Home Alai Arasi Alai Arasi Ch8 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch8 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

70
0
Alai Arasi Ch8 Alai Arasi Sandilyan, Alai Arasi Online Free, Alai Arasi PDF, Download Alai Arasi novel, Alai Arasi book, Alai Arasi free, Alai Arasi,Alai Arasi story in tamil,Alai Arasi story,Alai Arasi novel in tamil,Alai Arasi novel,Alai Arasi book,Alai Arasi book review,அலை அரசி,அலை அரசி கதை,Alai Arasi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi ,Alai Arasi full story,Alai Arasi novel full story,Alai Arasi audiobook,Alai Arasi audio book,Alai Arasi full audiobook,Alai Arasi full audio book,
Alai Arasi Ch8 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

Alai Arasi Ch8 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

அலை அரசி – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 விளக்கு மோகினி

Alai Arasi Ch8 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

கடலலைகள் மணலை முத்தமிடும் இடத்தில் பிரமை பிடித்து சுய உணர்வு இழந்து நின்றிருந்தவனை சக பரதவர் பிடித்து பலமுறை உலுக்கிய பின்பே நனவுலகத்துக்குத் திரும்பிய இளவழுதி, தன்னைச் சுற்றி நின்றவர்களை ஒருமுறை ஏறிட்டுவிட்டு, அவர்களுக்குப் பதிலேதும் சொல்லாமலே தனது குடிசையை நோக்கி நடக்க முற்பட்டான். அவன் தங்களைப் பார்த்த பார்வையில் தெளிவில்லாததையும், நடையிலும்கூட ஒருவித தள்ளாட்டமிருந்ததையும் கவனித்த சக பரதவர்கள் அவனை மெதுவாகப் பின்பற்றிச் சென்றனர். பின்னால் வருபவர்களைக் கவனியாமலும் சொப்பனத்தில் எதையோ நாடிச் செல்பவன் போலும் அவன் நடந்த தோரணையைக் கவனித்துக் கொண்டே அவனைப் பின்பற்றிச் சென்ற பரதவ வாலிபர்கள் அவன் குடிசையருகில் வந்ததும் குடிசையை அணுகாமல் சற்று எட்டவே நின்றுவிட்டனர். இளவழுதி மட்டும் நேராகக் குடிசைக் கதவிடம் சென்று அதைத் தட்டவே, உள்ளிருந்து கதவைத் திறந்த முதியவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றதையும் அவனைப் பின்பற்றி வந்த பரதவ வாலிபர்கள் சற்று எட்டவே நின்றுவிட்டதையும் பார்த்த முகுந்தன் பெருவழுதி, குடிசையின் உட்புறத்தை ஒருமுறை நோக்கினான். அங்கு இளவழுதி கீழே கிடந்த பாயொன்றை விரித்து படுத்துக்கிடந்ததைக் கவனித்துவிட்டு குடிசைக்கு முன்பாக நின்றிருந்த பரதவர்களிடம் சென்று, என்ன நடந்தது? இளவழுதி ஏன் மயக்கத்திலிருக்கிறான்?’ என்று விசாரித்தான்.

அந்த வாலிப பரதவர்கள் யாரும் எதுவும் பேசாவிட்டாலும் ஒருவன் மட்டும் முதியவனை நோக்கி, ‘பெரியவரே! இன்று என்ன காரணத்தாலோ இளவழுதி மலைவாயிலில் கதிரவன் > முன்பே, மஞ்சள் வெயில் மறைந்த சில நாழிகைகளுக்கெல் கரைக்கு வந்து விட்டான். அந்தச் சமயத்தில் யாரோ ஒரு – அவனிடம் வந்து ஏதோ பேசிவிட்டுப் போனாள். அதற்குப் பி. நின்ற இடத்தைவிட்டு நகராமல் இளவழுதி செங்குத்தாக சில போல் நின்றிருந்தான். நாங்கள் அழைத்ததற்கு அவன் பதில் சொல்லவில்லை. அவன் கண்கள் விழித்திருந்தன. ஆன அவற்றில் பார்வையில்லை. எங்களை அவன் பார்க்க பார்க்காதது போலவே நின்றிருந்தான். நாங்கள் அவனைப் பிடி உலுக்கினோம். பிறகு சற்றே அவனுக்கு சுரணை வந்தாலும் மு சுரணையும் வரவில்லை . எங்களிடம் ஏதும் பேசாமல் குடிசைன் நோக்கி நடக்கத் துவங்கினான். நாங்கள் பின்பற்றி வந்தோம் அவன் குடிசைக் கதவைத் தட்டியதும் நீங்கள் திறந்ததும் தான் எங்களுக்குத் தெரியும்’ என்று சொன்னான்.

