Home Avani Sundari Avani Sundari Ch13 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch13 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

61
0
Avani Sundari Ch13 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch13 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch13 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 விடை கிடைத்தது

Avani Sundari Ch13 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

ஆவூர்ச் சாலையில் இருந்து கரிகாலன் சத்திரம், வழிப் போக்கர்கள் தங்குவதற்காக ஏற்பட்டதாயிருந்தாலும், கரிகால் பெருவளத்தான் காலத்திலேயே கட்டப்பட்டிருந்ததன் விளை வாக, அவன் பெயரை அது தாங்கி நின்றாலும், திருமாவளவன் பெயர் நிலைத்த அளவுக்கு அது உரம் பெற்றதாயில்லை. காலத்தின் போக்கு அதன் சுவர்களில் பல இடங்களில் வெடிப்புக் கொடுத்திருந்தது. காரைகள் பல இடங்களில் உதிர்ந்து கிடந்தன. நெடுங் கிள்ளியைப் போன்ற ஒரு மன்னன் தங்குவதற்கு அது சரியான இடமல்லவாயினும் சாலையிலிருந்து தள்ளி, சோலையின் உட்புறத்தில் இருந்தபடியால், அதிலேயே அன்றிரவு தங்கினான் நெடுங் கிள்ளி. தங்கியது மட்டுமின்றி, சோலை முகப்பில் இரண்டு காவலரையும் வைத்திருந்தான் சாலையைக் கண்காணிக்க.

இருப்பினும், அவன் கண்காணிப்புப் பயன் அளிக்கவில்லை. மாவளத்தான் அந்த சத்திரத்தைப் பற்றி ஏற்கனவே சரியாக அறிந்திருந்தபடியால், அது நெருங்கியதும், புரவிகளை மெதுவாகவும் குளம்பு ஒலிகள் நீண்ட தூரம் கேட்காமலும் நடத்தும்படி தனது வீரர்களுக்குக் கட்டளையிட்டான், தவிர திடீரெனச் சாலையின் பக்கவாட்டில் புகுந்து சோலைக்குள்ளேயே மறைந்தும் விட்டான் வீரர்களுடன். சத்திரம் சிறிது தூரம் இருக்கையிலேபோ தனது வீரர்களைச் சோலையில் நிறுத்திவிட்டு, “இங்கேயே நில்லுங்கள், ஏதாவது உதவி தேவையானால் குரல் கொடுக்கிறேன். அல்லது பந்தம் கிடைத்தால் ஆட்டிச் சைகை செய்கிறேன். உடனடியாக விரைந்து வாருங்கள்” என்று உத்தரவிட்டுத் தனது புரவியை மட்டும் நிதானமாகச் செலுத்திக் கொண்டு, சத்திரத்தின் அருகில் வந்தான். அங்கிருந்த நெருக்கமான மரங்கள் ஒன்றின் மறைவில் சிறிது நேரம் குதிரை மீதே அமர்ந்திருந்துவிட்டுக் கீழே இறங்கி பூனைபோல் அடிமேல் அடி வைத்துச் சத்திரத்தை நோக்கிச் சென்றான்.

சத்திரத்தின் ஓர்புறம் பல மரங்கள் இருந்ததாலும், சத்திரத்தின் முன் தாழ்வரையிலும் பக்கத்து அறைகளிலும் விளக்குகள் தெரிந்ததாலும், மரங்களின் மறைவில் மெள்ளச் சென்று, பக்கவாட்டு அறையை ஒட்டி நின்ற ஒரு மரத்தின் மீது ஏறி உள்ளே கவனித்தான், அறை விளக்கொளியில் அவனி சுந்தரி மிகுந்த யோசனையுடன் உலாவிக் கொண்டிருந்ததையும், அவள் தனித்தே இருந்ததையும் கவனித்த மாவளத்தான், நெடுங்கிள்ளி காரணமாகவே பூதலனை அவளிடம் இருந்து பிரித்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான். பிறகு மெள்ள அந்த மரக்கிளையில் ஊர்ந்து சென்று, அறைச் சாளரத்தை அணுகி, மிக மெள்ள அழைத்தான் அரசகுமாரி” என்று.

