Home Cheran Selvi Cheran Selvi Ch16 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch16 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

123
0
Cheran Selvi Ch16 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch16 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch16 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 16. பனித்திரை! பராசரன் கதை

Cheran Selvi Ch16 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேர மன்னன் காட்டிய தங்கக் கோட்டுச் சீலையையும் புலவர் ஓலையையும், தான் கொல்லத்துக்கு வந்தது முதல் ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்துக்கொண்டு இரவு வெகுநேரம் வரை உறங்காமலே படுத்துக்கிடந்த
பாண்டிய வாலிபனான இளவழுதி தன்னைச் சுற்றி தனக்கே புரியாத வலைகள் வீசப்பட்டிருப்பதை உணரவே செய்தான். இத்தனை வலையிலும் சேரன் செல்வியின் கண் வலையும் வீசப்பட்டிருப்பதையும் அதற்கு அரசன் சிறிதளவும்
ஆட்சேபிக்காததையும் நினைத்து “இத்தனை குழப்பத்திலும் இன்பமும் கலந்திருக்கிறது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அந்த இன்ப நினைப்பு அவனுக்கு நித்திரையையும் அளித்தது. இன்பக் கனவுகளையும் அளித்தது.
ஆகவே நித்திரை வசப்பட்டுக் கண்களை மூடிவிட்ட சமயத்தில் கூட இளவழுதியின் முகத்தில் ஒருவித சந்துஷ்டியும் புன்முறுவலும் விரவி நின்றன.
அன்றைய கனவில் பளிங்குச் சுனைப்படிகளில் சேரன் செல்வி அவன் மடியில் படுத்துக் கிடந்தாள். அவன் கைகள் அவள் அங்க லாவண்யங்களைத் துழாவிய போதும் அவள் அவற்றுக்கு இணங்கியே இருந்தாள், நெகிழ்ந்தாள். உணர்ச்சி
வசப்பட்டாள். ஆனால் ஒரு முறை கூட அவன் கையை அப்புறப்படுத்தவோ திமிரி எழுந்திருக்கவோ முயன்றாளில்லை. சக்கரத்தின் மீது சுழலும் குயவன் கை பாண்டம் போல அவன் கையின் இஷ்டத்துக்கு வளைந்தாள். “அடி கள்ளீ!
இத்தனை அன்பை என்னிடம் ஏன் இத்தனை நாளாக மறைத்திருந்தாய்?” என்று பல நாள் பழகியவன் போல கேட்ட இளவழுதி அவள் உடலை இறுகப் பிடித்தான்.
இதில் நடந்தது ஒரு பகுதிதான். மற்ற பல பகுதிகள் கனவில் தான் வந்தன. கனவானால் என்ன? ஜீவிதத்தின் ஒரு பகுதிதானே கனவு? ஆனால் அந்தக் கனவில் தானே மனிதன் மனத்தின் சுகங்களை, அடைய முடியாத இன்பங்களை
அடைகிறான்? கைக்கெட்டாதது மனத்துக்கு எட்டுகிறதல்லலா? இப்படி எட்டிய கனியை யெல்லாம் பலபடி சுவைத்து உறங்கிக் கிடந்த பாண்டிய வீரன், அறைக் கதவு பொழுது விடிவதற்குப் பல நாழிகைகளுக்கு முன்பே நாசூக்காகத்
தட்டப்பட்டதால் அவன் சட்டென்று எழுந்து உடையைச் சரிபடுத்திக் கொண்டு கதவைத் திறந்தான். வெளியே பணிப்பெண் சுந்தரி நின்றிருந்தாள்.
அவள் எதற்காக விடிவதற்கு முன்பு தன்னை எழுப்புகிறாள் என்பதை அறியாத இளவழுதி சுந்தரி? இன்னும் பொழுது விடியவில்லையே” என்று வினவினான்.
“இல்லை” என்றாள் சுந்தரி.
