Home Avani Sundari Avani Sundari Ch3 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch3 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

63
0
Avani Sundari Ch3 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch3 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch3 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 குழல் சொன்ன கதை

Avani Sundari Ch3 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

சுமார் ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் உள்ள பெரிய சரீரத்துடனும், அதிலிருந்த கடுமையான கன்னக் கதுப்புகளும்னும், அந்தக் கதுப்புகள் வரை ஏறி வளைந்திருந்த அடர்ந்த கரிய மீசையுடனும், சிவந்த பெரும் கண்களுடனும், மானிட அரக்கன் போல் காட்சியளித்த பூதலன், அவனது உலக்கைக் கைகளில் தாங்கி வந்தது வெறும் சிறுவன் சடலம் அல்ல என்றாலும், நடு வயதைத் தாண்டியவனுடைய பலமான உடல் என்றாலும், பூதலன் ஒரு குழந்தையைத் தாய் தூக்குவது போல வெகு லாவகமாகவும் எந்தவிதக் கஷ்டமின்றியும், மிகுந்த எச்சரிக்கையுடனும் பயபக்தியுடனேயே தூக்கி வந்தான். அவன் அடிமேலடி எடுத்து வைத்து மெள்ள அந்த உருவத்தை அந்த மாமணி மண்டபத்தின் ஒரு புறத்தில் இருந்த நீண்ட மஞ்சம் ஒன்றில் மிக லேசாகக் கிடத்திவிட்டு, சற்றுத் தள்ளி அந்த உடலுக்குத் தலைவணங்கி நின்றான்.

அந்தச் சடலத்தை அவன் தூக்கிவந்த போதே அதன் முகத் தில் பட்டுவிட்ட ஒளியால் அது யார் என்பதைப் புரிந்து கொண்ட புலவர் கோவூர் கிழாரும், சோழ இளவல் நலங்கிள்ளியும் பிரமை பிடித்து சில விநாடிகள் நின்றார்கள் என்றாலும், மஞ்சத்தில் அது கிடத்தப்பட்டவுடன் அருகே சென்று, இருவரும் மண்டியிட்டுத் தலைவணங்கினார்கள். பின்பு புலவர் கோவூர் கிழார் நீண்ட நேரம் ஏதோ வாயில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ஆனால், நலங்கிள்ளி மட்டும் சில விநாடிகளில் எழுந்திருந்து, அந்த சடலத்தை. கூர்ந்து ஆராய்ந்தான்.

அதன் தலையில் இருந்த நவரத்தினக் கிரீடம் அப்பொழுதும் பெரும் சோபையைக் கிளப்பியிருந்தது. நடுத்தர வயதைச் சற்றே தாண்டிய அந்த சடலத்தின் தலைக்குழல்கள் கலையாமல் மிக ஒழுங்காகக் கன்னங்களில் விழுந்து கிடந்தது. மூடிக் கிடந்த கண்களையுடைய முகத்திலும் கம்பீரம் சிறிதும் குறையவில்லை. இடையே செறுகப்பட்டிருந்த குறுவாளும், கச்சையில் அப்பொழுதும், தொங்கிக் கொண்டிருந்த பெருவாளும், அப்பொழுதும் அந்த உடலுக்கு உடையவன் போருக்குச் சீறி எழுவானோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியது. நீண்ட கைகளில் ஒன்று பஞ்சணையின் ஒரு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கால்கள் இரண்டையும் ஒழுங்காகவே இருக்கும்படி பூதலன் படுக்கவிட்டு இருந்ததால் அந்த உடலுக்கு உடையவன் நித்திரையில் ஆழ்ந்திருப்பது போன்ற பிரமையே அளித்தது.

நலங்கிள்ளி அந்த உருவத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்த சமயத்தில், மண்டியிட்ட நிலையில் இருந்து மெள்ள எழுந்த புலவர் கோவூர்கிழார், அவனி சுந்தரியைத் திரும்பி நோக்கினார். சினம் வீசிய கண்களுடன். “இதற்கு என்ன பொருள்?” என்ற சீற்றம் குரலிலும் தொனிக்கக் கேட்டார்.