அரசகுமாரி அறைக்குள் உலாவுவதை நிறுத்திச் சட்டென்று அழைப்பு வந்த திசையை நோக்கினாள். ஆனாலும் அறைக்குள்ளே விளக்கிருந்த காரணத்தால் வெளியே இருட்டிலிருந்த மாவளத் தானைப் பார்க்க அவளால் முடியாமல் மிரண்டு விழித்தாள். இங்குதான் மரக்கிளையில் இருக்கிறேன்” என்று மீண்டும் மெதுவாகச் சொற்களை உதிர்த்தான் மாவளத்தான். அரசகுமாரி சாளரத்தை அணுகி வெளியேயிருந்த மரக்கிளையை சற்றுச் சிரமப் பட்டு நோக்கியதும், மாவளத்தான் இருந்த இடத்தைக் கண்டு பிடித்துக்கொண்டதும், அவள் வியப்பு அதிகமாயிற்று. அதைவிட ஒருபடி அச்சம் அதிகமாகவே சொன்னாள், “சென்று விடுங்கள். நெடுங்கிள்ளி பார்த்தால் உங்களைக் கொன்றுவிடுவான்” என்று.

அதைப் பற்றி மாவளத்தான் கவலைப்பட்டதாகத் தெரிய வில்லை. “வெளியே வரமுடியுமா?” என்று வினவினான் அவன் கிசுகிசுவென்று.

“முடியாது. அறை பூட்டப்பட்டிருக்கிறது” என்றாள் அவளும் ரகசியமாக.

“பூதலன் எங்கே?” என்று வினவினான் மாவளத்தான்.

“எதிர் அறையில்” என்றாள் அவள்.

“சரி, பொறுங்கள். மீண்டும் வருகிறேன்” என்று சொன்ன மாவளத்தான், கிளையில் இருந்து பூனையைத் தோற்கடிக்கும் நிசப்தத்துடன் இறங்கினான். பிறகு மெள்ள சத்திரத்தின் பின்புற மாக நடந்து சென்று காவலைச் சோதித்தான். காவல் அங்கு இருந்தாலும், சத்திரத்தை ஒட்டியே இருந்தபடியால் சற்றுச் சுற்றிச் சென்று, அவனி சுந்தரியின் எதிர் அறையின் வெளிப் புறத்தை அடைந்தான். அங்கும் ஒரு மரம் துணை புரியவே அதன் மேலும் ஏறினான். ஆனாலும், கிளை அறைச் சாளரத்தை நெருங் காததால் சற்று எட்ட இருந்தே அறையைக் கவனிக்க முடிந்தது. அங்கு, பூதலனின் பூதாகரமான உருவம் கைகால்கள் பிணைக்கப் பட்டு அறையின் தரையில் உருண்டு கிடந்தது. அந்த நிலையில் எதையும் தான் நேராகச் செய்ய முடியாது என்றாலும், தனது கச்சையில் இருந்த குறுவாள் ஒன்றை எடுத்துக் குறிபார்த்து சாளரத்தின் சின்னஞ்சிறு மரக்கட்டைகளுக்கு இடையே எறிந்தான்.
குறுவாளும் கட்டைகளைத் தொடாமல் பூதலன் உடல் மீது மெத்தன வீழ்ந்தது.