முதியவன் முகத்தில் துன்பச் சாயை தெரிந்தது. ‘அந்த பென் எப்படியிருந்தாள்?’ என்று கேட்டான்,

‘இளவயதுதான். தூரப்பார்வைக்கு அழகாயிருந்தாள். ஆனால் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்தாள். பிச்சைக்காரி மாதிரி தெரிந்தது’ என்றான் பரதவ வாலிபன்.

‘அவளை இதற்கு முன்பு இந்தக் கடற்பகுதியில் பார்த்திருக்கிறீர்களா?’ என்று முதியவன் கேட்டான்,

‘இல்லை பார்த்ததில்லை’

‘எந்த நாட்டவள்?’

‘பார்வைக்கு அரபு நாட்டவள் போலிருந்தாள். யவனப் பெண்ணாகவும் இருக்கலாம்.’

சரி நீங்கள் சென்று நமது மருத்துவரை அனுப்பி வையுங்கள் உன்ன சொல்லிவிட்டு முதியவன் உள்ளே சென்றான் பேரனைக் கவனிக்க.

பாயில் தீர்க்க உறக்கத்தில் படுத்துக் கிடந்தான் இளவழுதி, வன் நெற்றியில் கை வைத்துப் பார்த்து அவனுக்குக் காய்ச்சல் எதுமில்லையென்பதை உணர்ந்து அடுப்பு மூட்டி சிறிது பாலைக் காய்ச்சி இளவழுதியின் தலையை தனது மடியில் வைத்துக் கொண்டு. ‘இளவழுதி! விழித்துக் கொள். இதை அருந்து!” என்று கெஞ்சினான். இளவழுதி வாயைத் திறக்காததால் வாயைத் தானே திறந்து சிறிதளவு பாலைப் புகட்டினான். அதை இரண்டே வாய் விழுங்கிய இளவழுதி மேற்கொண்டு அருந்த மறுத்தான்.

‘உடம்புக்கு என்னடா இளவழுதி?’ என்று கிழவன் வினவினான். பதில் ஏதுமில்லை பேரப்பிள்ளையிடமிருந்து. நல்ல உறக்கத்திலிருந்ததால் திரும்பி பாயில் விழுந்து ஒருக்களித்துக் கொண்டான். மிகுந்த கவலையுடன் உட்கார்ந்திருந்த முதியவன் மருத்துவரை எதிர்பார்த்து விழித்திருந்தான். சுமார் நான்கு நாழிகைக்குள் வந்த மருத்துவர் பாயில் இளவழுதியின் பக்கத்தில் உட்கார்ந்து நாடியைப் பரிசோதித்தார் நீண்ட நேரம். பிறகு இளவழுதியைத் திருப்பி அவன் வயிறு முதலிய உறுப்புகளை அழுத்திப் பார்த்துவிட்டு, ‘பெருவழுதி! வியாதி ஏதுமில்லை. பையன் எதையோ கண்டு பயந்திருக்கிறான்’ என்று சொல்ல அவர் குரலில் குழப்பம் பெரிதும் தெரிந்தது.

‘மூளைக்கோளாறு ஏதாவது ஏற்பட்டிருக்குமா?’ என்று முதியவன் வினவினான், அவர் குரலில் ஒலித்த குழப்பத்தைக் கவனித்து,

‘இருக்கலாம். எதற்கும் நமது பிச்சனைக் கேட்டுப் பாருங்கள் என்றார் மருத்துவர்.

மந்திரவாதி பிச்சனும் வந்து பார்த்து அவருக்கும் ஏதும் புரியாததால், ‘முதியவரே! எதற்கும் நமது பகவதி கோயிலுக்கு வேண்டிக் கொள்ளுங்கள். அவளால் முடியாதது ஏதுமில்லை என்று சொல்லிப் போனார்.

பேரன் பக்கத்தில் உட்கார்ந்து பகவதியை வேண்டினான் பெருவழுதி, அதன் விளைவாகவோ என்னவோ மறுநாள் மாலை இளவழுதியைத் தேடி ஒரு அராபியன் வந்து, ‘இங்குதான் இளவழுதி இருக்கிறாரா?’ என்று வினவினான்.

