Home Cheran Selvi Cheran Selvi Ch22 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch22 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

98
0
Cheran Selvi Ch22 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch22 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch22 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 22. பணம் பத்தும் செய்யும்

Cheran Selvi Ch22 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

கையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு “இளமதி! இளமதி!” என்று இருமுறை அன்புக்குரல் கொடுத்த அந்த மனிதன் அவர்களிருந்த இடத்தை அடைந்ததும் அருகாமை யிலிருந்த ஒரு மரத்தின் மறைவில் பதுங்கினான்.
“சீக்கிரம் உடைகளை அணிந்து கொள். உன்னிடம் பேசவேண்டியது இருக்கிறது” என்று அந்த மனிதன் மீண்டும் குரல் கொடுத்ததிலிருந்து இளமதி இருக்கும் நிலை அவனுக்குப் புரிந்துவிட்டதென்பதை இளவழுதி சந்தேகமற
உணர்ந்து கொண்டதால் அரைகுறையாக உலர்ந்த தனது சராய்களை எடுத்து அணிந்து கொண்டு அதுவரை மரத்தின் இரண்டு பெரும் கிளைகளுக்கு நடுவில் வைத்திருந்த குறுவாளையும் எடுத்து இடையில் செருகிக் கொண்டு
அந்த மனிதன் மறைந்திருந்த மரத்தை நோக்கி அவனைப் பின்புறத்தில் நெருங்கிப் பிடித்து விடச் சென்றான். ஆனால் அந்த மனிதன் வில்லாதி வில்லனாயிருந்தான். இளவழுதி மரத்தை அணுக முயன்ற சில வினாடிகளுக்கு முன்பாகவே
மரத்து மறைவைவிட்டு அகன்று பின்னடைந்து நின்று இளவழுதி அந்த மரத்தருகே வந்து குறுவாளை உருவியதும் அவன் கையை இரும்புப் பிடியாகப் பிடித்தான். அடுத்த வினாடி கையிலிருந்த குறுவாள் கீழே விழ பிரமித்து நின்ற
சேனாதிபதியை நோக்கி அந்த மனிதன் நகைத்தான். அந்த நகைப்புக்குப் பின்புதான் வந்தவர் புலவரென்பதை உணர்ந்த இளவழுதி * தாங்களா!” என்று வியப்பு நிரம்பிய குரலில் கேள்வியைத் தொடுத்தான்.
‘சேரநாட்டு சேனாதிபதியின் கையிலிருந்த வாளை வீழ்த்தக் கூடியவன் அவன் குருவைத் தவிர யாராயிருக்க முடியும்?” என்றும் வினவிய புலவரின் பதிலில் இகழ்ச்சி ஒலித்தது.
இளவழுதி அவர் பிடித்த தனது வலது மணிக்கட்டை இருமுறை இடது கையால் தடவிக் கொண்டான். புலவரே! வரவர உங்கள் கை அதிக வலுவடைந்து வருகிறது” என்று குற்றம் சாட்டும் குரலில் சொன்னான்.
புலவர் வருத்தம் தோய்ந்த குரலில் பதில் சொன்னார்.
“அல்ல அப்பனே! அல்ல, முன்னைவிட உடம்பு இளைத்திருக்கிறது. வலு குறைந்திருக்கிறது. ஆகாரம் வரவர ரொம்ப சொல்பம்” என்றார் இளவழுதியின் குருநாதர்.
“சொல்பமா?” இளவழுதியின் குரலில் இகழ்ச்சி ஒலித்தது.
“ஆமாம் அப்பனே! ஒரே வேளைதான் உணவு மறுவேளை நீராகாரந்தான்.”
“நீராகாரமா?”
“ஆம் அப்பனே. ஒரே ஒரு செம்பு பால். அதில் சீடர்கள் ஒரு சுராங்காய் பாதாம் பருப்பை மட்டும் அரைத்து விடுகிறார்கள்.”
“இதுதான் நீராகாரமா?”
