Home Avani Sundari Avani Sundari Ch10 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch10 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

57
0
Avani Sundari Ch10 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch10 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch10 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 10 திருமண ஏற்பாடு

Avani Sundari Ch10 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

புகாரின் கடலில் இருந்து சொர்ணபிம்பமாகக் கிளம்பிப் பிறகு அக்கினிப்பிழம்பாக மாறிவிட்ட கதிரவன், தன் கதிர்களில் சிலவற்றை அரசன் அந்தரங்க அறையின் சாளரத்தின் மூலமாக உள்ளே அனப்பியிருந்ததால், அவை அவனி சுந்தரியின் மேனியின் ஒரு பகுதியில் தவழ்ந்து ஓடி அவள் இயற்கையான அழகுக்கு மேலும் மெருகு கொடுத்திருந்தது.

அந்தக் கிரணங்கள் அவள் முகத்தில் படாமல், மார்பிலும் அதற்குக் கீழும் விழுந்திருந்தால், சேலையும் அணிகளும் உயர்ந்து நின்ற அழகுப் பீடங்களும் தனிப் பொலிவைப் பெற்றன. இவையெல்லாம் நலங்கிள்ளியின் மனதைப் பறித்து இழுக்கும். நிலைமை சாதாரணமாயிருந்திருந்தால். ஆனால் அறையில் நிலவிக் கிடந்த பெருமவுனமும், சிணுங்கிக்கிடந்த மாவளத்தான் முகமும், புகார் மன்னனின் உணர்ச்சிகளை அடக்கி வைக்கவே, அவன் மனம் உணர்ச்சியற்ற வெறும் கல்லாயிருந்தது. இந்த நிலையில் அவனி சுந்தரியின் மனம் மட்டும் ஏதேதோ யோசனையில் திரும்பித் திரும்பி உழன்று கொண்டிருந்தது. நலங்கிள்ளி தன் கரங்களை தொட்டுப் பற்றி இழுத்து, புலவர் முன்பாகவும் தம்பி முன்பாகவும் அழைத்துச் சென்றது அவளுக்கு வியப்பாயிருந்தது. “பிறர் எதிரில் என்னைத் தொட இவருக்கு என்ன துணிச்சல்?” என்று உள்ளூர வினவிக் கொண்டாள் ஒரு முறை. “ஆனால் அவர் கையைப் பற்றியது சிறிது முரட்டுத்தனமாயிருந்தாலும், அதில் எத்தனை இன்பமிருக்கிறது?” என்று எண்ணத்தை ஓடவிட்டாள். இத்தளையிருந்தும், புலவர் மீது தனது கண்களை ஓடவிட்டு, அவர் கேள்வியை எதிர்பார்த்த வண்ணம், ஆசனத்தில் உட்கார்ந்திருந்தாள்.

புலவர் சர்வசாதாரணமாக முதல் கேள்வியை வீசினார். “அவனி சுந்தரி! நீ நலங்கிள்ளியை மணக்கச் சம்மதிக்கிறாயா?” என்று வினவினார். ஏதோ வணிகனிடம் சரக்கைக் கேட்கும் தோரணையில்.

எதற்கும் அசையாத அவனி சுந்தரியும் இந்தக் கேள்வியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். ஆகவே உடன் பதில் சொல்ல முடியாமல் மவுனமே சாதித்தாள். பிறகு சமாளித்துக் கொண்டு, “புலவர் கேள்வி விசித்திரமாயிருக்கிறது” என்று கூறினாள். கூறி விட்டு எட்டக் கையைக் கட்டிக் கொண்டிருந்த மாவளத்தானையும் நோக்கி, தனது மஞ்சத்தைப் பிடித்துக் கொண்டு நின்ற மன்னனையும் நோக்கினாள். அவள் பார்வையில் நாணமோ அச்சமோ இல்லை. அரசகுமாரியின் தைரிய தோரணையில் இருந்தது. சற்று அலட்சியமும் இனமுங்கூட இருந்தது.

அவள் பார்வையில் இருந்து உணர்ச்சிகளைக் கவனிக்கவே செய்தார் கோவூர்கிழார். இருப்பினும் சிறிதும் லட்சியம் செய்யாமலே சொன்னார்: “எனது இதயத்தில் விசித்திர உணர்ச்சிகள் ஏதுமில்லை. உண்மையை நிலைக்கச் செய்ய விரும்புகிறேன்” என்றார்.