நல்ல உயரமும் பருமனுமாய் குறுந்தாடி மீசைகளுடன் காணப்பட்ட அந்த மனிதனைப் பார்த்ததும் அவனிடம் சந்தேகங்கொண்ட பெருவழுதி, ‘ஆம், எனது பேரன். அவனிடம் உங்களுக்கு என்ன தேவை?’ என்று வினவினான் சந்தேகம் நன்றாகவே தொனித்த குரலில் .

‘அவர் தான் வேண்டும்’ என்றான் அந்த அராபியன்,

“உள்ளே இருக்கிறான். சென்று பாருங்கள்’ என்று முதியவன் வழிவிட்டு நிற்க, அராபியன் உள்ளே சென்று இளவழுதியைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் நின்றான்.

‘எத்தனை நேரமாக இப்படி இருக்கிறார் இவர்?’ என்று முதியவனை நோக்கித் திரும்பிக் கேட்டான் அராபியன்,

‘நேற்று மாலையிலிருந்தே’ என்றான் முதியவன்.

இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாளைக் காலையில் இவர் பழைய நிலைக்குத் திரும்பி விடுவார். திரும்பியதும் இவரை அராபியர் குடியிருப்புப் பகுதிக்கு அனுப்புங்கள்’ என்று உத்தரவிடும் தோரணையில் பேசினான் அராபியன்,

எதற்காக? யாரிடம் அனுப்ப வேண்டும்?’ என்று முதியவன் கேட்டான் உஷ்ணமாக.

அங்கு ஒருவரைச் சந்திக்க’ என்றான் அராபியன்.

‘யாரை?’

‘சொல்ல உத்தரவில்லை’

‘இவனை அனுப்பாவிட்டால்?’

‘இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரமை விலகாது.’

இதைக் கேட்டதும் சில விநாடிகள் மௌனமாகி விட்ட மதியவன் கடைசியாக வினவினான், ‘எந்த இடத்துக்கு வர வேண்டும்?’ என்று.

‘இடத்தைச் சொல்வதற்கில்லை. இவர் அரபுக் குடியிருப்புக்கு வந்தால் நானே இவரை அழைத்துப் போவேன்’ என்று முடிவாக கூறி அராபியன் மேற்கொண்டு ஏதும் பேசாமலேயே குடிசையை விட்டு வெளியே சென்றவன் மணலில் வடக்கு நோக்கி நடந்து விட்டான்,

அவன் போவதை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே நின்ற முதியவன் அன்று உணவேதும் அருந்தாமல் பேரன் பக்கத்திலேயே படுத்துவிட்டான். படுத்தும் உள்ளிருந்த கவலையின் காரணமாக உறக்கம் வராததால் அதுவரை நடந்த விசித்திர நிகழ்ச்சிகளை எண்ணியே இரவைக் கழித்ததாலும் பொழுது புலர இருந்த சமயத்தில் அசதியால் உறங்கி விட்டான். காலையில் கதிரவன் உதித்த பின்பே எழுந்த முதியவன். இளவழுதி எழுந்து வெளியே செல்ல உடையணிந்து சித்தமாயிருப்பதைக் கவனித்தான்.

‘உடம்பு எப்படியிருக்கிறது இளவழுதி?’ என்று வினவினான் முகுந்தன்.

‘நன்றாகத் தானிருக்கிறது’ என்றான் இளவழுதி.

‘மாற்றுடை அணிந்திருக்கிறாயே?’

‘ஆம்’

‘எதற்கு?

“நான் சந்திக்கப்போவது ஒரு அரசகுடும்பத்தாரை’

‘சேர மன்னனையா?’

“இல்லை . இவர்கள் வெளிநாடு.’

‘அரபு நாடாயிருக்குமோ?’ என்று மெதுவாக ஒரு கேள்வி வீசினான் முதியவன்.

இளவழுதியின் கண்களில் பிரமை பெரிதாக விரிந்தது.

‘தாத்தா! உங்களுக்கெப்படித் தெரியும் அது?’ என்று கேட்டான் பிரமை சொற்களிலும் ஒலிக்க.

‘உன் பாட்டனுக்கு ஊகசக்தி அதிகம்’ என்ற பெருவழுதி “நானும் உடன் வரட்டுமா?’ என்று கேட்டான்.

‘வருவதற்கில்லை. யாரையும் அழைத்து வராதே என்ற எச்சரித்திருக்கிறாள் அவள்’ என்ற இளவழுதியின் முகத்தில் இன்பச்சாயை படர்ந்து கிடந்தது.