“ஆமாம் அப்பனே! துறவிக்கு இதற்கு மேல் ஆகாரம் எதற்கு? காயக்கிலேசம் துறவிக்கு எடுத்தது.”
புலவரின் காயக்கிலேசத்தை அதாவது பட்டினி போட்டு உடம்பை வருத்தும் முறையைக் கேட்ட இளவழுதிக்கு எரிச்சலாக வந்தது. “குருநாதரே! நாளை முதல் நானும் இக்கட்டையை வருத்தத் தீர்மானித்து விட்டேன்” என்றான்.
“எதற்கு அப்பனே? இல்லறம் உனக்காகக் காத்திருக்கிறது” என்றார் புலவர்.
எங்கு காத்திருக்கிறது?” எரிச்சலுடன் கேட்டான் இளவழுதி.
புலவர் புன்முறுவல் கொண்டது இருட்டில் தெரியவில்லை இளவழுதிக்கு. ஆனால் அவர் சொன்னது தெளிவாகக் காதில் விழுந்தது. “அதோ அந்தப் புதரின் மறைவில் காத்திருக்கிறது” என்ற புலவர் புதரிடம் செல்ல காலை எடுத்து
வைத்தார்.
புலவர் பருமனான கையை ஒரு கையால் பிடிக்க முடியாததால் இருகைகளாலும் இறுகப் பிடித்த இளவழுதி “அங்கு போகாதீர்கள்” என்று தடுத்தான்.
காரணம் புலவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் தெரியாதது போல் நடித்து “ஏன் போகக் கூடாது?” என்று கேட்டார்.
இளவழுதி ஒரு கணம் தயங்கினான். பிறகு நிலைமை சரியாயில்லை” என்று கூறியதன்றி நான் போய் அழைத்து வருகிறேன்” என்றான்.
“உனக்கு மட்டும் நிலைமை சரியாயிருக்குமோ?” என்று கேட்டார் புலவர்.
“எனக்குப் பாதகமில்லை “ என்றான் இளவழுதி சங்கடத்துடன்.
“ஏனோ?”
“நானும் அவளும்…”
“நீயும் அவளும்…?”
“ஒரே நிலையில் தான் கரைக்கு வந்தோம்.”
“அப்படியா!”
“ஆமாம்.”
“கரையிலும் நீங்களிருவரும் ஒரே நிலை போலிருக்கிறது?”
“ஆமாம்”
இதைக் கேட்ட புலவர் நகைத்தார். “இம்பொழுது உன் நிலை சிறிது மாறியிருக்கிறது” என்றார் நகைப்பின் ஊடே.
“புலவரே!” இளவழுதியின் குரல் சினத்துடன் எழுந்தது.
“ஏன் அப்பனே!” என்று வினவினார் புலவர்.
“எங்களை வேவு பார்த்திருக்கிறீர்” என்று குற்றம் சாட்டினான் இளவழுதி.
“வேவு பார்ப்பதற்கு நான் தேவையில்லை; இங்கு பலர் இருக்கிறார்கள்” என்றார் புலவர்.
இளவழுதி புலவரை நோக்கினான். “இந்த இருட்டில் ஏன் பேச வேண்டும்? விளக்கைக் கொளுத்துங்கள்” என்றான்.
“எதற்கு?” என்று புலவர் கேட்டார்.
“உங்கள் முகத்தைப் பார்க்க முடியவில்லை “ என்றான் சேனாதிபதி.
“நீ பார்க்கப் பிரியப்படும் முகம் எனதல்லவே!” என்றார் புலவர்.
அந்த சமயத்தில் இளமதியின் குரல் புதருக்கருகில் ஒலித்தது. “இந்த அழகான தர்க்கம் போதும்” என்று சொல்லிக் கொண்டு ஆடையணிந்து மிகக் கம்பீரத்துடனும் கோபத்துடனும் வெளிவந்தாள் அரசகுமாரி. “சரி புலவரே! நீர் வந்த
காரியத்தைச் சொல்லும்” என்றும் கட்டளையிட்டாள்.