“அரண்மனையின் உஷத்கால வாத்யங்கள் கூட இனனிசை எழுப்பவில்லையே?” என்று கேட்டான் இளவழுதி,
“அதற்கு இன்னும் நேரமிருக்கிறது” என்றாள். சுந்தரி.
“எத்தனை நேரம்?”
“நான்கு நாழிகைகள்”
“இசைக் கருவிகள் ஒலிக்கவே நான்கு நாழிகைகள் இருந்தால் பொழுது விடிவதற்கு எட்டு நாழிகைகள் இருக்க வேண்டுமே?”
“ஆம் இருக்கின்றன” என்ற சுந்தரி “நீங்கள் புறப்பட நேரமாகிவிட்டது. முகம் கழுவிப் புத்தாடை புனைந்து கிளம்பத் தயாராகுங்கள்” என்று அதிகாரத் தோரணையில் கூறினாள். அதற்கு மேல் ஏதும் பேசாமல் சட்டென்று திரும்பியும்
சென்று விட்டாள்.
இளவழுதி திரும்பவும் அறைக்குள் சென்று பல் துலக்கி முகம் கழுவி சராயும் சல்லடமும் புனைந்து அங்கி தரித்து வாளையும் கச்சையில் கட்டிக் கொண்டு புறப்பட்டு மாடிப் படிகளில் இறங்கிக் கீழே வந்தான்.
வாயிலில் ஒரு வெண் புரவி சேணம் போடப்பட்டுத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது. அதன் கடிவாளத்தைப் பிடித்து நின்றுகொண்டிருந்த பணிப்பெண் சுந்தரியை வியப்புடன் பார்த்த இளவழுதி “ஏன் புரவியைப் பிடித்து
நிறுத்த வீரர்கள் யாருமில்லையா?” என்று வினவினான், முறுவலும் கொண்டான்.
சுந்தரி தனது தாமரை விழிகளால் அவனை நன்றாக ஏறெடுத்துப் பார்த்தாள். “இல்லா மலென்ன நிறைய இருக்கிறார்கள்” என்றும் கூறினாள்.
அவள் சொற்களில் ஏதோ விஷமமிருப்பதாகத் தோன்றியதால் இளவழுதி கேட்டான் “அப்படியானால் நீ எதற்காகப் புரவியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறாய்?” என்று.
பதிலுக்கு அவள் மெல்ல நகைத்தாள். “பெண்களிடந்தான் மன்னர் தங்களை ஒப்படைத்திருக்கிறார். எதையும் பெண்கள் செய்தால் தான் உங்களுக்குத் திருப்தி போலிருக்கிறது?” என்று கூறினாள் நகைப்பின் ஊடே, “என்னைப்
பார்த்துக்கொண்டு ஏன் நிற்கிறீர்கள்? ஏறுங்கள் புரவிமீது” என்று உத்தரவிட்டாள் சுந்தரி.
இளவழுதி அவளைச் சற்று சுடு பார்வையாகவே பார்த்தான். ஆனால் ஏதும் பேசாமல் கடிவாளத்தை அவள் கைகளிலிருந்து வாங்கிக் கொண்டு புரவிமீது வேகமாக ஏறினான். சுந்தரி விலகி நின்றாள்.
“நான் எங்கே போகவேண்டும்?” என்று வினவினான் சுந்தரியை நோக்கி.
“அஷ்டமுடி ஏரிக்கு” என்றாள் சுந்தரி.
“எந்த வழியாகப் போக வேண்டும்? எனக்கு இந்த ஊரில் கிழக்கு மேற்கு புரியாதே” என்றான் இளவழுதி.
சுந்தரி அவனைப் பார்த்து புன்முறுவல் கொண்டாள். ஆம், ஆம் உங்களுக்கு அந்தப்புரத்தையும் நந்தவனத்தையும் தவிர வேறு இடம் தெரியாது தான். கவலைப்படாதிர்கள். நீங்கள் போக வேண்டிய இடத்தை ராஜாவிடம் காதில்
சொல்லுங்கள். அவன் அழைத்துப் போவான்” என்று சொன்னாள் சுந்தரி.
