Home Cheran Selvi Cheran Selvi Ch17 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch17 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

90
0
Cheran Selvi Ch17 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch17 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch17 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 17. பாஞ்சாலியின் சிரிப்பு

Cheran Selvi Ch17 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

அஷ்ட முடி ஏரியின் அக்கரையில் அடர்ந்த தென்னஞ் சோலையைத் தாண்டியிருந்த மிக நெருக்கமான மாமரக் கூட்டத்தின் நடுமத்தியில் அராபியர்களின் கூடாரங்களைப் போலவே கெட்டியான படுதாவினால் அமைக்கப்பட்ட
சேரமன்னன் அலங்காரக் கூடாரத்தின் முன்பு புரவி யிலிருந்து இறங்கிய வீரனான இளவழுதி, சிறிது நேரம் கூடாரத்துக்குள் புகாமலே வெளியிலிருந்த சூழ்நிலையையும் கூடாரத்தையும் தனது கூரிய கண்களால் சுற்றி வளைத்தான்
ஒருமுறை. மன்னன் கூடாரத்திலிருந்து சற்று எட்ட இன்னும் இரண்டு கூடாரங்கள் தெரிந்ததன்றி அவற்றை வீரர் பாதுகாத்துக் கொண்டிருந்த நிலையிலிருந்து அவை படைத் தலைவர்களின் பாசறையாயிருக்க வேண்டுமென்பதை
இளவழுதி உணர்ந்துகொண்டான். அவற்றுக்கும் மன்னன் கூடாரத்துக்கும் இருந்த இடை வெளியிலும் சுற்றுப் புறங்களிலும் வாள்களையும் கேடயங்களையும், பரசுராமக் கோடாரிகளையும் தாங்கிய வீரர்கள் மிகுந்த
எச்சரிக்கையுடன் பாதுகாத்து வந்ததிலிருந்து அங்கு யாரும் புகமுயல்வது தற்கொலைக்கு ஒப்பாகும் என்பது சந்தேகமறப் புரிந்தது பாண்டிய வாலிபனுக்கு.
மன்னன் கூடாரத்து அமைப்பு பிரமிக்கத்தக்க விதமாயிருந்தது. கூடாரத்தின், மேற்பகுதியும் பக்கப் பகுதிகளும் அரபு நாட்டு முரட்டுத் துணியால் மூடப் பட்டிருந்தாலும் அதன் வாயிலிலிருந்த பட்டுச்சீலை மிக உயர்ந்ததாய், சிறந்த
வேலைப்பாடுள்ளதாய், பாரதீய நெசவுத் தொழிலின் சக்தியை வலியுறுத்துவதாய் அமைந்திருந்தது. காற்றில் பஞ்சுபோல் அசைந்த அந்தப் பட்டுச் சீலையின் ஒரு பகுதியைக் கொண்டே.. தயாரிக்கப்பட்டு கூடாரத்தின் மேலே நடு
ஸ்தம்பத்தில் வில்லும் அம்பும் பொறித்த சேரர் இலச்சினையுடன் பறந்து கொண்டிருந்த கொடியின் கம்பீரம், சேரநாட்டின் பழைய வரலாற்றை மட்டுமின்றி ரவிவர்மன் சிருஷ்டிக்க விருந்த புது வர லாற்றையும் விளக்குவதாக
அமைந்திருந்தது. இதே இலச்சினையை நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இமயத்தில் பொறித் தார்களென்றால் அது ரவிவர்மன் காலத்தில் ஏன் சாத்தியமாகக்கூடாது என்று இளவழுதி
நினைத்தான்.
இப்படி நினைத்து நின்று கொண்டு அசையாமலிருந்த இளவழுதியை அசைக்கப் பக்கத்தில் நின்றிருந்த இளமதி குரல் கொடுத்தாள். “கூடார வாயிலில் நிற்க உங்களை இங்கு அழைத்து வரவில்லை” என்று.