பூதலன் சட்டென்று எழுந்திருக்க முயன்றும், முடியாததால் மெல்லத் தன் மீது விழுந்தது எதுவென்று பார்த்தாள். கத்தி சான்பதையறிந்ததும், அவன் முகத்தில் சற்று நேரம் வியப்பும் பிறகு மகிழ்ச்சியும் உலாவலாயிற்று. மெதுவாக நெளிந்து நரண்டு, கத்தியை முதலில் தரையில் கிடத்தினான். அடுத்தபடி அவன் பற்கள் அந்தக் கத்தியின் பிடியைக் கெட்டியாகக் கடித்துக் கொண்டன. மெள்ளத் திமிறி உட்கார்ந்து கொண்ட பூதலன், அந்தக் கத்தியின் கூர்மையான பாகத்தைத் தன் கைக்கட்டுகளின் மேல் செலுத்தி, வாயாலேயே கயிறுகளை ராவிக் கைகளை விடு வித்துக் கொண்டான். கைகள் விடுதலையடைந்ததும், கால்களை விடுவித்துக் கொள்வது ஒரு பொருட்டாயில்லை அவனுக்கு. இப்படிக் கால்கள் சுவாதீனப்பட்டதால், கத்தியுடன் எழுந்து, பூதம் போல் நின்ற பூதலன், கைகளை அசைத்தும், கால்களை உதறிக் கொண்டும் தன்னை சரிசெய்து கொண்டான், இரண்டே விநாடி களில். பிறகு சாளரக் கட்டைகளைத் தனது பெரும் கைகளால் அசைக்க ஆரம்பித்தான். ஏற்கனவே கிலமாயிருந்த கட்டிடப் பக்கங்கள், அவன் அசுர பலத்துக்கு இணங்கியதால் சாளரம் வெகு சீக்கிரம் தனக்கும் கட்டிடத்துக்கும் இருந்த பந்தத்தை உதறிவிட்டு உள்ளே படுத்துக் கொள்ளவே, அதன் மீது ஏறினான் பூதலன். மரத்தில் இருந்த மாவளத்தான் மெள்ள “உஸ்” என்று எச்சரிக்கை ஒலி கிளப்பிவிட்டு, “அந்தக் கயிறுகளையும் எடுத்துக் கொள்” என்று மெள்ளக் கூறினான்.

பூதலன் ஏதும் பேசவில்லை. மீண்டும் அறைக்குள் இறங்கிக் கயிறுகளை எடுத்துக்கொண்டு, சாளரத்தில் இருந்து கீழே அரவம் சிறிதும் செய்யாமல் சுவரைப் பிடித்துக்கொண்டு சரிந்து இறங்கினான். மாவளத்தானும், மரத்தில் இருந்து இறங்கி, அவனைத் தொட்டு காதோடுகாதாக, “சத்தம் செய்யாமல் வா” என்று மரங்களின் மறைவில் நடந்து, அவனி சுந்தரியின் அறைக்கு வந்து. அந்த மரக்கிளையையும் சாளரத்தையும் பூதலனுக்குச் சுட்டி காட்டினான். பிறகு அங்கிருந்து தனது புரவியையும் சுட்டம் காட்டி, “இதில் அரசகுமாரி வரலாம்” என்று கூறிவிட்டுக் தனது வீரர் மறைந்திருந்த இடத்தையும் கையால் சுட்டிக் காட்டினான். அறிந்து கொண்டதற்கு அறிகுறியாகப் பூதலன் தலையசைக்கவே, மாவளத்தான் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

பூதலன் மிகுந்த திறமையுடன் தனக்கிட்ட பணியை நிறை வேற்றினான். கையில் இருந்த கயிறுகளை ஒன்றாகப் பிணைத்துக் கொண்டு மரக்கிளையில் ஊர்ந்தான். பிறகு அவனி சுந்தரி இருந்த அறை சாளரத்தை மரத்தில் ஊர்ந்த வண்ணமே அசைத்து எடுத்தான். பிறகு கயிற்றின் ஒரு நுனியை மரக்கிளையில் கட்டி மீதியை அறைக்குள் எறிந்தான். அவனி சுந்தரி அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதும், மெள்ள மெள்ள கயிற்றை இழுத்த பூதலன், அவளை லேசாக வெளியே ஊஞ்சலாட வைத்துத் தரை யில் இறக்கினான். பிறகு தானும் இறங்கி, அவளை மாவளத்தான் புரவியில் ஏற்றினான். அடுத்த சில விநாடிகளில் பூதலனையும் அரசு குமாரியையும் கொண்ட நான்கு புரவிகள் புகாரை நோக்கி நகர்ந்தன. புரவிகளைக் கொடுத்த மாவளத்தானின் இரு வீரர்கள் சோலைப் பகுதிகளின் மறைவில் நடந்து மறைந்தனர். இந்த ஊர்வலம் மறுநாள் புகாருக்குள் புகுந்து புலவர் மாளிகைக்கு வந்தது.

