Home Avani Sundari Avani Sundari Ch4 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch4 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

66
0
Avani Sundari Ch4 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch4 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch4 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 4 சடங்கும் சதியும்

Avani Sundari Ch4 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி இத்தனைக்கும் தனது முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டவில்லை. நலங்கிள்ளி வெளியே சென்ற அடுத்த விநாடி, வெளியே தடதட வென்று கேட்ட புரவிக் குளம்பு ஒலிகளில் இருந்து, புதுமன்னன் வெறியுடன் புகாரின் அரண்மனைக்குச் செல்கிறான் என்பதை சந்தேகமறப் புரிந்து கெண்டாள். அதன் விளைவாகப் புலவரை நோக்கி, “மன்னரை அரண்மனைக்குக் கொண்டு செல்லட்டுமா?” என்று வினவினாள்.

“வேண்டாம்” என்றார், புலவர் திட்டமாக,

“ஏன்?”

“வெளியே உனக்கு ஆபத்து காத்திருக்கிறது”

அவனி சுந்தரி புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாதது போலவே கேட்டாள், “என்ன ஆபத்து புலவரே?” என்று.

“நீ இங்கு மன்னன் உடலைக் கொணர்ந்தது தெரிந்தால், மக்கள் உன்னைக் கொலைகாரி என்று தீர்மானிப்பார்கள். இந்தப் புகாரின் சிறப்பான பல இடங்களைக் கடல்கோள் அழித்துவிட்டது. ஆனால் முக்கியமான ஓரிடத்தை அது தொடவும் இல்லை…

“எது?”

“நாளங்காடிப் பூதம் இருக்கும் இடம்”

“அது இன்னும் இருக்கிறதா?”

“அது மட்டுமல்ல, அதன் எதிரே அந்தப் பழைய பலிபீடமும் இருக்கிறது.”

“மக்கள் பூதத்திற்கு என்னைப் பலியிட்டு விடுவார்கள் என்று கூறுகிறீர்களா?” அதைக் கேட்ட அவனி சுந்தரியின் உதடுகளில் இள நகை படர்ந்தது. முகத்தில் ஓர் அலட்சியமும் தெரிந்தது.

புலவர் அந்தப் புன் முறுவலையும் கவனித்தார். அலட்சிய பாவத்தையும் கவனித்தார். அவர் முகத்தில் முன்னிருந்த கவலையை விடப் பன்மடங்கு அதிகக் கவலை துளிர்த்தது. “இதில் நகைப் பதற்கு ஏதுமில்லை மகளே; திகைப்பதற்குத்தான் இடம் இருக்கிறது. புகாரின் மக்களை நீ அறிய மாட்டாய்…” என்று ஏதோ சொல்லப்போன புலவரை இடைமறித்து, “ஏன் அறியமாட்டேன், கொலைகாரர்கள்” என்றாள், அவனி சுந்தரி.

புலவர் முகத்தில் வேதனை படர்ந்தது.” இல்லை அவனி சுந்தரி, இல்லை. புகாரின் மக்களைப் போல் பண்புள்ள மக்களை உலகத்தில் நீ பார்க்க முடியாது. ஆனால்; அவர்கள் கிள்ளிவளவனை உயிரைப் போல் நேசிக்கிறார்கள். அவன் வெற்றியுடன் திரும்பி வருவான் என்று திட்டமாக நம்பி, அவனை வரவேற்க ஏற்பாடுகளும் சென்ற பத்து நாளாகக் குதூகலமாக நடந்து வருகின்றன. அவன் இப்படித் திரும்பி வந்திருக்கிறான் என்பதை உணர்ந்தால், அவனை நீ தன்னந்தனியாக அவன் படைக்காவலர் உதவியின்றிக் கொண்டு வந்திருக்கிறாய் என்பதை அறிந்தால், உனக்கு ஏற்படக்கூடிய அனர்த்தத்தை எண்ணவும் எனக்கு அச்சமாயிருக்கிறது. ஆகவே நீ இந்த மாளிகையைவிட்டு அகலாதே. அதோ அந்தப் பூதலனும் வெளியில் தலையைக் காட்ட வேண்டாம்” என்று கூறினார் கோவூர்கிழார், வேதனை தம் குரலிலும் நன்றாக ஒலிக்க. அத்துடன் நில்லாமல், தம் இரு கைகளையும் தட்டிச் சீடர்கள் இருவரை அழைத்து. “இவர்கள் இருவரும் தங்கத் தனி அறைகளைக் காட்டுங்கள்” என்றும் உத்தரவிட்டார்.

ஆனால், அவனி சுந்தரி நின்ற இடத்தைவிட்டு நகரவில்லை. “மன்னவன் சடலம் அரண்மனை செல்லவேண்டும். அதுவரை இங்கேயே இருக்கிறேன். எனக்கும் வேலையிருக்கிறது” என்று மிகுந்த பிடிவாதத்துடன் கூறவும் செய்தாள்.

