Home Avani Sundari Avani Sundari Ch12 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch12 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

69
0
Avani Sundari Ch12 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch12 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch12 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 கரிகாலன் சத்திரம்

Avani Sundari Ch12 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

இளந்தத்தன் இல்லத்தில் தனது வீரர்களுடன் உணவை முடித்துக் கொண்ட மாவளத்தான், மீண்டும் ஆவூர் சாலையை நோக்கிச் சென்றானானாலும், அந்தச் சாலையை அடையும் முன்பே தனது புரவியைச் சற்று நிறுத்தி, அந்தச் சிற்றூரின் சிறு சாலையின் இரு பக்கங்களிலும் இருந்த தோப்புகளைக் கவனிக்கலானான்.

இளவரசன அப்படித் திடீரென புரவியை நிறுத்திவிட்டதைக் கண்ட வீரர்களும், அவனுக்குப் பின்னால் தங்கள் புரவிகளையும் நிறுத்திவிட்டாலும், அவர்களில் ஒருவன் மட்டும் இளவரசன் புரவியிருந்த இடம் நோக்கித் தனது புரவியைச் செலுத்தி, “இளவரசர் ஆணை என்ன?” என்று வினவினான்.

அவனுக்கு மாவளத்தான் உடனடியாகப் பதில் சொல்லாமல், பல விநாடிகள் தோப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டுப் பிறகு கேட்டான் வீரனை நோக்கி, “இந்த இரண்டு தோப்புகளில் எது அடர்த்தியாயிருக்கிறது? எதில் நாம் யாரும் அறியாமல் மறைந்திருக்க முடியும்?” என்று.

வீரன் முகத்தில் வியப்பு மாறியது. “நாம் எதற்காக மறைய வேண்டும்? யாரைக் கண்டு அஞ்ச வேண்டும்?” என்று, மீண்டும் கேள்வியொன்றைத் தொடுத்தான் இளவரசனை நோக்கி.

மாவளத்தான் அதற்கு நேரடியாகப் பதில் சொல்லவுமில்லை, இரண்டாம் முறை அவனை யோசனை கேட்கவுமில்லை. “உன்னுடன் இரண்டு வீரர்களை அழைத்துக் கொண்டு, இடது புறத்துத் தோப்பின் உள்ளே சென்று மரங்கள் அடர்த்தியாயிருக்கும் இடத்தில் புரவிகளுடன் மறைந்து நில். நான் மீதியிருக்கும் ஒரு வீரனுடன் வலது பக்கத் தோப்பில் மறைந்திருக்கிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்தவித சத்தமும் செய்ய வேண்டாம்” என்று உத்தரவிட்டு, அம் மூவரும் சென்றதும், தனித்து ‘நின்ற வீரனுடன் தான் வலது பக்கத்துச் சாலைக்குள் நுழைந்தான்.

அப்பொழுது மாலை மறைந்து மையிருள் சூழ்ந்த சமயம். அது சிற்றூர் ஆனபடியால் அதை நோக்கிச் சென்ற சிறு சாலையில் விளக்குகள் அடியோடு இல்லை. சற்றுத் தூரத்தே தெரிந்த சிற்றூர் முதல் வீதியின் நாலைந்து வீடுகளில் மட்டும் விளக்குகள் சிறிதாக மின்னின. பெரிய விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த மத்திய வீடு இளந்தத்தன் வீடு என்பதைப் புரிந்து கொண்ட மாவளத்தான், தனது அருகில் இருந்த வீரனை நோக்கி, “வீரா! எனது புரவியையும் உனது புரவியையும் அழைத்துக் கொண்டு, தோப்பின் உள்ளே சென்று விடு. நான் குரல் கொடுத்தாலொழிய வெளியே தலை காட்டாதே” என்று உத்தரவிட்டுத் தனது புரவியில் இருந்து கீழே குதித்தான்.

வீரன் எதையும் சிந்திக்கவில்லை. தானும் புரவியில் இருந்து குதித்து, இரு புரவிகளின் கடிவாளங்களையும் கையில் பிடித்துப் புரவிகளை இழுத்துக் கொண்டு தோப்புக்குள் சென்றுவிட்டான். அவன் போனதும் மாவளத்தான் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறி புலவர் வீட்டைக் கவனிக்கலானான்.