இளவழுதி அவளை நோக்கித் தன் கண்களைத் திருப்பினான். அப்பொழுது அவள் அதுவரை தலையில் கட்டியிருந்த சீலையை எடுத்து விட்டதால் அவள் குழல் மிக அழகாகத் தெரிந்தது அந்தக் காலை நேரத்தில். அவள் மார்பழகை
எடுத்துக் காட்டிய அந்த மெல்லிய சட்டையும், திண்ணிய கால்களின் பரிமாணத்தை மறைக்க முடியாத கெட்டிச்சராய்களுங்கூட, அவளுக்குப் பொருத்தமாகவே இருந்ததையும் அவற்றில் அவள் முன்னைவிட அதிக அழகைப்
பெற்றிருந்ததையும் கவனித்த இளவழுதி பெருமூச்சு விட்டான்.
அவன் கண்கள் தன் மீது தவழ்ந்த நிலையையும் அவள் கண்டாள். அவன் பெருமூச்சுவிட்டதையும் கவனித்தாள். இரண்டையும் கண்டதால் சிறிது வாய் விட்டே நகைத்துவிட்டு “சரி சரி, வாருங்கள் கூடாரத்துக்குள்ளே” என்று அவனை
அழைத்துக் கூடாரத்துச் சீலையருகில் சென்று அதைத் தூக்கிப் பிடித்து உள்ளே செல்லும் படி கண்ணால் ஜாடையும் காட்டினாள். தலையைச் சிறிது அதிகமாகவே குனிந்து அவள் மார்பைத் தடவிய வண்ணம் கூடாரத்துக்குள் நுழைந்த
இளவழுதியை அங்கிருந்த சிங்க மஞ்சத்தில் அமர்ந்திருந்த மன்னர் சேனாதிபதி வரவேண்டும், உங்களுக்காக எத்தனை நேரம் காத்திருக்கிறோம் தெரியுமா?” என்று அவனை வரவேற்றார்.
“காத்திருக்கிறோம்” என்ற பன்மைச் சொல்லைக் கேட்ட பின்பே அரசனிடமிருந்து கண்களைச் சற்று அப்புறம் திருப்பிய இளவழுதி மிதமிஞ்சிய பிரமைக்கு உள்ளாகிச் சிலையென நின்று விட்டான் பல வினாடிகள். அந்தப் பிரமையில்,
குழப்பத்தில், அரசருக்குத் தலை வணங்க வேண்டிய சாதாரணக் கடமையையும் மறந்தான். அரசன் சிங்க மஞ்சத்தருகில், அதைவிடப் பெரிதான ஆசனத்தில், மான் தோலை விரித்துக் கிட்டத்தட்ட பத்மாசனம் போட்ட நிலையிலும் ஒரு
தொடையை மட்டும் அலட்சியமாக ஆட்டிக் கொண்டும் ஆர்ப்பாட்டமாக அமர்ந்திருந்தார் ஒரு மனிதர். அவர் கட்டியது காவி வேஷ்டியாயிருந்தாலும் அது நல்ல பட்டாதலால், காவியும் கூடார மூலையில் விடிந்த பின்பும் எரிந்து
கொண்டிருந்த விளக்கில் பளபளத்தது. அவர் கழுத்தைச் சுற்றிக் கிடந்த பத்தரைமாற்றுச் சிறு சங்கிலியின் நடுவிலிருந்த ருத்திராட்சமும் நல்ல தங்கத்தால் அமைக்கப் பெற் றிருந்ததால் அவர் வேஷம் எதுவாயிருந்தாலும் அவருக்கு
ஏழ்மையில் நம்பிக்கையில்லையென்பது திட்டமாகத் தெரிந்தது. தவிர அப்பெரியாரின் திண்மை வாய்ந்த புஜங்களிலும் அகன்ற மார்பிலும் வயிற்றிலும் பூசப்பட்டிருந்த விபூதியிலிருந்தும், நெற்றியில் விபூதி நடுவில் பளபளத்த
குங்குமத்திலிருந்தும் அம்மெய்யாடியார் காலையில் நீராடி விட்டாரென்பதும் புலனாயிற்று. “அவரை நீண்ட நேரம் பார்த்த இளவழுதி அவரிடம் மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக மிக முரட்டுத்தனமாகப் பேச முற்பட்டு “புலவர்
பெருமான் வரப்போவதை நான் அறிந்தால் குடி முழுகிப் போய் விடுமா?” என்று வினவினான்,
புலவர் கையிலிருந்த நவமணி, ஜபமாலையை உருட்டிக் கொண்டே தமது பெரிய உதடுகளில் புன்முறுவல் பூத்தார். “அறியாமலே குடி முழுகிப் போய் விட்டதாகத் தான் கேள்வி” என்று புன் முறுவலின் ஊடே பதில் சொன்னார்
புலவர்.
