Home Cheran Selvi Cheran Selvi Ch35 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch35 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

75
0
Cheran Selvi Ch35 Cheran Selvi Sandilyan, Cheran Selvi Online Free, Cheran Selvi PDF, Download Cheran Selvi novel, Cheran Selvi book, Cheran Selvi free, Cheran Selvi,Cheran Selvi story in tamil,Cheran Selvi story,Cheran Selvi novel in tamil,Cheran Selvi novel,Cheran Selvi book,Cheran Selvi book review,சேரன் செல்வி,சேரன் செல்வி கதை,Cheran Selvi tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi ,Cheran Selvi full story,Cheran Selvi novel full story,Cheran Selvi audiobook,Cheran Selvi audio book,Cheran Selvi full audiobook,Cheran Selvi full audio book,
Cheran Selvi Ch35 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

Cheran Selvi Ch35 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

சேரன் செல்வி – சாண்டில்யன்

அத்தியாயம் – 35. மோகினிப் பிசாசு

Cheran Selvi Ch35 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

குஸ்ரூகான் கூடாரத்தின் சீலைக்கு அப்பால் நின்ற இடத்திலிருந்து பூர்ண திருப்தியுடன் விலகியதும், உள்ளே இளமதியின் கன்னத்தில் புதைந்த உதடுகள் மேலும் அதிகமாகப் புதையவே அவள் மெள்ள “இதென்ன இத்தனை வெறி”
என்று சொன்னாள் படைத்தலைவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி. படைத்தலைவன் அந்த அந்தரங்க இன்பக் கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் இதழ்களை கன்னத்தின் பக்கப் பகுதிக்குக் கொண்டு போய் “உணர்ச்சி வசப்பட்டு
விட்டதாகப் பாசாங்கு செய். சொல்வதை நிதானமாகக் கேள்” என்று காதுக்கருகில் முணுமுணுத்தான்.
அதுவரையில் அந்த அதரங்களின் இழைப்பு காம வெறியால் என்பதை நினைத்து உள்ளத்தில் உவகை பொங்க, உணர்ச்சிகள் கொந்தளித்துச் சுழல நின்றிருந்த இளமதி. படைத்தலைவன் சொற்களால் பேரதிர்ச்சி யடைந்தாள்.
“இத்தனையும் வெளி வேஷமா? யாரை இவர் ஏமாற்றப் பார்க்கிறார்?” என்றும் தன்னைக் கேட்டுக் கொண்டாள். இருப்பினும் அவன் சொல்படி நடக்கக் கண்களை இறுக மூடிக் கொண்டாள். அப்படி மூடிய கண்ணுடன் அவளை நகர்த்திச்
சென்று அருகிலிருந்த மஞ்சத்தில் படுக்க வைத்த இளவழுதி அவள் மேல் சாய்ந்து மீண்டும் காதுக்கருகில் பேசலானான். “இங்கிருந்து புறப்பட்டால் நீ ஒன்று புலவரிடம் போவாய் அல்லது தந்தையிடம் செல்வாய் என்பதை குஸ்ரூகான்
அறிந்திருக்கிறான். உன் விடுதலை ஒரு தந்திரம், அதற்கு இடங்கொடுக்காதே. திரும்பிக் கொல்லத்துக்கே சென்றுவிடு” என்று கூறினான் மிக மெதுவாக.
அரசகுமாரி ஏதும் பேசவில்லை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக. ஆனால் அச்சத்துடன் கேட்டாள் “நீங்கள்?” என்று.
“என்னைப் பற்றிக் கவலைப்படாதே. எனக்கு எந்த வித ஆபத்து மில்லை” என்றான் இளவழுதி.
“என்ன அப்படி நிச்சயமாகச் சொல்கிறீர்கள்?” என்று வினவினாள் அவள்.
“குஸ்ரூகானுக்கு எனது உதவி தேவையாயிருக்கிறது” என்றான் இளவழுதி.
“உங்கள் உதவியா!” வியப்பு ஒலித்தது அரசகுமாரியின் குரலில்.
“ஆம்”
“எந்தவித உதவி?”
“அரசர் போர் முறைகளை அறிய விரும்புகிறான்.”
“உங்களிடம் அப்படிக் கேட்டானா?”
“இல்லை, சூசகமாகச் சொன்னான். தான் வெற்றி யடைந்தால் என்னைப் படைத்தலைவனாக்குவதாகக் கூறினான்.”
“உங்களை வாங்கப் பார்க்கிறானா?”
“ஆம். அந்த ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.” இதைச் சொன்ன இளவழுதி அவள் காதுப்புறமிருந்து தனது உதடுகளை எடுத்து நகைத்தான் மெதுவாக.
அவன் நகைப்பில் ஏதோ ஒரு அதிசய ஒலி இருந்த தாகத் தோன்றியதால் இளமதி தன் கண்களை அவன் கண்களுடன் கலந்தாள். “அந்த ஆசை யாருக்கெல்லாம் இருக்கிறது?” என்று கேட்டாள்.
“முக்கியமாக உனக்கு இருக்கிறது” என்றான் படைத்தலைவன் நகைப்பின் ஊடே