சிறிது நேரத்திற்குள் எல்லாம் புலவர் வீட்டு வாசல் அமர்க் களப்பட்டது. பத்துப் பன்னிரண்டு புரவிகள் அதன் எதிரே கொணர்ந்து நிறுத்தப்பட்டன. உள்ளேயிருந்து அரச தோரணையில் ஒரு வீரனும், அவனுக்குப் பின்னால் ஒரு பெண்ணும், இன்னும் ஒரு பூதாகாரமான மனிதனும் வந்தார்கள். அவர்கள் தூரத்தில் இருந்தபடியால் அவர்கள் உருவங்கள் திட்டமாகத் தெரியாவிட் பாலும் புலவர் வீட்டுப் பெரு வெளிச்சத்தின் காரணமாக மின்னிய ஆடையிலிருந்து நெடுங்கிள்ளியையும் பெரிய உடலிலிருந்து பூதலனையும் அடையாளங் கண்டுகொண்ட மாவளத்தானுக்கு பெண்ணுடையில் இருந்தது அவனி சுந்தரிதான் என்பதை ஊகிப் பது ஒரு பெரிய காரியமில்லையாதால், அந்த ஊகத்தின் விளைவாக, இளவரசன் சிந்தையில் ஏதேதோ எண்ணங்கள் சுழன்றன.

“நெடுங்கிள்ளியுடன் அவனி சுந்தரி எப்படிச் சேர்ந்தாள். இருவருந்தான் விரோதிகளாயிற்றே. ஒருவேளை மேலுக்கு விரோதிகளோ?” என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான். “அதெப்படி இருக்க முடியும்? நெடுங்கிள்ளியின் கொலைத் திட்டத்தில் இருந்து அண்ணனைக் காப்பாற்றியிருக்கிறாளே அவனி சுந்தரி” என்றும் வினவிக் கொண்டான்.

இத்தகைய கேள்விகளால் சித்தம் குழம்பியிருந்த அவனுக்கு உண்மை மெல்ல மெல்லப் புலப்படலாயிற்று. தூரத்தில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் அவன் சுந்தரியை அணுகிய வீரனொருவன், அவளுக்குப் பின்னால் கத்தியுடன் சென்றதையும், பிறகு அவன் பின்னாலிருந்த கைகளை முன்னுக்குக் கொண்டு வந்து மணிக்கட்டுக்களை சரிப்படுத்திக் கொண்டகையும். மரக்கின் மேலிருந்து எவ்வளவு பார்க்க முடிந்ததால், நெடுங்கிள்ளி அவளைப் பிடித்திருக்கிறான் என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான். அவள் சிறைப் பட்டிருந்தால் பூதலனும் சிறைப்பட்டிருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக்கொண்ட மாவளத்தான், மேலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த விநாடி பூதலனை நான்கு பேர்கள் மிகச் சிரமப்பட்டுத் தூக்கி ஒரு புரவி மீது உட்கார வைத்தார்கள். இரு வீரர் வாட்களை அவன் ஊட்டியை நோக்கி உருலி நீட்ட மற்றும் இருவர் அவன் பின் பக்கத்தில் இருந்த கைத்தளைகளை நிக்கி, முன் பக்கத்தில் கைகளைக் கொணர்ந்து நன்றாகக் கயிறு கொண்டு பிணைத்தார்கள். பின்பு அந்தக் கைகளில் புரவிகளின் கடிவாளக் கயிறுகளைத் திணித்தார்கள். பிறகு நெடுங்கிள்ளி தனது புரவி மீது தாவி ஏறியதும், அந்தக் கூட்டம் சாலையை நோக்கி வந்தது.