பதிலுக்குப் புலவர் தரையில் உட்கார்ந்தார். அவ்விருவரையும் தமக்கு அருகில் உட்காரச் செய்தார். “இளவழுதி! படையெடுப்பை இனி நாம் தாமதிக்க முடியாது. எத்தனை நாளில் நீ புறப்பட முடியும்?” ‘ என்று விஷயத்துக்கு நேராக
வந்தார். அவர் குரலில் அதுவரையிருந்த நகைச்சுவை, இகழ்ச்சி எல்லாம் மறைந்து விட்டது. அவற்றுக்குப்பதில் கவலை இருந்தது.
இளவழுதியின் சிந்தையிலும் கவலை புகுந்தது புலவரின் கவலை காரணமாக. எந்த நெருக்கடியிலும் கவலைப்படாத புலவரே கவலைப்பட வேண்டுமானால் விஷயம் மிக முக்கியமாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த
இளவழுதி “இன்று தானே பதவி ஏற்றேன்! படைகளைச் சீரமைக்க ஒரு வாரமாவது வேண்டாமா?” என்று வினவினான்.
“தேவையில்லை. படைகளை ஏற்கனவே மன்னன் சீரமைத்து வைத்திருக்கிறான்’ என்றார் புலவர்.
“அப்படியானால் என்று புறப்பட வேண்டும்?” என்று கேட்டான் இளவழுதி.
“உயர்ந்த பட்சம் மூன்று நாட்களில்.” புலவர் குரலில் கட்டளை தொனித்தது.
“ஏன்?”
“உன் படைபலம் அஜ்மல்கானுக்குத் தெரிந்து விட்ட து.”
“யார் சொன்னார்கள் அவனுக்கு?”
“சமுத்திரபந்தன்.”
இதைக் கேட்ட இருவருமே அசந்து போனார்கள். “யார்! கவீசுவரரா?” என்று கேட்டாள் அரசகுமாரி.
“அப்படித்தான் ஊகிக்கிறேன்” என்றார் புலவர்.
“ஊகந்தானா?” என்றாள் இளமதி.
“என் ஊகம் தவறுவதில்லை இன்று முழுதும் சமுத்திரபந்தனைக் காணோம். இரவின் ஆரம்பத்தில் மன்னனைச் சந்தித்தபோது அவர் பின் மண்டையில் ஒரு உருண்டை எழும்பியிருந்தது. சிறிது ரத்தக் கறையும் இருந்தது” என்று புலவர்
விவரித்தார்.
“கவீசுவரரைத் தாக்கி உயிருடனிருக்கக் கூடியவர் கொல்லத்தில் யாருமில்லையே” என்றாள் இளமதி.
“இருக்கிறார் ஒருவர்”
“யார்?”
“அஜ்மல்கான்” என்ற புலவர் மேலும் விவரித்தார் “சமுத்திரபந்தன் எப்படியோ எதிரியிடம் சிக்கியிருக்கிறார், ஆகையால் படை பலத்தைப் பற்றி பேசியிருக்க வேண்டும், இனி அஜ்மல்கான் சும்மா இருக்க மாட்டான். ஆகவே சீக்கிரம் முழுப்
படையையோ பாதிப் படையையோ நகர்த்த வேண்டும்” என்று.
இளவழுதி நீண்ட நேரம் சிந்தனை வசப்பட்டான். “சரி, வாருங்கள் அரண்மனைக்குப் போவோம்” என்று சொல்லிக் கொண்டு எழுந்தான். இளமதியும் எழுந்தாள். ஆனால், புலவர் எழவில்லை. சண்டிபோல் உட்கார்ந்திருந்தார். “எதற்கு
அரண்மனைக்கு?” என்று கேட்டார்.
“மன்னருடன் கலந்து ஆலோசிப்பதற்கு” என்றான் இளவழுதி.
புலவர் தலையை ஆட்டினார் “தேவையில்லை” என்பதற்கு அறிகுறியாக,
“ஏன் அரசரைக் கலக்க வேண்டாமா?” என்று வினவினான் இளவழுதி சலிப்புடன்.