விலை என்ன கொடுத்திருக்கிறேன் உங்களுக்கு?” என்று கேட்ட இளமதி, சட்டென்று வெட்கத்தால் தனது உதடுகளைக் கடித்துக் கொண்டாள்.
“இதைவிட வேறு என்ன கொடுக்க வேண்டும்” என்று கேட்ட இளவழுதி அவள் உதடுகளையும் கண்களையும் தொட்டுக் காட்டினான். மற்ற இடங்களில் கண்கள் மட்டும் பாய்ந்தன.
அதனால் பெரிதும் இம்சைப்பட்ட இளமதி சற்று புரண்டு குப்புறப் படுத்து கண்களை மஞ்சத்தில் புதைத்துக் கொண்டாள். அவளைப் புரட்டவோ, புரட்டி எடுக்கவோ படைத்தலைவன் முயன்றானில்லை. எழுந்து கூடாரத்தில்
உலாவினான். சட்டென்று சில வினாடிகள் நின்று எதையோ ஒட்டுக் கேட்டான். அடுத்த வினாடி அரசகுமாரியை மஞ்சத்திலிருந்து தூக்கிக் கைகளில் தாங்கிய வண்ணம் திரைச்சீலையை இடதுகாலால் விலக்கி வெளியே செல்ல முயன்றான்.
அவனுக்கு முன்பே திரையை விலக்கிய குஸ்ரூகான் “மன்னிக்கவேண்டும். இரண்டு நாழிகைகள் ஓடிவிட்டன. ஆனால் காதலர்களுக்குக் காலத்தின் ஓட்டம் தெரியாது” என்று கூறிப் புன்முறுவல் செய்தான்.
இளவழுதி சட்டென்று கையிலிருந்த இளமதியைத் தரையில் இறக்கினான். “எங்களை உண்மையாகவே தனிமையில் விட்டுச் சென்றீர்களென்று நினைத்தோம்” என்று படைத்தலைவன் சினத்துடன் கூறினான் குஸ்ரூகானை நோக்கி.
“இப்பொழுது தான் நான் வந்தேன். திரைச்சீலையை நீக்கிப் புறப்படும் நேரம் வந்து விட்டதென்று அரசகுமாரிக்குக் கூறலாமென்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்பே அரசகுமாரி புறப்படத் தயாராகிவிட்டாள்” என்ற குஸ்ரூகான்
மிகுந்த மரியாதையுடன் பேசினாலும் அதில் இகழ்ச்சி உள்ளூரத் தொனித்தது.
இளவழுதி அவனை நோக்கிக் கோப விழி விழித்தான். “எப்பொழுது அரசகுமாரி புறப்பட வேண்டும்?” என்று வினவினான் குஸ்ரூவை நோக்கி.
“இப்பொழுதே” என்றான் குஸ்ரூகான்.
“புரவி?” இளவழுதியின் கேள்வியில் உணர்ச்சி வரண்டு கிடந்தது.
“வாயிலில் தயாராக நிற்கிறது” என்றான் குஸ்ரூகான்.
“காவலர்?”
“இருவர் தயாராயிருக்கிறார்கள்.”
“சரி அரசகுமாரி! புறப்படு” என்றான் இளவழுதி.
அரசகுமாரி பதிலேதும் பேசவில்லை. அவர்களிருவரையும் வெளியே செல்லும்படி கையால் சைகை காட்டினாள். இருவரும் சென்றதும் தன் சேலையைச் சற்று இறுகக் கட்டிக் கொண்டாள். குழலை எடுத்துக் கைக வாலே வாரிப்பிரித்துப்
பின்னாலும் போட்டுக்கொண்டாள். பிறகு வெளியே வந்தாள். அங்கு தயாராயிருந்த புரவியில் ஏறிக்கொண்டாள். மற்ற இரு காவலரும் புரவிகளில் ஏறிக்கொள்ள அரசகுமாரி தனது புரவியைத் தட்டிவிட்டாள். புரவி நகர்ந்தது சற்று
வேகமாகவே. புரவியில் அமர்ந்த பிறகு, பின்னால் நின்ற யாரையும் அரசகுமாரி ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. புரவியை அலட்சியமாகச் செலுத்தினாள்.
அவள் போகும் திக்கைப் பார்த்த குஸ்ரூகான் முகத்தில் சந்தேகச் சாயை படர்ந்தது. அதனால் சற்றுத் திரும்பி பக்கத்திலிருந்த படைத்தலைவனைப் பார்த்துக் கேட்டான். “இந்த வழி மதுரைக்கல்லவா செல்கிறது?” என்று.
“ஆம்” படைத் தலைவன் குரலிலும் குழப்பமிருந்தது.
“அங்கு சேரமன்னனோ புலவரோ இருப்பதாகச் செய்தி கிடைக்கவில்லையே” என்று கூறினான் குஸ்ரூகான்.
“அப்படியா!” என்ற படைத்தலைவன் குரலில் குழப்பம் அதிகமாயிருந்தது.
“அரசகுமாரியின் உத்தேசம் என்னவாயிருக்கும்?” என்று குஸ்ரூகான் வினவினான் குழப்பத்துடன்.
“பெண்கள் மனத்திலிருப்பதை யாரால் அறிய முடியும்?” என்ற படைத்தலைவன் அந்த சமயத்தில் உண்மையே பேசினான். உண்மையில் அரசகுமாரியின் நோக்கம் அவனுக்கே புரியவில்லை. மதுரையை விட்டு குஸ்ரூகான் பொதிய
மலைப்பகுதிக்கு வந்துவிட்டானென்றால் மதுரைக்குத் தற்சமயம் எந்த ஆபத்துமில்லையென்று அர்த்தமென்பதை இளவழுதி புரிந்துகொண்டான். அப்படி அதில் தகுந்த பாதுகாப்பு இருக்கும் பட்சத்தில் இளமதி அங்கு செல்வது
பேராபத்து என்பதையும் உணர்ந்து கொண்டான் இளவழுதி. அவளைப் பற்றிய மிதமிஞ்சிய கவலையும் கொண்டான்.
அவன் முகத்தில் விரிந்த கவலையிலிருந்தே அவன் சிந்தனை ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட குஸ்ரூகான் படைத் தலைவரே! நீங்கள் அரசகுமாரிக்கு ஆபத்து ஏற்படுமென்று அஞ்சத் தேவையில்லை. அவளுக்கு.