“ராஜாவா!” வியப்பு மிதமிஞ்சி ஒலித்த குரலில் வினவினான் இளவழுதி.
“ஆம் இவர்தான்” என்று புரவியைத் தட்டிக் காட்டி விட்டு அதன் முதுகிலும் ஒரு அறை அறைந்தாள் சுந்தரி. இளவழுதி எச்சரிக்கப்படும் முன்பு புரவி பறந்தது கோட்டை வாயிலை நோக்கி. கோட்டைக் கதவுகள் அந்தப் புரவியின்
குளம்பொலிகளை கேட்டதுமே திறந்து விடப்பட்டதால் அம்புபோல் வெளியே பாய்ந்த அந்த சாதிப்புரவி கோட்டையைத் தாண்டி பத்தடி போனதும் சட்டென்று நின்றுவிட்டது, இரு பாறைகள் மலைச் சரிவில் இறங்கும் இடத்தில்.
இளவழுதி கடிவாளத்தை இழுத்தும் குலுக்கியும் தனக்குத் தெரிந்த வித்தையெல்லாம் செய்தும் புரவி ஓர் அடிகூட எடுத்து முன்னே வைக்காமல் பின்னுக்குப்போயும் வளைந்தும் சுற்றியும் அடம்பிடித்தது. அதனால் சிறிது
வெகுண்ட இளவழுதிக்கு சுந்தரி சொன்னது நினைவுக்கு வரவே புரவியின் கழுத்தை மெல்ல தட்டிக் கொடுத்து அதன் வலது காதுக்கருகில் குனிந்து “ராஜா! அஷ்டமுடி ஏரிக்குப் போ” என்றான் அன்பு மிகுந்த குரலில்.
“புரவி அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக ஒருமுறை கனைத்தது. ஒருமுறை பதலையை லேசாக வளைத்துத் திருப்பி அவனை ஓரக் கண்ணால் பார்த்தது. பிறகு ராஜநடைபோட்டு எதிரேயிருந்த தோப்பில்
நுழைந்துவிட்டது. தோப்பு அடர்த்தி யாயிருந்த தாலும் மரங்களுக்கு இடையே இருந்த சிறிது வெளிச்சம்கூட போதாதிருந்ததாலும் அந்தப் புரவி சிறிதும் நிதானம் தவறாமல் ஏதோ ஒரு பாதையைக் கண்டு பிடித்து போய்க்
கொண்டிருந்தது. தோப்பின் முடிவிலிருந்த மலைச்சரிவில் சரசரவென்று இறங்கி பெரிதாக இருந்த வேறொரு பாதையில் திரும்பி சிறிது வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு சென்றது. அந்த விசித்திரப் புரவியை நினைத்து நினைத்து
அதிசயித்தான் இளவழுதி. மனிதனுக்குள்ள – ஊகத்தை விட அதன் ஊகம் பன்மடங்கு அதிகமாயிருப்பதைப் பார்த்துப் பிரமித்துக் கொண்டே அது போன போக்கில் சென்ற பாண்டியவீரன் சேரமன்னனிடம் தான் ஏதாவது பரிசு
கேட்பதாயிருந்தால் அந்தப் பரிசு இந்தப் புரவியாகத்தானிருக்கும் என்றும் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
அப்படி அவன் நினைத்துக் கொண்டு பயணம் செய்த ஒரு நாழிகைக்குப் பிறகு அஷ்டமுடி ஏரிக்கு வந்து வெண் புரவி சட்டென்று நின்றது. கரைக்குச் சிறிது தூரத்திலேயே இளவழுதி புரவியிலிருந்து இறங்கி அதன் முதுகின் மீது
சேணத்தை விட்டெறிந்தான். பிறகு அந்த ஏரியின் பெரும் நீர்ப்பரப்பைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே நின்றான். “இத்தனை பெரிய ஏரிக்கு அக்கரையில் மன்னர் என்னை சந்திக்கச் சொல்லியிருக்கிறாரே? இதை எப்படித் தாண்டுவது”
என்று எண்ணினான். எதற்கும் கரை அருகே சென்று பார்ப்போமென்று எதிரிலிருந்த இரண்டொரு மரங்களைத் தாண்டி ஏரியின் முனைக்கு வந்தான்.