“வேண்டாம்” என்றார் புலவர்.
“ஏன்?” என்று இளவழுதி வினவினான்.
“அவருடைய தூதருடன் கலந்தால் போதும்?”, எள்றார் புலவர்.
இளவழுதிக்குக் குருநாதர் சொல்வது நன்றாகப் புரிந்திருந்தது. தாங்கள் தான் தூதர் போலிருக்கிறது” என்று கேட்டான் சேரர் படைத்தலைவன்.
“அந்த பாக்கியம் இந்த அடியவனுக்குக் கிடைத்திருக்கிறது” என்றார் புலவர்.
“அரசர் தங்களைத் தூதராக நியமித்துவிட்டாரா?” இளவழுதியின் குரலில் சீற்றமிருந்தது.
“இல்லை!” குருநாதர் குரலில் பணிவும் இருந்தது; கேலியும் இருந்தது.
“நீர் சொல்வது புரியவில்லை.” இம்முறை இளவழுதியின் குரலில் உஷ்ணம் அதிகமாயிருந்தது.
“இந்த அடியவனை யாரும் நியமிக்க வேண்டியதில்லை.” குருநாதர் அடக்கத்தின் உருவாயிருந்தார்.
“நியமிக்க வேண்டியதில்லையா?”
“இல்லை.”
“அப்படியானால்?”
“அரசப் பணிகளுக்கு அடிமை தன்னைத்தானே நியமித்துக் கொள்கிறான்.”
“அப்படியா! சுயநியமனமா?”
“ஆம்.”
“நல்ல விசித்திரம்!”
“விசித்திரமேதுமில்லை, அரசன் சொல்லித்தான் நாட்டு சேவை செய்ய வேண்டுமென்பதில்லை” என்ற புலவர் இருவரையும் உட்காரக் கட்டளையிட்டார்.
அவர்கள் உட்கார்ந்ததும் அவர் குரலிலிருந்த வேடிக்கையும் பரிகாசமும் மறைந்தன. “இளவழுதி! இந்த ஒரு நாளில் பல விஷயங்களை அறிந்து கொண்டேன். நான் தனித்து வரவில்லை. இங்கு, இரு சீடர்களும் வந்திருக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுடன் அரண் மனை சென்றேன். அங்கு கவிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. மன்னனுடன் இந்த விஷயங்களைப் பேச அது சமயமில்லையென்று உன்னை நாடி வந்தேன். தூரத்தில்
நிலவொளியில் உங்கள் படகு கவிழ்ந்ததைப் பார்த்தேன். நீங்கள் நீந்திக் கரை வந்த தையும் மற்றதையும் கவனித்தேன். ஆகையால் விளக்கை அணைத்துவிட்டு வந்தேன்” என்று விளக்கிய புலவர்,
“இளவழுதி! இருளடைந்த இந்தத் தோப்பில் நாம் மட்டும் இல்லை. அஜ்மல்கானும் அவன் ஆட்களும் கூட இருக்கிறார்கள். நீங்கள் வந்ததை நான் கவனிக்க முடிந்ததால் அவர்களும் கவனித்திருக்க வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட இளமதி திகைப்படைந்தாள். “அப்படியானால் நாம் இங்கு உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியமென்ன?” என்று கேட்டாள்.
“எதிரி கையில் அகப்படாமலிருக்க, இந்த இருட்டு நமக்குப் பாதுகாப்பு” என்ற புலவர், “இளவழுதி! எதிரியின் நடவடிக்கை மும்முரமாகி விட்டது. நீ என்ன செய்ய உத்தேசம்? படைகளை நடத்தப் போகிறாயா?” என்று கேட்டார்.
“இல்லை “ என்றான் இளவழுதி திட்டமாக, அத்துடன் “புலவரே இளமதியை அழைத்துக் கொண்டு அரண்மனை செல்லுங்கள்” என்றான்.
“ஏன்?” என்று கேட்டார் புலவர்.
“பிறகு சொல்கிறேன். செல்லுங்கள்” என்று கட்டளையிட்டான் படைத்தலைவன்.
