Home Avani Sundari Avani Sundari Ch9 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch9 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

59
0
Avani Sundari Ch9 Avani Sundari Sandilyan, Avani Sundari Online Free, Avani Sundari PDF, Download Avani Sundari novel, Avani Sundari book, Avani Sundari free, Avani Sundari,Avani Sundari story in tamil,Avani Sundari story,Avani Sundari novel in tamil,Avani Sundari novel,Avani Sundari book,Avani Sundari book review,அவனி சுந்தரி,அவனி சுந்தரி கதை,Avani Sundari tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari ,Avani Sundari full story,Avani Sundari novel full story,Avani Sundari audiobook,Avani Sundari audio book,Avani Sundari full audiobook,Avani Sundari full audio book,
Avani Sundari Ch9 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

Avani Sundari Ch9 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

அவனி சுந்தரி – சாண்டில்யன்

அத்தியாயம் – 9 முதல் கேள்வி

Avani Sundari Ch9 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

புகாரின் மன்னன், தன் பூவிதழ்கள் மீது முரட்டுத்தனமாக முத்திரையொன்றைப் பதித்துவிட்டு வேகமாக நடந்துவிட்டதை எண்ணியும், இன்ப வேதனையால் தனது உதடுகளைத் தடவிக் கொண்டும், நந்தவனத்தில் நீண்ட நேரம் நின்றுவிட்ட கன்ன ரத்து இளவரசி, ரகசிய வழியாக அரண்மனையில் இருந்து தனது அறையை அடைந்த பிறகும், சுய நினையை முழுதும் அடையா மலே, “இந்த நாட்டுக்கு எதற்காக வந்தேன்? என்ன செய்து கொண்டிருக்கிறேன்?”, என்று வினவிக் கொண்டாள். வினாக் களுக்கு விடைகாணாததால், மலர்விழிகளைத் தரையில் ஓடவிட்டு சிறிது நேரம் அந்த அறையில் உலாவினாள். பிறகு சென்று மஞ்சத் தில் உட்கார்ந்து கொண்டாள்.

நலங்கிள்ளியால் இறுக்கிப் பிடிக்கப்பட்ட தனது உடல், வேதனையுடன் இன்பத்திலும் சிக்கிவிட்டதை எண்ணிப் பெருமூச்சு விட்டாள். இதற்குத்தான் பெண்களை எந்த முயற்சிக்கும் அனுப்பக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் போல் இருக்கிறது?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். நலங்கிள்ளி தன்னை இறுக்கிப் பிடித்த பிறகு, தனது பலமெல்லாம் பறந்து, தான் துர்ப்பலமாகி விட்டதையும், தன் மனம்கூட அவன் பால் சென்று விட்டதையும் எண்ணிப் பெரும் அவஸ்தைக்கு உள்ளானாள். “தனது உதடுகளை எந்தத் துணிவில் என் உதடுகளில் டன் பொருத்தினார்?” என்று கேட்டுக் கொண்டு, சற்று எட்ட இருந்த தகளியிலும் சென்று உதடுகளைக் கவனித்தாள். அதில் முத்திரை அடையாளம் ஏதும் இல்லாததால், “நல்ல வேளை” என்று சிறிது சமாதானமும் அடைந்தாள் அவனி சுந்தரி. “எது நல்ல வேளை?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு, மெல்ல நகைக்கவும் செய்தாள் ஒரு முறை. மீண்டும் சென்று பஞ்சணையில் அமர்ந்தாள்.

அவள் எண்ணங்கள் நாட்டை மறந்து, வந்த அலுவலை மறந்து, ஏதேதோ சம்பந்தம் இல்லாத விஷயங்களில் சஞ்சரித் துக் கொண்டிருந்தன. நலங்கிள்ளியின் கம்பீரமான உருவம். வேலைவிடத் தீட்சண்யமான கண்கள், திண்மையான மார்புப் பிரதேசம், இவற்றை எல்லாவற்றைப் பற்றியும் திரும்பத் திரும்ப மனம் எண்ணிப் பார்த்தது; மகிழ்ச்சியும் அடைந்தது. அந்த எண்ண அலைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வரவோ என்னவோ, அவள் அறைக்கதவு லேசாக இருமுறை தட்டப்பட்டது.

அதைக் கேட்டதும் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண் டாள், அவனி சுந்தரி. “கதவு திறந்து தானிருக்கிறது” என்றாள். கம்பீரத்தை வலுக்கட்டாயமாக தொனியில் வரவழைத்துக் கொண்டு.

கதவைத் திறந்து கொண்டு பூதலன் பூனை போல் அரவம் செய்யாமல் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினான் மெதுவாக பிறகு “விஷயம் முடிந்துவிட்டது” என்று சொன்னான்.

“அந்த வீரனின் சடலத்தை நெடுங்கிள்ளி மாளிகை முன்பாக எறிந்துவிட்டாயா?” என்று கேட்டாள் அவனி சுந்தரி.

