Home Cheran Selvi Cheran Selvi Ch12 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch12 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

138
0
Cheran Selvi Ch12 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch12 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch12 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 12. யார் வந்தாலென்ன?

Cheran Selvi Ch12 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

இளவழுதியின் வலிய கைகள் தோளைப்பற்றியதாலும், அவன் உடல் அளவுக்கதிகமாகத் தன் மீது பட்டுக் கொண்டிருந்ததாலும், உடலெங்கும் சுற்றிய உனர்ச்சிகளின் நெகிழ்ச்சி தந்த அதிர்ச்சியால் கொல்லத்துப் பாவை பெரிதும்
நிலைகுலைந்து தனது கொவ்வைக் கனியிதழ்களிரண்டில் அடி உதட்டை மடித்து முத்துப் பற்களால் லேசாகக் கடித்துக் கொண்டாள். அதுவும் அவளைத் திடப்படுத்தவில்லை. அடுத்த வினாடி பாண்டிய வாலிபன் தலைகுனிந்து
வருவது யார்?’ என்று விசாரிக்கும் பாவனையில் கன்னத்தை அவன் முரட்டு உதடுகள் தடவிய காரணத்தால், உணர்ச்சி கிளறிவிட்ட வேகத்தில், இன்ப தாகத்தில், இளமதி லேசாக அசையவே செய்தாள்.
அந்த அசைவின் காரணமாக மேலே பட்டுவிட்ட அவளது பின்னெழில்கள் அளித்த வேதனையால், இளவழுதி, தான் ஒரு சாதாரண வீரன் என்பதையும் அவள் அரசகுமாரியென்பதையும் அறவே மறந்து தனது கன்னங்களை அவளது
கன்னங்களோடு பதித்ததன்றி, தோளிலிருந்த கைகளை அகற்றி அவற்றால் அவள் சிற்றிடையைப் பிடித்தான். அவன் பிடித்த பிடியில் தனக்கு ஏதோ பாதுகாப்பு இருந்ததென்ற உணர்ச்சி சேரன் செல்விக்கு ஏற்பட்டாலும் அந்தப்
பாதுகாப்பினால் அவள் அமைதி பெறவில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத பயம், பயத்துடன் கலந்த இன்பம், இன்பத்துக்கு ஆதரவு தந்த இதய வேகம், எல்லாமே அவளை திக்குமுக்காடச் செய்து கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் லேசான
ஒரு நடுக்கம் அவள் உடலில் ஏற்பட்டதைக் கண்ட இளவழுதி அதை அடக்கவும் அவளுக்குத் தைரியமூட்டவும் இடையைச் சுற்றி நன்றாகவே கைகளை வளைத்து, இளமதி! ஏன் அஞ்சுகிறாய்? யார் வந்தாலென்ன? காப்பதற்கு என்
வாளிருக்கிறதே” என்று கன்னத்தோடு கன்னம் ஒட்டிக் கிடந்த நிலையிலேயே கூறினான்.
இளமதியின் இதழ்களில் முறுவலொன்று தவழ்ந்தது. பயப்படுவது வருபவரிடம் இல்லையென்பதையும், தனக்கேற்பட்ட அச்சத்தை வாளால் நீக்க முடியாதென்பதையும் தனக்குள் விவரித்துக்கொண்ட இளமதிக்கு, பாண்டிய வாலிபன்
பேச்சும் போக்கும் தன்னை அணைப்பிலேயே நிறுத்த ஒரு சாக்கே தவிர வேறில்லை என்பது நன்றாகப் புரிந்தே இருந்தது. அதனால் அவள் ஏதும் பதில் சொல்லவில்லை. தன் கைளால் அவன் கைகளை விலக்கவும் இல்லை, நெருங்கிய
நிலையிலிருந்து விலகவும் இல்லை.
தாங்கள் இருவருமிருந்த நிலையை இனம் புரியாத நிலை என்று சொல்ல முடியாதென்று அந்தச் சமயத்தில் இளவழுதி நினைத்தான். ‘ அவள் பெண் இனம், நான் ஆண் இனம் என்பது புரிந்ததால் தான் இந்த நிலை. ஆகையால் இது இனம்
புரிந்தது தான்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இந்தகைய நிலையில் சிக்கிக் கொள்ளும் நபர்களுக்கு உலக நிலை அடியோடு மறந்து விடும். சிருஷ்டி விசித்திரத்தையும் எண்ணிப் பார்த்தான் பாண்டிய நாட்டு வாலிபன்.
