Home Cheran Selvi Cheran Selvi Ch18 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch18 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

88
0
Cheran Selvi Ch18 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch18 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch18 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 18. தலையில் இறங்கிய அடி

Cheran Selvi Ch18 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

கவி சமுத்திரபந்தனின் சுடு சொற்கள் இளமதியின் சிரிப்பை உறைய வைத்து விட்டதால் அவள் அழகிய முகம் சினத்தால் சிவந்து, கண்களும் சீற்றம் மிகுந்த பார்வையை அவன்மீது வீசின. “குருநாதர் அத்துமீறிப் போகிறார் பேச்சில்”
என்ற சொற்களும் மிகுந்த உஷ்ணத்துடன் உதிர்ந்தன. அவள் செவ்விய உதடுகளிலிருந்து.
சமுத்திரபந்தன் அவள் கோபப் பார்வையையோ சொற்களையோ லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. “என்ன அத்துமீறிப் போய் விட்டேன் இளமதி?” என்று வினவினான் முதலில் ஏற்பட்ட சினத்தைச் சிறிதும் குரலில் தளர்த்தாமலே.
இந்தச் சமயத்தில் அரசனருகே உட்கார்ந்திருந்த தென்மொழிப் புலவர் குறுக்கிட்டு “உவமையைச் சொல்கிறாள் இளவரசி” என்று நமட்டு விஷமமாகப் பதில் சொன்னார்.
வடமொழிக் கவி தென்மொழிப் புலவர் மீது தனது சுடுகண்களைத் திருப்பினான். ‘உவமையைப்பற்றி எனக்குச் சொல்லிக் கொடுக்கிறீரா? நான் காளிதாஸன் மரபில் வந்தவன்” என்றும் சுட்டிக் காட்டினான்.
புலவர் பெருமானும் விடுகிற வழியாகக் காணோம். “மரபு வேறு, திறமை வேறு. நமது குறைகளுக்காக மகாகவிகளின் பெயர்களை இழுக்க வேண்டாம்” என்றார்.
“காளிதாஸனை மகாகவி என்று ஒப்புக்கொள்கிறீரா?”
“அதை நீரோ நானோ ஒப்புக்கொள்ள அவசியமில்லை. உலகம் ஒப்புக் கொள்கிறது… அதனால்…”
“அதனாலென்ன?”
“நாம் மகாகவிகளாகிவிட மாட்டோம், உவமையில் காளிதாச மகாகவி மிகச் சிறந்தவர். ‘உபமா காளி தாஸஸ்ய’ என்ற சிறப்பு வசனமே இருக்கிறது”
“நீர் சிறிது சமஸ்கிருதமும் படித்திருப்பதாகத் தெரிகிறது.”
“நன்றாகப் படித்தவனுக்கு மொழி பேதமில்லை. அடியவனுக்குச் சிறிது வடமொழியும் தெரியும்.”
“சிறிதுதானே?”
“அவையடக்கத்துக்கு அப்படிச் சொல்வது தமிழன் மரபு.”
“அவையடக்கமென்றால்?”
“அது உமக்குத் தெரியாதென்பது புலனாகிறது” என்ற புலவர் இகழ்ச்சிப் புன்முறுவல் கோட்டினார்.
புலவர்களின் இந்தச் சண்டையில் மன்னனும் மெள்ளப் புகுந்து கவிஞர்களே! இந்த அனாவசிய சண்டை எதற்கு? நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அலுவல் இருக்கின்றதே” என்று குறிப்பிட்டான்.
கவி சமுத்திரபந்தன் மன்னனைக் கோப விழிகளால் நோக்கினான். மன்னனே! சண்டையை இழுத்தது நானல்ல” என்றான்.
“நானும் இழுக்கவில்லை “ என்றார் புலவர்.
“கவி சார்வபௌமனான என் உவமையை தவறென்று சொன்னீர்” என்றான் சமுத்திரபந்தன்.
“நான் சொல்லவில்லை. இளவரசியின் கோபத்துக்கு அந்த உவமை காரணமென்று சுட்டிக் காட்டினேன்” என்றார் புலவர் மறுபடியும் விஷமக் குரலில்.
“இளவரசியின் சினத்திற்கு அதில் என்ன இருக்கிறது?”
“இளவரசியை பாஞ்சாலியென்றீர்?”