தோப்புகள் இருந்த இடத்துக்கு அந்த ஊர்வலம் வந்ததும். விவரம் மிக நன்றாகத் தெரிந்தது மாவளத்தானுக்கு. நெடுங் மிள்ளியின் வீரர்கள் பன்னிரண்டு பேர்கள் இருந்ததைத் தனது தோப்புக்கருகில் வந்ததும் கவனித்த மாவளத்தான், பூதலனைக் காக்க மட்டும் அவர்களில் ஆறு பேர் நியமிக்கப்பட்டிருந்ததையும், அவர்கள் முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாக அவனைச் சூழ்ந்து வந்ததையும், கவனித்ததும், “அப்பா! ஒருவனைக் காக்க எத்தனை பேர்? என்ன பயம் இவர்களுக்கு அவனிடம்” என்று வியந்து கொண்டது மட்டுமல்லாமல், “சோழர் வீரர் இவ்வளவுதானா?” என்று வெறுத்தும் கொண்டான். “சோழர் வீரத்தை வெறுப்பதற்கு என்ன இருக்கிறது? பெண்களையுந்தான் சிறை செய்யத் தொடங்கிவிட்டோமே” என்று, அதற்குச் சமாதானமும் சொல்லிக் கொண்டான், வீரனான மாவளத்தான்.

இந்த யோசனைகள் ஒருபுறம் மனதைத் தாக்கினாலும் அவன் நெடுங்கிள்ளியின் கூட்டத்தை அணு அணுவாக ஆராயவே தொடங்கினான். முதலில் தனது நான்கு வீரர்களைக் கொண்டு அந்தப் பன்னிரண்டு வீரர்களைத் தாக்க முடியுமானாலும், நெடுங்கிள்ளி அவனி சுந்தரியை ஆபத்துக்குள்ளாக்கித் தங்களைத் தடுத்து விட முடியும் என்பதை நிர்ணயித்துக் கொண்டான். அப்படியே நெடுங்கிள்ளியையும் மீறி அவனி சுந்தரியை விடுவித்தாலும். நெடுங்கிள்ளி செல்லும் வழி, அவன் நோக்கம், இவற்றை அறிவது கஷ்டம் என்ற யோசனையும் அவன் மனதில் எழுந்தது. ஆகவே. அந்த ஊர்வலம் சிற்றூர்ச் சாலையைத் தாண்டு மட்டும் காத்து இருந்து, பிறகு மரத்தில் இருந்து கீழே இறங்கித் தோப்புக்குள் இருந்த தனது புரவியைக் கொணரக் குரல் கொடுத்தான். என் புரவியைக் கொண்டு வந்ததும் எதிர்த் தோப்பில் இருந்த மற்ற வீரர்களும் வந்துவிடவே, அவர்களில் ஒருவனை நோக்கி. “சீவகா! நீ உனது மூன்று வீரர்களுடன் நெடுங்கிள்ளியைத் தொடர்ந்து செல்! அருகில் போகாதே! அவர்கள் கவனிக்காத அளவுக்கு எட்டவே சென்று கொண்டிரு. நான் சீக்கிரம் வரு கிறேன்” என்று உத்தரவிட்டுத் தன்னுடன் இருந்த வீரனுடன் மீண்டும் ஊருக்குள் சென்று, இளந்தத்தன் வீட்டு வாயிற் கதவை தட்டினான்.

இளந்தத்தனே கதவைத் திறந்தான். திறந்ததும் பிரமித்து நின்றான். “யார் மாவளத்தானா!” என்று மிதமிஞ்சிய வியப்பு கரலில் ஒலிக்க வினவினான்.

“ஆம்!” என்று ஒற்றைச் சொல்லில் பதிலை முடித்த மாவளத்தான், வீரனை வாயிலில் இருக்க உத்தரவிட்டுத் தான் மட்டுமே இளந்தத்துடன் உள்ளே சென்றான். –
உள்ளே சென்றதும், எந்தவிதத் தாமதமும் இன்றி “சரி சொல்லும்” என்றான் புலவரைக் கடுப்புடன் நோக்கி.

புலவர் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “எதை சொல்லச் சொல்கிறாய் மாவளத்தான்?” என்று வினவினார்.

“எதைச் சொல்ல வேண்டுமோ அதை” இளவரசன் சொற் களில் சினம் எல்லையைத் தொட்டு நின்றது.

புலவர் சில விநாடிகள் யோசித்தார். பிறகு குழம்பிய மனதுடன் கேட்டார், “நீ எப்படி ஊகித்தாய் மாவளத்தான்?” என்று.

“புலவரே! மாவளத்தானை இதுவரை யாருமே ஏமாற்றியது கிடையாது” என்று அறிவித்தான், புகாரின் இளவல்.

“ஆம்!”

“நீரும் ஏமாற்ற முடியாது.”