“எந்த உண்மை?” என்று சீற்றத்துடன் கேட்டாள் அவனி சுந்தரி.

“நந்தவனத்தில் நேற்றிரவு நடந்த உண்மை” என்மூர்
கோவூர் கிழார். சலனமற்ற குரலில்.

அவனி சுந்தரி நலங்கிள்ளி மீது தன் நீள்விழிகளைத் திருப்பி னாள். நலங்கிள்ளியும் ஏதோ பேச முற்பட்டான். ஆனால், அவனை ஒரே பார்வையில் அடக்கிய புலவர், “இளவரசி! நலங்கிள்ளி என்னிடம் ஏதும் சொல்லவில்லை. என் சீடனொருவன் சொன்னான்” என்று விளக்கினார்.

“தங்கள் சீடனா!” வியப்பு ஒலித்தது அவனி சுந்தரியின குரலில்.

“ஆம்” என்றார் புலவர்.

“என்னை வேவுபார்க்க சீடர்களை வைத்திருக்கிறீர்களா?”

“உன்னை வேவு பார்க்க அல்ல, மன்னனைக் கவனிக்க.”

“ஏன் அவருக்குத் தம்மைக் கவனித்துக் கொள்ள திறமை இல்லையா?”

“போரில் திறமை உண்டு, வஞ்சகத்தில் கிடையாது.”

“யார் வஞ்சகம் செய்தார்கள்?”

“உன்னைவிட அது யாருக்கும் தெரியாது!”

அவனி சுந்தரி எரியும் விழிகளை நாட்டினாள் புலவர் மீது. ‘என்னை வஞ்சகி என்கிறீர்களா?” என்று, சீற்றம் நிறைந்த சொற்களை வீசினாள்.

கோவூர் கிழார் அடக்கமாவே பதில் கூறினார். “உன்னை பஞ்சகி என்று நான் கருதியிருந்தால், புகாரின் ராணியாக்க நான் உடன்படமாட்டேன். நீ இஷ்டப்படும் பட்சத்தில் இந்தத் திரு மணத்தை உடனடியாக முடிக்கத் தீர்மானித்திருக்கிறேன்” என் ஓர் புலவர் நிதானமாக.

“என் திருமணத்துக்கு என்ன அத்தனை அவசரம்?” என்று வினவினாள் அவனி சுந்தரி.

புலவர் சில விநாடிகள் தான் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு மெள்ளக் கூறினார்: “மகளே நிதானமாகக் கேள். நீ வந்ததில் இருந்து புகாரில் விளைந்திருக்கும் விவகாரங்கள் மக்கள் மனதைப் பெரிதும் கிளறியிருக்கின்றன. உன்னைப் பற்றி மக்கள் பலபடி பேசுகிறார்கள், கிள்ளிவளவனை, நீயும் நெடுங்கிள்ளியும் சேர்ந்து கொன்றுவிட்டதாகக் கூட வதந்தி உலாவுகிறது. இதைப் பற்றி நேற்றுப் புகாரின் தளபதியே என்னிடம் வந்து விசாரித்தார். புகாரின் படைவீரர்களிடையே வீண்வம்புகள் பல உலாவுகின்றன. இத்தனைக்கும் குற்றம் உன்மீது இல்லை. சந்தர்ப்பங்கள் விபரீத சூசனைகளுக்கு இடங்கொடுத்திருக்கிறது. “மன்னன் உடலை இவள் தானே கொணர்ந்தாள்; இவளைத் தொடர்ந்து நெடுங்கிள்ளியும் நிர்ப்பயமாகப் புகாருக்கு வந்திருக்கிறானே?” என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதை நீடிக்கவிடுவது அபாயம். உன் உயிருக் கும் அபாயம். புகார் மக்கள் கொதித்தெழுந்து நியாயம் கேட் டால், விசாரணையை மன்னன்கூடத் தடுக்க இயலாது. நீதி வல்லுனர் முன்பு நிறுத்தப்படுவாய். புரிகிறதா உனக்கு?”