புலவர் பதில் சொல்லாமல் எழுந்தார். இளமதியை அழைத்துக்கொண்டு அரண்மனை நோக்கி நடக்கலானார். அவர்கள் அடுத்த மரங்களில் மறைந்ததும் பூனை போல் அடிமேல் அடி எடுத்து வைத்து மரங்கூட்டங்களின் ஊடே
சென்ற இளவழுதி மெள்ள “ஸலீம்! ஸலீம்!” என்றழைத்தான் மெதுவாக.
“யார்?” எங்கிருந்தோ ஸலீமின் பதில் வந்தது.
“இளவழுதி
“நீயா?”
“ஆம்”
“நான் இங்கு வந்திருப்பது உனக்கு எப்படித் தெரியும்?”
“பாம்பின் கால் பாம்பறியும்” என்ற இளவழுதி வெளியில் வா ஸலீம். விஷயம் மிக முக்கியம்” என்றான்.
ஸலீம் ஒரு மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான் “என்ன விஷயம்?” என்றும் கேட்டான்.
“நீ உன்னிருப்பிடம் செல், இன்னும் அரைஜாமத்தில் உன்னைச் சந்திக்கிறேன்” என்றான் இளவழுதி,
“என்னை இங்கிருந்து அகற்ற முயல்கிறாய்?”
“ஆம்”
“ஏன்?’
“இங்கு நாம் பேச முடியாது. மன்னன் ஒற்றர்கள் இங்கு நிரம்பியிருக்கிறார்கள்.”
இதைக்கேட்ட அஜ்மல்கான் சிறிது சிந்தித்தான். “சரி போகிறேன். வந்து சேர். என்னைத் தாமதிக்க வைக்காதே” என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டகன்றான்.
அவன் சென்றதும் இளவழுதி அரண்மனையைத் துரிதமாக அடைந்து தனது அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான். பல வினாடிகள் கழித்து வெளியே வந்து கடைத் தெருவை நோக்கிச் சென்று அஜ்மல்கான்
இருப்பிடத்தை அடைந்தான். அந்தப் பழைய அறையிலேயே அவனைச் சந்தித்த அஜ்மல்கான் “என்ன செய்தி?” என்று கேட்டான்.
“முதலில் ஆயிரம் மோகராக்களை எடு” என்றான் இளவழுதி.
“எதற்குத் திடீரென்று பணம் இப்பொழுது?”
“இப்பொழுது கொண்டு வந்துள்ள செய்தி இதைப் போல் பத்து மடங்கு பெறும்.”
அஜ்மல்கான் திரைமறைவில் சென்று பண முடிப்பை எடுத்து வந்தான். அதை இளவழுதியின் கையில் கொடுத்து “செய்தியைச் சொல்” என்றான்.
பணமுடிப்பை ஒரு கையில் வாங்கிக் கொண்ட, இளவழுதி கச்சையிலிருந்து பட்டுச்சீலையை எடுத்துக் கொடுத்தான். அதைப் பிரித்துப் பார்த்த அஜ்மல்கான் “நான் உனக்குக் காட்டிய நாட்டுப் படம் இது” என்றான் இகழ்ச்சியுடன்.
இளவழுதி எரிச்சலுடன் பதில் சொன்னான், “அதை விளக்கொளியில் பார்” என்று.
அஜ்மல்கான் முகத்தில் சிறிது குழப்பம் தெரிந்தது. சீலையைத் தூக்கி விளக்கொளியில் பார்த்தான். அவன் கண்கள் பிரமிப்பால் விரிந்தன. “ஆம். ஆம். என் திட்டத்துக்கு மாற்றுத் திட்டம். இது பத்தாயிரம் மோகராக்கள் பெறும். மேலும்
பெறும்” என்று தனது உதடுகளால் முணுமுணுத்தான். “பணம் பத்தும் செய்யும்” என்றும் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டு இளநகை கொண்டான்.

Previous articleCheran Selvi Ch21 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch23 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here