Home Cheran Selvi Cheran Selvi Ch2 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch2 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

80
0
Cheran Selvi Ch2 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch2 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch2 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 2. இளவழுதி

Cheran Selvi Ch2 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

படகில் வந்த வாலிபன் சொன்ன சொல்லைக் கேட்ட பாவை இளமதி பிரமை பிடித்து இரண்டு வினாடிகள் மலைபோல் நின்று விட்டாளானாலும் சட்டென்று தன்னை சமாளித்துக் கொண்டு, “இளமதியா!” என்று வியப்பும் பிரமிப்பும்
கலந்த குரலில் வினா ஒன்றைத் தொடுத்தாள்.
அவள் முகத்தில் விரிந்த வியப்பையும் பிரமிப்பையும் வாலிபன் கவனிக்கத் தவறவில்லையென்றாலும் அவற்றுக்குக் காரணத்தை அறியாததால் சிறிது குழம்பவே செய்தான். அப்படிக் குழம்பிய சமயத்திலும் விஷமச் சிரிப்பை உதிர்த்த
அவன் கண்கள் அவளை உற்றுப் பார்த்ததன்றி, அவன் இதழ்களும் விஷமத்துடன் லேசாக மடிந்து சொற்களைக் கேலியுடன் உதிர்த்தன. “இளமதி என்ற பெயர் திகைக்கும் படியாகவா இருக்கிறது?” என்று வினவினான் அந்த வாலிபன்.
இளமதியின் முகத்தில் சினத்தின் சாயை படர்ந்ததால் விழிகள் அகல விரிந்து விற்புருவங்கள் மேலே எழுந்தன. “திகைக்கும்படியில்லாமல் வேறு எப்படியிருக்கிறது” என்று கேட்டாள் அவள், ஏதோ கேட்க வேண்டு மென்பதற்காக.
“தேன் போல் இருக்கிறது” என்றான் வாலிபன்.
“தேன் போலா!” இளமதியின் முகத்திலிருந்த சினம் மறைந்து சிறிது மகிழ்ச்சியும் தெரிந்தது.
“ஆம்.”
“ஏனாம்?”
“தமிழ்ச் சொல் அல்லவா?”
“தமிழ்ச் சொற்கள் எல்லாம் இன்பமா?”
“அத்தனையும் அமுதம். அதுவும் இந்தக் கேரள நாட்டில் அமுதத்திலும் அமுதம்” என்ற வாலிபன் தமிழை நினைத்ததாலோ என்னவோ பெருமிதம் கொண்டு நின்றான்.
இளமதியின் இதழ்களில் இளநகை அரும்பியது. “கேரள நாட்டில் தமிழ்ச் சொல்லுக்கு அத்தனை பெருமையா?” என்று வினவினாள் இளமதி குரலில் இளநகை ஒலிக்க.
வாலிபன் பதில் சொல்லச் சிறிது தயங்கினான். பகோ பிக்காதீர்கள். கேரளம் முழுத்தமிழ் நாடாயிருந்த காலத்தில் இளமதி என்ற பெயர் சர்வ சாதாரணமாயிருக்கலாம். ஆனால் அதில் சமஸ்கிருதம் முக்காலே மூன்று வீசம் கலந்து அது
மலையாளம் என்ற புது மொழியான பிறகு இளமதி போன்ற சொற்கள் இங்கு உலாவுவது விசித்திரமல்லவா?” என்றான் வாலிபன்.
இளமதியின் இளநகை நன்றாகவே விரிந்தது. “வரலாறு படித்திருக்கிறீர்கள் நன்றாக” என்று சற்று இடக்குடன் பேசினாள்.
வாலிபன் பணிவுடன் தலைகுனிந்தான்,”இந்த நாட்டிலே-கேரளத்தை மட்டும் சொல்லவில்லை வரலாறு ஒன்று தான் பாக்கியிருக்கிறது, மற்றவையெல்லாம் போய் விட்டது” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான்.
“என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் இளமதி சற்று நடக்க முற்பட்டு.
வாலிபனும் படகிலிருந்த தனது சிறு மூட்டையொன்றை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு அவளுடன் நடக்கலானான். நடந்து கொண்டே சொல்லவும் செய்தான் : “இந்தத் தமிழ் நாட்டில் அதன் மொழிப் பற்று போய்விட்டது.