“என்ன சொல்கிறீர்கள் புலவரே? யார் குடியை நான் கெடுத்தேன்? யார் என்னைப் பற்றிக் கதை கட்டி விட்டார்கள்?” என்று மீண்டும் சுடச்சுட வினவினான் இளவழுதி.
“இந்த ஏழைப் புலவனுக்கு யார் சொல்லவேண்டும்? கண்களில்லையா பார்ப்பதற்கு? புத்தியில்லையா ஊகிப்பதற்கு?” என்றார் புலவர்.
“என்ன பார்த்தீர்கள் குருநாதரே? என்ன ஊகித்தீர்கள்?”
“சற்று முன்பு உன்னை அழைத்துவர அந்தக் குட்டி துடித்ததைப் பார்த்தேன். சரி நீயே போய் அழைத்து வா என்றதும் அவள் கண்களில் ஒளிவிட்டதைப் பார்த்தேன்” என்ற புலவர் சற்று நகைக்கவும் செய்தார்.
“அவளை எப்படி நீங்கள் பார்த்திருக்க முடியும்?”
“ஏன்? அதற்கு என்ன தடை?”
“அரசரை நள்ளிரவில் தான் நான் பிரிந்தேன்”
“பிரிந்ததும் அரசரும் இளமதியை அழைத்துக் கொண்டு இங்கு வந்துவிட்டார். உன்னை அனுப்ப ஏற்பாடு செய்து விட்டு வந்ததும் இளமதியை அனுப்பினோம்.”
“அப்படியா?”
“ஆமாம்.”
“நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?”
“நேற்று”
“எதற்காக வந்தீர்கள்?”
“நீயும் அஜ்மல்கானும் இங்கு வந்த பிறகு எனக்குப் பாண்டிய நாட்டில் என்ன வேலை?” இதைச் சொன்ன புலவர் அரசனை உற்றுப் பார்த்தார்.
“வேலையில்லை, வேலையில்லை” என்று அரசரும் தலையை ஆட்டினார்.
அரசரிருப்பது அப்பொழுதுதான் நினைவுக்கு வந்ததால் குழப்பமடைந்த இளவழுதி “அரசே! தலை வணங்குகிறேன். மன்னியுங்கள்” என்று தலை வணங்கினான். புலவர் முன்பும் குனிந்து அவர் கால்களைத் தொட்டுக் கண்களில்
ஒற்றிக் கொண்டான்.
புலவர் கையை அவன் தலைமீது வைத்து அவனை ஆசீர்வதித்தார். மன்னனையும் ஆசீர்வாதம் செய்த புலவர் “மன்னா! இனி நாம் நமது சேனாதிபதியைத் தயார் செய்வோம்!” என்று கூறினார். கூறினாரா அல்லது உத்தரவிட்டாரா
என்பது புரியவில்லை இளவழுதிக்கு அவர் குரலிலிருந்து.
ஆனால் அதைக் கேட்ட மன்னர் ஒரு வார்த்தையும் எதிர்த்துப் பேசாமல் இரு கைகளையும் தட்டினார். உடனே கூடாரத்துக்குள் வந்த காவலனை நோக்கி, “நமது உபதளபதியை அழைத்து வா” என்று உத்தரவிட்டார்.
