Home Cheran Selvi Cheran Selvi Ch31 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch31 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

129
0
Cheran Selvi Ch31 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch31 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch31 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 31. இளவழுதியின் சொர்க்கம்

Cheran Selvi Ch31 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

மலைச்சரிவின் தரையில் மன்னன் மகள் பக்கத்தில் உட்கார்ந்த வீரனான இளவழுதி, அதிர்ச்சி தரும் செய்தியைக் கொணர்ந்திருப்பதாக இளமதி அறிவித்தபோது அந்த அதிர்ச்சியைப் பற்றிக் கடுகளவும் கவலைப் படாமல் ஏற்கனவே
ஏற்பட்டுவிட்ட நிகழ்ச்சியைப் பற்றியே நினைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தான். அவளைச் சற்று முன்பு கீழே தள்ளி மார்பில் ஏறி தான் உட்கார்ந்துவிட்ட முரட்டுத்தனத்தை எண்ணியதால் ஏற்பட்ட மன அதிர்ச்சி அவனை
விட்டுப் பல வினாடிகள் அகலவே இல்லாததால் அவள் முதுகை மெல்லத் தனது இடது கையால் தடவிப் பார்த்தான். மிக மெதுவாக மிகுந்த அச்சத்துடன் முதுகில் தவழ்ந்த அந்த முரட்டுக் கையின் ஸ்பரிசத்தால் உணர்ச்சிகள் புரண்டு
அவதிப்பட்ட அரசகுமாரி லேசாக நெகிழ்ந்தாள் ஒரு முறை. பிறகு அலங்கோலமாக இருந்த தலைப்பாகையைச் சுருட்டி மடித்திருந்த கால்களுக்குக் குறுக்கே போட்டுக் கொண்டு தலைக்குழலையும் எடுத்து முடிந்துகொண்டாள் சீராக,
இதற்குப் பிறகு மெள்ளச் சொன்னாள், “முதுகில் காயம் ஏதும் படவில்லை”
அவள் அப்படிச் சொல்லியுங்கூட இளவழுதி கையை எடுக்கவில்லை. “இளமதி! சற்று ஆத்திரப்பட்டு விட்டேன். சிறிது நிதானித்து உன்னை மடக்கி விசாரித்திருக்கலாம்” என்றான் பாண்டிய வாலிபனான இளவழுதி.
இளமதி தலையை எடுக்காமலே ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வார்கள்…” என்று மெள்ள இழுத்தாள்.
அதில் தவறே இல்லை இளமதி!” என்ற இளவழுதி “இல்லாவிட்டால் உன்னைத் தள்ளி இங்கு உட்கார்ந்து முழங்காலை முரட்டுத்தனமாய் அழுத்தியிருப்பேனா?” என்றும் கேட்டதோடு நில்லாமல் அவள் மார்புக்கு மத்தியில் கையால்
தொட்டும் காட்டினான்.
அவன் கையை அவள் எடுத்து அகற்றி எறியவுமில்லை; விழிகளால் சீறவுமில்லை. நிலத்தில் கண்களை நோக்கிய வண்ணம் “அழகாயிருக்கிறது!” என்று மட்டும் முணு முணுத்தாள்.
“எது இளமதி?” கையை எடுக்காமலே வினவினான் இளவழுதி.
“உங்கள் அனுதாபம்” இளமதியின் சொற்களில் கேலி நன்றாக ஒலித்தது.
“என் அனுதாபமா?”
“ஆம்.”
“அதில் அழகுக்கு என்ன இருக்கிறது?”
“அனுதாபத்தினால் ஏற்பட்ட அனுகூலம்”
“அப்படி என்ன அனுகூலம் ஏற்பட்டு விட்டது?”
இளமதி சிரித்தாள், “போதாதென்று குறைப்படுகிறீர்களா?” என்றும் கேட்டாள் விழிகளை அவன் விழிகளுடன் கலந்து.
“நீ சொல்ன்து விளங்கவில்லை இளமதி” என்ற இளவழுதி தன் கண்களை அவன் கண்களுடன் நன்றாக உறவாடவிட்டான்.