“இப்பொழுது அரண்மனைக் காவலர் வருவார்” என்று எச் சரித்தார் புலவர்.

“வரட்டுமே”

“அவர்கள் கண்களில் நீ படாதிருப்பது நல்லது.”

“நான் யார் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?”

‘புகாரின் காவலரின் கூரிய அறிவை நீ அறிய மாட்டாய். விநாடி நேரத்தில் விஷயங்களை அலசி முடிபோடும் திறன் அவர்களுக்கு உண்டு.”

“இருந்தால் என்ன?”

‘’மன்னன் சடலத்துடன் உன்னையும் அழைத்துச் செல்லலாம்”

“இது என்ன, புது மன்னர் உத்தரவாயிருக்குமோ?”

அவள் கடைசிக் கேள்வியில் கேலி தொனித்தது: இதைக் கவனித்த கிழார் சொன்னார், “இன்னும் நலங்கிள்ளிக்கு முடி சூட்டப்படவில்லை” என்று.

“புலவரே! நீர் சொல்வது விந்தையாயிருக்கிறது. முடிசூடினால்தான் மன்னன் ஆகலாமா? மன்னன் இல்லையேல் இளவல் மன்னன் தானே?” என்று கேட்டாள் கன்னரர் இளவரசி.

“சம்பிரதாயப்படி நீ சொல்வது சரி. ஆனால், சூழ்நிலையைப் பார்…” என்று சொன்ன புலவர், திடீரெனத் தமது காதுகளைத் தீட்டிக் கொண்டு எதையோ உற்றுக் கேட்டார். தூரத்தே டம் டமவென ஒற்றை முரசு தனிப்பட ஒலித்தது. ஒற்றைச் சங்கும் ஊதப்பட்டது. எங்கும் பெருங்கூச்சல் அலைகளையும் மீறி எழுந்தது. “புகார் உணர்ந்துவிட்டது …” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் புலவர். “மகளே! நீ உள்ளே சென்றுவிடு”. என்று கெஞ்சவும் செய்தார்.

ஆனால், கன்னர நாட்டு மகள் இருந்த இடத்தைவிட்டு நகரவும் மறுத்தாள். “புலவரே! குளமுற்றத்தில் நடந்தது என்ன என்பதை நான் உங்களுக்கு இன்னும் விவரித்துச் சொல்லவில்லை. அதற்கு இப்பொழுது தேவையும் இல்லை; அவகாசமும் இல்லை. பிறகு சொல்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இதோ பஞ்சணையில் தூங்கிக் கிடக்கும் மன்னன் வேண்டுகோள் ஒன்று இருக்கிறது. அவர் இட்ட ஆணை ஒன்று இருக்கிறது. அதை நான் பற முடியாது. அவர் சடலம் அக்கினிக்கு இரையாகும் வரை, நான் அவரைவிட்டு அகல முடியாது. புகார். மக்கள் அல்ல, இந்த நாடே புரண்டு என்மேல் விழுந்தாலும், என்னைச் சிதைத்தாலும், மன்னரை விட்டு நான் அகலமாட்டேன்” என்று திடமாகக் கூறினாள். அவள் திடம் கிழாருக்கு அச்சத்தின் மேல் அச்சத்தை விளை விக்கவே, அவர் ஏதும் பேச சக்தியற்று நின்றார்.

மன்னனை எடுத்துச் செல்ல அரண்மனைக் காவலர், உப தளபதியின் தலைமையில் உள்ளே வந்தார்கள். அவர்கள் மன்னன் சடலத்தை அணுகு முன்பு, அவனி சுந்தரி அந்தச் சடலத்தின் அருகில் சென்று நின்று கொண்டு, யாரையும் கிட்டே வரவேண்டாம் என்று தன் வலக் கையை உயர்த்திக் கம்பீரமாகச் சைகை செய்தாள். அதைக் கண்டதும், முன்னால் வந்த உபதளபதி வியப்பும் கோபமும் நிறைந்த விழிகளை அவள் மீது செலுத்தினான். இதற்கு என்ன அர்த்தம் புலவரே?” என்று புலவரை நோக்கியும் சீறினான்.

அவனி சுந்தரி எதற்கும் சலிக்காமல், பூதலனைக் கண் காட்டி அழைத்து, “பூதலா! மன்னரை ஜாக்கிரதையாக எடுத்துக் கொள்” என்று உத்தரவிட்டாள். பூதலன் அந்த மண்டபம் கிடு கிடுக்க நடந்து வந்து, மீண்டும் குழந்தை போல் அரசனைத் தூக் கிக் கொண்டான். முன்னால் வழிகாட்டி நடவங்கள்” என்று உப தளபதியைப் பார்த்து உத்தரவிட்ட அவனி சுந்தரி, மனனன சட் லத்தைத் தாங்கிய பூதலனைப் பின்தொடர்ந்தாள். உபதளபதி ஒரு கணம் திகைத்தான், வேற்றொரு நாட்டுப் பெண் தன்னை உத்தரவு இடுவதைப்பார்த்து. பிறகு புலவரை நோக்கினான். அவள் சொற் படி நடக்கும்படி புலவர் கண்ஜாடை காட்டவே, உபதளபதி வழி காட்டி முன் சென்றான்.

