீரத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சேர மன்னனும் அவனுக்கு அவ்வப்பொழுது தனது போர்க்கலங்களில் பணியாற்றவும் அனுமதி கொடுத்தான். அதன் விளைவாக கடல் வீரனாகவும் விளங்கின இளவழுதி, மன்னன் கடல் போர்க்கலமொன்றின் தலைவனாக இருக்கும் பதவியைக் கொடுத்தபோது அதை அவன் மறுக்கவே செய்தான். ‘மன்னவா! கடலின் மைந்தன், அதில் சதா திரிவதிலும் அதில் திளைவதிலும் அதிலுள்ள பெருமீன்களைப் பிடிப்பதிலுமே இன்பம் பெறுகிறேன். போர்க்காலத்தில் நான் சேவைக்கு வருகிறேன். அதுவரை என்னை
தனி மரக்கலத்தில் கட்டிப் போட வேண்டாம்’ என்று கேட்டு கொண்டான். மன்னனும் அவன் விருப்பத்துக்கு நிற்கவில்லை .

அரசுப் பணியை நிராகரித்ததில் முதியவனான முகுந்தனுக்கு இஷ்டமில்லையென்றாலும் அவன் ஏதும் செய்ய சக்தியற்றவனானான். ‘இளவழுதி! அரசுப் பணி நாம் கேட்கும் போது கிடைப்பதில்லை. அதுவாக நம்மை நோக்கி வரும் போது ஏற்காதது புத்திசாலித்தனமல்ல’ என்று சொல்லிப் பார்த்தான் இளவழுதி கேட்கவில்லை.

‘தாத்தா! நீங்கள் தனியாயிருக்கிறீர்கள். உங்களுக்கு என்னை விட்டால் கதியில்லை . அரசுப் பணியை ஏற்றால் நான் மாதக் கணக்கில் உங்களைப் பார்க்க முடியாது. உத்திரவிடும் இடங்களுக்கு மரக்கலம் செல்லும். அத்துடன் நானும் சென்றுவிடுவேன். அந்தச் சமயங்களில் உங்களை யார் கவனிப்பார்கள்?’ என்று கேட்டான்.

இளவழுதி! கிழவனுக்காக இளவயதிலிருப்பவன் தனது வாய்ப்புகளைக் கைவிடுவது தவறு. கடலோடும் பரதவர் வாழ்வதை என்றும் நிலையற்றதென்று உனக்கே தெரியும். நமது குலம் என்றும் அபாயத்தைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ சிந்திப்பதில்லை என்று முதியவன் முகுந்தன் மன்றாடினான்.

‘தாத்தா! இயற்கை நம்மை விழுங்குவது சகஜம், அதைக் சாக்கிட்டு கடமைகளை மறக்கும் பழக்கம் நமது இனத்திற்கு இல்லை. நான் இல்லாதபோது உங்களுக்கு ஏதாவது ஆனால் அப்பொழுது, நானில்லாவிட்டால் பாட்டனுக்கு பாட்டனாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருக்கும் உங்களை என் மனம் நினைத்து நினைத்து வாழ்வு முழுவதும் அல்லல்படும். மனச்சாட்சி சதா உறுத்திக் கொண்டே இருக்கும்’ என்று பதில் சொல்லி கிழவன்

ஆசையை நிராசையாக்கிவிட்டான். காலையில் கடலுக்குச் செல்வதும் இரவில் நேரம் கழித்து வருவதுமாகவே காலம் கழித்தான்,

கடலில் மீன்களைத் தவிர வலம்புரிச் சங்கு முத்துச் சிப்பிகள், பலப்பல கிளைகளாகக் கடலடியில் முளைத்த அழகிய பூச்சிக்கூடுகள் இவற்றையெல்லாம் கொண்டு வந்து கடற்கரையோரக் கரையில் விற்று வந்தான். சில அபூர்வமான பொருள்களைத் தானே ரகசியமாக வைத்துக் கொண்டான். அந்தப் பொருள்களில் ஒன்றுதான் அரசியின் நெற்றியிலாடும் அந்த வைரக்கல், கடலின் ஆழத்தில் அது கிடைத்தது. அதன் அபூர்வ வேலைப்பாட்டை பார்த்து தனது கச்சைக்குள் அதை மறைத்து விட்டான் இளவழுதி.

அந்த வைரச் சுட்டி கிடைத்த இரண்டு நாள் கழித்துத் தான் அவன் அலை அரசியைச் சந்தித்தான். என்ன காரணத்தாலோ அன்று சீக்கிரமாகக் கரைக்கு வந்துவிட்ட இளவழுதி தனது படகைக் கரையில் இழுத்துவிட்டு வலைகளையும் சுறா பிடிக்கும் கொக்கிகளையும் படகில் ஏற்றி விட்டுத் திரும்ப முயன்ற சமயத்தில், கிழிந்த ஆடைகளை அணிந்த ஒரு அரபுப் பெண் அந்தப் படகை நோக்கி வந்தாள். அவள் கால்களைக் கரையில் மோதிய அலைகள் தடவித் தடவிச் சென்றன. அடுத்து ஒரு பெரிய அலை வந்தது. அவளை அப்படியே மூழ்கடித்துவிடுவதுபோல், அதை அவள் லட்சியம் செய்யாமலே நடந்தாள். அப்புறம் போய்விடு’ என்று கூவினான் தூரத்தில் படகின் பக்கத்திலிருந்த இளவழுதி, அவள் அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். தனது இடது கையால் நெருங்கி வந்து கொண்டிருந்த அலையைப் பார்த்துக் கையை அசைத்தாள். அவள் கையை அசைத்ததும் அந்த அலை சற்று விலகி அவளை விட்டு நாலடி தள்ளி கரையில் மடிந்தது. அந்த நிகழ்ச்சி தற்செயலாக நேர்ந்ததா. அவள் கைவீசியதால் ஏற்பட்டதா என்பதைப் புரிந்து கொள்ள முடியாத

இளவழுதி பிரமித்து அவளை அணுகி, ‘பெண்ணே நீ யார்? பெயரென்ன?’ என்று கேட்டான்.