“ஆம் சொன்னேன். இன்னும் சொல்வேன்”
“அதைத்தான் ஆட்சேபிக்கிறாள் இளவரசி”
“எதற்கு ஆட்சேபிக்க வேண்டும்?”
“உம் உம்” என்று இருமுறை அனாவசியமாகத் தொண்டையைக் கனைத்துக்கொண்ட புலவர் “பாஞ்சாலிக்குக் கணவர் ஐந்து பேர்” என்று கூறி மறு படியும் இருமுறை உம்காரம் கொட்டினார்.
இதைக் கேட்டதும் சமுத்திரபந்தன் சங்கடத்தால் அசைந்தான். ரவிவர்மன் பெரிதாகவே நகைத்து விட்டான். பலபத்ரன் கூட அளவுக்கு மீறிப் புன்முறுவல் செய்தான். இளமதியின் முகம் அஸ்தமன சந்திரனைப் போல அதிகமாக சிவந்து
விட்டது. அவள் தலையும் குனிந்தது தரையை நோக்கி.
இருந்தும் சமுத்திரபந்தன் விடுவதாகக் காணோம். “இது சிரிக்கக்கூடிய விஷயமல்ல மன்னனே! ஏற்கனவே இளவரசி காஞ்சி அருளாளப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டவள், அவள் வேறு யாருக்கும் அடிமையாக முடியாது”
என்றான் உறுதி மிக்க குரலில்,
“நாம் எல்லோரும் ஆண்டவனின் அடிமைகள் தான். அதற்காகத் திருமணம் புரிந்து கொள்ளாமலிருப்பதில்லை” என்று மீண்டும் புலவர் துவங்கினார்.
இந்தப் புலவர்-கவி போராட்டத்துக்கு இளவழுதியே முற்றுப்புள்ளி வைத்தான். “என் திருமணத்தைவிட, இளவரசியின் திருமணத்தைவிட கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன” என்று சற்றுக் கடுமையாகவே பேசிய
இளவழுதி “புலவரே! நமக்கு முன்பு பெரும் போர் காத்துக் கிடக்கின்றது. பலமான எதிரியுடன் மோத இருக்கின்றோம். பாண்டியனான நான் பாண்டிய அரச வம்சத்தையே தாக்க வேண்டிய நிலையில் சேர நாட்டுத் தளபதியாக
நியமிக்கப்பட்டு நிற்கிறேன்” என்று உணர்ச்சி ததும்பச் சொன்னான்.
சமுத்திரபந்தன் இப்பொழுதும் வாளாவிருக்கவில்லை. “அது தவறில்லை” என்றான்.
இளவழுதியின் விழிகள் கவியை நோக்கி மீண்டும் திரும்பின எது?” என்று கேள்வி கேட்பன போல்.
அந்தக் குறிப்பை உணர்ந்து கொண்ட சமுத்திர பந்தன் பதில் சொன்னான் “நீ பாண்டியரை, அதாவது உன் குலத்தவரை தாக்குவதால் தவறில்லை. அர்ஜுனனை அவன் குலத்தவரைத் தாக்குமாறு கண்ணனே பணித்தான்” என்று.
“நீரும் கண்ணனில்லை. நானும் அர்ஜுனனில்லை” என்று சீறிய இளவழுதி மன்னனை நோக்கி, “பிரபு! தாங்கள் உத்தரவிட்டால் நான் துணைப் படைத் தலைவருடன் படைகளை ஒரு முறை சுற்றிப் பார்த்து வருகிறேன்” என்று
கூறினான்.
“அப்படியே செய் சேனாதிபதி” என்று கூறிய அரசன் “எதற்கும் நானும் வருகிறேன்” என்று துவங்கியவன் புலவரையும் கவியையும் பார்த்து இருவரும் மண்டையை உடைத்துக்கொண்டால் என்ன செய்வதென்றே நினைப்பால்
“வேண்டாம். எனக்குப் பதில் இளவரசியை அழைத்துச் செல். படைத்தளம் முழுவதும் உபதளபதிக் கும் அவளுக்கும் தெரியும்” என்று உத்தரவிட்டான்.
கவி சமுத்திரபந்தன் கேட்டான். “இந்த இருவருடன் தானே” என்று.
“ஆம் ஐவருடன் இல்லை “ என்றார் புலவர்.