இளமதி கண்களை நிலத்தில் தாழ்த்தினாள். ‘பாண்டிய வீரரே! நீர் லேசுப்பட்டவரல்ல. இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவீர், வீரனென்று என்மேல் பாய்ந்து கீழே தள்ளுகிறீர். பிறகு மார்பு மீது காலை வைத்து அழுத்தி உட்கார்ந்து
மிரட்டுகிறீர். அடுத்து என்னுடன் உட்கார்ந்து முதுகைத் தடவுகிறீர். இப்பொழுது…” என்று மெள்ள வார்த்தைகளை உதிர்த்த அரசகுமாரி மேலும் பேசமாட்டாமல் தனது மார்பு பக்கத்திலிருந்த அவன் கையைத் தன் கையால் அகற்றினாள்.
இளவழுதிக்கு அப்பொழுது தான் புரிந்தது மறை பொருளாக அதுவரையில் அவள் குறிப்பிட்டு வந்த நிலை, அதனால் பெரிதும் நிலைகுலைந்த இளவழுதி அவள் இடையில் தனது இடது கையைச் செலுத்தி அவளைத் தன்னைச் சேர
இழுத்துக் கொண்டான். அவள் தலை அவன் தோளின் மீது சாய்ந்தது. அவன் வலதுகை அவள் மடியில் கிடந்த தலைப்பாகைத் துணியை எடுக்க முனையவே “உம்” என்ற அவள் எச்சரிக்கைக் குரல் அவனது கையைத் தேக்கியது.
“என்ன இளமதி?” என்று அவள் காதுக்கருகில் தனது இதழ்களைக் கொண்டுபோய் முணுமுணுத்தான்.
அவள் பதிலேதும் சொல்லவில்லை. எதற்கும் காலம் நேரம் உண்டு’ என்றாள் அவள் உணர்ச்சி பொங்கிய சமயத்திலும் சிறிதும் கட்டு மீறாமல்.
“காந்தருவம் நமக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது இளமதி” என்று முணுமுணுத்த இளவழுதி, அவள் காதுக்குக் கீழே கழுத்தில் இதழ்களைப் புதைத்தான்,
இதழ்களின் முரட்டுத்தனம் அவள் சங்கு கழுத்தின் மென்மைக்குத் தேவையாயிருந்திருக்க வேண்டும். உணர்ச்சியில் புரண்ட அவள் தன் கழுத்தை இருமுறை புரட்டிக் கொடுத்தாள் அந்த முரட்டு உதடுகளுக்கு. பிறகு திரும்பி அவன்
காதில் சொன்னாள், “தேவை நேரும்போது ஆண்களுக்கு சாஸ்திரம் நினைவுக்கு வருகிறது” என்று.
“இளமதி!” இளவழுதியின் சொல்லில் ஆவல் தொனித்தது.
“உம்” அந்த உம்மில் அவள் இதயமே அவிழ்ந்து கொட்டியது.
“உன் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு சாஸ்திரம் சொல்லவில்லை நான்” என்றான் இளவழுதி மெதுவாக.
“காந்தருவம் பற்றிச் சொன்னீர்களே, எதற்கோ?”
“ஏதோ வாயில் வந்தது, சொன்னேன்.”
“வாயில் எப்படி வந்தது?”
“என்ன கேட்கிறாய் இளமதி?”
“எண்ணத்திலிருப்பதுதானே வாயில் வருகிறது?”
இதைக் கேட்ட இளவழுதி அவளைத் திடீரென இறுகத் தழுவிக்கொண்டான். “இளமதி! இளமதி!” என்ற வேட்கைக் குரல் இருமுறை வெளிவந்தது அவனிடமிருந்து.