வெளியே நின்றிருந்த தேரில் பூதல்ன் மன்னன் சடலத்தைக் கிடத்த, அவனி சுந்தரி அதன் முன்புறம் ஏறி புரவியின் கடிவாளக் கயிறுகளைப் பிடித்துக் கொண்டாள். பிறகு உபதளபதியை நோக்கி, “முன்னும் பின்னும் ஆட்கள் வரட்டும். மரணச் சங்குகள் ஒலிக்கட்டும். ஒற்றைத்தாரை ஊதட்டும்” என்றாள்.

உபதளபதிக்குத் தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்பது புரியாததால், அவள் சொன்னபடியெல்லாம் செய்தான். மன்னன் சடல ஊர்வலம் மெள்ளப் புறப்பட்டது. ராச வீதிகள் எங்கும் பந்தங்கள் பெரிதாக எரிந்து கொண்டிருந்தன. மக்கள் மிக ஒழுங்காக இருபுறமும் சூழ்ந்து நின்றார்கள். இடையே வந்த புரவி வீரர் அணிவகுத்து ரதத்தை இரு புறத்திலும் காத்துச் சென்றார்கள். சில தாய்மார்கள் மன்னனைப் பார்த்துக் கதறினார் கள். விஷயத்தைப் புரிந்து கொண்டதுபோல் அரண்மனை வாயி லில் இருந்த பட்டத்து யானையும் பெரிதாகப் பிளறியது.

புலவர் மாளிகையில் இருந்து அரண்மனை வெகுதூரம் இல்லா விட்டாலும், இந்த பவனி மிக நிதானமாகவே சென்று, சுக்ரோ தயத்திற்குச் சற்று முன்பாக அரண்மனையை அடைந்தது. அரண்மனையை அடைந்த பின்பும் அரசகுமாரியின் உத்தரவின் மேல் பூதலனே மன்னன் சடலத்தைத் தூக்கிக் கொண்டு, உள்ளே சென்று, அங்கிருந்த சோழர் பெருமண்டபத்தின் நடுவில் இருந்த பெருமஞ்சத்தில் அதை வளர்த்திவிட்டு, சற்று விலகித் தலைவணங்கினான். அவனி சுந்தரியும் தனது தலையைத் தாழ்த்தினாள். சுக்ரோ தயத்தில் இருந்த மக்கள் மன்னனை வந்து பார்த்துச் சென்ற வண்ணம் இருந்தார்கள்.

உள்ளத்தே எழுந்த உக்கிர உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, அன்றும் மறுநாளும் ஈமச்சடங்குகளை நடத்தினான் நலங்கிள்ளி, தனது தம்பி மாவளத்தானுடன். அந்த இரண்டு நாளும் மாவளத் தான் ஏதும் பேசாமல் வாளாவிருந்தான். சடங்குகள் முடிந்த பின்பு மூன்றாம் நாள் அரண்மனை அந்தரங்க அறையில் இருந்த அண்ணன் நலங்கிள்ளியை அணுகினான். ஏதோ ஆழ்ந்த யோசனை படன் கடலை நோக்கிக் கண்களை ஓட்டிக் கொண்டிருந்த நலங் கிள்ளி, “என்ன தம்பி?” என்று வினவினான்..

“எனக்கு ஒரு வரம் வேண்டும்” என்றான். மாவளத்தான்,

“என்ன தம்பி?”

“துரோகி வந்திருக்கிறான்”

“ஆம்”

“தன்னந்தனியாக”

“ஆம்”

“அவனை ஒழித்துவிட்டால் என்ன?”

மாவளத்தானின் இந்த உரையைக் கேட்ட நலங்கிள்ளியின் உதடுகளில் ஒரு துன்பப் புன்முறுவல் படர்ந்தது.” இது பூம்புகார் தம்பி! “என்று கூறினான். துன்பத்துடன்.

“ஆம் அண்ணா ” மாவளத்தான் பதிலில் துடிப்பிருந்தது

“இங்கு அறம் இன்னும் சாகவில்லை”

“செத்துவிட்டது”

“என்ன!”

விளக்கினான் மாவளத்தான்.

தம்பி சொல்லைக் கேட்ட நலங்கிள்ளி, “இது உண்மையா?” என்று பெரும் பிரமிப்பு கலந்த குரலில் கேட்டதன்றி, இணையில்லாச் சினம் கலந்த விழிகளைத் தம்பி மீது நாட்டினான்.

“முற்றும் உண்மை; சதி அரண்மனையிலேயே நடக்கிறது”. என்றான் மாவளத்தான்., சூடாக.

Previous articleAvani Sundari Ch3 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch5 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here