புலவரின் சொற்களில் உண்மை நிரம்பியிருப்பதைக் கவனித் தாள் அவனி சுந்தரி. பிறகு கேட்டாள் “மன்னனை நான் மணந்தால், இந்தச் சந்தேகங்கள் எப்படிப் பறந்துவிடும்? அண்ணனைக் கொன்ரவளை, அடுத்துக் கெடுக்க வந்தவளை, மன்னர் மணந்தார் என்றால், மன்னனிடமும் மக்களுக்கு வெறுப்பு உண்டாகாதா? அத்தகைய மனிதரை முடிசூட மக்கள் அனுமதிப்பார்களா?” என்று.

இந்தக் கேள்விகள் கோவூர் கிழாரையும் ஒரு உலுக்கு உலுக்கின. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “குழந்தாய்! உன் மனம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நலங்கிள்ளியை வீண் சந்தேகத்தில் இருந்து காப்பாற்ற முயலுகிறாய். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாதே. அந்தச் சந்தேகத்தை உடைத்தெறிய என்னால் முடியும்” என்று கூறினார்.

“எப்படி?”

”என் சொல்லுக்கு மக்களிடம் மதிப்பு உண்டு. புகாருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எதையும் நான் செய்ய மாட்டேன் என்று மக்கள் நம்புகிறார்கள். தவிர என் சீடர்களும் மக்கள் நடுவில் உலாவுகிறார்கள். மன்னனை நீ காத்த செய்தியை மெல்லப் பரப்புவார்கள். மக்கள் மனது வெகுவிரைவில் மாறும். நீ இந்த நாட்டின் மன்னனைக் காக்க வந்த மகராசியாக உன்னைப் பாராட்டு வார்கள். நீ மன்னன் இதயராணியாக மட்டுமல்லாமல், மக்களின் இதயராணியாகவும் மாறுவாய். உன்னைக் கொல்ல இப்பொழுது துடித்து நிற்கும் வீரர்களின் வாட்கள் உன் பாதத்தில் வணக்கத்துடன் தாழும். மக்களின் சீற்றம், அன்புக்கும் பெருமைக்கும் இடம் தரும். அது மட்டுமல்ல..”

இங்குப் புலவர் சிறிது பேச்சை நிறுத்தினார், “வேறென்ன? என்று வினவினாள் அவனி சுந்தரி.

“இந்த அரசுக்கும் இந்தத் திருமணம் நல்லது” என்மூர், புலவர்.

“எப்படி?”

“நாட்டைப் பிளக்க நீ வந்தாய்.”

“ஆம்”

“பிளந்துவிட்டது. நெடுங்கிள்ளி ஓடிவிட்டான் இரவோடு இரவாக. இனிப் போர் தொடங்குவாள்.”

“ஆம்”

“அப்படி நிகழும் போரில், உன் தந்தை நலங்கிள்ளியின் பக்கமிருந்தால்…?’

“உறையூர் மன்னர் போரைத் தொடங்க அஞ்சுவார். அப்படிப் போரைத் தொடங்கினாலும், கன்னரப் படைகள் இணைவதால், புகாரின் படைபலம் அதிகப்பட்டுவிடும். அதன் விளைவு…”

“நெடுங்கிள்ளியின் வீழ்ச்சி, உறையூரும் புகாரும் ஒன்றிப் பழைய பேரரசாகி விடும் சோழ நாடு” இதைச் சொன்ன புலவரின் கண்களில், கனவுச் சாயை விரிந்தது.

அதைக் கவனிக்கவே செய்தாள் அவனி சுந்தரி. கவனித்ததும் மெல்ல நகைத்தாள்.

“ஏன் நகைக்கிறாய்?” புலவர் நிதானத்தைக் கைவிட்டுக் கேட்டார்.

“புலவரே, சோழ நாட்டை இரண்டாக உடைக்க நான் வந் தேன். உடைத்தாகிவிட்டது. திரும்ப அதை ஒன்றாக்குவதால் செய்த வேலை அடிபட்டுப் போகுமே. இது அல்ல என் தந்தையின் நோக்கம்?” என்றாள் அவனி சுந்தரி.

“உன் தந்தையின் நோக்கத்தைப் பற்றி நான் கவலைப்பட வில்லை.”