வீரம் போய் விட்டது. கலை போய் விட்டது. மிஞ்சியிருப்பது சண்டைதான். அதையும் சரியாகப் போடத் தெரியவில்லை. மூன்றாமவன் உதவி வேண்டியிருக்கிறது” என்று இதைச் சொன்ன அந்த வாலிபன் சோகப் பெருமூச்சு விட்டான்
வருத்தத்தினால்.
அவன் துயரமும் பெருமூச்சும் இளமதிக்கு மேன் மேலும் வியப்பைத் தந்ததானாலும் அவள் தலை குனிந்தே நடந்தாள் மணலில். சிறிது தூரம் சென்று மணலைத் தாண்டிய பிறகு கேட்டாள். “உனக்கு சமஸ்கிருதத்தின் மேல் அதிக
வெறுப்பு போலிருக்கிறது?” என்று, தங்கள் இருவருக்கும் இடையேயிருந்த மௌனத்தைக் கலைக்க வேண்டுமென்பதற்காக.
“எந்த மொழியின் மேலும் எனக்கு வெறுப்பு கிடையாது. இன்னும் சொல்லப் போனால் எனக்கு சமஸ்கிருதத்தின் மேல் அதிகப் பிரியம். மகாராஜா குலசேகரின் முகுந்த மாலையை அப்படியே ஒப்புவிப்பேன்” என்றான் அந்த வாலிபன்
பெருமையுடன், “இருப்பினும், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவும், புறநானூற்றுப் புலவர்களும் தங்கள் புனிதப் பாதங்களைப் பதித்த சேர நாட்டில் தமிழ் அடியோடு மறைந்து விட்டது, எனக்குச் சிறிது வருத்தமாகத் தானிருக்கிறது
என்றும் கூறினான் அவன்.
இளமதி நகைத்தாள் மெல்ல. “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று வினவினான் வாலிபன்.
“இளமதியை நீங்கள் பார்க்க விரும்புவது அவள் தமிழ்ப் பெயருக்காகத்தான்” என்று கூறினாள் இளமதி.
“இல்லை, இளமதியைப்போல் சிறந்த அழகுள்ள பெண், அழகிகள் நிறைந்த கேரளத்திலேயே கிடையாதாம்.”
“அப்படியானால் அவளை அழகுக்காகப் பார்க்க விரும்புகிறீர்கள்?”
“அதுவும் ஒரு காரணம். ஆனால் அது முக்கிய காரணமல்ல”
“வேறு என்ன காரணமோ?”
“அரசியல் காரணம்.”
இதைக் கேட்ட இளமதி சட்டென்று நின்று விட்டாள் ஒரு விநாடி, கவிழ்ந்த தலையைத் தூக்கிக் கூரிய தன் விழிகளால் அவனை நோக்கினாள். “ அரசியல் காரணமா?” என்று வியப்பு ஒலித்த குரலில் வினவினாள்.
“ஆம்” என்ற வாலிபன், “இளமதியின் பெயரைச் சொன்ன போதெல்லாம் நீங்கள் எதற்காகத் திகைக்கிறீர்கள், கோபப்படுகிறீர்கள், உங்களுக்கும் இளமதிக்கும் என்ன சம்பந்தம்?” என்று வாலிபன் வினவினான்.
அந்த சமயத்தில் இருவரும் சின்னக்கடா என்று மலையாளத்தில் அழைக்கப்படுவதும், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது இந்தக் கதை நிகழும் காலத்தில் உலகப் பெரிய கடைவீதியாகத் துலங்கிய வணிகத் தலத்துக்கு
வந்துவிட்டபடியால் வியாபாரக் கூச்சல் மிக அதிக மாயிருந்தது. அந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்துச் சில வணிகர்கள் அவர்களை இடித்துக் கொண்டு சென்றார்கள், சீனத்திலிருந்தும்
எகிப்திலிருந்தும் வந்த வணிகர்கள் வணிகப் பொருள்களை விற்க மாளிகைகள் போல் தெரிந்த பெரிய கட்டடங்களுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் அந்தப் பெண்ணை நிற்க வைத்துப் பேசுவது சரியல்ல என்று
நினைத்த வாலிபன், “இங்கு பேச வேண்டாம், அதோ பெரிய மாளிகைகள் தெரிகின்றனவே அங்கு செல்வோம்” என்றுகூறி அந்தக் கூட்டத்திலிருந்து அவளை அழைத்துச் செல்ல தங்களை அணுகி வந்த இரண்டொருவரை அனாயாசமாகத்
தனது இடது கையால் தள்ளி விட்டு இளமதியின் வலது கையைப் பிடித்து ஒரு ஒதுக்குப்புறமாக இழுத்துச் சென்று, எட்ட இருந்த மலையை நோக்கி நடந்தான். மலைப்பகுதியை அணுகியதும் அவள் கையை விட்டு, “மன்னிக்க வேண்டும்
கூட்டத்தின் நெருக்கத்திலிருந்து உங்களைத் தப்புவிக்கவே தொடவேண்டியதாயிற்று” என்று மன்னிப்பும் கேட்டான்.
