Home Cheran Selvi Cheran Selvi Ch13 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch13 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

105
0
Cheran Selvi Ch13 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch13 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch13 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 13. தேவ கன்னி

Cheran Selvi Ch13 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

செவ்விய இதழ்களைத் தடவிய இளவழுதியின் விரல் அகன்று, இருகைகளும் சிற்றிடையைச் சுற்றி வந்து தன்னை அடியோடு சிறைப்படுத்தி விட்டதாலும் அவன் முரட்டு உதடுகள் தன் மலர் அதரங்களை நோக்கிக்
குனிந்ததாலும்,ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கால் சுயநிலை இழந்து செயலற்று விட்ட சேரன் செல்வி, என்ன காரணத்தினாலோ பெரும் பயத்தின் வசப்பட்டாள். இன்பத்திலும் கற்புடைய பெண்ணுக்கு அச்சம் கலக்கிறது என்ற
பேருண்மையைப் புரிந்து கொண்டாள் இளமதி அந்த சில நிமிடங்களில். ஆனால், பாண்டிய நாட்டு வாலிபன் காட்டிய வெறியிலிருந்து தன்னால் தப்பா முடியாதென்பதையும் அவள் உணர்ந்து கொண்டாள். வேண்டுமானால்
இளவழுதியைக் கைகளால் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவளால் ஓடிவிட முடியும் என்பதையும் தேவையானால் முதல் நாள் காட்டிய சீன நாட்டு நரம்புப் பிடியை ஒருமுறை பிடித்தால் தன்னை வளைத்திருக்கும் இரு கைகளும் செயலற்றுப்
போகுமென்பதையுங்கூட அவள் அறிந்திருந்தாலும், அப்படி எதையும் செய்ய மனம் இடங்கொடுக்கவில்லையென்பதை நினைத்துப் பெரு வியப்புக் கொண்டாள் சேரன் செல்வி.
பெண்ணின் பலமெல்லாம் தான் விரும்பும் ஆண் மகன் அண்டும் வரையில் தான் என்பதை உள்ளுரச் சொல்லிக் கொண்ட இளமதி, சே| பெண் பிறப்பும் ஒரு பிறப்பா” என்று நொந்தும் கொண்டாள். அந்த சமயத்தில் ஏற்பட்ட பலவீனம்
தனக்குக் கோபத்தை அளிப்பதற்குப் பதில் இன்பத்தையே அளிப்பதை நினைத்துத் தன்னிடமே சீற்றம் கொண்டாள். சித்தம் விளைத்த சீற்றத்தை உடல் ஏற்காததால், அது அந்த வாலிபனை நோக்கிச் சாயவே செய்தது. முகமும் சிறிது
நிமிர்ந்து உதடுகள் அவன் உதடுகளை நோக்கி லேசாக விரிந்தன. அந்த நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து ஒன்ற முற்பட்ட வேளையில் தான் மரத்தின் மறைவில் நின்ற மனிதன் மெள்ளக் கனைத்தான் தொண்டையை.
ஏதோ சூழ்ந்த கருமேகத்தை வெட்டும் மின்னல் போல் சுரீரென்று அவர்கள் இன்ப மேகத்திடையே புகுந்துவிட்ட அந்தக் கனைப்பு, அவர்களிருவரையும் சட்டென்று பிரிய வைத்தது. சட்டென்று கலைந்த ஆடையை சேரன் செல்வி
சரிபடுத்திக்கொண்டு “யார் அது?” என்று கோபத்துடன் கேள்வியை உதிர்த்தாள்.
“மன்னிக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு அந்த மனிதன் தானிருந்த மறைவிடத்தை விட்டு வெளியே வந்தான்.
அவனைக் கண்ட இளமதி தலை வணங்கி “ஆசார்யரா? இந்த நேரத்தில் எங்கு வந்தீர்கள்?” என்று ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காகக் கேட்டாலும் அவள் இதயம் அச்சத்தால் வெகுவேகமாக ஓடிக் கொண்டி ருந்தது.