“எறிந்துவிட்டது மட்டுமல்ல. அதன் விளைவை நின்றும் பார்த்தேன்” என்றான் பூதலன்.

“நின்று பார்த்தாயா?” வியப்பு நிரம்பிய குரலில் வினவி னாள் அவனி சுந்தரி.

“ஆம், அவன் உடலை நெடுங்கிள்ளி மாளிகை முன்பு தொப்பென்று போட்டேன். வாயில் காவலர் உறங்கிக் கொண்டி ருந்தார்கள். ஆகவே மாளிகைச் சுவரின் நிழலில் மறைந்து நின்று. ஒரு கல்லை எடுத்து ஒரு காவலன் மீது விட்டெறிந்தேன்…”இந்த இடத்தில் சொற்களைத் தொடராமல் நின்றான் பூதலன்.

“பிறகு?” அவனி சுந்தரியின் கேள்வியில் ஆவல் இருந்தது.

“காவலன் விழித்துக்கொண்டு நட்ட நடுவில் கிடந்த உடலைப் பார்த்ததும் அலறிப் புடைத்துக் கொண்டு இன்னொரு காவலனையும் எழுப்பினான். இருவருமாகச் சற்று நேரம் அந்த உடலைக் காட்டிக் காட்டி ஏதோ பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்களில் ஒருவன் மாளிகைக் கதவைத் தட்டித் திறக்கச் சொல்லி உள்ளே சென்றான். மறுவிநாடி…”

“உறையூர் மன்னன் வெளியே வந்தான்.”

“ஆம் வந்து கீழே கிடந்தவனை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு இவனை யார் இங்கு போட்டது?” என்று வினவினான் வீரர்களை நோக்கி.

”வீரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த உடலைத் தூக்கி வருமாறு பணித்து, நெடுங்கிள்ளி உள்ளே சென்றுவிட்டான். இதுதானே கதை” என்று கதையை முடித்தாள் அவனி சுந்தரி.

பூதலன் அவளைக் கூர்ந்து நோக்கினான், சில விநாடிகள். “இல்லை. அத்துடன் கதை முடியவில்லை” என்றும் கூறினான்.

“பிறகு என்ன நடந்தது?” என்று வினவினாள் அவனி சுந்தரி.

“உங்களுக்கு எது சம்மதமோ அது நடந்தது” என்றான்.

“எனக்கு எது சம்மதம்?” சினத்துடன் கேட்டாள் கன்ன ரத்து இளவரசி.

“நெடுங்கிள்ளியை இந்த ஊரைவிட்டு விரட்ட நினைத்தீர்கள். அது நடந்துவிட்டது. அடுத்து அரை நாழிகைக்கெல்லாம், தனது புரவி மீது ஏறி வேகமாகப் பறந்துவிட்டான் உறையூர் மன்னன்” என்று கூறினான் பூதலன். அவன் குரலிலும் உஷ்ணம் இருந்ததைக் கவனித்தாள், அவனி சுந்தரி..

அதன் விளைவாக, அவனை ஏறெடுத்துப் பார்த்தாள் பல விநாடிகள். “இது உனக்கு இஷ்டமில்லை போலிருக்கிறது” என்று வினவினாள், பூதலனை நோக்கி.

ஜ்“ஏன் இஷ்டம் எது என்பதல்ல கேள்வி” என்றான் பூதலன்

“வேறு யார் இஷ்டம்?”

“தங்கள் தந்தையின் இஷ்டம்?

“அதைத்தானே பூர்த்தி செய்கிறோம். இனி ‘சோழ நாடு இரண்டு பட்டுவிடாதா?” என்று கேட்டாள், அவனி சுந்தரி சினத் துடன்.

“நகைப்புக்கே இடமில்லாதபடி பருத்திருந்த பூதலன் முகத்திலும் நகைப்பின் குறி நன்றாகத் தெரிந்தது. “இரண்டுப்பட்டு விடும். ஆனால் நலியாது, அழியாது” என்றான் பூதலன்.

“ஏன்?”

“நெடுங்கிள்ளிக்கும் நலங்கிள்ளிக்கும் பகை மூளும். போர் மூளுமா என்பது சந்தேகம்.”

”சந்தேகமென்ன? நலங்கிள்ளியைக் கொலை செய்ய நெடுங்கிள்ளி முயன்றதை நிரூபித்து விட்டோம். ஆகவே இனி போர் தானே அவர்களுக்குள் “

“இருக்காது”

“ஏன்?”

“போர்களை விரும்பாதவர் ஒருவர் இருக்கிறார்”

“யார்?”

“அந்தப் புலவர்”

“கோவூர்க் கிழாரா?”