வந்தவன் பிரமித்து நின்றான். கரையை ஒட்டிப் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. இரண்டு துடுப்புகளுடன் படகைக் செலுத்துவோன் ஒருவனும் உட்கார்ந்திருந்தான் துடுப்புகளைப் பிடித்த வண்ணம். முதுகைக் கரைக்குக்
காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த பட கோட்டியை நோக்கி “எனக்காகத்தான் காத்திருக்கிறாயா?” என்று வினவினான் இளவழுதி.
படகோட்டி தலையைத் திருப்பாமலே ஆமென்பதற்கு அறிகுறியாகக் தலையை அசைத்தான். “இந்த சேரநாட்டில் பணிப்பெண் முதற்கொண்டு படகோட்டி வரையில் சுத்த திமிர் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்’ என்று நினைத்ததால்
சீற்றங்கொண்ட இளவழுதி சினத்துடன் படகில் ஏறினான். அவன் ஏறிய பிறகும் படகு நகரவில்லை. அது தளையில் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்ட இளவழுதி படகோட்டி” என்று அதட்டினான்.
“ஏன்?’
“தளையை அவிழ்த்துப் படகைச் செலுத்து”
அவன் மேலே ஏதும் சொல்ல அவசியமில்லாது போயிற்று. அதுவரை எட்டவே நின்ற ராஜா ஓடிவந்து தன் பற்களால் கயிற்றை அவிழ்த்தது. பிறகு அதுவும் படகில் தாவி நின்று கொண்டது. படகோட்டி, படகைச் செலுத்தினான்
துடுப்புகளைத் துழாவி,
நீளச்சராயும் சொக்காயும் அணிந்து தலையையும் பட்டுத் துணியால் மூடிக் கட்டியிருந்த படகோட்டி, மிக அனாயாசமாகப் படகைச் செலுத்தினான். அவன் கைகள் படகைச் செலுத்திய லாகவத்தைக் கண்டு வியந்த இளவழுதி படகு
பாதி ஏரியைக் கடந்ததும் படகோட்டி யிடம் பேச்சுக் கொடுக்க எண்ணி படகோட்டி,” என்று அழைத்தான்.
“உம்” ஒரு முனகல் தான். அதற்கு மேல் பதில் வர வில்லை அவனிடமிருந்து.
அன்று ஏரியில் பின்பனி மூட்டம் மிக அதிகமாகயிருந்ததால் படகைச் சுற்றி ஏதோ வெண்திரை போடப்பட்டது போலிருந்தது. படகோட்டிகூடபின்னால் உட்கார்ந்திருந்த இளவழுதிக்குச் சரியாகத் தெரியவில்லையென்றாலும் அவன்
காட்டிய அசட்டை பெரும் கோபத்தை அளித்தது பாண்டிய வீரனுக்கு.
“படகோட்டி!” என்று மீண்டும் ஒருமுறை அதட்டிக் கூப்பிட்டான் இளவழுதி.
“உம்” பழைய பல்லவியைப் பாடினான் படகோட்டி,
“டேய்?”
“உம்”
“திரும்பவும் உம் கொட்டினால் என்ன செய்வதன் தெரியுமா?”
“உம்”
இதற்கு மேல் பொறுக்காத இளவழுதி படகோட்டியின் கைகளுக்கிடையில் தன் கைகளைக் கொடுத்து முன் பக்கமாக அவனைப் பிடித்து, ‘ ‘உன்னை நெறித்து இந்த ஏரியில் எறிந்து விடுகிறேன்” என்று சீறிபவன் கைகளில் தேள்
கொட்டிவிட்டது போல் திடீரென இரு கைகளையும் பின்னுக்கு இழுத்துக் கொண்டான். “நீ, நீ” என்று குளறினான்.