அடுத்த சில வினாடிகளில் கூடாரத்துக்குள் நுழைந்த உபதளபதியை நோக்கிய ரவிவர்மன் “பலபத்ரா! இனி இந்தப் படைகளுக்கு நான் தலைமை வகிக்கப் போவதில்லை. இதோ இருக்கும் பாண்டிய நாட்டு வீரர் இளவழுதி தலைமை
வகிப்பார்” என்று கூறினார்.
பலபத்ரன் மன்னரை ஒரு முறை கண் கொட்டாமல் பார்த்தான். பிறகு தலை வணங்கி “தங்கள் சித்தம்” என்றான்.
“பலபத்ரா? உன் வீரத்திலோ படைகளை நடத்தும் திறமையிலோ நம்பிக்கையில்லாமல் இந்த ஏற்பாடு செய்யப்படவில்லை” என்று மன்னர் சமாதானம் சொன்னார்.
பலபத்ரன் தனது பெரிய உடலை ஒரு முறை அசைத்தான். கருத்த பெரிய ராட்சஸ புருவங்களையும் அதிருப்திக்கு அறிகுறியாகச் சுளித்தான் ஒரு வினாடி. பிறகு சமாளித்துக் கொண்டு “மன்னர் செய்யும் எதற்கும் காரணமிருக்கும்”
என்று மட்டும் கூறினான்.
இதைக் கேட்ட மன்னர் “பலபத்ரா! உன் ராஜ விசுவாசத்தை மெச்சுகிறேன். அதற்குத் தகுந்த கைம்மாறு செய்யாமல் விடமாட்டேன்” என்று கூறிவிட்டு மன்னர் தமது ஆசனத்திலிருந்து எழுந்து கூடார மூலைக்குச் சென்று ஒரு பொற்
கோடரியுடன் திரும்பி வந்தார். பரசுராமன் கோடாரி போல் வடிக்கப்பட்டும் வில்லம்பு இலச்சினை பொறிக்கப்பட்டும், நவரத்தினங்கள் இழைத்த பிடியுடனுமிருந்த அந்தக் கோடரியைப் புலவர் கையில் கொடுத்தார் அரசர். “உங்கள்
கையாலேயே இளவழுதிக்குப் பதவி அளியுங்கள்” என்றும் கூறினார்.
புலவர் அதைக் கையில் வாங்கி இளவழுதியைத் தன் முன்பு வணங்கச் சொல்லி அவன் தலையில் அதன் பட்டையான பகுதியை வைத்தார். “நான் சொல்கிறபடி பிரமாணம் செய்” என்ற புலவர் “பாண்டிய குலத்தவனான நான் இன்று
சேரர்படைத் தலைவனாகிறேன். சேர வம்சத்தின் சிறப்புக்கும், இந்து சமயத்தின், சமுதாயத்தின் பாதுகாப்புக்கும் போரிடுவேன். அதற்காக உயிரையும் கொடுப்பேன். மதுரை மீனாட்சி சாட்சி, மகாசக்தி சாட்சி தென்னரங்கன் சாட்சி’ என்று
மெதுவாகக் கூற இளவழுதியும் அப்படியே திரும்பக் கூறினான்,
ராஜ விசுவாசப் பிரமாணம் முடிந்ததும் பலபத்ரன் சேனாதிபதிக்குத் தலைவணங்கினான். அந்த சமயத்தில் புலவர் சொன்னார் “பலபத்ரா! இந்தப் போர் முடியும் வரையில்தான் இளவழுதி சேனாதிபதி. பிறகு அந்தப் பொறுப்பு உன்
கையில் ஒப்படைக்கப்படும். இந்தத் தமிழகம் இப்பொழுது அழிந்து கிடக்கிறது. இதை மீட்பது, இதன் கௌவரத்தை நிலைநாட்டுவதுதான் இப்பொழுது எந்த இந்துவும் முதலில் கவனிக்க வேண்டிய பணி” என்று அத்துடன் அரசனையும்
நோக்கி “மன்னா! நீ பெரிய கவி. பெரிய வீரன். உனக்கு மங்களம் உண்டா கட்டும். இன்று என் கடிதத்தின் முதல் பகுதியை நிறை வேற்றிவிட்டாய்” என்று சந்துஷ்டியுடன் கூறினார்.