அவனி சுந்தரியின் கண்களில் எந்தவித உணர்ச்சியும் தெரிய வில்லை. கோவூர் கிழாரின் கோபம் அவள் உள்ளத்தைத் தினையளவும் தொட்டதாகக்கூடத் தெரியவில்லை. அவள் சர்வசாதாரணமான குரலில் பதில் கூறினாள், “புலவர் பெருமானுக்குத் தெரியாத பொருள் எனக்கென்ன தெரியப்போகிறது?” என்று.

புலவர் பெருமான் மீண்டும் ஒருமுறை மஞ்சத்தையும் நோக்கி அவனி சுந்தரியையும் நோக்கினார். “இது யார் தெரியுமா, உனக்கு?” என்று வினவினார்.

அவனி சுந்தரியின் அச்சமற்ற கண்கள் கிழாரின் கருமைக் கண்களை நிர்ப்பயமாகச் சந்தித்தன. “தெரியாமலா, உடலை இத்தனை பக்குவப்படுத்திப் புலவர் இல்லத்துக் கொண்டு வந்தேன்?” என்று பதில் கேள்வியும் கேட்டாள்.

புலவருக்கு யாது சொல்வது என்று தெரியாததால் சில விநாடிகள் குழம்பிவிட்டு, “இவன்… இவன்…” என்று இரு முறை தடுமாறினார்.

“புகாரின் மன்னர் கிள்ளிவளவன்…” இதை மெதுவாகவும் மரியாதையாகவும் சொன்னாள் அவனி சுந்தரி.

“இதன் விளைவு தெரியுமா உனக்கு?” என்று புலவர் மீண்டும் கேட்டபோது, விளைவை நினைத்து அவர் உடல் லேசாக நடுங்கியது.

வம்பை முன்பே சொல்லி விட்டேனே… இன்று. அதோ. படுத்துக் கிடப்பவருக்குப் பதில், இவர் புகாரின் மன்னன் ஆகிறார்” என்று நலங்கிள்ளியை நோக்கித் தன் கண்களை திருப்பிவிட்டு, புலவரை மறுபடியும் நோக்கி, “இன்றுடன் சோழ நாடு இரண்டாகப் பிளக்கிறது” என்றும் தெரிவித்தாள் அவனி சுந்தரி,

“ஒவ்வொரு நாட்டு மன்னன் இறக்கும்போதும் நாடு இரண்டு டாகப் பிளக்கிறதா?” என்று கேட்டார் புலவர்.
“பிளப்பதில்லை புலவரே. ஒரு நாட்டின் இரு பகுதிகளை ஆளும், இரு மன்னர்கள் மனம் ஒன்றுபட்டு இருக்கும் வரை நாடு. பிளப்பதில்லை. இருவரும் ஒருவர் பகுதியை இன்னொருவர் விழுங்க முயலாதிருக்கும் வரையில் அது ஒரே நாடாகத்தான் இருக்கும். பிளவு மனதைப் பொறுத்தது; ஆசையைப் பொறுத்தது” என்று உறுதியான சொற்களை உதிர்த்தாள் அவனி சுந்தரி.

அதுவரை அமைதியாக நின்றிருந்த நலங்கிள்ளி சுடும் கண்களை அந்தச் சுந்தரி மீது பாயவிட்டான். “யார் பகுதியை யார் விழுங்கப் பார்க்கிறார்கள்? யார் மனதில் மண்ணாசை மண்டிக் கிடக்கிறது?” என்று வினவவும் செய்தான், சினம் மண்டிக்கிடந்த சொற்களால்.

“சோழ மன்னரே…” என்று பதில் சொல்லத் தொடங்கிய அவனி சுந்தரியை; இடையே வெகு உக்கிரத்துடன் தடுத்த நலங் கிள்ளி. “அப்படி அழைக்காதே என்னை” என்று சீறினான்.