இளமதி அந்த ஆண்மகன் அணைப்பில் தனது பல வீனம் அதிகமாவதை உணர்ந்தாள். வந்த காரியம் திசை திரும்பி விடுமோ என்ற அச்சத்தின் உச்சநிலையை அவள் அடைந்தாள். அவன் கைகள் ஆராய்ச்சியில் இறங்கத் துவங்கிவிட்டதை
உணர்ந்தாள். மெள்ளத் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் உடல் திடீரென கெட்டிப்பட்டுவிட்டதையும், அவள் இதயப் போக்கும் நிதானப்பட்டு விட்டதையும் இளவழுதியும் உணர்ந்து கொண்டான்.
ஆகவே அவளைச் சுற்றியிருந்த கைகளை நீக்கி தன் முழந்தாளில் கட்டிக் கொண்டு பெருமூச்செறிந்தான் நிலத்தை நோக்கி.
“வீரரே!” என்ற இளமதியின் இன்ப அழைப்பு அவனை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தது.
“என்ன இளமதி!” என்று கேட்டான் இளவழுதியும் தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டு.
“கிணற்று நீரை வெள்ளம் கொண்டுபோகாது” என்றாள் இளமதி மெதுவாக. அப்பொழுது அவளும் நிலத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்றான் இளவழுதி.
“எதை?”
“கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது என்பதை” –
“என்னிடம் நம்பிக்கையில்லையா?”
“நம்பிக்கை பூர்ணமாயிருக்கிறது. ஆனால் போர் வெள்ளம் எந்தக் கிணற்றையும் இடித்துத் தள்ளும். நீரையும் அள்ளிச் செல்லும். சில பிரளயங்களில் கிணறு எது ஆறு எது என்ற வேறுபாடு கூட தெரியாது.”
இளமதி சற்று ஆலோசித்தாள். “வீரரே!” என்றாள் மெதுவாக.
“என்ன அரசகுமாரி!”
“போரில் இறப்பவர்கள் வீர சுவர்க்கமடைவார்கள்.”
“சொல்லக் கேள்வி நான் பார்த்ததில்லை.”
“அப்படி சுவர்க்கமிருந்தால் அங்கு உங்களை நான் சந்திப்பேன்.”
இளவழுதி நகைத்தான். “ஏன் நகைக்கிறீர்கள்?” என்று வினவினாள் சேரன் செல்வி.
சொர்க்கம் இங்கிருக்கும்போது இதைவிட்டு அங்கு போகும்வரை காத்திருப்பானேன்?” என்று வினவினான் படைத்தலைவன்.
“உங்கள் அவசரத்துக்குப் புதுத் தத்துவம் சொல்கிறீர்கள்” என்று வெட்கச் சிரிப்பு சிரித்தாள்.
“நான் சொல்லவில்லை அரசகுமாரி” என்றான் இளவழுதி.
“வேறு யார் சொன்னது?” என்று கேட்டாள் இளமதி.
“‘ஆழ்வார்”
“எந்த ஆழ்வார்?”
“தொண்டரடிப் பொடி”
“என்ன சொன்னார்?”
“இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” என்று சொன்னார்.
இளமதி தனது கண்களை நிமிர்த்திப் படைத் தலைவனைப் பார்த்தாள். “படைத்தலைவரே! நான் தமிழ் படிக்கவில்லையென்ற நினைப்பு உங்களுக்கு?” என்றும் சொன்னாள்.
“ஏன்? ஆழ்வார் சொல்லுக்கு வேறு பொருள் உண்டா?”
“இல்லை. அவர் சொன்னதற்குப் பொருள் ஒன்று தான். இச்சுவை என்பது பக்திச் சுவையை, அரங்கனை சேவிப்பதில் ஏற்படும் சுவையைச் சொன்னார். நீங்கள் உங்களுக்கு அனுகூலமாக ‘இச்சுவை’யைத் திருப்பிச் சொல்கிறீர்கள்.
இளவழுதி இளமதியின் கழுத்தைத் தனது ஒரு கையால் வளைத்தான். “இளமதி! ஆழ்வாரும் தான் குறிப்பிட்ட சுவையில் திளைத்தவர்…” என்று சொன்னான்.
அவள் இடைமறித்து “ஆனால் அதிலிருந்து மீண்டு வேறு சுவையில் மனத்தைத் திருப்பினார்” என்று கூறிய தன்றி “அப்படி நீங்களும் திருப்பிக் கொள்வது நல்லது” என்றும் உபதேசம் செய்தாள்.