விளைவிக்கப்படும் எந்தத் தீங்குக்கும் குஸ்ரூவின் தண்டனை உண்டென்பதை மதுரையிலுள்ள என் படைகளுக்குத் தெரியும். அப்படித் தெரியாவிட்டாலும் அதை உணர்த்த என் காவலர் துணை செல்கிறார்கள் அரசகுமாரிக்கு” என்று
விளக்கினான். அந்த விளக்கத்தினால் கூட படைத்தலைவனுக்கு சமாதானம் ஏற்படவில்லை. குஸ்ரூகானுக்கும் அரசகுமாரி மதுரை வழி செல்லும் மர்மம் விளங்காததால் அவனும் குழப்பத்துடனேயே அவ்விடம் விட்டு அகன்றான்.
அவன் சென்ற பின்பு கூடாரத்துக்குள் செல்லாத இளவழுதி மறுபடியும் மலைக்காட்டின் ஊடே நடந்து சென்றான், சிறிது தூரம் நடந்தபின் மலைப்பாறை யொன்றில் உட்கார்ந்த படைத் தலைவன் பலபடி சிந்தித் தானானாலும்
அரசகுமாரியின் பிடிவாதத்துக்கும் போக்குக்கும் பொருள் புரியாமல் தவித்தான்.
இப்படி குஸ்ரூவுக்கும் இளவழுதிக்கும் இருந்த குழப்பம் அரசகுமாரிக்கு இல்லை. அவள் பொதிய மலையின் வழியில் புரவியை அவசரம் ஏதுமின்றி நடக்கவிட்டாள். சுமார் அரைக்காத தூரம் பயணம் செய்ததும் பொழுது புலர்ந்து
விட்டாலும் சிறிது தங்கி இளைப்பாறவோ உணவருந்தவோ அவள் முயலவில்லை. புரவியில் செங்குத்தாக உட்கார்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தாள்.
அவளுடன் வந்த வீரனில் ஒருவன் தன் புரவியை அவள் புரவிக்கு அருகில் செலுத்தி, “அரசகுமாரி! தாங்கள் இளைப்பாற வேண்டுமானால் இளைப்பாறலாம். உணவுக்கு ஏதாவது பட்சிகளை அடித்துக் கொண்டு வருகிறேன்” என்று
கூறினான்.
“எதுவும் தேவையில்லை “ அரசகுமாரியின் பதில் அதிகாரத்துடன் வந்தது.
அந்த வீரன் மேலும் பேசத் தொடங்கி ‘தங்களுக்கு ஏதாவது கஷ்டம் நேர்ந்தால் குஸ்ரூகான் எங்களைக் கொலை செய்துவிடுவார்” என்று சொன்னான்.
அதற்கு சந்தர்ப்பமிருக்காது” என்று பதில் சொன்ன அரசகுமாரி, “இன்று இரவு நாம் இளைப்பாறலாம். உணவுக்கும் அப்பொழுது ஏற்பாடாகும்” என்று கூறினாள்.
அதற்கு மேல் வீரன் ஏதும் பேசாமல் தனது புரவியைச் சற்று எட்டச் செலுத்தினான். அரசகுமாரி மலைவழியில் கூடியவரை வேகமாகவே பயணம் செய்தாள். இரவு நெருங்கிய சமயத்தில் மலை உச்சி ஒன்றை அடைந்து சுற்று முற்றும்
நோக்கினாள் ஒரு வினாடி. “சரி, சரி அதுதான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். பிறகு எட்ட எதிரே தெரிந்த ஒரு விளக்கை நோக்கிப் புரவியை நடத்தினாள்.
“அது பாண்டியர் கோட்டை அரசகுமாரி” என்றான் காவலன் ஒருவன்.
ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தாள் அரசகுமாரி. ஆனால் புரவியை மட்டும் அந்தக் கோட்டையை நோக்கிச் செலுத்தினாள்.
“அது பாழடைந்து இருக்கிறது அரசகுமாரி” என்று மீண்டும் வலியுறுத்தினான் காவலன்.
“தெரியும்” என்றாள் அரசகுமாரி.
“அதில் எந்த வசதியும் கிடையாது என்றான் காவலன்.
“வசதியை எதிர்பார்க்கவில்லை” என்றாள் அரசகுமாரி.
அதற்கு மேல் மூவர் பயணமும் மௌனமாகவே நடந்தது. அந்தப் பாழடைந்த கோட்டையை அடைந்ததும் திறந்து கிடந்த அதன் வாயிலுக்குள் புரவியைச் செலுத்திய அரசகுமாரி கோட்டையின் பிரதான மண்டபத்தின் முன்பு
இறங்கினாள். இறங்கி சேணத்தைப் புரவியின் மீது எறிந்து விட்டு வாயிற்படிகளில் ஏறி உள்ளே சென்றாள்.
அந்தப் பாழடைந்த கோட்டை முன் மண்டபத்தில் ஒரு விளக்கு மங்கலாக எரிந்துகொண்டிருந்தது. அந்தக் கோட்டைக்கு விளக்கு எதற்கு என்று இரு காவலரும் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள். விளக்குக்கு
அப்புறமிருந்த இருட்டில் அரசகுமாரி மறைந்து விட்டதைக் கண்டதும் அவர்கள் சந்தேகம் அதிகமாகியதால் அரசகுமாரி? அரசகுமாரி” என்று இருமுறை காவலனொருவன் அழைக்கவும் செய்தான். அரசகுமாரி அந்த அழைப்புக்குச் செவி
சாய்க்கவில்லை. அதற்கு வேறு ஒருவர் செவி சாய்த்ததைக் காவலர் அடுத்த வினாடி புரிந்து கொண்டனர். மண்டபத்தின் இருண்ட பகுதியிலிருந்து ஒருவர் வெளியே வந்தார். “நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்று
அதிகாரத்துடன் வினவினார்.
“நாங்கள் அரசகுமாரியுடன் வந்தோம்” என்றான் ஒரு காவலன்.