அந்த எண்ணத்தாலோ, என்னவோ அவளது இடையை நன்றாக இறுக்கியே பிடித்தான் இளவழுதி.
அவன் வேகத்தைக் கண்ட இளமதியின் உதடுகளில் முறுவல் நன்றாகவே விரிந்தது. தன்னைச் சுற்றியிருந்த அந்தக் கைகளிலொன்றைத் தன் கையால் பிடித்து இளவழுதியைத் தான் முதல் நாள் துடிக்க வைத்ததை நினைத்துப்
பார்த்தாள் இளமதி. இப்பொழுதுகூட அதைச் செய்ய முடியும் என்றாலும், இளமதிக்கு அத் தகைய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளத் தன் மனம் இடங்கொடுக்காதது பெருவியப்பாயிருந்தது. “என்ன வித்தை பயின்றாலென்ன? சமயம்
வரும்போது, சரியானவன் கைப்பிடிக்கும்போது, பெண்களின் சக்தி பயனற்றதாகிறது. சக்தியைப் பயன்படுத்தத்தான் மனம் இடங்கொடுப்பதில்லையே’ என்று சிந்தித்தாள் ரவிவர்மன் மகள்,
உள்ளுக்குள்ளேயே பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு பேசா மடந்தையாகிவிட்ட அரச மகளைப் பேச வைக்க வேண்டுமென்ற எண்ணம் அந்த வாலிபனுக்குச் சிறிதளவும் ஏற்படவில்லை, சித்தினியொருத்தி கையில் கிட்டி விட்டதால்
சித்தமிழந்து விட்ட நிலையில் அவன் கைகள் அவள் உடலில் பயத்துடன் தவழ்ந்தன. தொட விரும்பிய இடங்களுக்கு அருகே சென்றனவே யொழிய தொடாமல் அப்புறம் போயின.
அவன் பயத்தை அவளும் கவனிக்கவே செய்தாள். அவன் உடல் தனது உடலின் பின்னால் இணைந்து நின்ற போதும் ஒரு கட்டுக்குள் அவன் அடங்கி நிற்பதையும் கைகள் கூட கட்டுமீற அஞ்சுவதையும் உணர்ந்த ரவிவர்மன் மகள்,
நல்ல புருஷர்களின் ரத்தத்தில் சுழலும் இந்து தர்மமும் அறமும் அளவுக்கு மேற்பட்ட அந்நியோன்னியத்தைத் தடை செய்வதைப் புரிந்துகொண்டாள், அதனால் சிறிது பெருமையும் அடைந்தாள். இத்தகைய அறமே எத்தனையோ
அதர்மங்களைத் தடுத்து இந்து மதத்தை இணையில்லாத மதமாக அடித்திருக்கிறதென்றும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
இப்படிப் பெருமையடைந்த நிலையிலும் தன்னை அளவற்ற ஆசை உந்தித் தள்ளுவதையும், தான் அந்த சமயத்தில் அந்த ஆண் மகனின் கைப்பாவையே என்பதையும் உணர்ந்தாள். அந்த உணர்வால் அவன் மீது நன்றாகவே சாய்ந்தாள்.
அப்படிச் சாய்ந்ததில் ஏதோ விவரிக்க முடியாத ஒரு சாந்தி இருப்பதை அறிந்தாள் இளமதி; அந்த சாந்தி அவளுக்குத்தான் ஏற்பட்டதே யொழிய இளவழுதிக்கு ஏற்படவில்லை. தன்னைத் தாக்கிய இளமதியின் செழித்தபின்னெழில்கள் தன்னை
உன் மத்தனாகச் செய்வதை அவன் உணர்ந்தான். அவளை விட்டுவிட்டுச் சிறிது நகரவும் நினைத்தான். ஆனால் அவள் பின்னால் தன் மீது சாய்ந்து விட்டதால் விழுந்து விடுவாளோ என்ற அச்சம் அவனை இருந்த நிலையில் இருக்க
வைத்தது. அதனால் அவன் மீண்டும் அவள் தோளில் தலையைப் பொருத்திக் கொண்டு கேட்டான் “வருவது யார் இளமதி?” என்று.
அவள் இதழ்கள் லேசாக விரிந்தன. “என்னைக் கேட்டால்?” என்று கேள்வி மிக ரகசியமாக வெளி வந்தது அவள் உதடுகளிலிருந்து.
“வேறு யாரைக் கேட்பது?” ஏதோ பதில் கேள்வி கேட்க வேண்டுமென்பதற்காக கேட்டான் இளவழுதி.
“பொறுத்துப் பார்ப்பது” என்றாள் இளமதி.