படகோட்டி திரும்பாமலே கேட்டான் “நான்?” என்று.
“ஒரு பெண்” என்று குழப்பத்துடன் சொன்னான் இளவழுதி.
“எப்பொழுது தெரிந்தது!” என்று கேட்டுக் கொண்டே படகைச் செலுத்துவதை நிறுத்தித் திரும்பினாள் அந்தப் பெண். இளமதியின் கருவிழிகள் பாண்டிய வீரனைப் பார்த்து நகைத்தன.
பாண்டிய வீரன் ஏதும் பேசும் நிலையில் இல்லை. “இளமதி! நீயா!” என்று மட்டும் கேட்டான் ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக.
“நான் தான். சந்தேகமாயிருக்கிறதா?” என்று கேட்டாள் இளமதி.
“இப்பொழுது இல்லை”
“முன்பு “
“உன் குரல் மாறியிருந்தது.
“இளமதி நகைத்தாள் மெள்ள. “குரல் மட்டுமா” என்று கேட்டாள்.
“உடையுந்தான்” என்றான் இளவழுதி.
“அதனால் தான் கைகளை முன்புறமாக…” என்று பேச முயன்றவள் சொற்களை அடக்கிக் கொண்டாள்.
அந்த சமயத்தில் இளவழுதிக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ராஜா கனைத்தது. பல்லைக் காட்டி நகைத்தது.
“ராஜா! உனக்குக் கூட என்னைப் பார்த்தால் சிரிப்பாயிருக்கிறதா?” என்று கேட்டாள் இளமதி தனது சங்கடத்தை அடக்கிக் கொண்டு. ராஜா தனது கழுத்தை நன்றாக நீட்டி அவள் கன்னத்துடன் தன் கன்னத்தை வைத்து இழைத்தது.
இளமதி அதன் கன்னத்தில் தனது இதழ்களைப் பொருத்தினாள்.
இளவழுதி மிதமிஞ்சிய பிரமிப்பிலிருந்ததால் அவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஏதோ பேசா வேண்டுமென்பதற்காக “இந்தக் குதிரைக்கு நீ ரொம்ப இடம் கொடுக்கிறாய்?” என்று கூறினான்.
இளமதி புரவியின் முகத்தோடு தனது முகத்தை முட்டிய வண்ணம் “முன் பின் பழக்கமில்லாத ஒருவருக்கே இடங்கொடுத்து விட்டேனே. என்னுடன் குழந்தை முதல் பழகிய ராஜாவுக்கு இடங்கொடுத்தாலென்ன?” என்று கேட்டாள்.
இளவழுதி ராஜாவைப் பின்னுக்கு இழுத்துவிட்டு தான் சென்றான் இளமதிக்கு அருகில். “இனிமேல் உனக்கு நான் தான் ராஜா” என்றான்.
“அப்படியென்றால்?”
“ராஜாவுக்குச் செய்ததை எனக்கும் செய்”
“சீச்சீ… உங்களுக்கு வெட்கமில்லை?” என்று கூறிச் சிரித்தாள் இளமதி.
இளவழுதியின் கைகள் அவள் பூவுடலை வளைத்தன. “இளமதி!” என்றான் இளவழுதி அன்பு ததும்பி வழிந்த குரலில்.
உம்’ என்றாள் இளமதி. இந்த உம்’ பழைய ‘உம்’ மாதிரியில்லாமல் மிக இன்பமாயிருந்தது இளவழுதியின் செவிகளுக்கு. ஆகவே சிறிது தைரியத்துடன் சொன்னான் “இளமதி! இங்கு யாருமில்லை நம் இருவரைத் தவிர”என்று.
“அதனால்?”
“சுற்றிலும் பனி நமக்குத் திரையைப் போட்டிருக்கிறது.”
“ஆமாம்.”