இளவழுதி ஆழ்வாரின் பாட்டையே திருப்பினான் உரைநடையாக. “அவர் சூதனாய்க் கள்வனாகி தூர்த்தரோடிசைந்தார். நான் அப்படியில்லையே” என்று வியாக்கியானம் செய்தான்.
இளமதி அவன் கையில் தனது கழுத்தை லேசாக அசைத்தாள். “நீங்கள் அப்படி இல்லையென்று சொல்ல முடியாது. பெரிய சூதுக்காரர் நீங்கள். கள்வருங்கூட பேரின்பப் பாக்களை சிற்றின்பமாகத் திருப்பியது பெரும் சூது. அப்படிச்
செய்து என்னை ஏமாற்ற முயல்வது கள்ளத்தனம்” என்று மெதுவாகக் கூறி அமுதமாக நகைத்தாள்.
“அடி கள்ளி! என்னையே மடக்குகிறாயே?” என்ற இளவழுதி அவள் உடலுக்குக் குறுக்கே தனது இரு கைகளையும் கொடுத்து அவளைத் தூக்கிக் கொண்டு எழுந்திருந்தான்.
அந்த நிலையில் இளமதி அவனுடைய கண்களை நோக்கினாள். “இப்பொழுது ஆழ்வாரின் அடுத்த அடிக்கு நான் வந்து விட்டேன்” என்று புன்முறுவல் செய்தாள்.
“எது இளமதி?” என்று கேட்டான் இளவழுதி அவளைத் தாங்கிய வண்ணம்,

.
“தூர்த்தரோடிசைந்த காலம் என்ற வரி” இதைச் சொன்ன இளமதி அவனை நோக்கி நகைத்தாள்.
இளவழுதி புரிந்து கொண்டதால் வினவினான், “நான் தூர்த்தனா?” என்று.
“திருமணமாகாத பெண்ணைத் தூக்கிக் கொண்டு நிற்பதை என்னவென்று சொல்லலாம்?” என்று கேட்டாள் இளமதி.
இளவழுதி கையிலிருந்த அவள் உடலழகை உற்று நோக்கினான். அவன் கண்களை நோக்கி இருகண்கள் விழித்தன. ஏளனத்துடன் இரு மொட்டுகள் முறைத்தன கோபத்துடன். உதடுகள் விரிந்தன எதிர்பார்ப்புடன்.
அவையனைத்தையும் மீற முடியாமல் தவித்தான் சேரர் படைத்தலைவன். திடீரென்று தன்னையும் மீறி அவளைத் தூக்கிய வண்ணம் ‘மரத்தடியை நோக்கினான். நோக்கிய வன் திகைத்து நின்றான். கையில் ஏந்திய ஏந்திழையைக் கீழே
போட்டான் சரேலென்று. கண்கள் பிரமிப்பையும் கக்கின. கட்டுக்கடங்காத கோபத்தையும் கக்கின. கீழே சரேலென்று போடப்பட்டாலும் சமாளித்து எழுந்து கொண்ட ராஜகுமாரியும் காரியம் மிஞ்சி விட்டதைப் புரிந்துகொண்டாள். சற்று
எட்டக் கிடந்த பொருளின்மீது தனது அழகிய விழிகளைச் செலுத்தினாள். ஆனால் அது வும் பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டதால் அழகிய மார்பகம் எழுந்து தாழ கோபப் பெருமூச்செறிந்தாள். இளவழுதியின் நிலை என்ன
என்பது அவளுக்குப் புரிய வில்லை. நின்ற இடத்தில் மரம் போல் நின்றாள். சொர்க்கம் இப்படித் திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை. சொர்க்கத்திலும் துன்ப முட்கள் உண்டு என்று தனக்குள் சொல்லிக் கொண்ட இளவழுதியின்
சிந்தனை வெகு துரிதமாக வேலை செய்து கொண்டிருந்தது.

Previous articleCheran Selvi Ch30 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch32 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here