“பொறுத்தா!” என்றான் இளவழுதி.
“ஆம்” என்றாள் இளவரசி. “இளமதி”
“உம்”
“பொறுக்கும் நிலையில் நான் இல்லையே இளமதி.”
“அப்படி என்ன நிலையோ?” இளமதியின் கேள்வியில் கேலி இருந்தது.
“என்னைக் கேட்கிறாயே?”
“வேறு யாரைக் கேட்பது?”
“உன்னைக் கேள்.”
“என்னையா!”
“ஆம்,”
“என்னை நானே கேட்டுக் கொள்வதா?”
“ஆமாம்.”
“பைத்தியமா நான் என்னையே கேட்டுக் கொள்ள?”
“சில வேளைகளில் அப்படித்தான் ஆகி விடுகிறோம்” என்ற இளவழுதி அவள் தோளைப் பிடித்துத் தன்னை நோக்கி நன்றாகத் திருப்பினான். இளமதி” என்று மெள்ள அழைக்கவும் செய்தான்.
“உம்” என்ற ஒற்றை ஒலியே பதிலாக வந்தது அவளிடமிருந்து.
“இப்பொழுது…”
“உம்”
இருவரும் எதிரும் புதிருமாக இருக்கிறோம்.”
“உம்”
“ஒருவரையொருவர் பார்த்தே பேசலாம்.”
இளமதியின் கண்கள் மூடிக் கிடந்தன. எதற்காகப் பார்ப்பதாம்” என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் இளவரசி.
“பார் இளமதி!” மெள்ள அவளைத் தன்னை நோக்கி இழுத்த நிலையில் சொன்னான் இளவழுதி,
“பார்க்க என்ன இருக்கிறது?” முனகினாள் இளமதி.
“என் கண்கள் இருக்கின்றன” என்றான் இளவழுதி அவள் காதுக்கருகில். மாற்றுக் கன்னத்தை அவன் உதடுகள் லேசாகத் தடவி மீண்டன.
“இருந்தாலென்ன?”
“பார்த்தால் பேச வேண்டியதில்லை.”
“பேச வேண்டியதில்லையா?”
“இல்லை. கண்ணோடு கண்ணோக்கின் வாய்ச் சொல் யாதும் பயனில்’
இதைக் கேட்ட இளமதி உள்ளூர நகைத்துக் கொண்டாள். “கண்கள் கலந்தால் தான் பேச்சு நிற்குமா? உதடுகள்…” என்று யோசித்தவள், “சே! என்ன வெட்கங் கெட்டவளாக ஆகி விட்டேன்” என்று தன்னை நொந்து கொண்டாள்.
அவள் உள்ளத்தில் ஏதோ எண்ணங்கள் ஓடுவதை அவள் முகத்தில் படர்ந்த ஆனந்த ரேகையிலிருந்து புரிந்து கொண்டான் இளவழுதி. எண்ணங்கள் எதுவாயிருந்தாலும் தன் இஷ்டத்துக்கு அவை விரோத மற்றவை என்பதும்
தெள்ளெனத் தெரிந்தது அவனுக்கு. அதனால் அவள் ஒரு கையை எடுத்துத் தனது ஆள் காட்டி விரலால் அவள் உதடுகளைத் தடவினான். அந்த உதடுகளில் அவன் விரல் வழுக்கிச் சென்றது ஈரம் துளிர்த்திருந்ததால். “கெம்புக் கல்லுக்கு
நீரோட்டம் என்று சொல்வார்களே அது இதுவாகத் தானிருக்க வேண்டும்” என்று உள்ளூர சொல்லிக் கொண்டே இளவழுதி அவள் அதரங்களை நோக்கிக் குனிந்தான்.
இப்படி உலகை மறந்த நிலையில், உவகை துள்ளிய வேகத்தில், வேறு ஒருவன் வந்ததை இருவருமே நினைத்துப் பார்க்கவில்லை. வந்தவன் அரவமும் மேற்கொண்டு கேட்கவில்லை. அவர்களிருந்த நிலை கண்டு அவன் அசைவற்றுச்
சற்று எட்டவே நின்று விட்ட காரணத்தால் நின் றவன் அரசனல்ல. ஆனால் அரசனைப் போலவே கம்பீரமான தோற்றமுடையவன், காதில் பெரும் குண்டலங்களை அணிந்திருந்தான். அவன் கண்கள் அவ்விருவரையும் அதிர்ச்சியுடன்
பார்த்தன. அவன் உதடுகள் ஏதோ சொற்களை முணுமுணுத்தன.

Previous articleCheran Selvi Ch11 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch13 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here