ஆசார்யர் என்று அரசகுமாரியால் அழைக்கப்பட்ட அந்த மனிதனை இளவழுதி ஏறிட்டுப் பார்த்தான். அந்த மனிதன் நல்ல உயரத்துடன் விசாலமான முகத்துடனும் காட்சியளித்தான். அவன் சேர நாட்டு அந்தணர்கள் போல் தலையில் முன்
குடுமி வைக்காமல் அரச வம்சத் தினரைப் போல் அழகிய முடி வைத்திருந்தான். நட்ட நடுவில் வாரிவிடப்பட்டு பக்கப் பகுதிகளில் கத்தரிக்கப்பட்டுக் காக்கை இறக்கைகளைப் போலிருந்த குழல்கள் அவனுக்குக் கம்பீரத்துடன்
அழகையும் அளித்தன. நடுத்தர வயதை அவன் தாண்டியிருந்தாலுங்கூட அவன் முகத்தில் திரையுமில்லை, சிகையில் நரையுமில்லை. அவன் நெற்றியிலிருந்த கோபி சந்தனம் நுதலுக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்திருந்தது.
அவனை சில வினாடிகள் நோக்கிய இளவழுதி “இளமதி! இவர் யார் தெரியவில்லையே” என்றான் அது வரையிலிருந்த சங்கடத்தை உதறிவிட்டு.
இளமதி பாண்டிய வாலிபனை வெட்கப் பார்வையாகப் பார்த்தாள். “இவர் என் குருநாதர். சேரநாட்டி லேயே மிகப்பெரிய கவி. கவி சமுத்திரபந்தனை அறியா தவர்கள் பரத கண்டத்தில் யாருமில்லை. காஷ்மீரத்தில் கல்வி பயின்றவர். காஷ்மீர
ருய்யக பண்டிதரின் அலங்கார சாஸ்திரத்துக்கு உரை எழுதியிருக்கிறார்” என்று கூறினாள் இளமதி.
“வணக்கம் குருநாதரே!” என்று இளவழுதியும் தலை வணங்கினான்.
கவி சமுத்திரபந்தன் தன் பெருவிழிகளை இளவழுதியின் மீது திருப்பினான். “வீரனே! இரவில் இந்த நந்தவனத்துக்குள் ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. நீ இங்கு வந்தது தவறு. இதற்கு உன் தலையைக்கூட சீவலாம்” என்றார்
கவி.
“அப்படியா” என்று கேட்டான் இளவழுதி.
“ஆமாம்” என்றார் கவி.
“ஆண்கள் யாரும் வரக்கூடாது?”
“கூடாது”
“வந்தால் தலை போய்விடும்?”
“கண்டிப்பாக?”
“அப்படியானால் முதலில் கொய்யப்பட வேண்டிய தலை, தங்களுடையது” என்று சுட்டிக் காட்டிய இளவழுதி மெள்ள நகைத்தான்.
அவன் நகைச்சுவையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத சமுத்திரபந்தன், “வாலிபனே! எந்த விதிக்கும் விலக்கு உண்டு” என்று கூறினான்.
“தாங்கள் விலக்கு போலிருக்கிறது?” என்று கேட்டான் இளவழுதி,
“ஆம். வேண்டுமானால் அரசரைக் கேட்டுப்பார்” என்று கூறிய சமுத்திரபந்தன் கம்பீரமாகவும் அலட்சியத்துடனும் நோக்கினான் இளவழுதியை.
இளவழுதி அந்தப் பார்வையை லட்சியம் செய்யவில்லை. “நானும் பொது விதிக்கு விலக்கு தான். வேண்டுமானால் அரசரைக் கேட்டுப் பாரும்” என்ற இளவழுதி “இளவரசி! வா போகலாம். ஒரு முக்கிய செய்தியைச் சொல்ல வேண்டும்”
என்று கூறி இளமதியின் வலக்கையின் மேல் மட்டத்தைப் பிடித்து அவளைத் திருப்பிக் கொண்டு நந்தவனத்துக்குச் செல்ல முற்பட்டான்.