இந்த சமயத்தில் அவளை இறுகக் கட்டிய இளவழுதி அவள் கன்னத்தில் தன் இதழ்களைப் புதைத்து காதுக் கருகில் இளமதி! பாரதம் படித்திருக்கிறாயா?” என்று கேட்டான் மெதுவாக.
படித்திருக்கிறேன்” மிக மிருதுவாக வந்தது அவள் பதில்.
அதில் இப்படித்தான் மச்சகந்தி என்ற பெண் பரா சரன் என்ற முனிவனைப் படகில் கொண்டு சென்றாள்.”
“ஆம்”
அப்பொழுது பராசர முனிவர் அவள் அழகில் மயங்கினார். மயங்கி…”
இதைக் கேட்ட இளமதி அவனை இருகைகளாலும் பிடித்துத் தள்ளினாள். அத்தனை தூரத்துக்கு வந்து விட்டீர்களா? அந்த மச்சகந்தி கையாலாகாதவள். பனித்திரையை முனிவனே சிருஷ்டித்தான். இங்கு நீங்கள் சிருஷ்டிக்கவில்லை. தவிர
என்னிஷ்ட விரோதமாக எதுவும் நடக்க முடியாது” என்று கூறி, துடுப்புகளை எடுத்து வேகமாகத் துழாவினாள்,
படகு அம்பு போல் பாய்ந்து சென்றது. அக்கரையின் தென்னஞ்சோலையும் மெள்ளப் புலனாகத் தொடங்கியது. கரையில் படகை வேகமாக ஊர்ந்து ஏறச் செய்த இளமதி சட்டென்று தரையில் குதித்து இளவழுதி இறங்கத் தனது கையை
நீட்டினாள், அவள் கையைப் பற்றி இளவழுதியும் இறங்கினான். அவனைத் தொடர்ந்து ராஜாவும் பாய்ந்தது.
“அடுத்து என்ன?” என்று முரட்டுத்தனமாகக் கேட்டான் இளவழுதி.
அவன் முரட்டுத்தனத்துக்குக் காரணம் புரிந்திருந்த தால் இளமதி இள நகை கொண்டாள். பிறகு கூறினாள், “இங்கு காத்திருப்போம்” என்று.
“எத்தனை நேரம்?”
“நம்மை அழைத்துப் போக வேண்டியவர் வரும் வரை”
“யாரவர்?”
இந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் கிடைத்தது. சடசடவென்று பதினைந்து புரவிகள் தென்னஞ்சோலையிலிருந்து பாய்ந்து வந்தன. அவற்றில் வந்த வீரர்கள் இளவரசிக்கும் இளவழுதிக்கும் தலை வணங்கினார்கள். இளமதிக்குக்
கொண்டு வந்திருந்த ஒரு புரவியையும் அவளருகே ஒரு வீரன் நிறுத்தினான். இளவழுதி ராஜாவின் மீது தாவி ஏற இளமதியும் புரவியில் அமர்ந்தவுடன் பதினேழு புரவிகள் கொண்ட அந்தக் கூட்டம் சோலைக்குள் புகுந்தது. அந்தச்
சோலையில் இருபுறங்களிலும் வாட்களையும் கேடயங்களையும் தாங்கிய வீரர்கள் கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். சேர மன்னன் படைப் பிரிவுகளுக்குள் தான் நுழைவதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான்
இளவழுதி. அந்தத் தென்னஞ் சோலையைத் தாண்டியதும், அடர்த்தியான பெரும் மாஞ்சோலையொன்று காணப்பட்டது.
அந்தச் சோலையில் இன்னும் அதிக வீரர்களும் தள வாடங்களும் காணப்பட்டன. பெரும் போருக்கான சகல ஏற்பாடுகளும் தயாராகிவிட்டதைப் புரிந்துகொண்டான் இளவழுதி. கடைசியாக அவன் மன்னன் பாசறையை
அடைந்தபோது அங்கு சொப்பனத்திலும் நினைக்க முடியாத விசித்திரத்தைக் கண்டான்.

Previous articleCheran Selvi Ch15 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch17 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here