அவனி சுந்தரி அவன் உக்கிரத்தைக்கண்டு அஞ்சாமல் அஞ்சன விழிகளை அவன் விழிகளுடன் நன்றாகக் கலக்க விட்டாள். “உங்கள் அண்ணன், அதோ மஞ்சத்தில் கிடக்கிறாரே கிள்ளிவளவன், அவர் சடலத்தைக் கண்டதும் நீங்கள் பாமரர்கள் போல் தேம்பித் தேம்பி அழவில்லை. கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர்கூட உதிர்க்கவில்லை. உள்ளே குமுறுகிறது எரிமலை. ஆனால் அது வெடிக்கவில்லை. இதுதான் சுத்த வீரர்களுக்கு அடையாளம். அப்படிச் சுத்த வீரரான நீங்கள் உள்ள நிலையை ஒப்புக் கொள்ள மறுப்பதால் பயனில்லை. பிள்ளையில்லா மன்னன் இறக்கும் போது. அடுத்த இளவல் மன்னர் ஆகிறார். இல்லாவிட்டால்…” பேச்சை அவள் முடிக்கவில்லை.

“இல்லாவிட்டால்?” சந்தேகத்துடன் எழுந்தது நலங்கிள்ளியின் கேள்வி.

அவள் அளித்த பதில் நலங்கிள்ளியை மட்டுமின்றி கோவூர் கிழாரையம் அயர வைத்தது. “உங்கள் அண்ணன் சேர நாட்டின் மீது படையெடுக்கச் செல்லும்போது உங்களுக்கு ஏன் இளவரசு பட்டம் சூட்டினார்?” என்று கேட்டாள், கன்னரர் இளவரசி,

புலவர் திகைத்தார். “பெண்ணே! உனக்கென்ன சோதிடம் தெரியுமா?” என்று வினவினார் திகைப்பின் ஊடே.

அந்தச் சமயத்தில் நலங்கிள்ளி சீறினான், “புலவரே! இது உண்மையா?” என்று.

“ஆம் நலங்கிள்ளி” புலவரின் சொற்களில் துன்பமிருந்தது.

“இதை ஏன் என்னிடம் முன்னமே சொல்லவில்லை?”

“மன்னர் உத்தரவு அப்படி.”

இந்தப் பெரிய விந்தையை, மர்மத்தை, அதுவரை அறியாத நலங்கிள்ளி பிரமை பிடித்த கண்களுடன் புலவரை நோக்கினான். “நலங்கிள்ளி! மன்னர்கள் மரணத்தைக் கண்டு கலங்குவது இல்லை. அதுவும் மன்னரின் மரணம் இயற்கையானது…” என்று ஆறுதல் சொல்ல முயன்ற புலவரை, அவனி சுந்தரியின் சொற்கள் மடக்கின. “இல்லை புலவரே! மரணம் இயற்கையானது அல்ல” என்றாள், அவனி சுந்தரி திடமான குரலில்.

“உடலில் காயமேதும் இல்லை. ஆகையால் போரில் இறக்க வில்லை.”

“ஆம். போரில் இறக்கவில்லை. கருவூரில் சேரமான் கோட்டையை விட்டுப் போருக்கு வெளிவராதபோது, சுற்றுப்புறங்களில் இருந்த காவல் மரங்களை வெட்ட முற்பட்டார், கிள்ளி வளவர். அங்கும் தங்களைப் போல் ஒரு புலவர் ஆலத்தூர் கிழார். “வீரனே! நீ மரங்களை வெட்டும் ஓசை கேட்டும் வெளிவராத சேரனுடன் போரிடுவது உன்னைப் போன்றோர்க்கு அழகோ?” என்று கூறினார். அதற்கு ஒரு பாட்டும் புனைந்தார் அவர் சொற்கேட்டு மீண்டும் சோழ நாட்டு எல்லைக்கு வந்தார். மன்னர். குளமுற்றத்தின் அரண்மனையில் தங்கினார். அரண்மனையில் மறுநாள் இரவு உயிர் நீத்தார்.”

“படைகள் என்னவாயின?”

“நாளை வரும்”

“அதுவும் உன் ஏற்பாடா?”

“ஆம்”

“எதற்காக இந்த ஏற்பாடுகளை யெல்லாம் நீ செய்ய வேண் டும்?” புலவர் குரலில் சந்தேகம் பெரிதும் தோன்றிக்கிடந்தது.