அரசி அவனை உற்று நோக்கினாள். நீண்ட நேரம் நேக்கிக் கொண்டே இருந்தாள். இளவழுதியின் இதயத்தை ஊடுருவியது போலிருந்தது அந்தப் பார்வை. சிறிது நேரம் கழிக்து அவள் பேசினாள், ‘என் பெயர் அரசி’ என்று.

‘அரசியா? அரச குலத்தவளா?

‘ஆம்’

‘கிழிந்த ஆடைகளை அணிந்திருக்கிறாய்?’

ஆடை மட்டும் பதவியை அளிக்காது. நல்ல ஆடை அணிபவர்களெல்லாம் அரசர்களாகிவிட முடியாது.’ இதை அவள் உறுதியுடன் சொல்லிவிட்டு மேலும் தரையைப் பார்த்துக் கொண்டே நடக்க முற்பட்டாள். அவள் எதையோ தேடுவதைப் போலிருக்கவே அவளைப் பின்பற்றி நடந்தவண்ணம், ‘அரசி எதைத் தேடுகிறீர்கள்?’ என்று மரியாதையுடன் வினவினான்.

‘என் சுட்டியைத் தேடுகிறேன்.’

‘அது இங்கு எப்படிக் கிடைக்கும்?’

‘இங்குள்ள கடலில்தான் விழுந்துவிட்டது. அலைகள் கொண்டு வரும். இன்று எப்படியாவது எனக்குக் கிடைக்கும்.’

இதைக் கேட்டதும் இளவழுதி சிந்தனை வசப்பட்டா ‘எப்படி அத்தனை நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டான் முடிவில்.

இந்தக் கடலில்தான் தவறி விழுந்தது. எங்கிருந்தாலும் அதைக் கொண்டுவரச் சொல்லி அலைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன் என்ற அவள் ‘எப்படியும் இன்று அது என்னிடம் வந்து சேரும் என்று சொன்னாள் உறுதியுடன்,

இளவழுதி சிந்தனையில் இறங்கினான். ‘ அந்தச் சுட்டி எப்படியிருக்கும்?’ என்று வினவினான் சிறிது நேரம் சிந்தித்த பிறகு. ‘தலைக்குழலில் சொருக சிறு சங்கிலியிருக்கும் அதன் முடிவில் நக்ஷத்திர வடிவில் அது இணைக்கப்பட்டிருக்கும்’ என்று அரசி சொன்னதும் வியப்படைந்த இளவழுதி ‘அந்த மாதிரி சுட்டியை எந்த பொற்கொல்லனும் செய்வானே’ என்றான்.

‘சுட்டிகளைச் செய்யலாம். ஆனால் அந்த வைரம் கிடைக்காது. அதற்கு மிகுந்த சக்தியுண்டு’ என்ற அவள் சட்டென்று நின்றுவிட்டாள் சிலை போல. பிறகு எங்கிருந்தோ பேசும் குரலில் ‘சொன்னாள் ‘உன்னிடமிருக்கிறது அந்தச் சுட்டி, கொடுத்துவிடு’ என்று கையை நீட்டினாள்.

‘எப்படி உங்களுக்குத் தெரியும்?’ என்று கேட்டான் இளவழுதி.

அவள் பதிலேதும் சொல்லாமல் அவன் கச்சையைச் சுட்டிக் காட்டினாள் தனது ஆள்காட்டி விரலால் அவன் கச்சையிலிருந்த அந்த வைரம் பளிச் பளிச்சென்று கதிர்களைப் போல வெளியே ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அன்றுவரை பளிச்சிடாத அந்த வைரம் திடீரென்று அப்படிப் பளிச்சிடக் காரணம் புரியவில்லை அவனுக்கு.

அரசியே காரணத்தைச் சொன்னாள், ‘என்னை அது அழைக்கிறது’ என்று.

‘அது உங்களுடையது என்பதற்கு அடையாளம் உண்டா ?’ என்று இளவழுதி வினவினான்,

‘நீயே அதை என் தலையில் மாட்டிவிடு. திரும்ப எடுக்க முடிந்தால் எடுத்துக்கொள்’ என்றாள் அரசி.

இளவழுதி அந்தச் சுட்டியை எடுத்து அவள் தலைக்குழலில் மாட்டினான். அவன் தலைக்குழலில் அந்த வைரம் விளக்கைப்போல் எரிந்தது. மறுபடியும் குழலிலிருந்து சுட்டிச்

சங்கிலி கொக்கியை எடுக்கப் பார்த்தான். அவள் தலையில் கொள் புதைந்து கிடந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த வைரம் கதிர்களை அவன் கண்களில் தாக்கவே அவன் தலை ஆரம்பித்தது. அப்படியே நிலைத்து நின்றான் இளவழுதி – கண்விழித்தபோது அந்தப் பெண் அங்கில்லை. தான் நீண்டநே நிலைத்து நின்று விட்டதை உணர்ந்தான். பரதவர்கள் பல அவனைச் சூழ்ந்து நின்றனர். அவனைப் பிடித்துக் குலு கொண்டிருந்தனர். அவன் கண்களில் இருந்த புத்தொளியை பார்த்து, ‘இளவழுதி! இளவழுதி விழித்துக் கொள்’ என்று அவனை மேலும் உலுக்கினார்கள்.

Previous articleAlai Arasi Ch6 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch8 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here