.
“அரசகுமாரியா!” வந்தவர் கேள்வியில் வியப்பு இருந்தது.
“ஆம்” என்றான் காவலன்.
“அப்படியானால் அவள் எங்கே?” என்றார் அந்த மனிதர்.
“இப்பொழுது தான் உள்ளே சென்றார்.” காவலன் சொற்களில் அச்சமிருந்தது.
“உள்ளேயா?”
“ஆம்”
“இந்த மண்டபத்தில் உள் ஏதும் இல்லையே”
காவலர் அதிர்ச்சி அதிகமாயிற்று. “மண்டபத்துக்குள் நுழைந்ததை நாங்களே பார்த்தோம்” என்றான் இரண்டாவது காவலன்.
பதிலுக்கு அந்த மனிதர் கடகடவென்று நகைத்தார்.
“அப்படியானால் அதை நீங்களும் பார்த்துவிட்டீர்களா!”
“எதை?”
“மோகினிப் பிசாசை!”
“ஐயோ! பிசாசா?”
“ஆமாம். இந்த மண்டபத்தில் அடிக்கடி உலாவுகிறது!”
அந்த மனிதர் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு விபரீத சிரிப்பொலி மண்டபத்தைப் பிளந்தது.

Previous articleCheran Selvi Ch34 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in
Next articleCheran Selvi Ch36 | Cheran Selvi Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here