“ஓர் அரசன் மகள் இன்னோர் அரசனுக்கு வேண்டிய கடமையைச் செய்தாள். உறையூர் மன்னன் நெடுங்கிள்ளியின் அரண்மனையில் இருந்து புகார் வரப் புறப்பட்டேன். இடையில் குளமுற்றத்துக்கு மன்னர் வந்து அாண்மனையில் தங்கியிருக்கிறார் எனக் கேள் விப்பட்டு அவளைப் பார்க்கச் சென்றேன். அன்று இரவு கிள்ளி வளவர் இறந்தார்.”

இந்தச் சொற்களை நிர்ப்பயமாகவே உதிர்த்தாள் அவனி சுந்தரி. கிள்ளிவளவன் போரில் மடியவில்லையானால், அரண்மனையில் மடிந்திருந்தால், அதுவும் இவள் மன்னனைச் சந்தித்த அந்த இரவில் உயிர் நீத்திருந்தால், இதைவிட ஒரு கொலைக் குற்றத்தை யார் இத்தனை துணிவுடன் ஒப்புக்கொள்ள முடியும்? சந்தர்ப்ப சாட்சியங்கள் அவளுக்கு எதிரிடையாக இருந்தும், அவளைக் கொலைகாரியாக்குவதாக இருந்தும், அவனி சுந்தரி நிதானத்தை சிறிதும் இழக்காததைக் கண்ட புலவரும், நலங்கிள்ளியும் ஆச்சரியப்படவே செய்தனர்

இதில், புலவருக்கு ஒரு சந்தேகம் ஏற்படவே, கேட்டார்: “மன்னர் ஏன் சாதாரண மரணம் அடைந்திருக்கக் கூடாது? என்று.

“இல்லை, அடையவில்லை”

“யார் சாட்சி அதற்கு?”

“மன்னரே சாட்சி”

“மன்னரா?”

“ஆம் புலவரே!”

“எப்படிச் சொல்லுவார், இப்பொழுது?”

“முன்பே சொல்லிவிட்டார்”.

“என்ன உளறுகிறாய்?” நலங்கிள்ளியின் சீற்றம் மிகுந்த சொற்கள் அந்த மாமணி மண்டபத்தை கிடுகிடுக்கச் செய்தன. ‘அவனி சுந்தரி அவனைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. “மன்னர் கச்சையைப் பாருங்கள். புரியும்” என்றாள் பரம நிதா னத்துடன்.

இரண்டே அடிகளில் புலவர் மன்னர் சடலத்தை அடைந்து. வாள் கச்சையைத் தடவினார். ஏதோ ஒரு நீண்ட குழல் அவர் கையில் அகப்பட அதை வெளியில் எடுத்தார். குழல் சொல்லிற்று ஒரு விபரீதக் கதையை. நலங்கிள்ளியும் குழலைப் பார்த்தான். அது வரை நீரை உதிர்க்காத அவன் கண்களில் இரு நீர் முத்துக்கள் கண்களின் முகப்பில் தோன்றின. புலவரோ ஏதோ காணாததைக் கண்டுவிட்டதைப் போல் குழலைத் திரும்பத் திரும்ப உருட்டி உருட்டிப் பார்த்தார். கடைசியாக அவனி சுந்தரியை நோக்கி ‘ஆம்! நீ சொன்னது உண்மை” என்றார்.

அவர் ஆமோதிப்பதைக் கேட்டதும், அவனி சுந்தரி மன்னன் சலத்தை அணுகி, அவன் மார்புக் கவசத்தை எடுத்து “புலவரே!. இதையும் பாருங்கள்” என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினாள். அந்த இடத்தைக் கவனித்த நலங்கிள்ளியின் முகத்தில் துக்கம் கலைந்தது. வறி துளிர்த்தது. அதைக் கண்ட புலவர், அவன் தோளில் கைவைத்து “பொறு; நலங்கிள்ளி பொறு; நாம் ஊகிக்கவும் முடியாத பல மர்மங்கள் மன்னன் மரணத்தில் கலந்து கிடக் கின்றன. முதலில் நின் தமையனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்” என்றார்.

Previous articleAvani Sundari Ch2 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch4 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here