புலவர் அவர்களைச் சற்றுக் கவலையுடனே வரவேற்றார். பிறகு அரசகுமாரியை நோக்கிச் சொன்னார், “அரசகுமாரி! நீ வந்த காரியம் நிறைவேறிவிட்டது” என்று.

அவனி சுந்தரியின் கண்களில் நெருப்புப்பொறி பறந்தது. “எந்தக் காரியம் புலவரே?” என்று வினவினாள்.

“சோழ நாட்டைத் துண்டாடும் காரியம்” என்றார் புலவர்.

“என்று கிள்ளிவளவர் கொல்லப்பட்டாரோ, அன்றே பிளந்துவிட்டது” என்றாள் அவனி சுந்தரி, கோபமும் வெறுப்பும் கலந்த குரலில்.

“அப்பொழுது பிரிந்தது மண்ணாசையால்; இப்பொழுது பிரிந்தது பெண்ணாசையால்” என்றார் புலவர்.

அவனி சுந்தரியின் கோப முகத்தில் ஏளனப் புன்முறுவலின் சாயையும் விரிந்தது.” என்மீது நெடுங்கிள்ளி ஆசைப்படுகிறானா?” என்று அலட்சியமாகக் கேட்டாள் அவள்.

“இல்லாவிட்டால், உன்னைத் தூக்கிச் செல்வானேன்?”

“நீங்கள் எதற்காகச் சிறை செய்தீர்கள் என்னை?”

“நாட்டைக் காக்க”

“என்னைச் சிறை செய்தால் நாடு காக்கப்படுமா?”

“அப்படித்தான் நினைத்தோம்”

“இப்பொழுதுதான் வந்துவிட்டேனே. நாட்டைக் காப்பாற் ‘றுங்களேன்” இதைச் சொன்ன அவனி சுந்தரி மெல்ல நகைத்தாள்.

புலவர் ஏதும் பதில் சொல்லவில்லை அவளுக்கு. மாவளத்தானை ஏறெடுத்து நோக்கினார். நடந்ததை மாவளத்தான் கூற நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டு, புலவர், “இனி இந்த நாட்டில் ரத்தம் ஓடும். போரைத் தவிர்க்க முடியாது” என்று கூறினார்.

மாவளத்தானுக்கு ஏதும் புரியவில்லை. “ஏன் புலவரே! அரச குமாரியை மீட்டுவிட்டோம். இனி எதற்காகப் போர்?” என்று வினவினான்.

“மாவளத்தான்…!” என்ற புலவரின் குரலில் வருத்தம் “நிரம்பிக் கிடந்தது.

“சோழ நாட்டில் சில முறைகள் உண்டு”

“உம்”

“தாயாதியாயிருந்தாலும், மானம் என்று குறுக்கிடும் போது சோழ மன்னர் போர் தொடுப்பார்கள்,”

“நெடுங்கிள்ளி உங்கள் அண்ணனைக் கொன்றிருக்கிறான். அது மட்டுமல்ல, உங்கள் தலைநகருக்கே வந்து, உங்களால் சிறை செய்யப்பட்ட அரசகுமாரியை விடுவித்து அழைத்துச் சென்று விட்டான். இதைவிடப் புகாருக்கு மானக்கேடு ஏதுமில்லை. முதல் காரணத்துக்காகவே போர் நிகழ்ந்திருக்கும். இரண்டாவது காரணத்துக்குப் போர் மிக நிச்சயம். பெண் குறுக்கிடும் போதெல்லாம் போர்தான். புராணங்களிலும் அப்படித்தான்! வரலாற்றிலும் அப்படித்தான்” இதை மிகுந்த வருத்தத்துடன் கூறினார் புலவர்.