“அது தெரிகிறது, நீ இங்கு மீண்டும் வந்ததில் இருந்து” என்ற புலவர், “நீ ஏமாந்து சென்றுவிட்டாய் என்றுதான் நினைத் தேன், நீ சந்தேகப்பட எந்தக் காரணத்தையும் அளிக்கவில்லை நான்.’’ அளித்திருந்தால் உடனே பிணமாயிருப்பேன். உன்னைச் சந்தித்த சாலை முகப்பிலேயே என் நடவடிக்கைகளைக் கண் காணிக்க நெடுங்கிள்ளி ஒரு வீரனை அனுப்பியிருந்தான். நீ இங்கு வந்து உணவு அருந்தும்போது கூட பக்கத்து அறையில் இரு வீரர்கள் இருந்தார்கள், இரு வாட்களுடன்” என்று விளக்கினார் புலவர்.
அந்த விளக்கத்தைக் கேட்ட மாவளத்தான், அத்தனை கோபத்திலும் மெல்ல நகைத்தான். “புலவரே! இது சிற்றூர், தெரியும் அல்லவா?” என்று ஏதோ கேட்டான்.

எதற்காக அதை இளவரசன் கேட்கிறான் என்பதை அறியாமலே, “ஆம்!” என்று புலவர் பதில் சொன்னார்.

சிற்றூர்களில், மாலை நேரங்களில், ஒன்று பெண்கள் வெளிக் குளத்தில் இருந்து குடங்களில் நீர் கொண்டு செல்வார்கள் இல்லங்களுக்கு! அல்லது மறையவர் மாலைக் கடன்களை முடித்துக் கொண்டு மறையோதிச் செல்வார்கள். ஆனால், நான் மாகளில் வந்தபோது அத்தகைய சோழ நாட்டுக் கிராமக் காட்சி எதுவும் காணோம். நீர் மட்டும் சாலையில் குத்துக்கல் போல் நின்றிருந்தீர். அது மட்டுமல்ல, என்னைத் தடுத்து அழைத்தும் வந்தீர் இந்த வீட்டுக்கு. இங்கு வந்தபோது தெருவில் குழந்தைகள் விளையாடவில்லை. புதிதாக எவன் வந்தாலும் யார் வருகிறார்கள் என்று எட் டிப் பார்க்கும் பெண்கள் தலைகளைக் காணோம். இந்தச் சிறு வீதி அரவம் ஏதுமின்றிக் கிடந்தது. உடனடியாக ஊகித்துக் கொண்டேன், இங்கு ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கிறது என்று. ஆகையால் நீராடி உணவு உண்டு உடனடியாகச் சென்று விட்டேன்…” என்று விளக்கினான் மாவளத்தான்.

“ஆனால் சொல்லவில்லை” என்று குறுக்கிட்டார் புலவர்,

“ஆம் சொல்லவில்லை. நீர் எங்களை ஊருக்குள் அழைத்து வந்த போது சாலையைக் கவனித்தேன். எனக்கு முன்னால் புரவிக் குளம்புகள் பல பதிந்து கிடந்தன. ஆகையால் யாரோ வீரர்கள் கிராமத்தில் நுழைந்திருக்கிறார்கள் என்று தீர்மானித்தேன். உமது தெருவின் மவுனத்தைக் கண்டதும் அது யார் என்பதும் விளங்கி விட்டது” என்று விளக்கிய மாவளத்தான், “சரி நேரமில்லை தாமதிப்பதற்கு. சற்று நேரத்திற்கு முன்பு நெடுங்கிள்ளி அவனி சுந்தரியையும் பூதலனையும் சிறை செய்து கொண்டு சென்றதைத் தோப்பில் ஒளிந்திருந்து பார்த்தேன். உமக்கு ஏதாவது விவரம் தெரிந்தால் அறிய வந்தேன்” என்றும் கூறிவிட்டு, கேள்வி கேட்கும் தோரணையில் தனது புருவங்களைச் சற்றே உயர்த்தினான்.