‘அவளா!?’ என்று வினவிய பெருவழுதியின் குரலில் வியப்பு நிரம்பி வழிந்தது.

‘ஆமாம். நான் அலையோரத்தில் சந்தித்த பெண். நேற்றிரவு கனவில் வந்து என்னை அழைத்தாள்’ என்று கூறிய இளவழுதி, ‘அஞ்சவேண்டாம் தாத்தா எப்படியும் மாலைக்குள் திரும்பி விடுகிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றான். அவன் எதிர்ப்பையும் மீறி அவனைத் தொடர முயன்ற பெருவழுதியைத் தனது கையின் அசைவினால் தடுத்த இளவழுதி, ‘தாத்தா எனக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. நீங்கள் தொடர்ந்து வந்தால்தான் எனக்கு ஆபத்து’

என்று கண்டிப்புடன் பேசிவிட்டு மணலில் நடந்து விட்டான் அரபுக்குடியிருப்பை நோக்கி,

கிழவன் அவனைத் தொடராமல் குடிசை வாயிலிலேயே ஸ்தம்பித்து நின்று பேரன் போவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான். பிறகு வலையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தான். அங்கிருந்த தனது பெரிய படகை நீரில் இழுத்து கடலில் செலுத்தினான். மாலை நெருங்கும் நேரம் வரை கடலில் திரிந்து விட்டு, எடுத்துப் போன வலையை சாமலும், மீன்களைத் தூண்டிலால்கூடப் பிடிக்காமலும் சிந்தனையிலேயே காலம் கழித்துவிட்டுத் திரும்பினான் கடற்கரையை நோக்கி, மாலை முதிர்ந்துவிட்ட சமயத்தில் கரைக்கு வந்துவிட்ட முதியவன் தனது குடிசையை நோக்கி வந்தான். குடிசைக் கதவு மூடப்பட்டிருந்ததால் அதைத் திறக்க நினைத்து சிறிது நேரம் நின்றான்,

உள்ளே இருவர் பேசும் குரல் தெளிவாகக் கேட்டது முதியவனுக்கு, தனது பேரன் ‘அரசியை நான் எப்பொழுது சந்திப்பது?’ என்று கேட்டதையும், ‘மூன்று ஆண்டுகளாகும்’ என்று காலை வந்த அராபியன் குரல் ஒலித்ததையும் கேட்டான்,

‘மூன்று ஆண்டுகள் காத்திருக்க என்னால் முடியாது’ என்றான் இளவழுதி,

‘நம்மால் முடியும் முடியாதது என்பதில்லை. எல்லாம் அவள் இஷ்டம்’ என்ற அராபியன் அடுத்த வினாடி குடிசைக் கதவைத் திறந்துகொண்டு பெருவழுதியைப் பாராமலேயே வேகமாகச் சென்று விட்டான்.

அவனை எரிச்சலுடன் பார்த்த பெருவழுதி உள்ளே வந்து பேரனை நோக்கி ‘இளவழுதி! அவளைப் பார்த்தாயா?’ என்று கேட்டான்.

‘பார்த்தேன்’

‘என்ன சொன்னாள்?’

‘மூன்று ஆண்டுகள் தள்ளிப்போட்டுவிட்டாள்’

‘எதை?’ என்று கிழவன் கேட்டான்.

‘சொன்னால் உங்களுக்குப் புரியாது’ என்று கூறிய இன எழுந்து குடிசைக் கோடியில் இருந்த விளக்கை ஏற்றினான் அதை உற்று நோக்கினான். அதில் அரசியின் முகம் தெரிவாகத் தெரிந்தது. அவள் தன்னைப் பார்த்து நகைப்பதா தோன்றியது இளவழுதிக்கு. ‘என்ன நகைக்கிற என்னிடமிருந்து தப்பிவிட்டதாக நினைக்காதே?’ என்று விளக் நோக்கிப் பேசினான் அரையன் இளவழுதி.

‘இளவழுதி யாரை நோக்கிப் பேசுகிறாய்? இங் யாருமில்லையே’ என்றான் பாட்டன்.

‘விளக்கின் சுடரைப் பாருங்கள் தாத்தா! அதில் இருக்கிறார் அந்த மோகினி’ என்றான் இளவழுதி. பிறகு விளக்கிடம் சென்று சுடரை நோக்கி பேசவும் முற்பட்டான்.

Previous articleAlai Arasi Ch7 | Alai Arasi Sandilyan | TamilNovel.in
Next articleAlai Arasi Ch9 | Alai Arasi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here