மாவளத்தான் புலவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை எப்படியும் போரைத் தவிர்க்கலாம் என்றே எண்ணினான். அந்த எண்ணத்துடன் அவனி சுந்தரியைப் புலவர் மாளிகையில் விட்டுத் தான் மட்டும் அரண்மனைக்குச் சென்று அண்ணனைச் சந்தித்தான். அவன் வந்த சமயத்தில், முதன் முதலாக அவனும் புலவரும் சந்தித்த அதே அந்தரங்க அறையிலேயே நலங்கிள்ளி உட்கார்ந் திருந்தான், தீவிரமான சிந்தனையுடன். அவன் சிந்தனையை மாவ எத்தான் பிரவேசம் கலைக்கவே, தலையைத் தூக்கிய நலங்கிள்ளி, *சென்ற பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டாய் தம்பி” என்று கூறினான்.

அந்தக் கூற்று மாவளத்தானுக்கு எந்தவித வியப்பையும் அளிக்கவில்லை. தான் அரசகுமாரியுடன் வந்திருப்பதை புகாரின் வீரர்கள் உடனடியாக அரசனுக்கு அறிவித்திருப்பார்கள் என் பதை அவன் உணர்ந்தே இருந்தான். “ஆம் அண்ணா! முடித்து விட்டேன் ஒருவிதமாக உங்கள் ஆணையை. ஆனால், அது வெற்றி கரமானதா அல்லவாவென்பதை என்னால் சொல்ல இயலாது” என்றான்.

புகாரின் மன்னனிடமிருந்து வந்த பதில் அவனைத் திகைக்க வைத்தது. “வெற்றிதான் தம்பி. ஆனால், இந்த வெற்றி போரை முடிக்கும் வெற்றி அல்ல; போரைத் தொடங்கும் வெற்றி” என்றான் நலங்கிள்ளி, மனம் சிதைந்த குரலில்.
போர் என்றால் எப்பொழுதும் குதூகலப்படும் . அண்ணன் குரலில், அன்று துக்கம் தொனிப்பதைக் கண்ட மாவளத்தான், கேட்டான், “புலவர் உன்னையும் சரிப்படுத்தி விட்டாரா?” என்று.

“புலவர் சரிப்படுத்த எதுவும் இல்லை. சம்பிரதாயம் சரிப் படுத்துகிறது” என்றான் நலங்கிள்ளி.

“சம்பிரதாயத்தை உடைத்தால்?’

“சிலவற்றை உடைக்க முடியாது”

“ஏன்?”

“தன்மானம் அதில் சம்பந்தப்படுவதால்”

ஆகையால்?”

“போருக்குச் சித்தம் செய்”

“படைகளைச் சன்னத்தப்படுத்தவா?”

“ஆம். உடனே.”

“நீங்கள்?”

“நான் வருவதற்கு இல்லை, பதினாறாவது நாள் சடங்கு முடியும் வரை.”

“அப்பொழுது?”
“நீ நடத்திச் செல் படையை”

“எதற்கு? எங்கு?

“ஆவூருக்கு”

இதைக் கேட்ட மாவளத்தான் திகைத்தான். “நெடுங்கிள்ளி ஆவூரில்தான் அடைபட்டுக் கிடப்பான் என்பது என்ன நிச்சயம் ஏன் அவன் உறையூர் செல்லக்கூடாது?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான், ஆனால் விடை கிடைத்தது, இரண்பே நாளில்.

Previous articleAvani Sundari Ch12 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch14 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here