“நான் கவலைப்படுகிறேன் புலவரே! உமக்கு மட்டுந்தான் நாட்டுப்பற்று உண்டா? எனக்குக் கிடையாதா? எனது நாட்டு நன்மை இந்த நாடு பிளவுப்படுவதில் இருக்கிறது. அதைச் செய்ய ஆணையிட்டு வந்தேன் தந்தையிடம் அந்த வேலை முடிந்துவிட் டது. இனி எனது நாடு திரும்பப் போகிறேன்” என்று கூறினால் அவனி சுந்தரி.

“உன்னை நாடு திரும்ப நாங்கள் அனுமதிக்காவிட்டால்?” என்று கேட்டார் புலவர்.

“அனுமதிக்காமல் என்ன செய்வீர்கள்?”

புலவர் பதில் சொல்லவில்லை.

அதுவரை மவுனமாயிருந்த மாவளத்தான் பதில் சொன்னாள், “காவலில் வைக்கப்படுவீர்கள்” என்று.

இதைக் கேட்ட அவனி சுந்தரி கலகலவென நகைத்தாள். “இளையவரே! என்னைக் காவலில் வைக்கக்கூடிய அரசு உலகத்தில் இனிமேல் தான் உண்டாக்க வேண்டும். முடிந்தால் சிறைப்படுத்திப் பாருங்கள்” என்று கூறிவிட்டு, மஞ்சத்தை விட்டு எழுந்திருந்தாள். கதவை நோக்கி நடந்து, அதைத் திறந்து, மீண்டும் அந்த அறையில் இருந்தவர்களைத் திரும்ப நோக்கி, “புலவரே புகாரின் மன்னனை நான் காதலிக்கவில்லை. அவர் நன்மையை முன்னிட்டுக் காதலித்ததாக நடித்தேன் நந்தவனத்தில். இதோ என் அறைக்குச் செல்கிறேன். திறமையிருந்தால் என்னைக் காவலில் வையுங்கள்” என்று கூறிவிட்டு, வெகு வேகமாக நடந்தாள் தன் அறையை நோக்கி.

அவள் சென்ற பின்பு, அறையில் இருந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கடைசியில், புலவரே சொன்னார் இளையவனை நோக்கி, “மாவளத்தான்! அவள் அறையைக் காக்கக் காவலரை அனுப்பு” என்று.

நலங்கிள்ளி உடனடியாகச் சீறி விழுந்தான். “அவள் என்னைக் காப்பாற்றியதற்குக் கைம்மாறா இது?” என்று.

‘உன்னைக் காப்பாற்ற அவள் உன்னை நந்தவனத்துக்கு அழைத்துச் செல்ல அவசியமில்லை. முன்னதாக எச்சரித்து இருக்கலாம். நெடுங்கிள்ளிக்கு வேல் எறிய இடமளித்து, பிறகு தனது பூதத்தை விட்டு உன்னை ஏன் காக்க வேண்டும் அவள்?” என்று வினவினார் புலவர்.

நலங்கிள்ளி பேச வகை இன்றி நின்றான். மாவளத்தான் வெளியே சென்றான், புலவர் ஆணையை நிறைவேற்ற. சற்று நேரத் திற்கெல்லாம், தன் அறை வாசலில் வாளை உருவி நின்ற இரு காவலரை நோக்கி, “நீங்கள் தான் காவலரா?” என்று கேலியுடன் வினவினான், அவனி சுந்தரி.

பதிலுக்கு அவர்கள் தலையாட்டவே, மீண்டும் உள்ளே சென் றான், அன்றிரவு நலங்கிள்ளிக்கு தூக்கமே வரவில்லை. நடுநிசிக்குப் பிறகு மெள்ள அவனி சுந்தரியின் அறையை நோக்கிச் சென்றான். அவனுக்குக் காவலர் வழிவிடவே, உள்ளே சென்று பஞ்சணையை நோக்கினான் ஆவலுடன். முகத்தில் இருந்த ஆவல் மறைந்தது. பஞ்சணை போட்டது போட்டபடி இருந்தது, அறையில் யாரும் இல்லை.

Previous articleAvani Sundari Ch9 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch11 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here