புலவர் அவனைக் கூர்ந்து நோக்கினார். சில விநாடிகள். பிறகு துன்பப் பெருமூச்சு விட்டு கூறத் தொடங்கினார். “நெடுங்கிள்ளி இன்று பகலில் இங்கு வந்தான், கன்னரத்து இளவரசியுடனும் அந்த பூதத்துடனும். அவர்களைப் பாதுகாக்கப் பின்கட்டில் தனது வீரர்கள் அனைவரையுமே நிற்க வைத்திருந்தான். அவர்கள் நீராட்டம், உணவு எல்லாமே பின்கட்டில் நடத்தப்பட்டது. பிறகு அவன் வீரர்கள் இருவர் சென்று இரண்டு வீதிகளிலும் உள்ள வீட்டில் மக்களை வெளியில் கிளம்ப வேண்டாம் என்று எச்சரித்து வந்தார்கள். என்னை மட்டும் அவன் மாலையில் அழைத்து, இந்த ஊர்ச் சாலை முகப்பில் நிற்கும்படியும், நலங்கிள்ளியோ அவனைச் சேர்ந்தவர் யார் வந்தாலும் இங்கு அழைத்து வரும்படியும், முடிந்தால் அப்படியே திருப்பி அனுப்பும்படியும் கூறினான். எனக்குத் திருப்பி அனுப்ப இஷ்டமில்லாதபடியால், உன்னை அழைத்து வந்தேன். ஏதாவது ஒரு சாக்கு கிடைத்தால், நெடுங்கிள்ளியை மடக்கலாம் என்று பார்த்தேன். முடியவில்லை. நம் இருவர் மீதும் ஒவ்வொரு விநாடியும் கண்காணிப்பு இருந்தது. உன் உயிருக்கு அபாயமில்லாமல் உன்னை அனுப்பியதே நிரம்பப் பிரயத்தனமாயிற்று! “

இதைக் கேட்ட மாவளத்தான் சிந்தனையில் ஆழ்ந்தான். “ஏழைப் புலவர் என்ன செய்வார்?” என்று சற்று இரைந்தும் சொன்னான்.

“நான் ஏழைப் புலவனல்ல” என்றார் இளந்தத்தன் வெறுப்புடன்.

“பணக்காரரா?”

“ஆம்!”

“எப்பொழுது பணக்காரர் ஆனீர்…?”

“சற்று முன்புதான். இதோ பார்” என்று கூடத்தில் சிதறிக் கிடந்த பொன் நாணயங்களைக் காட்டினார்.

இளவரசனுக்கு விஷயம் புரிந்தது. மகிழ்ச்சியுடன் தலையை அசைத்தான். “பொற்கிழியை விட்டெறிந்தும், நெடுங்கிள்ளி உம்மை உயிருடன் விட்டது உமது அதிர்ஷ்ட ம் புலவரே! * என்று கூறினான்.

புலவர் எவ்வித மகிழ்ச்சியையும் காட்டவில்லை. “இந்தப் பொற்கிழியின் நாணயங்கள் பத்திரமாயிருக்கும். அதற்கு உபயோகம் ஏற்படும் நாள் அதிகத் தூரத்தில் இல்லை” என்று கடுப்புடன் கூறிய புலவர், “சீக்கிரம் புறப்படு. நாளைக் காலை நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை அடைந்துவிடுவான். ஆகையால் நீ எது செய்தாலும் இன்றிரவே செய்ய வேண்டும். வேகமாகக் கரிகாலன் சத்திரத்துக்குப் போ!” என்றும் சொன்னார்.
“என்ன அங்கே …?”

“இங்கிருந்து ஆவூருக்கு இடையில் தங்கவோ இளைப் பாறவோ வேறு இடம் கிடையாது. இன்று நள்ளிரவில் நீ அங்குச் சந்திக்கலாம் நெடுங்கிள்ளியை.”

இதைக் கேட்ட மாவளத்தான் புலவருக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டான் அந்த சிற்றூரில் இருந்து. புலவர் ஊகம் சரியாக இருந்தது. கரிகாலன் சத்திரத்தில் நெடுங்கிள்ளி தங்கியிருந்தான். ஆனால் அவனி சுந்தரியை நெருங்குவது அத்தனை சுலபமாயில்கை ஒரு அறையில் அவளை வைத்துப் பூட்டியிருந்தான் நெடுங்கிள்ளி. அறைக்கு வெளியே பலமான காவலையும் வைத்திருந்தான்.

Previous articleAvani Sundari Ch11 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch13 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here