அந்த சமயத்தில் ஒரு குரல் ஒலித்தது, “இரண்டாவது பகுதி நிறைவேறாது” என்று. அந்தக் குரல் வந்த திசையை நோக்கிய நால்வரும் பிரமித்தனர். கண்களில் கோபம் பொங்க உதடுகள் துடிக்கக் கவி சமுத்திரபந்தன்
நின்றுகொண்டிருந்தான் கூடார வாயிலில்.
அரசன் அவனுக்கு தலைவணங்கினான். “எப்பொழுது வந்தீர்கள் கவீச்வரரே! எப்படி வந்தீர்கள்?” என்று குரலில் வியப்பு ஒலிக்க வினவினான் ரவிவர்மன் குலசேகரன்.
கவி சமுத்திரபந்தன் அரசனுக்குப் பதிலிறுக்கவில்லை ; புலவரை நோக்கினான். “தென் மொழிப் புலவருக்கு வடமொழிப் புலவர் சளைத்தவனல்லவென்பதைப் புரிந்து கொண்டீரா!” என்று வினவினான்.
“எதில்?” என்று வினவினார் தமிழ்ப் புலவர்.
“அரசியல் சூழ்ச்சியில்” என்றான் கவி சமுத்திர பந்தன்,
“இங்கு நான் ஏதும் சூழ்ச்சி செய்யவில்லை. ஆனால் தங்கள் விஷயம் எனக்குத் தெரியாது” என்றார் புலவர்.
“உமது சீடனை ரகசியமாக சேர நாட்டுப் படைத்தலைவனாக்கிவிட்டீர். ஆனால் இளமதியை உமதிஷ்டப் படி எதுவும் செய்ய முடியாது” என்றான் கவி.
“ஆம்” என்று ஒப்புக்கொண்டார் புலவர்.
“என்ன ஆம்?”
“இளமதியின் பிற்காலத்தை நீரோ நானோ தீர்மானிக்க முடியாது. அது அவளிஷ்டடம்.”
“அப்படியானால் அவளை உமது சீடனுக்குக் கொடுக்கும்படி ஏன் ஓலை எழுதினீர் அரசனுக்கு”.
“ஓலையில் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். இளமதியைக் கட்டுப்படுத்தச் சொல்லவில்லை”.

.
புலவரின் சொல் கேட்ட கவி பெரும் சினத்தின் வசப்பட்டான். “என்னால் கட்டுப்படுத்த முடியும்?” என்று சொன்னான்,
“அப்படித்தான் எந்த ஆண்மகனும் நினைக்கிறான்” என்று இளக்காரமாகச் சொன்னார் புலவர்.
“எதைச் சொல்கிறீர்?” என்று கேட்டான் சமுத்திரபந்தன்.
“எந்த ஆண் மகனும் தன திஷ்டப்படி பெண் இனத்தை ஆட்டிப் படைக்கலாம் என்று நினைக்கிறான். இந்த அறியாமை அவனை ஆதிகாலந் தொட்டு விடவில்லை” என்றார் புலவர்.
இதைக் கேட்ட அரசன் புன்முறுவல் கொண்டான். ஆனால் திரையை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த இளமதி சிறிது வாய்விட்டே நகைத்தாள். கவீச்வரன் அவளைச் சுட்டுவிடுவது போல் பார்த்தான். ‘ இளமதி! இப்படித்தான்
பாஞ்சாலியும் ஒரு காலத்தில் நகைத்தாள். அந்த நகைப்பு விளைவித்த அழிவு மகாபாரதம். இன்று நகைத்துவிடு பிறகு நகைக்க இடமிருக்காது” என்று சுடு சொற்களைக் கொட்டினான் கவி.

Previous articleCheran Selvi Ch16 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch18 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here