இளமதி தனது கையைக் கவனித்தாள். அவன் பிடித்த இடத்தில் கை கன்னிச் சிவந்து கிடந்தது. “முரட்டுத்தனமாகப் பிடித்திருக்கிறீர்கள்” என்றாள் இளமதி கன்னியிருந்த கையைச் சுட்டிக்காட்டி.
“கூட்டம் அதிகமாயிருந்தது, வேறு வழியில்லை “ என்றான் வாலிபன்.
“இருந்தாலும் உங்கள் போக்கு சரியில்லை” என்றாள் இளமதி.
“நான் அரண்மனைக்கு வழியைக் கேட்டேன். அப்பொழுதே சொல்லியிருந்தால் இதற்கு அவசியமில்லை. ஒருபெண் கும்பலில் இடிபடுவதை எந்த வீரன் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பான்?” என்று சமாதானம் சொன்னான் அந்த
வாலிபன்.
இளமதியின் கண்களில் இருந்தது கோபமா, மகிழ்ச்சியா? வாலிபனுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தக் கண்களிலிருந்து தன் கண்களை விடுவிக்க முடியாது தத்தளித்தான் அவன். அவன் சங்கடத்தை இளமதி கவனிக்கவே செய்தாள்.
ஆகவே, “மலை உச்சி அதோ இருக்கிறது தெரிகிறதா?” என்று வினவினாள் இளமதி.
“தெரிகிறது”
“அந்த உச்சியில் பெரிய மதில்களுடன் ஒரு பெரும் மாளிகை புலப்படுகிறதா?”
“புலப்படுகிறது”
“அது தான் அரசரின் அரண்மனை”
“நன்றி” என்று சொன்ன வாலிபன் மலை உச்சியை நோக்கி நடக்கவில்லை.
“உங்கள் இல்லம் இருக்கிற இடத்தைச் சொன்னால் அங்கு கொண்டு போய் விட்டுச் செல்கிறேன்” என்றான் வாலிபன்.
“அவசியமில்லை. தவிர…” என்று இழுத்தாள் அவள்,
“தவிர?” என்று அவன் கேட்டான்.
“இதுகூட உங்களுக்குப் புரியவில்லையா? ஒரு வயதுப் பெண் ஒரு வாலிபனுடன் தனிப்பட வந்தால் தாய் தந்தையா என்ன நினைப்பார்கள்?” என்று வினவிய இளமதியின் முகம் சட்டென்று நாணத்தால் சிவந்தது. அந்த நாணத்தைக்
கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்துக் கொண்டு கேட்டாள், “உங்கள் பெயரென்ன” என்று.
“இளவழுதி” என்றான் அந்த வாலிபன்..
“பெருவழுதி என்றால் வரலாற்றுப் பெயராகவாவது இருக்கும்” என்று கூறி நகைத்தாள் இளமதி,
“நானும் வரலாற்றைச் சமைக்க முடியும்” என்ற இளவழுதியின் விழிகளில் வீரச்சாயை திடீரெனப் படர்ந்தது. அந்த வீரச் சொற்களை உதிர்த்ததற்காக நாலாப் பட்ட இளவழுதி, “உங்கள் பெயரைச்சொல்லவில்லையே” என்று வினவினான்.
“உங்கள் பெயரில் பாதியும் என் பெயரில் பாதியும் ஒன்றுதான்” என்று கூறிய இளமதி, “நீங்கள் அரண்மனைக்குச் செல்லுங்கள். ஆனால் அதன் பிரதான வாயிலில் நுழைய வேண்டாம். சற்று சுற்றிச் சென்று பக்கத்தி லுள்ள திட்டி
வாயிலில் நுழையுங்கள்” என்றும் சொல்லி விட்டு, சட்டென்று திருப்பி வேகமாக நடந்து பக்கத்திலிருந்த சோலைக்குள் மறைந்து விட்டாள்..
அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான் வீரனான இளவழுதி. சட்டென்று அவள் திரும்பிய போதும் நடந்தபோதும் சற்று லேசாக அசைந்த அவள் பின்னழகின் திண்மையும் அவனை ஏதோ ஒரு இன்ப உலகுக்கு அழைத்துச்
சென்றது. அவள் குழலில் பின் புறத்தில் அசைந்த செண்பக மலர்ச் சரத்தின் நறுமணம் அவள் சென்ற பின்பும் நீண்ட நேரம் அவன் நாசியைச் சுற்றி நின்றது. அவள் அடர்த்தியான கருங்குழல் பின்னால் நன்றாகத் தூக்கிக்
கட்டப்பட்டிருந்ததால் தெரிந்த வெண்சங்குக் கழுத்து அதில் கிடந்த முத்து மாலையின் வெண்மையை ஒடுக்கிக் கொண்டிருந்தது. அதை மட்டுமா ஒடுக்கிக் கொண்டிருந்தது? இளவழுதியின் இதயத்தையும்
ஒடுக்கிக்கொண்டுதானிருந்தது. அவள் நடையழகில் இருந்த கம்பீரம் அவள் மறைந்த பின்னும் அந்த வாலிபன் மனத்தை மயக்கிக் கொண்டிருந்தது. அத்தகைய மயக்கத்திலேயே மலை உச்சியிலிருந்த அரசன் அரண்மனையை நோக்கி
நடந்தான் இளவழுதி, மலை உச்சியை அடைந்ததும் பிரதான வாசலை நெருங்காமல் சுற்றிச் சென்று இளமதி சொன்ன திட்டிவாசலை அடைந்து அங்கிருந்த இரு வீரர்களை “இதுதானே அரண்மனைத் திட்டிவாசல்” என்று வினவினான்.
“ஆம்” என்றான் வீரன் ஒருவன்.
“நல்லது” என்று கூறிய இளவழுதி அந்த வாயிலில் புக ஒரு காலை எடுத்து வைத்தான்.
“நில்” என்று அதட்டினான் வீரன்.
“ஏன்?”
“இந்த வழிக்குள் நீ போக முடியாது.”
“என்ன காரணமோ?”

.
“இது அரச குடும்பத்தார், மட்டும் போகும் வழி. தவிர இதற்குச் சற்று அப்பால் அந்தப்புர நந்தவனம் இருக்கிறது.”
இதைக் கேட்ட இளவழுதி நகைத்தான். “எது இருந்தாலும் இப்படித்தான் போவேன்” என்று பிடி வாதம் பிடித்தான் இளவழுதி.
“யாரைப் பார்க்க?” என்று கேட்டான் ஒரு வீரன்.
“இளமதியை” என்று வாலிபன் கூறியதும், எதிர்பாராத நிகழ்ச்சிகள் மிகத் துரிதமாக நிகழ்ந்தன. இரு வீரர்களின் வாள் கரம் சட்டென்று உருவப்பட்டு அவற்றின் கூரிய நுனிகள் அவன் மார்பைத் தடவின. “உன் வாளை எடுத்து இப்படிக்
கொடு” என்று வீரர்களில் ஒருவன் கையை நீட்டினான், அதட்டினான்.
“எதற்கு?” என்று வினவினான் இளவழுதி சர்வசாதாரணமாக. அத்துடன் மார்பில் தடவிய இருவாட்களின் நுனிகளையும் அலட்சியமாகவும் பார்த்தான். “வாட்களை எடுங்கள் என் மார்பிலிருந்து” என்று அதிகாரத் தோரணையில்
உத்தரவும் இட்டான் வீரர்களுக்கு.
“உளறாதே, வாளைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் இந்த வினாடி உன் உயிர் பறந்துவிடும் வானுலகு நோக்கி” என்ற வீரனொருவன் சற்று தனது கத்தியை இளவழுதியின் மார்பில் மெல்ல அழுத்தவும் முற்பட்டான்.
போதாக்குறைக்கு அரண்மனைக் கோட்டைச் சுவரின் மேலிருந்து, குறுவாளொன்றும் அவன் கழுத்தை நோக்கி உயிரைக் குடிக்கும் யமனைப்போல் வெகு வேகமாகச் சீறி வந்தது.

Previous articleCheran Selvi Ch1 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch3 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here