“நில்” என்ற கவியின் அதிகாரக் குரல் அவனைத் தேக்கியது ஒரு வினாடி.
“சொல்வதைச் சீக்கிரம் சொல்லுங்கள். என்னால் இனியும் தாமதிக்க முடியாது” என்றான் இளவழுதி.
சமுத்திரபந்தன் கண்கள் நெருப்பைக் கக்கின. “தாமதிக்க முடியாதா” என்ற கேள்வியில் எரிச்சல் தொனித்தது.
“முடியாது”
“அவசரமான வேலையோ?”
“ஆம்”
“இத்தனை நேரம் நடந்து கொண்டிருந்ததே அதுவா?”
இந்தச் சமயத்தில் இளமதி குறுக்கிட்டு, “ஆசார்யரே என் முன் நீங்கள் பேசும் பேச்சு அழகாயிருக்கிறது” என்று கண்டித்தாள்.
“நீ இவனுடன் நடந்து கொண்ட அழகுக்கு இது ஒன்றும் குறைவல்ல” என்று கூறிய சமுத்திரபந்தன் இளவழுதியை நோக்கி, “வீரனே! இளமதியை நீ மறந்து விடவேண்டும். அவள் யாருக்கும் மனைவியாக முடியாது. அவள் மானிடரால்
தீண்டத்தகாதவள்” என்று மிகுந்த கோபத்துடன் கூறினான். மேலும் தொடர்ந்தான் : “வாலிபனே! நான் சொல்வதை ஏதோ பிதற்றல் என்று நினைக்காதே. நான் சொல்வது உண்மை என்பது அரச குமாரிக்கும் தெரியும். வேண்டுமா னால்
என் முன்னிலையிலேயே அவளைக் கேட்டுப்பார்” என்று.
இளவழுதியின் சித்தம் வெடித்து விடும் போலிருந்தது சமுத்திரபந்தன் பேச்சைக் கேட்டதால். உண்மையை அறிய திரும்பி இளமதியை நோக்கினான். அவள் தலை கவிழ்ந்து நின்றிருந்தாள். சமுத்திரபந்தன் சொற்கள் அவள் உடலில்
சிறிது நடுக்கத்தையும் ஏற்படுத்தியிருந்ததை அவள் கையைப் பிடித்திருந்த தன் கையிலிருந்து தெரிந்து கொண்டான். ஆனால் அரச குமாரியை ஏதும் கேட்கவில்லை இளவழுதி. சமுத்திரபந்தனை நோக்கிச் சொன்னான், “கவிஞரே! நீர்
அரண்மனைக்குச் செல்லும். நான் அரச குமாரியிடம் தனித்துப் பேச வேண்டிய முக்கிய விஷயம் இருக்கிறது” என்று.
“நான் அறிய முடியாத ரகசியம் எதுவும் சேர நாட்டில் இருக்க முடியாது” என்று அந்த இடத்தைவிட்டு நகர மறுத்தான் கவி.
“இருக்க முடியும் என்பதற்கு நான் அத்தாட்சி. உமது முன்பாக எதையும் நான் பேச முடியாது. செல்லுங்கள். காலையில் உம்மை அரண்மனையில் சந்திக்கிறேன்” என்ற இளவழுதி “வா இளமதி” என்று கூறி அவளைக் கையைப் பிடித்து
இழுத்துக்கொண்டு நந்தவனத்தின் அடர்ந்த பகுதிக்குள் நுழைய முற்பட்டான்.
அவர்களிருவரையும் எதிரே வந்து நின்று வழி மறித்தான் கவி சமுத்திரபந்தன். “வாலிபனே! இளமதியைத் தனியாக அழைத்துப் போகாதே. தெய்வ சாபத்துக்கும், அரசன் கோபத்துக்கும் ஆளாவாய்’ என்று கடுமையான குரலில்
எச்சரிக்கையும் செய்தான்.