கவி ஏதோ பதிலிறுக்க முற்பட்டார். ஆனால் அரசன் மிகக் கடுப்பாக “விவாதம் இத்துடன் நிற்கட்டும்?” என்று கூறிவிடவே சமுத்திரபந்தன் வாயை திறக்கவில்லை. எல்லோருக்கும் முன்பாகக் கூடாரத்தைவிட்டு வெளியேறினான்.
வெளியேறு முன்பு கூடார வாயிலில் நின்று ஒரு முறை திரும்பி “மன்னா! தெய்வாபாரதம் பொல்லாதது என்பது நினைப்பிருக்கட்டும்” என்று எச்சரித்துச் சென்றான்.
அதைப் பற்றிக் கூடாரத்திலிருந்த மன்னனோ மற்றோரோ லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை’
சேனாதிபதியும் மற்ற இருவரும் செல்லலாமென்பதற்கு அறிகுறியாக கையை மட்டும் அசைத்தார். சேனாதிபதியும் உபசேனாதிபதியும் சென்ற பிறகு திரையை விலக்கிக் கொண்டு இளமதியும் வெளியே சென்றாள். போகுமுன்பு
புலவரை நோக்கிப் புன்முறுவலும் கோட்டிச் சென்றாள்.
புலவர் “மிகவும் துடுக்கான குட்டி, விஷமக்காரி” என்றார் அவள் சென்றதும் மன்னனை நோக்கி.
சேர மன்னன் முகத்தில் கவலை நிரம்பி நின்றது. “புலவரே, சமுத்திரபந்தன் மிக நல்லவர். ஆனால் சில நம்பிக்கைகளைத் திடமாகக் கொண்டவர். அவரிடம் நாம் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது” என்று கூறினான் புலவரை நோக்கி.
“மன்னா! கவிஞரைப்பற்றிக் கவலைப்படாதே. அவர்கள் தீமைக்கு எதையும் சொல்லமாட்டார்கள். தீமையைச் செய்யவும் மாட்டார்கள். இரண்டுங் கெட்டான்களை நம்புவதைவிட திடமான நம்பிக்கை உள்ளவர்களை நம்பலாம்” என்றார்.
“என்ன இருந்தாலும் கவிகள் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்” என்று கூறிய அரசன் புன்முறுவல் கொண்டானானாலும் அவனுக்கு உள்ளூர சமுத்திரபந்தனைப் பற்றிய அச்சம் மட்டும் இருந்து
கொண்டிருந்தது. அதனால் அரசன் தீவிர சிந்தனையில் இறங்கினான்.
அதே சமயத்தில் இளமதியும் உபதளபதியும் இரு புரவிகளில் பின் தொடர, கச்சையில் பரசுராமக் கோடரி காலை இளவெயிலில் மின்ன, ராஜாவின் மீது ஆரோ கணித்து மெதுவாக அந்தச் சோலையில் பல இடங்களில் கூட்டங்கூட்டமாக
இருந்த படைப் பிரிவுகளைப் பார்வையிடலானான் இளவழுதி.
சுமார் அரைக்காத தூரத்துக்குக் குறுக்கும் நெடுக்குமாகப் பலவித மரங்களுடன் படர்ந்து கிடந்த அந்த மாபெரும் சோலை, படைகளை மறைத்து வைப்பதற்காகவே இயற்கையளித்த வரப்பிரசாதம் போலக் காட்சியளித்தது. சிறிது தூரம்
கும்பலான மரங்கள், அடுத்து ஏதுமில்லாத இடைவெளி, இப்படி அமைந்திருந்த அந்தச் சோலையின் இடைவெளிகளில் புரவிப் படையும் காலாட் படையும் இருந்ததைக் கண்டான் புதிய சேனாதிபதி. சில இடங்களில் வில்லவரும்
வேலெறிவாருங் கூட இருந்தனர். சில இடங்களில் காலை வேளை யாதலால் வீரர்கள் சிலர் சல்லடம் தரித்து வாட்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் சில இடங்களில் ஆயுதங்களைச் சீர்படுத்துவோர் சாணைக்கல்களில்
ஈட்டிகளையும் அம்புகளின் உலோக நுனிகளையும் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆயுத வகையறாக் களில் பரசுராமக் கோடரிகளும் நிறைந்திருந்ததைக் கண்ட சேனாதிபதி உபசேனாதிபதியை நோக்கி ‘கோடரி வீச்சிலும்
வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறதா?’ என்று வினவினான்.