“ஆம்”

“ஆம்” என்ற சொல்லை மிக உறுதியான குரலில் கூறினான் பூதலன். அத்துடன் நிற்கவில்லை அவன். “நீங்கள் நலங்கிள்ளியைக் காப்பற்றிய காரணமும் எனக்குப் புரியவில்லை” என்று சீறினான்.

“கொலைக்கு உடந்தையாயிருக்கச் சொல்கிறாயா பூதலா?” என்று கேட்டாள், அரசகுமாரி.

பூதலன் இதற்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. “காரணம் கொலையைத் தடுப்பதாக மட்டுமிருந்தால் சரிதான்” என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே நடந்தான், கதவையும் மூடினான் வெளிப்புறமாக.

அவனி சுந்தரி பஞ்சணைமேல் பொற்சிலையென அமர்ந்திருந் தாள். பூதலன் தனது எண்ணங்களை நன்றாக எடை போட்டு விட்டதை உணர்ந்து கொண்டாள். “நான் என்ன தவறு செய்து விட்டேன். சோழ நாட்டைப் பிளக்க அனுப்பப்பட்டேன். பிளந்துவிட்டேன். புலவர் சொன்னாலும், நலங்கிள்ளி கேட்கவா செய்வார்? தமையனைக் கொன்றவன், தன்னைக் கொல்ல முற்பட்ட வன், அவனை எப்படிச் சும்மா விடுவார்?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். அத்தனை சமாதானத்தைச் சொல்லிக் கொண்ட போதிலும், அதெல்லாம் நொண்டிச் சாக்கு என்பதைப் புரிந்து கொண்டாள். ஆகவே, புன்முறுவலுடன் பஞ்சணையில் படுக்கவே செய்தாள். படுத்தவள் உறங்கியும் விட்டாள். உறங்கிய வேளையில் ஏதேதோ கனவுகள் கண்டிருக்க வேண்டும். அவற்றின் விளைவாகச் சில சமயம் முறுவலும், சில சமயம் கடுமையும் அவள் முகத்தில் மாறி மாறி ஏற்பட்டன.

மறுநாள் காலை அவள் எழுந்தபோதும் இன்ப எண்ணங்களுடனேயே எழுந்தாள். அந்த எண்ணங்களுடன் காலைக் கடன்களை முடித்து நீராடி புத்தாடையும் புனைந்தாள். அன்று வழக்கத்துக்கு பிரோதமாக நீண்ட நேரம் அலங்காரத்தில் நேரத்தைச் செலவிட்டாள். காதணிகளைப் பேழையில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு, அழகு பார்த்தாள் தகளியில். பூச்சரத்தைக் கூட சிறிது ஒய்யாரமாக ஒருபுறம் தொங்கவிட்டாள். சுட்டியைச் சற்றே இடம் மாற்றினாள். “நன்றாக இருக்கிறதா? அவர் பார்த் நால் என்ன சொல்வார்?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்த பூதலன், ” மன்னர் பங்களைத் தமது அறைக்கு வரச்சொல்லி ஆள் அனுப்பியிருக் கிறார்?” என்று. வறண்ட குரலில் அறிவித்தான்.

அவசர அவசரமாக, அரசன் அறையை நோக்கி நடந்த அவனி சுந்தரி, அந்த அறையில் மன்னன் மட்டும் இன்றிப் புலவரும் மாவளத்தானும் இருப்பதைக் கண்டு ஒரு கணம் திகைத்து. வாயிற்படியில் நின்றாள்.

“உள்ளே வரலாம்” என்றான் நலங்கிள்ளி, சுரணையற்ற தெரலில்.

ஆவலும் அன்பும் ததும்பும் குரலை, அரசனிடம் இருந்து ரதிர்பார்த்த அரசகுமாரிக்கு அவன் வறண்ட குரல் விசித்திரமாக இருந்தது, அதைப் பற்றி நினைத்தவண்ணம் உள்ளே நுழைந்த மன்னரத்து இளவரசியின் கையை, அந்த இருவர் முன்பாகவும் பிடித்து அழைத்துச் சென்ற நலங்கிள்ளி, அவளை ஒரு ஆசனத்தில் அமர்த்திவிட்டு, “புலவர்! உன்னுடன் பேச விரும்புகிறார்” என்று கூறவும் செய்தான்.

அவனி சுந்தரி புலவரை ஏறிட்டுப் பார்த்தாள். புலவர் ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். “உன்னைச் சில கேள்விகள் கேட்க வேண்டும்” என்று கூறினார்.

“கேளுங்கள்” என்றாள் அரசகுமாரி.

அவர் கேட்ட முதல் கேள்வியே அவளை அசர வைத்துவிட் டது. அந்தக் கேள்வி பல கேள்விகளுக்கு விடையளித்துவிட்டது.

Previous articleAvani Sundari Ch8 | Avani Sundari Sandilyan | TamilNovel.in
Next articleAvani Sundari Ch10 | Avani Sundari Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here