அவன் வழிமறித்ததை ரசிக்கவில்லை இளவழுதி. “கவி! நீ பிராம்மணன். உன்னைப் பலவந்தமாக அகற்ற நான் விரும்பவில்லை. வழியை விட்டு விலகி நில்” என்று நிதானமாகவும் கடுமையாகவும் சொற்களை உதிர்த்தான் பாண்டிய
வாலிபன்.
கவியோ இடத்தை விட்டு அசையாமல் சண்டித்தனம் செய்தான். அதனால் நிதானத்தை இழந்த இளவழுதி கவியை நெருங்கி அவரை அப்படியே குழந்தைபோல் தூக்கி மிகுந்த மரியாதையுடன் அகற்றி விட்டு இளமதியுடன் சென்றான்
நந்தவனந்துக்குள்.
அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்ற கவியின் கண்களில் ருத்திரகாரமான கோபம் உதயமாயிற்று. “இருக்கட்டும் இளவழுதி! உன் பாண்டிய நாட்டு திமிர் எதுவரை போகிறது பார்ப்போம்” என்று சீறி விட்டுத் திரும்பி
மெள்ள நடந்தான் எட்டத் தெரிந்த மாளிகையை நோக்கி.
கவியை அடியோடு அரை வினாடியில் மறந்துவிட்ட இளவழுதி இளமதியுடன் பளிங்குச் சுனைக்கு வந்து அவளையும் உட்கார வைத்துத் தானும் அருகில் உட்கார்ந்தான். அடியோடு பேசாமடந்தையாகிவிட்ட அரசகுமாரியின்
இடையில் தன் கையை மீண்டும் தவழவிட்ட இளவழுதி “இளமதி! அந்தக் கவி ஏதோ உளறினாரே, அது என்ன அது!” என்று வினவினான்.
இடையில் தவழ்ந்த கையை மெதுவாக அகற்றினாள் இளமதி தனது மலர்க்கையால். “கவி உளறவில்லை “ என்று தலையைக் குனிந்தவண்ணம் கூறினாள்.
“அப்படியானால் மானிடர் உன்னைத் தொடக் கூடாதா?” என்று கேட்டான் இளவழுதி,
“கூடாது.” அவள் கண்கள் நீரைச் சொரிந்தன தரையில்.
“ஏன் இளமதி?” இளவழுதியின் குரலில் அனுதாபம் மிதமிஞ்சி ஒலித்தது.
“நான் தேவகன்னி!” என்றாள் மெதுவாக இளமதி. அத்துடன் அப்படியே இளவழுதியின் மீது சாய்ந்தும் விட்டாள் உணர்ச்சிப் பெருக்கால்.
இளவழுதி அவளைத் தன்னுடன் சேர்த்து இழுத்து அணைத்துக்கொண்டான். அவன் கைகள் அளித்த பாதுகாப்பில் அவள் தேம்பினாள்.
“அழாதே இளமதி! இந்த உலகத்தில் நாம் உடைக்க முடியாத தடை எதுவும் இல்லை” என்று அவளைத் தேற்றிய பாண்டிய வீரன் முதுகை ஒரு கையால் ஆறுதலாகத் தடவிக் கொடுத்தான்.
இளமதி அவன் கைகள் அளித்த ஆறுதலால் சிறிது மனத்தைத் திடப்படுத்திக் கொண்டாள். “எதற்கும் என் துன்பக் கதையை நீங்கள் கேட்டுவிடுவது நல்லது” என்றாள் மிக மெதுவாக, பிறகு அவன் மார்பில் சாய்ந்த வண்ணம் தன்
விநோதக் கதையைச் சொன்னாள். அதைக் கேட்கக் கேட்க இதயம் வெடிக்கும் நிலைக்கு வந்தான் இளவழுதி. “இதென்ன விபரீதம்?” என்று இரைந்தும் சொன்னான். அவன் சித்தம் நிலைகுலைந்தது. சட்டென்று எழுந்து போய் “கவியைக்
கொலை செய்தா லென்ன?” என்றும் நினைத்தான்.

Previous articleCheran Selvi Ch12 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch14 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here