“முன்பெல்லாம் கிடையாது. சமீப காலத்தில் மன்னர் இதைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்” என்றான் உபசேனாதிபதி.
“உமக்குப் பயிற்சி உண்டா இதில்?” என்று வினவினான் சேனாதிபதி.
“உண்டு” என்றான் உபசேனாதிபதி.
“அப்படியானால் இந்தக் கோடரிகளில் ஒன்றை எடுத்து உமது புரவியை சிறிது தூரம் நகர்த்தி சட்டென்று திரும்பி என் மார்பை நோக்கிக் கோடரியை வீசும்” என்றான் சேனாதிபதி.
இதைக் கேட்ட இளமதியின் முகத்தில் கவலையின் சாயை படர்ந்தது. “எதற்கு இந்த வீடிப்பரீட்சை?” என்றாள் அவள் கவலை குரலில் ஒலிக்க.
“இந்தக் கோடரிகள் எதிரிமீது வீசுவதற்கேயொழிய நாம் ஒருவரையொருவர் கொன்று கொல்ல அல்ல” என்று உபசேனாதிபதியும் ஆட்சேபித்தான்.
“பலபத்ரரே! இங்கு பயிற்சி இல்லா விட்டால் போர்க் களத்தில் நாம் திறமையுடன் ஆயுதங்களைக் கையாள இயலாது; பயப்படவேண்டாம். சொன்னபடி செய்யுங்கள்” என்ற சேனாதிபதியின் குரலில் உறுதியிருந்தது.
அதற்குப் பின்பு மறுக்க இயலாத உபதளபதி வடிக்கப்பட்ட கோடரியொன்றைக் கொண்டுவர சாணைக்காரனுக்கு சமிக்ஞை காட்ட அவன் சாணை பிடித்த கோடாரியைக் கொண்டு வந்தான். அதைக் கையில் வாங்கிய உ.பசேனாதிபதி
சுற்றிலுமிருந்த வீரர்களை விலகச் சொல்லி தனது புரவியைத் தட்டிவிட்டான். புரவி பத்தடி தான் தாவி இருக்கும். சட்டென்று திரும்பிக் கோடரியை மிகத் துரிதமாக வீசி விட்டான் பலபத்ரன்.
அவன் கைவேகத்தைக் கண்ட மற்ற வீரரும் இளமதியும் அச்சமுற்றனர் ஒரு வினாடி. மறு வினாடி அதிசய முற்றனர். அசுரவேகத்துடன் சேனாதிபதியின் மார்பை நோக்கி வந்த அந்த இரும்புக் கோடரி, வந்த வேகத்தில் ஆகாயத்தில் பறந்து
வெகு தூரம் போய் விழுந்தது. சேனாதிபதி ஏதும் நடவாதது போல் தன் கையிலிருந்த தங்கக் கோடரியை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இடையிலிருந்த அந்தக் கோடரி எப்பொழுது உ.பதளபதியின் கோடரியைத்
தடுத்து ஆகாயத்தில் பறக்கவிட்டது என்பது ஏதும் புரியாததால் மற்ற வீரர்கள் ஒரு வினாடி மெய்மறந்து நின்று, அடுத்த வினாடி ஆரவாரத்துடன் சேனாதிபதியைச் சூழ்ந்து கொண்டனர்.
அப்பொழுது ஒலித்தது பலபத்ரன் குரல் “சேனாதி பதியைச் சூழ்ந்து கொள்ள வேண்டாம். விலகி நில்லுங்கள்” என்று.
அதனால் மீண்டும் நிசப்தம் நிலவியது, வீரர்களிடையே வந்தவன் சேனாதிபதியென்று அறிந்ததால். ஆனால் சேனாதிபதி அத்தகைய மரியாதைகளை எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. புரவியிலிருந்து குதித்துச் சற்று எட்ட இருந்த முந்திரி
மரத்தின் தாழ்ந்த கிளையொன்றில் உட்கார்ந்து கொண்டு பலபத்ரனையும் வீரர்களையும் அருகில் வரும்படி அழைத்தான். அவர்கள் வந்ததும் சொன்னான் சேனாதிபதி. “வீரர்களே! நான் முடிந்த போது உங்களிடம் வருவேன். மற்ற
வேளைகளில் நீங்கள் செய்யவேண்டியதை உபசேனாதிபதி கூறுவார். நீங்கள் – இன்னும் பத்து நாட்களில் போருக்குச் சித்தமாக வேண்டும். ஆகவே ஆயுதப் பயிற்சியை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்காதீர்கள். முடிந்தபோது
நானும் உபசேனாதிபதியுங்கூட உங்களுடன் பயிற்சியில் கலந்து கொள்வோம்” என்று.
வீரர்கள் சேனாதிபதியின் சொற்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். அதற்குப் பின்பு புரவியேறி மீண்டும் சிலபகுதிகளை நடுப்பகல்வரை பார்வையிட்ட சேனாதிபதி, மன்னர் கூடாரமிருந்த இடத்துக்குத் திரும்பினான். அது வரை
வழியில் முந்திரி மரங்களில் பழுத்துத் தொங்கிய பழங்களையும், வீரர்கள் வெட்டிக் கொடுத்த இள நீரையுமே அருந்திய இளவழுதி பிற்பகல் தாண்டி நான்கு நாழிகைகளுக்குப் பிறகே மன்னர் கூடாரத்துக்கு வந்து சேர்ந்தான்.
“படைகளைப் பார்த்தாகிவிட்டதா?” என்று மன்னன் கேட்டான்.
‘பார்த்து விட்டேன்” என்றான் இளவழுதி.
“எப்படிப் பிரிவினை செய்ய உத்தேசம்?” என்று கேட்டான் மன்னன்.
தங்கள் சீலையில் கண்டபடி” என்றான் இளவழுதி.
அதற்குப் பதில் சொல்லாமல் தலையை மட்டும் மன்னன் அசைத்தான். “வேறு ஏதாவது யோசனை உண்டா?” என்று வினவினான் அரசன்.
“யானைப் படையை இங்கு காணோம்” என்று குறிப்பிட்டான் இளவழுதி.
“வேறிடத்திலிருக்கிறது. அதை இன்று மாலை இளமதி காட்டுவாள்” என்றான் மன்னன்.
கூடாரத்தின் மூலையில் கண்களை மூடிக்கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்த புலவர் ருத்திராட்சப் பூனை போல் கண்களை விழித்து, அரசன் சொன்னதை ஆமோதிப்பதற்கு அறுகுறியாகத் தலையசைத்தார்.
அன்று மாலை அரசன் கட்டளைப்படி இளமதி யானைப் படைப் பிரிவுக்கு இளவழுதியை அழைத்துச் சென்றாள். அந்தச் சோலையில் நீண்ட தூரத்தில் வடக்கி லிருந்த ஒரு உப்பங்கழியின் கரையில் கூட்டப்பட்டிருந்த யானைப்
படையைப் பார்த்த இளவழுதி தீவிர சிந்தனை வசப்பட்டான். படை மிகப் பலமாக இருந்தது. ஆனால் அதில் ஒரு குறையுமிருந்தது. மனத்தில் எழுந்த குறையைக் குறிப்பிடாமலேயே யானைப் படைக்குள் கால் நடையாகவே புகுந்தான்
இளவழுதி இளமதியுடன்,
அந்த உப்பங்கழியின் எதிர்க்கரையில் மற்றும் இருவர் நடந்து கொண்டிருந்தனர் தீவிர சிந்தனையுடன். அவர்களில் ஒருவன் கவி சமுந்திரபந்தன். இன்னொருவன் அஜ்மல்கான்.
அஜ்மல்கானின் நரிவிழிகள் கவியை ஏறெடுத்துப் பார்த்தன, உதடுகள் கேட்டன இது உண்மையா?” என்று.
“முற்றும் உண்மை “ என்றான் கவி.
“கடவுளுக்கு அர்ப்பணித்த இளவரசியை இந்தப் பாண்டியனுக்கா கொடுக்க உத்தேசிக்கிறார் மன்னர்?” என்று வினவினான் அஜ்மல்கான்.
ஆம்” என்றான் கவி.
“தவறு தவறு” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான் அஜ்மல்கான்.
இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தவன் கவியை அழைத்துக்கொண்டு நடந்தான் மற்றும் பத்து அடிகள். அடுத்த வினாடி, கவிஞன் தன் மீது ஏதோ வீசப்படுவதை உணர்ந்தான். உணர்ந்தது அவ்வளவு தான். தலைமேல் விழுந்த ஒரு
பலமான அடி. அவன் உணர்வை அசுர வேகத் தில் அள்ளிச் சென்றது.

Previous articleCheran Selvi Ch17 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch19 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here